Monday, July 27, 2009

குடும்பங்களைக் கூறுபோடும் லேகிய டாக்டர்கள்

குறிப்பு: இந்தக்கட்டுரை விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கைக்காகவுமே தவிற கிளுகிளு அல்ல நமது நோக்கம். விகடனில் படித்தது நீதியின் குரல் வாசகர்களுக்காக....
________________________________________________
'இளமை இதோ இதோ!' என்று சிறகு அடித்துப் பறக்கும் பருவத்தில்தான் மனதை உருட்டிப் புரட்டும் சஞ்சல சுனாமியும் இளைஞர்களைப் பாடாய்ப்படுத்தும். சமயங்களில் நண்பர்களிடமே பகிர்ந்துகொள்ள முடியாத 'உடல் இயக்கச் சிக்கல்'களை அவர்கள் மனம் திறந்து பேசுவது 'அஜால் குஜால்' வார்த்தைகளில் ஊரை ஏமாற்றும் போலி லேகிய வியாபாரிகளிடம்...

27 வயது சந்திரசேகருக்கு இளமைப் பருவத்துக்கே உள்ள விடலைப் பழக்க வழக்கங்கள் உண்டு. ஒருநாள் பேப்பர் விளம்பரத்தைப் பார்த்துப் பதறுகிறார். தனது திறமையைச் சோதிக்க ஒரு விலைமாதுவிடம் செல்கிறார். முதல் அனுபவம் பெரிய ஏமாற்றமாக முடிய... யோசிக்காமல் விளம்பரத்தில் வசீகரித்த வைத்தியரிடம் ஓடுகிறார். 'ஸ்பெஷல் செட்' என்று டப்பா நிறைய கேப்சூல்களைக் கொடுத்து 6 ஆயிரம் ரூபாய் வசூலிக்கிறார் வைத்தியர். வருடக் கணக்கில் மாத்திரைகளைச் சாப்பிட்டாலும் ஒரு பிரயோஜனமும் இல்லை. வீட்டில் சந்திரசேகருக்குப் பெண் பார்க்க ஆரம்பிக்க, வேறு வழி இல்லாமல் தற்கொலை செய்துகொள்கிறார்.

அந்த லாரி டிரைவரின் மனைவிக்கு 'கணவன் தன்னைப் போதுமான அளவுக்கு திருப்திப்படுத்துவது இல்லை' என்று ஆதங்கம். கணவனை செவ்வாய்க்கிழமை அந்தக் குறிப்பிட்ட லாட்ஜுக்கு அழைத்துச் செல்கிறார். லாரி டிரைவரே மேற்கொண்டு தொடர்கிறார்... ''அந்த டாக்டர்(!) என் சம்சாரம் முன்னாடியே என்னை நிர்வாணப்படுத்திச் சோதிச்சாரு. 'உங்களுக்கு இருக்குறது சின்ன சிக்கல்தான். இதுக்கு மூணு மண்டலம் களிம்பு தடவுங்க. தூங்கப் போறதுக்கு அரை மணி நேரம் முன்னாடி இந்த லேகியத்துல ஒரு உருண்டை சாப்பிடுங்க'ன்னு சொல்லி 3ஆயிரம் ஃபீஸ் வாங்கிட்டாரு. வாராவாரம் செக்கிங் போக வர்ற இருந்தப்ப, என் சம்சாரம் அந்த ஆளுகூட ரொம்ப நெருக்கம் ஆயிட்டா. இப்போ என் பொண்டாட்டி என்கூட இல்லை. அதுக்குக் காரணம் அந்தப் படுபாவி. என்னை மாதிரி எத்தனையோ குடும்பங்களை அவன் சீரழிச்சு இருக்கான். வெட்கம், மானத்துக்குப் பயந்து நான் யார்கிட்டயும் சொல்லலை!''

இவர் கதை இப்படி என்றால் கொளத்தூர் மகேந்திரனுடையது வித்தியாசமானது. ''நான் சினிமாவில் லைட்மேனா வேலை பாக்குறேன். அதிக எடையை ஏற்றி, இறக்குவதால் 12 வருஷமாகவே எனக்கு முதுகுவலி. எந்த மருத்துவமும் பலன் இல்லை. அப்பதான் ஒரு சேட்டிலைட் சேனல்ல திருவாங்கூர் சித்த வைத்தியசாலை விஜயகுமாரோட நிகழ்ச்சி பார்த்தேன். அவர்கிட்ட போய் நின்னேன். 'மூணு மாசம் ட்ரீட்மென்ட். மாசம் 50 ஆயிரம் ரூபாய் ஃபீஸ். பூசணிக் காய், பாவக்காய் ஆகாது. காபி, டீ கூடாது. மது, சிகரெட் கூடவே கூடாது. தங்கபஸ்ப பவுடர்லாம் கொடுத்தாரு. மூணு மாசத்துக்குப் பிறகும் அதே நிலைமைதான். கேட்டால், 'கண்டிப்பா குணமாகும்னு நான் கான்ட்ராக்ட்ல கையெழுத்தா போட்டு ருக்கேன்!'னு எகத்தாளம் பேசுனார். நம்ம உடம்பு வாகுக்கு ஒத்துக்கலைன்னு நினைச்சு ஒன்றரை லட்ச ரூபாய் போனாப் போகட்டும்னு அவர்கிட்ட இருந்து தப்பிச்சு வந்தேன்!'' பத்திரிகை, டி.வி-க்களில் வரும் பந்தா விளம்பரங்களால் ஈர்க்கப்பட்டு, பண பண்டல்களுடன் வந்து போலி வைத்தியர்களிடம் சிக்கிச் சீரழிந்த குடும்பங்கள் எத்தனையோ!
தாம்பத்திய நிகழ்வுகளில் இயல்பான ஆரம்பக் கூச்சத் தயக்கங்களுக்குப் பயந்து பதறி, இது போன்ற போலி லேகிய வியாபாரிகளிடம் தஞ்சம் புகுந்தால்... அதோகதிதான். மனைவியுடன் சிநேகமும் புரிதலும் ஏற்பட்டால் மழை மேகமாக விலகிவிடும் சிக்கல்களுக்கு அவர்களின் வைத்திய முறைகள் இருக்கின்றனவே... தங்கபஸ்பம், லேகியம், களிம்பு, அக்குளில் வைத்துக்கொள்ளும் மாத்திரை... என அஜால் குஜால் வைத்தியர்களின் வைத்திய முறைகள் அத்தனையும் விபரீத வில்லங்கங்கள். பழக்கத்தில் மறைந்துவிடக் கூடிய சின்ன பிரச்னைகளை இவர்களின் 'வைத்திய முறை'கள் விஸ்வ ரூபமாக்கி தம்பதிகளிடையே மனஸ்தாபங்களை உண்டாக்கிவிடுகின்றன.

இது போன்ற லேகிய வியாபாரிகளுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் நாமக்கல்லைச் சேர்ந்த டாக்டர் ஆனந்த், ''எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிச்சுட்டோம்னு சேலம், நாமக்கல் மாவட்டங்கள்ல ஏராளமான ஆளுங்க பலரை ஏமாத்திட்டு இருக்காங்க. ஹெச்.ஐ.வி. கிருமியால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு லேகிய மருந்துகள் கொடுத்து, 'உனக்கு எல்லாம் சரியாயிடுச்சு. இனி நீ தைரியமா கல்யாணம் பண்ணிக்கலாம்'னு சொல்லி அப்பாவிகளுக்கு எய்ட்ஸ் பரவக் காரணமா இருக்காங்க. அவங்ககிட்ட ஏமாந்தவங்களைத் தேடிப் பிடித்து திரும்ப மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி அவங்களுக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு இருக்குன்னு புரியவெச்சோம். அது சம்பந்தமான டாக்குமென்ட்ரியை லோக்கல் கேபிள் சேனல்களில் ஒளிபரப்பியதும், அந்த லேகிய வியாபாரிகள் பக்கமிருந்து எனக்குக் கொலை மிரட்டல்கூட வந்தது. ஆனா, அதைப் பத்தியெல்லாம் நான் கவலைப்படலை.

தமிழ்நாடு முழுக்க இது மாதிரி டுபாக்கூர் போலி டாக்டர்கள் 900 பேர் இருக்காங்க. அவங்களைப் பத்தி நான் தயாரிச்சுட்டு இருக்கும் பட்டியல் தயாரானதும் சுகாதாரத் துறை அமைச்சகத்தில் சேர்ப்பித்து தக்க நடவடிக்கை எடுக்கச் சொல்லணும்!'' என்றார்.

சமூக சமத்துவத்துக்கான மருத்துவச் சங்கத்தைச் சேர்ந்த டாக்டர் எழிலன் கூறுகையில், ''ப்ளஸ் டூவுக்குப் பிறகு என்ட்ரன்ஸ் தேறி சைக்காலஜி, அனாடமி, பயோ கெமிஸ்ட்ரி என மருத்துவக் குழு அங்கீகரித்த பாடங்களை 4 ஆண்டுகள் படித்து 5-வது வருடம் மருத்துவமனைகளில் பணியாற்றிய அனுபவங்கள் பெற்ற பிறகே நாங்கள் எம்.பி.பி.எஸ்., பட்டம் பெறுகிறோம். 'ராஜராஜ சோழனுக்கே வைத்தியம் பார்த்தவர் எங்கள் பாட்டன். பரம்பரை பரம்பரையாக மருத்துவம் பார்த்து வருகிறோம்' என்பார்கள். 'சோழனுக்கு வைத்தியம் பார்த்ததற்கு என்ன ஆதாரம்?' என்று கேட்டால் காதில் விழாதது போல வேறு வேலை பார்க்கச் சென்றுவிடுவார்கள்.

உடனடி நிவாரணம் தேவைப்படும் மாரடைப்பு போன்ற நோய்களுக்கு இவர்கள் மருத்துவம் பார்க்க மாட்டார்கள். ஆனால், நீண்ட நாள் சிகிச்சை தேவைப்படும் முடக்கு வாதம், பிறவி ஊனம் போன்றவற்றுக்கு வைத்தியம் பார்க்க ஆர்வமாக இருப்பார்கள். அந்த சிகிச்சைகளில்தானே கொள்ளை கொள்ளையாகப் பணம் பறிக்க முடியும்.

தமது வீட்டில் ஒருவர் நீண்ட நாட்கள் நோய் குணம் அடையாமல் போராடினால், அவரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்றுதான் குடும்ப உறுப்பினர்களிடம் பெரும் போராட்டம் நடக்கும். எதை விற்றாவது அவரைக் காப்பாற்ற முயல்வார்கள். அந்தப் பாசத்தைப் பணமாக்கும் இது போன்ற போலி லேகிய வியாபாரிகளிடம் இருந்து நம்மை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும்!'' என்று எச்சரிக்கிறார்.

ஒரு முறையேனும் கீழே விழாமல் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்ள முடியாது. அது போலத்தான் தாம்பத்யமும். ஆரம்பத் தள்ளாட்டங்கள் இதிலும் சகஜம்தான். அதைத் தம்பதிகள் தங்களுக்குள் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக்கொள்வதன் மூலமே பிரச்னைக்குத் தீர்வு காண முடியும். உடலின் கோளாறுகளுக்கு நிவாரணம் தேட தகுந்த மருத்துவர்களோ, நிபுணர்களோதான் பக்கபலமாக இருப்பார்கள். ஒரு சினிமா பார்க்க வேண்டும் என்றால்கூட ஏ.சி, டி.டி.எஸ், குஷன் ஸீட் என்று வசதிகளைப் பட்டியலிடுபவர்கள், தங்கள் உடல் பராமரிப்புக்கும் அத்தகைய கவனத்தைச் செலுத்துவதுதானே சரி!
நன்றி: விகடன்

கியூபாவிடம் நாம் பாடம் கற்க வேண்டும்: பிரகாஷ் காரத்

பெங்களூர்: கியூபாவிடம் நாம் பாடம் கற்றுக்கொண்டு மீண்டு எழ வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகளுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலர் பிரகாஷ் காரத் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கியூபா நாட்டு புரட்சியின் 50ம் ஆண்டையொட்டி பெங்களூரில் கியூபா ஒற்றுமைக் குழு சார்பில் நடந்த விழாவில் காரத் பேசுகையில்,

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நாம் பெரும் தோல்வியைச் சந்தித்தோம். ஆனால், இடதுசாரிகளா நாம் கியூபாவைப் பார்த்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். அந்நாடு பல இக்கட்டான கால கட்டங்களில் பல்வேறு இன்னல்களைச் சந்தித்தபோது, அந்நாட்டு மக்கள் துவண்டு விடாமல் பிரச்னைகளை சமாளித்தார்கள். முடியாத காரியங்களை நடத்திக் காட்டினார்கள்.

அதேபோல நாமும் கியூபாவைப் போல வேகத்துடன் ஊக்கம் பெற்று மீண்டு எழ வேண்டும். தோல்விடம் சரணாகி விடக்கூடாது.

மக்களவைத் தேர்தல் தோல்விக்குப் பின் மார்க்சிஸ்டை சேர்ந்த ஏராளமான நண்பர்கள் என்னிடம் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடுவதை நிறுத்திவிடுமாறும், 21ம் நூற்றாண்டில் அது தேவையற்றது என்றும் கூறுகின்றனர். அதை நாங்கள் செய்ய மாட்டோம். ஏகாதிபத்தியத்துக்கு எதிரான போராட்டத்தை தொடர்வோம்.

கியூபா மக்கள் மிகுந்த மன உறுதி, தைரியத்துடன் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டவர்கள். அவர்கள், ஏகாதிபத்தியத்தால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு ஒரு முன்னுதாரணம்.

வெறும் 1.1 கோடி மக்கள் தொகையைக் கொண்ட கியூபாவில் ஒரே ஆண்டில் கல்வியறிவின்மை ஒழிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி அடிப்படைக் கட்டமைப்பு, மருத்துவம், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைந்த நாடுகளைவிட முன்னிலையில் உள்ளது.

கியூபாவில் உள்ள மருத்துவ முறையை நம் நாட்டில் கனவு கூட காண முடியாது என்றார்.

நிகழ்ச்சியில் கியூபா நாட்டு அமைச்சர் எடுர்டோ இக்லெசியாஸ் குயின்டானாவும் பங்கேற்றார்.

இரண்டு பெண்கள் பாலியல் பலாத்காரம் விவகாரம் -காஷ்மீர்-சபாநாயகர் மீது மைக் வீசிய மெஹ்பூபா

Mehbooba Mufti
ஸ்ரீநகர்: காஷ்மீர் சட்டசபையில் சபாநாயகரை தாக்க முயன்றார் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவரான மெஹ்பூபா முப்தி.

முன்னாள் முதல்வர் முப்தி முகம்மத் சயீதின் மகளான இவர் எதிர்க் கட்சித் தலைவராக உள்ளார். இந் நிலையில் இன்று காஷ்மீர் சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் துவங்கியது.

அப்போது மாநிலம் சோபியானில் இரண்டு பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தின் மீது சட்டசபையி்ல் மெஹ்பூபா ‌பிரச்சனை கிளப்பினார்.

அப்போது சபாநாயகர் முகம்மத் லோனுக்கும், மெஹபூபாவுக்கும் இடையே வாக்குவாதம் மூண்டது.

அப்போது ஆவேசமான மெஹ்பூபா சபாநாயகரை நோக்கிச் சென்று அவரது மேஜையில் இருந்த மைக்கைப் பிடுங்கி அவர் மீது வீசினார். ஆனால், அது அவர் மீது படவில்லை.

இதையடுத்து அவைக் காவலர்கள் ஓடிவந்து மெஹ்பூபாவை வெளியே இழுத்துச் சென்றனர். இச் சம்பவத்தால் சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து மக்கள் ஜனநாயக கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டு சபை இன்று முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

Saturday, July 25, 2009

மாணவிகளை மயக்கி பேராசிரியர் உல்லாசம்-வீடியோ

ஸ்ரீரங்கம்: திருச்சியில் கல்லூரி மாணவியை மயக்கி செக்ஸ் உறவு வைத்து அதை வீடியோ எடுத்த பேராசிரியர் மீது மனைவி போலீசில் புகார் தந்தார். இதையடுத்து பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.

ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் பீட்டர் (32) திருச்சியில் ஒரு கல்லூரியில் ஆங்கில பேராசிரியராக வேலைப் பார்த்து வந்தார். இவரது மனைவி மரிய மெடில்டா. இவர் தனியார் வங்கியில் பணியாற்றுகிறார்.

ஜேம்ஸ் பீட்டரின் நடத்தை சரியில்லாததால் சில மாதங்களுக்கு முன் கல்லூரி நிர்வாகம் வேலையில் இருந்து நீக்கிவிட்டது.

இந் நிலையில் ஜேம்ஸ் பீட்டரின் லேப்-டாப்பில் இருந்த ஒரு வீடியோவைப் பார்த்த மரிய மெடில்டா அதிர்ந்தார். அதில் ஒரு பெண்ணுடன் ஜேம்ஸ் பீட்டர் செக்ஸ் வைத்துக் கொண்டு உல்லாசமாக இருந்த காட்சி இருந்தது.

இதையடுத்து லேப்-டாப்புடன் சென்று ஸ்ரீரங்கம் மகளிர் போலீஸ் நிலையத்தில் மெடில்டா புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜேம்ஸ் பீட்டரிடம் விசாரித்தபோது அவருடன் வீடியோவில் இருந்த பெண், அவர் வேலை பார்த்த கல்லூரியில் படித்த ஒரு மாணவி என்று தெரியவந்தது.

அந்த மாணவிக்கு தற்போது திருமணம் ஆகிவிட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து அந்த மாணவியின் நலன் கருதி, அவரிடம் போலீசார் ரகசியமாக விசாரணை நடத்தினர்.

அப்போது ஜேம்ஸ் பீட்டர் தன்னை வீட்டிற்கு அழைத்துச் சென்று பானத்தில் மயக்க மருந்து தந்து வலுக்கட்டாயமாக உறவு கொண்டதாக அந்தப் பெண் தெரிவித்தார். மேலும் தனக்குத் தெரியாமலேயே அதை வீடியோவில் ஜேம்ஸ் பீட்டர் பதிவு செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

அந்த மாணவியின் நலன் கருதி அவரது விவரத்தை போலீசார் வெளியிடவில்லை.

ஜேம்ஸ் பீட்டரை இதேபோல வேறு எந்த மாணவியையாவது தனது வலையில் வீழ்த்தினாரா என்று விசாரணை நடக்கிறது.

Thursday, July 16, 2009

உஷார்! உஷார்!!

அண்மையில் மீக்காயில் (மைக்கேல் ஜாக்சன்) காலமானார் . அவர் பெயரில் உலாவரும் ஒரு வைரஸ் மிகவும் அச்சுறுத்தலாக மாறி உள்ளது .நீங்கள் அந்த வைரஸ் பற்றி தெரிந்து கொள்வது மிக அவசியம். இந்த வைரஸ் ஈமெயில் மூலம் பரவுகின்றது.

அந்த ஈமெயில் வைரஸ் இப்படி இருக்கும் ...

Subject : ''Remembering Michael Jackson'

Sent From : '' sarah@michaeljackson.com This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it ''

AttachMents : ''Michael songs and pictures.zip''

இந்த மாதிரி ஈமெயில் உங்களுக்கு வந்தால் திறக்காதீர்கள், அழித்து விடுங்கள். நீங்கள் திறந்தால் பாதிக்கப்படுவது நீங்கள் மட்டும் அல்ல, உங்கள் நண்பர்களும்தான்...

நன்றி : Times of India

Tuesday, July 14, 2009

கூகுளின் புதிய சவால்!

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு நீண்ட புகழ்மிக்க வரலாறு உண்டு. பலவகையிலும், கணினி உலகத்தை அந்த நிறுவனம்தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. தனிக்கணினிகளில் 90 சதவீதத்தை மைக்ரோசாஃப்ட் மென்பொருள்கள்தான் ஆக்கிரமித்துக் கொண்டிருக் கின்றன. இணையத்திலும் இவர்களின் ஆதிக்கம்தான். மைக்ரோசாஃப்டின் தனி ஆவர்த்தனத்துக்கு முதல் போட்டியாக வந்தது யாகூ. அப்புறம் கூகுள்.

கூகுளைத் தெரியாதவர்களுக்கு இணையத்தைப் பற்றி எதுவுமே தெரியாது என்றுதான் கூற வேண்டும். தேடுபொறிச் சந்தையை முழுமையாகக் கைப்பற்றிவிட்ட கூகுள், யாகூவை போட்டியிலிருந்து எப்போதோ வெளியேற்றிவிட்டது. கூகுளின் அடுத்த இலக்கு மைக்ரோசாஃப்ட். மைக்ரோசாஃப் டின் சந்தையைக் கொஞ்சம் கொஞ்சமாக அபகரிப்பதுதான் கூகுளின் திட்டம் என்பது தெளிவாகத் தெரிகிறது.

மைக்ரோசாஃப்டின் இன்டர்நெட் எக்ஸ்புளோரருக்கு போட்டியாக குரோம் என்ற பிரவுசரை கடந்த ஆண்டு கூகுள் வெளியிட்டது. வழக்கம்போல் இலவசமாக. ஆனால், இன்டர்நெட் எக்ஸ்புளோரர், மோசில்லா பிரவுசர்களுடன் போட்டியிடும் அளவுக்கு குரோம் இன்னும் வளரவில்லை. கூகுளின் இதர இணையப் பயன்பாடுகளில் மட்டுமே குரோம் பிரவுசர் நன்றாகச் செயல்படுவதாக ஒரு கருத்து இணையத்தை மேய்பவர்கள் மத்தியிலும் உருவாகிவிட்டது.

உண்மையை மறைக்காமல் சொல்வதென்றால் பிரவுசர் விஷயத்தில் கூகுளுக்கு முழுத் தோல்விதான் என நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால், அதையெல்லாம் இப்போதே தீர்மானித்து விடாதீர்கள் என்கிறது கூகுள். அங்கு தொட்டு, இங்கு தொட்டு இப்போது மைக்ரோசாஃப்டின் தலையிலேயே கைவைத்திருக்கிறது கூகுள். மைக்ரோசாஃப்டின் விண்டோஸ் இயக்க அமைப்புக்கு (ஆப ரேட்டிங் சிஸ்டம்) போட்டியாக குரோம் என்கிற புதிய இயக்க அமைப்பை அடுத்த ஆண்டு வெளியிடப் போவதாக கூகுள் அறி வித்திருக்கிறது. நிச்சயமாக மைக்ரோசாஃப்டின் அடிமடியில் கைவைக்கும் சமாசாரம் தான். மைக்ரோசாஃப்டின் எல்லா முன்னேற்றங்களுக்கும் பின்னால் விண்டோஸ் இயக்க அமைப்புத்தான் இருக்கிறது. உலகின் 90 சதவீத தனிக்கணினிகளில் விண்டோஸ் நிறுவப்பட்டிருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது.

ஒரு கணினியில் விண்டோஸ் நிறுவப்படுவது, மைக்ரோசாஃப்டின் ஆபீஸ் போன்ற மற்ற மென்பொருள்களின் விற்பனைக்கு அடிப்படை. குரோம் இயக்க அமைப்பு மூலம் இந்த அடிப்படையை ஆட்டிப் பார்க்க கூகுள் முயற்சிக்கிறது. அதென்ன அவ்வளவு எளிதா? அதற்கும் ஏற்கெனவே ஒரு வெள்ளோட்டம் விட்டுப் பார்த்திருக்கிறது கூகுள். ஸ்மார்ட்போன்களில் பயன்படும்வகையில் ஆந்த்ராய்ட் என்ற இயக்க அமைப்பை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. ஆச்சரியப்படத்தக்க அளவில், பயனாளர்கள் மத்தியில் மைக்ராசாஃப்டின் ஸ்மார்ட்போன் இயக்க அமைப்பைவிட நல்ல பெயர் எடுத்திருக்கிறது. அந்த உற்சாகத் தில்தான் இந்த குரோம் முயற்சி. குரோம் பிரவுசரின் மேம்படுத்தப் பட்ட நீட்சிதான் இந்த குரோம் இயக்க அமைப்பு எனலாம். வேகம், எளிமை, பாதுகாப்பு ஆகியவையே இதன் தாரக மந்திரங்கள்.

இப்போதிருக்கும் இயக்க அமைப்புகளெல்லாம் இணையம் இல்லாத காலத்தில் உருவாக்கப்பட்டவை. அந்த அடிப்படையையே திரும்பத் திரும்பப் பதிப்பித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று மற்ற இயக்க அமைப்புகளைப் பார்த்து நையாண்டி செய்திருக்கிறது கூகுள். நீங்கள் என்ன செய்யப் போகிறீர்களாம் என்று கேட்டால், "அடிப்ப டையை மாற்றப் போகிறோம்' என்கிறார்கள். இணையத்தை மையமாகக் கொண்டு இயக்க அமைப்பை உருவாக்குவதுதான் அந்த மாற்றமாம்.

இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகவே விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டாவுக்கு மாற்றாக விண்டோஸ் 7 பதிப்பை வெளியிட மைக்ரோசாஃப்ட் முடிவெடுத்திருக்கும் வேளையில், குரோம் அறிவிப்பு அந்த நிறுவனத்துக்கு நிச்சயம் அதிர்ச்சியாகத்தான் இருந்தாக வேண்டும். ஆனால், குரோம் இயக்க அமைப்பைத் தாங்கள் ஓர் அச்சுறுத்தலாகக் கருதவில்லை என்கி றது மைக்ரோசாஃப்ட். தனிக்கணினிகளுக் கான ஆபரேட்டிங் சிஸ்டத்தை உருவாக்கு வது மிகச் சிக்கலான வேலை என்பதை கூகுள் விரைவிலேயே புரிந்து கொள்ளும் என மைக்ரோசாஃப்ட் அதிகாரிகள் சொல்கிறார்கள். அப்படி என்ன சிக்கல் இருக்கிறது என்பது புரியவில்லை.

ஆனால், கூகுளுக்கு ஒரு பெரிய சவால் இருக்கிறது. இயக்க அமைப்பை ஒரு தனிப் பட்ட மென்பொருளாகக் கருத முடியாது. அதில் இயங்கும் மென்பொருள்களும் இயக்க அமைப்பின் பயன்பாட்டைத் தீர்மானிக்கின்றன. அந்த வகையில், விண்டோஸ் இயக்க அமைப்பில் செயல்படும் வகையில் ஆயிரக்கணக்கான மென்பொருள்கள் உரு வாக்கப்பட்டிருக்கின்றன. கோரல், அடோப் போன்ற பல்வேறு பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள்கூட விண்டோஸýக்கான மென்பொருள் பதிப்புகளை பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடர்ச்சியாக வெற்றிகரமாக வெளியிட்டு வருகின்றன.

குரோம் இயக்க அமைப்பில் செயல்படும் வகையிலான மென்பொருள்களை இந்த நிறுவனங்களெல்லாம் வெளியிடுமா என்பது சந்தேகமே. இவற்றையெல்லாம் கூகுளே தயாரிப்பதும் சாத்தியமில்லை. அப்படியே தயாரிக்க முடிந்தாலும் மைக்ரோசாஃப்ட் அளவுக்கு பிரபல மாவதும் கஷ்டம்தான். உதாரணத்துக்கு எம்எஸ் ஆபீஸ். எத்த னையோ இலவச வேர்ட் பிராசசர்களும், ஸ்பிரட் ஷீட்களும் வந்த பிறகும் எம்எஸ் வேர்டையும் எக்ùஸல்லையும் அடித்துக் கொள்ள முடியவில்லையே. சாதிக்கப் போகிறதோ இல்லையோ, பெரிய எதிர்பார்ப்பை கூகுள் கிளப்பி விட்டிருக்கிறது. தேடுபொறி சந்தையைக் கைப்பற்றியதைப் போன்று சாதனை செய்யுமா அல்லது பிரவுசர் வெளியிட்டது போல மண்ணைக் கவ்வுமா என்பது குரோம் சந்தைக்கு வந்த பிறகே தெரியும்.

நன்றி: பூலியன், தினமணி

Thursday, July 9, 2009

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் தொடுத்தால் முழுப்பொறுப்பு அமெரிக்கா:லாரி ஜானி

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தினால் முழுப்பொறுப்பும் அமெரிக்காவைச்சாரும் என ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் அலி லாரி ஜானி கூறினார்.
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அமெரிக்கா தடுக்காது என்று அமெரிக்க துணை அதிபர் ஜோ பைடன் கூறியதற்கு பதிலடியாக தோஹாவில் சுற்றுப்பயணம் மேற்க்கொண்டிருக்கும் லாரி ஜானி இதனை தெரிவித்தார்.

அமெரிக்காவின் அனுமதியில்லாமல் இஸ்ரேலுக்கு எந்தவொரு நாட்டின் மீதும் தாக்குதல் நடத்த முடியாது என்று எல்லோருக்கும் தெரியும்.பைடனின் கூற்று அரசியல் தந்திரமானது.இதனை பல முறை நாம் கேட்டிருக்கிறோம். அணு சக்தி தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு தயார் என்று ஒருபக்கம் கூறிக்கொண்டு மறுபக்கத்தில் இம்மாதிரியான அறிக்கைகள் விடுவது கவலைக்குரியது என்று அலி லாரி ஜானி கூறினார். இவ்விஷயத்தை நாங்கள் கெளரவப்பூர்வமாக எடுத்திருக்கிறோம் என்றும் அவர் மேலும் தெளிவுப்படுத்தினார்.

ஆனால் அமெரிக்க வெளியுறவுத்துறை அதிகாரியான அயான் கெல்லி கூறுகையில்,"ஈரானை தாக்குவதற்கு இஸ்ரேலுக்கு நாங்கள் பச்சைக்கொடி காண்பிக்கவில்லை.இஸ்ரேல் ஒரு சுதந்திர நாடென்பதால் அது எந்தவிதமான நடவடிக்கையை எடுக்கும் என்று எங்களுக்கு தெரியாது.மேலும் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவிப்பது பற்றி இதுவரை நாங்கள் ஆலோசிக்கவில்லை. ஆனால் இஸ்ரேலின் பாதுகாப்பு விஷயத்தில் நாங்கள் விட்டுகொடுக்க முடியாது"என்றார்.
செய்தி ஆதாரம்:தேஜஸ் மலையாள நாளிதழ்

சீனா: உரும்கியில் கலவர நிலை மோசம் அடைகிறது!



சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத் தலைநகர் உரும்கியில் நடைபெற்று வரும் கலவரம் மேலும் மோசம் அடைந்துள்ளதாகத் தெரிகிறது. ஹான் சீன இனத்தைச் சேர்ந்த பெருவாரியான மக்கள் தற்போது கலவரத்தில் குதித்துள்ளனர். உய்குர் இனத்தை அழித்து ஒழித்து விட்டுத் தான் ஓயப் போவதாக கோஷங்கள் எழுப்பிய வண்ணம் உய்குர் இன மக்களின் சொத்துகளை சூறையாடி வருகின்றனர்.
முன்னதாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட உய்குர் இன இளைஞர்களை காவல் துறை கைது செய்ததை எதிர்த்து உய்குர் இனப் பெண்களும் முதியவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஹான் சீன மக்களில் பெருவாரியானோரும் கலவரத்தில் குதித்துள்ளதால் நிலைமை மேலும் மோசமாகி வருகிறது.
ஹான் சீன இன மக்கள் இரும்புத் தடி, மூங்கில் கழி, கடப்பாரை எனக் கையில் கிடைத்த ஆயுதங்களுடன், "உய்குர்களைத் தாக்கி ஒழிக்க வேண்டும்" என கோஷமிட்டுக் கொண்டே அவர்களுக்குச் சொந்தமான சொத்துகளைத் தாக்கி வருகிறார்கள்.
கலவரத் தடுப்புக் காவல்துறையினர், ஹான் சீன இன மக்களை அமைதி காக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Wednesday, July 8, 2009

யுஎஸ் பங்கு நிறுவன சர்வர்களை 'ஹேக்' செய்த 3 தமிழர்கள்

நியூயார்க்: ஆன்-லைன் பங்கு வர்த்தக நிறுவனங்களின் சர்வர்களை 'ஹேக்' செய்து மற்றவர்களது கணக்கில் பங்குகளை வாங்கி தங்கள் கணக்கில் விற்று கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக 3 தமிழர்கள் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது.

இதில் ஒருவர் ஹாங்காங்கில் கைது செய்யப்பட்டு அமெரிக்கா கொண்டு வரப்பட்டுள்ளார். இன்னொருவர் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டுவிட்டார். மூன்றாவது நபர் தலைமறைவாக உள்ளார்.

சென்னையைச் சேர்ந்த ஜெய்சங்கர் மாரிமுத்து (34) என்பவர் கடந்த மாதம் 20ம் தேதி ஹாங்காங்கி்ல் கைது செய்யப்பட்டு அமெரிக்கா கொண்டு செல்லப்பட்டுள்ளார். இவர் அமெரிக்க ஆன்-லைன் பங்கு வர்த்தக நிறுவனங்களின் சர்வர்களை 'ஹேக்' செய்ததாக நெப்ராஸ்கா மாகாண நீதிமன்றத்தில் கடந்த 25ம் தேதி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. ஆனால், தான் தவறு செய்யவில்லை என அவர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

ஆனால், இதே 'ஹேக்கிங்' காரணத்துக்காக இவர் இதற்கு முன்பும் ஹாங்காங் போலீசாரால் கைது செய்யப்பட்டவராம்.

இன்னொருவரான திருஞானம் ராமநாதன் என்பவர் தான் செய்த தவறை ஒப்புக் கொண்டுவிட்டார். இவர் கடந்த ஆண்டு செப்டம்பரில் கைது செய்யப்பட்டு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டார். ஆனால், இவரது முழு தண்டனைக் காலம் முடியும் முன்னரே நாடு கடத்தப்பட்டுவிட்டாக அமெரிக்க நீதித்திறை செய்தித் தொடர்பாளர் லேன் மெக்காலெப் இப்போது தகவல் வெளியிட்டுள்ளார்.

இவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாகத் தெரிகிறது.

மூன்றாவது நபரான சொக்கலிங்கம் ராமநாதன் இன்னும் தலைமறைவாகவே உள்ளார்.

இந்த மூவரும் இ.டி. டிரேட், டி.டி. அமெரிடிரேட் உள்ளிட்ட 9 ஆன்லைன் பங்கு வர்த்தக நிறுவனங்களின் 60க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களின் கணக்குகளி்ல் பங்குகளை வாங்கி, அதை தங்கள் கணக்கில் விற்று மோசடி செய்துள்ளனர்.

மேலும் தங்கள் வசம் இருந்த விலை குறைந்த பங்குகளை மற்றவர்களை வாங்கச் செய்து (அந்த நபருக்கே தெரியாமல் அவரது கணக்கில் வாங்கி) அவற்றின் விலையை தாறுமாறாகக் கூட்டிவிட்டுள்ளனர்.

இதில் ஒரு நிறுவனத்துக்கு மட்டும் 2 மில்லியன் டாலர் அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மேலும் கூகுளின் பங்குகளையும் பாதி விலைக்கு விற்கச் செய்துள்ளனர்.

இந்த மூவரும் பாங்காங்கில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தபோது அங்கு வந்த சில அமெரிக்க, ஐரோப்பிய நபர்கள் தங்களது பங்குகளை ஹோட்டலில் இருந்த இன்டர்நெட் மையத்தில் ஆன் லைனில் வர்த்தகம் செய்வதைப் பார்த்துவிட்டு, அந்த கம்ப்யூட்டர்களில் அமர்ந்து பாஸ்வேர்ட்களை 'சுட்டுள்ளனர்'.

அதன் பின்னர் அந்த அக்கெளன்ட்களை 'ஹேக்' செய்து அவர்களது வாழ்க்கையில் 'விளையாடியுள்ளனர்'. தொடர்ந்து மேலும் பலரது அக்கெளன்ட்களையும் 'ஹேக்' செய்துள்ளனர்.

Tuesday, July 7, 2009

இசுலாத்திலும் ஜாதி?-----விடுதலை நாளிதழுக்கு மறுப்பு!

கேரளாவின் கடற்கரையோரத்-தில் வாழும் இசுலாமியர்கள் அரபு நாடுகளிலிருந்து வந்தவர்களின் வழித்தோன்றல்கள் என்பர். தமிழ்-நாட்டின் கீழக்கரைப் பகுதியில் இருப்பவர்களும் அதே மரபு வழியைக் கொண்டவர்கள்தாம். காலப் போக்கில் இம்மக்களும் நம் மக்களைப் போன்றே தோற்றத்தில் மாறிவிட்டனர்.

கேரள மாப்ளா முசுலிம்கள் பற்றிய ஒரு சேதி. அவர்களில் 5 பிரிவு-கள் உண்டாம். சன்னி, ஷியா, வஹாபி, ஜைத், ஹனபி, ஷாபி, அஹமதியா, இசுமெய்லி போன்ற பிரிவுகள் என நினைத்துக் கொள்-ளாதீர்கள். இவை வேறு வகைப் பிரிவு-கள்.

தங்ஙள், அரபி, அன்சாரி, புஸ்ஸ-லார் மற்றும் ஒஸ்ஸான் -_ என 5 வகைகள் இவற்றிற்குப் பெயர்கள். என்ன இவை? எதைக் குறிக்கின்றன, இந்தப் பெயர்ப் பிரிவுகள்?

தங்ஙள் என்றால் முகமது நபியின் மகளான பாத்திமாவின் வழிவந்த-வர்கள். இந்துமத நம்பூதிரிகளைப் போல இவர்கள் உயர்ந்தவர்களாம்.

அவர்களுக்கு அடுத்த நிலையில் இருப்பவர்கள் அரபிகள்.

அரபிகளுக்கும் கீழே அன்-சாரிகள். இவர்கள் மூவருக்கும் கீழே கடைத்தட்டில் வைக்கப்பட்டிருப்ப-வர்கள் புஸ்ஸலார்களும் ஒஸ்-ஸான்களும்.

புஸ்ஸலார் என்பவர்கள் கேரள மீனவர்களாகிய இந்துமத முக்குவர் ஜாதியில் இருந்து இசுலாமாகி-யவர்கள். புதிய இஸ்லாம் என்பது புஸ்ஸலாம் என்றாகி விட்டது.

இசுலாமியர்களின் பஞ்சமர்கள் ஒஸ்ஸான்கள். நாவிதர்கள். இந்து மதத்தில் எந்தத் தொழிலோ அந்தத் தொழிலையே இஸ்லாத்திலும் செய்பவர்கள்.

முஸ்லிம்களிடையே ஜாதியும் சமூக அடுக்குகளும் எனும் நூல் பல பிரபலங்கள் எழு-திய கட்டுரைகளின் தொகுப்பு நூலில் இந்த விவரங்கள். தொகுத்தவர் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியர் இம்தியாஸ் அகமது.

பிரம்மாவின் முகத்திலிருந்து வந்தேன் எனக்கூறி முதன்மை இடத்தை எடுத்துக் கொண்டான் பார்ப்பனன், இந்து மதத்தில் என்றால்... இஸ்லாத்தின் நபிகள் நாயகத்தின் குடும்பக் கொடி வழி என்ற கதை கூறப்படுவதா

மதங்கள் என வந்தாலே, இதுதான் போலிருக்கிறது. அதனால்-தான் புரட்சிக்கவிஞர், பெரு மதங்கள் எனும் பீடை பிடியாதிருக்க வேண்டும் என்று பாடினார்.

அன்பிற்கினிய ஆசிரியர் அவர்களுக்கு,
தங்களின் விடுதலை நாளிதழில் 'இசுலாத்திலும் ஜாதி?' என்ற கட்டுரை கண்டேன். கேரளாவில் சிலர் சில பிரிவுப்பெயரில் இருப்பதை வைத்து இஸ்லாத்திலும் ஜாதி உண்டென்று கூறவருகிறீர்கள். அதோடு இஸ்லாத்தை வர்ணாசிரம கொள்கையோடு ஒப்பிட்டுள்ளீர்கள். முதலில் ஒரு அடிப்படையை விளங்கிக்கொள்ளுங்கள். வர்ணாசிரம கொள்கை என்பது இந்து மதத்தின் அங்கீகாரம் பெற்றதாகும். ஆனால், இஸ்லாம் பிறப்பு அடிப்படையில் மனிதர்களிடையே எந்த ஏற்றத்தாழ்வையும் அங்கீகரிக்கவில்லை. 'மனிதர்களே! உங்களை ஒரே ஆத்மாவிலிருந்து படைத்த ஒரே இறைவனை அஞ்சுங்கள் என்று எல்லாம் வல்ல இறைவன் தன் அருள்மறையான குர்ஆனில் சொல்லிக்காட்டுகிறான். இதன்மூலம் மனிதர்கள் அனைவரும் அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும், வேறுமதத்தவராக இருந்தாலும், அல்லது நாத்திகராகவே இருந்தாலும் மனிதர்கள் அனைவரும் ஒரே தாய் தந்தை மூலம் பிறந்தவர்களே என்று இஸ்லாம் பிறப்பால் ஏற்படுவதாக கூறும் ஏற்றத்தாழ்வுக்கு சாவுமணி அடிக்கிறது. மேலும், உலக முஸ்லிம்களின் ஒரே தலைவரும் இறைத்தூதருமான நபிகள் நாயகம்[ஸல்] அவர்கள், தனது இரு உபதேசத்தின்போது, 'அரபியருக்கு-அரபியர் அல்லாதவர்களைவிட எந்த சிறப்புமில்லை. அரபியர் அல்லாதவர்களுக்கு அரபியர்களை விட எந்த சிறப்புமில்லை என்று உபதேசம் செய்து, அரபியர்கள் தான் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் கொண்ட அரபியர்களின் என்னத்தை தவிடு பொடியாக்கினார்கள். அதோடு தான் அன்று உயர்வாக கருதப்பட்ட குறைஷி எனும் குலத்தில் பிறந்தவராக இருந்ததும், குலப்பெருமையையும் ஏற்ற தாழ்வையும் ஒழிக்கும் வகையில், எத்தியோப்பியா பகுதியை சேர்ந்த கருப்பு நிற அடிமையான பிலால் [ரலி] என்பவரை தனது காரியதரிசியாகவும், இறைவனை வணங்குவதற்காக அழைப்பு விடுக்கும் அழைப்பாளராகவும் நியமித்ததோடு, அந்த பிலால் அவர்களை என் தோழர் என்று கூறி தோள்மீது கை போட்டு கொண்டவர் எங்கள் தலைவர் நபிகள் நாயகம் அவர்கள். இன்றும் கூட தாழ்த்தப்பட்டவர்கள் என்று கருதப்படும் பிரிவிலிருந்து ஒருவர் முஸ்லிமாக மாறினால் அவருடன் நாங்கள் ஒரே வரிசையில் நின்று தொழுவோம், அவருடன் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவோம், அவருடன் திருமணம் உள்ளிட்ட எல்லா உறவுமுறைகளையும் ஏற்படுத்திக்கொள்வோம். இத்தகைய செயல்முறை வர்ணாசிரம கொள்கையில் உண்டா என்பதை சிந்திக்க வேண்டுகிறேன்.
சரி! அப்படியானால், முஸ்லிம்கள் ஷாபி-ஹனபி-ஹம்பலி-மாலிகி-வகாபி இப்படியான பிரிவாக பிரிந்திருப்பது ஏன் என்ற கேள்வியை நீங்கள் எழுப்பலாம்? இது போன்ற எந்த பிரிவையும் நபிகள் நாயகம்[ஸல்] அவர்கள் உருவாக்கவில்லை. நபிகள் நாயகம்[ஸல்]அவர்களின் மறைவிற்குப்பின்னால் தோன்றிய அறிஞர்கள் தான் ஷாபி-ஹனபி-ஹம்பலி-மாலிகி-வகாபி போன்றவர்கள். இவர்கள் சொன்ன இஸ்லாமிய விளக்கத்தை பின்பற்றியவர்கள் நாளடைவில், அந்த அறிஞர்களின் பெயரால் அழைக்கப்படலாயினர். இது ஒரு ஜாதியல்ல. இவர்களுக்குள் எந்த ஏற்றத்தாழ்வுகளும் இல்லை. இவர்களுக்குள் கொடுக்கல் வாங்கல் திருமணம் உள்ளிட்ட அனைத்தும் நடக்கவே செய்கிறது.அதோடு மேற்கண்ட அறிஞர்களை பின்பற்றுமாறு இஸ்லாம் எங்களுக்கு கட்டளையிடவில்லை. ஒரு முஸ்லிம் அல்லாஹ்வையும்-அவனது தூதர் நபிகள் நாயகம்[ஸல்]அவர்களை மட்டுமே பின்பற்றவேண்டும். இந்த பிரிவுப்பெயர்களுக்கு இஸ்லாத்தில் அனுமதியும் இல்லை.
அதோடு தாங்கள் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள,

தங்ஙள், அரபி, அன்சாரி, புஸ்ஸ-லார் மற்றும் ஒஸ்ஸான் -_ என 5 வகைகள் இவற்றிற்குப் பெயர்கள். என்ன இவை? எதைக் குறிக்கின்றன, இந்தப் பெயர்ப் பிரிவுகள்?

தங்கள்-அதாவது நபி[ஸல்] அவர்களின் வழித்தோன்றல் என்று ஒரு கூட்டம் கேரளாவில் ஏமாற்றிக்கொண்டு திரிகிறது. நபி[ஸல்] அவர்களின் மகளின் சந்ததியாக இருந்தாலும் அவர்களுக்கென இஸ்லாத்தில் எந்த சிரப்பும்கிடையாது. ஏனெனில், நபியவர்கள் தன் மகள் பாத்திமா[ரலி] அவர்களிடம் சொன்னார்கள்; பாத்திமாவே! உம்முடைய அமல்தான் மறுமையில் ஈடேற்றமளிக்கும். மாறாக, நான் அல்லாஹ்விடமிருந்து எதையும் தடுக்கும் சக்தி பெற்றவன் அல்லன் என்றார்கள். நபி அவர்களின் மகளாக இருந்தாலும் அவர்கள் செய்த நன்மை மட்டுமே அவர்களுக்கு ஈடேற்றம் தரும். அதைத்தாண்டி நபியவர்களின் மகள் என்பதனால் வேறு எந்த அந்தஸ்தும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. அவ்வாறிருக்க சில மூடர்கள் மக்களின் அறியாமையை பயன்படுத்ததி தங்களை நபியின் மகளின் வழித்தோன்றல் என்று ஏமாற்றுவதை வைத்து அதை இஸ்லாத்தில் ஒரு ஜாதியாக அதுவும், பிராமணர்களை போன்று என்று நீங்கள் கூறுவது தவறாகும். மேலும் மற்ற பிரிவினர் அவர்கள் செய்யும் தொழிலை வைத்து அறியப்படுகின்றனர்.[ உதாரணத்திற்கு பொற்கொல்லன், சலவை தொழிலாளி, முடி திருத்துபவர் இப்படி] இஸ்லாம் எந்த தொழிலையும் இழிவாக கருதவில்லை. திருட்டு-மோசடி-விபச்சாரம் நீங்கலாக]. இது ஜாதியல்ல.

ஆக, இஸ்லாத்தில் பிரிவுமில்லை- ஜாதியுமில்லை. நாங்கள் ஒரே ஜாதிதான்[முஸ்லிம்கள்தான்].

அன்புடன்;முகவை எஸ்.அப்பாஸ்.

Monday, July 6, 2009

ஹாலிவுட் படங்களின் அரபு விரோதப்போக்கு

திரைப்படம் என்பது பட்டிக்காடு முதல் மேல்தட்டு மக்கள் வரை சென்றடையும் ஒரு வலுவான ஊடகம். மக்களின் முக்கியப்பொழுதுப்போக்காக மாறிப்போன இந்த ஊடகத்தை இஸ்லாத்தின் எதிரிகள் இன்று கையில் எடுத்து இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களுக்கெதிராக ஒரு வெறுப்புணர்வு பிரச்சாரத்தை(Hate policy) பரப்பி வருகிறார்கள்.இது இன்று நேற்றல்ல தொன்றுத்தொட்டே நடந்து வருகிறது. காரணம் முஸ்லிம்கள் இத்துறையில் அதிகம் கவனம் செலுத்தாததுதான். அதற்காக எல்லாப்படங்களையும் பார்க்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள் நமக்கு எதிராக நடக்கும் இந்த ஊடக யுத்தத்தில் கவனம் செலுத்தி உடனுக்க்குடன் விமர்சனங்களைச்செய்து மக்களிடம் இந்த செய்தியை கொண்டு சேர்ப்பதோடு நாமும் இத்துறையில் இஸ்லாமிய வரம்பிற்குட்பட்டு பங்காற்ற முன் வரவேண்டும். அப்பொழுதுதான் நாம் இந்த சதி வலையை முறியடிக்க இயலும். ஆகவே இது சம்பந்தமாக விடியல் வெள்ளி மாத இதழில் 2008 ஜூலை மாதம் எழுத்தாளர் MSAH அவர்களால் எழுதப்பட்ட கருத்துக்கட்டுரையை பாலைவனத்தூதில் சமுதாய விழிப்புணர்வுக்காக பிரசுரம் செய்கிறோம்.

ஹாலிவுட் படங்களின் அரபு விரோதப்போக்கு


டாக்டர் ஜாக் ஷஹீன் என்ற எழுத்தாளர் சமீபத்தில் ஒரு நூலை எழுதியுள்ளார்.அரபுக்கிறிஸ்தவராகிய இவர் 30 வருடங்கள் ஆய்வுச்செய்து இந்த நூலை எழுதியுள்ளார்.நூலின் பெயர்: The Reel Bad Arabs:How Hollywood Villifies a People. ஹாலிவுட் என்ற பெயரை அறியாதவர் இந்த உலகில் எவரும் இருக்கமாட்டார்.அமெரிக்கத்திரைப்படங்கள் பெரும்பாலும் தயாரிக்கப்படும் ஓரிடம்தான் ஹாலிவுட். இது அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ளது.ஆதலால் அமெரிக்கத்திரையுலகை ஹாலிவுட் என்றழைப்பார்கள்.

இதனை வழியொட்டிதான் நம்மூரிலும் பல "கட்அ வுட்"களைக்கொண்டு வந்தார்கள்.தமிழ்த்திரைப்படங்கள் பெரும்பாலும் சென்னை கோடம்பாக்கத்தை மையமாகக்கொண்டு உருவாக்கப்படுகின்றன.இதனால் தமிழ் திரையுலகை "கோலிவுட்"என்றழைக்கின்றார்கள்.பம்பாயை மையமாகவைத்து ஹிந்தித்திரைப்படங்கள் தயாரிக்கப்படுவதால் ஹிந்தித்திரையுலகை "பாலிவுட்"என்றழைக்கின்றார்கள்.
உலகம் முழுவதும் அதிகம் "மவுசு" உள்ள ஹாலிவுட் படங்களில் கடந்த 1896 முதல் 2000 ஆம் ஆண்டு வரை வெளிவந்த 1000 படங்களை ஜாக் ஷஹீன் தனது ஆய்வுக்கு எடுத்துள்ளார். இவைகளில் 900க்கும் மேற்ப்பட்ட படங்கள் அரபுகளையும் முஸ்லிம்களையும் கோரமாகச் சித்தரிக்கின்றன.அதாவது எதிர்மறையாக வெளிவந்துள்ளன.52 படங்கள் அரபுக்களைக்குறித்து நடுநிலையாகவும், 12 படங்கள் நேர்மறையாகவும்(பாசிட்டிவ்)வெளிவந்துள்ளன.
"அரப் என்றால் யார்?" என்று ஷஹீன் இந்நூலில் கேட்கிறார்.ஹாலிவுட்டின் பதில்:"கொடூரமான கொலைக்காரர்கள், காட்டுமிராண்டித்தனமான வாடகைக்கொலையாளிகள்,மதவெறியர்கள்,எண்ணை வளம் அதிகம் கொண்ட அகம்பாவிகள், பெண்களை அடிமைப்படுத்துபவர்கள்." இப்படித்தான் ஹாலிவுட் படங்கள் நமக்கு அரபுக்களைப்பற்றிய வினாக்களுக்கு விடையளிக்கின்றன.
அவரது ஆய்வுப்படி 900க்கும் மேற்பட்ட ஹாலிவுட் படங்கள் அரபுகளை வில்லன்களாக சித்தரிக்கின்றன.இந்த வில்லன்களில் அதிகமானவர்கள் அரபு ஷேக்குகளாக இருப்பார்கள்.அல்லது எகிப்தியர்களாக இருப்பார்கள். அல்லது ஃபலஸ்தீனர்களாக இருப்பார்கள்.மீதியுள்ள மாநிறமுடைய அல்ஜீரியா,ஈராக்,ஜோர்தான்,லெபனான்,லிபியா,மொராக்கோ,சிரியா,துனீசியா,எமன் போன்ற அரபு தேசங்களைச்சேர்ந்த அரபுகளாக இருப்பார்கள்.
கார்ட்டூன் படங்கள் கூட அரபுக்களை விட்டு வைக்கவில்லை.1982ல் வெளிவந்த 1001 Rabbit Tales என்ற கார்ட்டூன் படம் அரபுகளை மோசமாகச் சித்தரிக்கின்றது.

ஒரு படம் கூட ஃபலஸ்தீனர்களை பாதிக்கப்பட்டவர்களாகவும், இஸ்ரேலியர்களை கொடூரமான ஒடுக்குபவர்களாகவும் காண்பிப்பதில்லை.
இஸ்ரேலிய யூத ராணுவ வெறியர்களும்,யூதக் குடியேற்றவாதிகளும் ஆலிவ் மரங்களை வேரோடு பிடுங்கி எறிவதையும்,ஃபலஸ்தீன அப்பாவி குடிமக்களை சுட்டுப்பொசுக்குவதையும் ஒரு ஹாலிவுட் படம் கூட காண்பிப்பதில்லை.

ஃபலஸ்தீனத்தின் பரிதாபத்திற்குரிய குடிமக்கள் கொடூரமான யூத ஆக்கிரமிப்பின் கீழ் தங்கள் வாழ்வை நகர்த்துவதற்குப் போராடுவதையும், அகதிகள் முகாமில் அல்லலுறுவதையும், சொந்த மண்ணிலேயே அன்னியர்களாக அலைவதையும் ஒரு ஹாலிவுட் படம் கூட இதுவரை காண்பித்ததில்லை.

1994 true liஎச் என்ற படம் வெளிவந்தது.1987 இல் Wanted Dead or Aliவெ என்ற படம் வெளியானது.இந்த இரண்டு படங்கள் உட்பட 7 ஹாலிவுட் படங்கள் ஃபலஸ்தீனர்களை அணு ஆயுத பயங்கரவாதிகளாக சித்தரித்தன.
Half-Moon Street(1986),Terror in Beverly Hills(1988),Appointment with Death(1988) ஆகிய படங்கள் உட்பட 11 ஹாலிவுட் படங்கள் ஃபலஸ்தீனர்களை கெட்டச்செயல் செய்பவர்களாகவும்,மேலை நாட்டுப்பெண்களையும்,குழந்தைகளையும் மிரட்டுபவர்களாகவும், காயப்படுத்துபவர்களாகவும் சித்தரிக்கின்றன.
இந்த அடிப்படையில் நூலாசிரியர் ஜாக் ஷஹீன் ஓர் உண்மையை கண்டுபிடித்துள்ளார்,அதாவது பல படங்கள் இஸ்ரேலிலேயே படம்பிடிக்கப்படுவதாக அவர் கூறுகிறார். இந்த படங்கள்தான் 2003இல் அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமிப்பதை இலகுவாக்கிக்கொடுத்திருக்கும் என்று ஜாக் ஷஹீன் கூறுகிறார்.அதாவது அரபுகளைத்தொடர்ந்து வில்லன்களாகக் காட்டி இவர்கள் ஒழிக்கப்பட வேண்டியவர்கள் என்று மக்கள் மனங்களில் பதிய வைப்பதற்கு இந்தப்பாழாய்ப்போன ஹாலிவுட் படங்கள் பெரும் உதவி புரிந்துள்ளன.

இந்த மாதிரிப்படங்களை உருவாக்குவது ஏதோ எதேச்சையாக நடப்பது அல்ல; அது ஓர் அரசியல் நிகழ்ச்சி நிரலாக திட்டம் போடப்பட்டு அச்சுப்பிசகாமல் அரங்கேற்றப்படுகின்றன என்கிறார் ஜாக் ஷஹீன். குறிப்பாக இரண்டு தயாரிப்பாளர்கள் தயாரிக்கும் படங்கள் இந்த அடிப்படையிலேயே அமைந்துள்ளன என்று ஜாக் ஷஹீன் தனது ஆய்வில் கண்டுபிடித்துள்ளார்.அந்த இரண்டு தயாரிப்பாளர்கள் மெனாச்செம் கோலன்(Menachem Golan)யோரம் குளோபஸ்(Yoram Globus). 1982 இல் குளோபஸ் இஸ்ரேலின் திரைப்படத்துறைக்கு இயக்குநராக நியமிக்கப்பட்டார் என்று சொல்லும்பொழுதே இவர் எப்படிப்பட்டவர் என்பது நமக்கு விளங்கிவிடும்.
இஸ்ரேலில் தயாரிக்கப்படும் அத்தனை படங்களையும் இந்த திரைப்படத்துறைதான் கண்காணித்து வருகின்றது.

குளோப‌ஸ்ஸும்,கோல‌னும் இணைந்து அமெரிக்காவில் "கேனான்" என்ற‌ புக‌ழ்ப்பெற்ற‌ த‌யாரிப்பு நிறுவ‌ன‌த்தை உருவாக்கினார்க‌ள். இந்த‌ கேனான் நிறுவ‌ன‌ம் அர‌புக‌ளை வில்ல‌ன்க‌ளாக‌ சித்த‌ரித்து ச‌ளைக்காம‌ல் 26 ப‌ட‌ங்க‌ளை த‌யாரித்துள்ள‌து. இந்த‌ப்ப‌ட‌ங்களைக் காண்போர் அர‌புக‌ளைக்க‌ண்டால் காறி உமிழும் வ‌ண்ண‌ம் வெறுப்பை உண்டாக்கும் ப‌ட‌ங்க‌ள் இவை.
கேனானின் Hell Squad(1985) என்ற‌ ப‌ட‌த்தில் அமெரிக்க‌க்க‌ட‌ற்ப‌டையின‌ர் வில்ல‌ன்க‌ளாகச் சித்த‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ ஃப‌ல‌ஸ்தீன‌ர்க‌ளை கொன்றொழிப்பார்க‌ள். அதே போல் The Delta Force(1986), Killing Streets(1991) ஆகிய‌ கேனான் த‌யாரிப்புப் ப‌ட‌ங்க‌ளிலும் ஃப‌ல‌ஸ்தீன‌ர்க‌ள் கொன்றொழிக்க‌ப்ப‌டுவார்க‌ள். ஜாக் ஷஹீன் இன்னொரு அதிர்ச்சிகர உண்மையையும் தன் ஆய்வில் கண்டுபிடித்தார். அரபுகளை மோசமாக சித்தரிக்கும் படங்களின் தயாரிப்புகளில் அமெரிக்க இராணுவம் நேரடியாக ஈடுபடுகிறது என்பதுதான் அந்த அதிர்ச்சிகர உண்மை.
2000 ல் வெளியான‌ Rules of Engagement என்ற‌ ப‌ட‌ம் அமெரிக்க‌ இராணுவ‌த்திற்கும்,அமெரிக்க‌ க‌ப்ப‌ற்ப‌டை வீர‌ர்க‌ளுக்கும் ந‌ன்றி சொல்கிற‌து.
இதேபோல் 14 ப‌ட‌ங்க‌ள் அமெரிக்க‌ப்பாதுகாப்புப் ப‌டைக்கு ந‌ன்றி சொல்கின்ற‌ன‌.தேவையான கருவிக‌ள்,ஆட்க‌ள், தொழில்நுட்ப‌ உத‌விக‌ள் செய்துத‌ந்த‌த‌ற்காக‌ இந்த‌ப்ப‌ட‌ங்க‌ள் அமெரிக்க‌ப்பாதுகாப்பு ப‌டைக்கு ந‌ன்றி சொல்கின்ற‌ன‌.இவைய‌னைத்திலும் அமெரிக்க‌ர்க‌ள் வில்ல‌ன்க‌ளான‌ அர‌புக‌ளைக் கொன்றொழிப்பார்க‌ள்.

அர‌புக‌ளை மோச‌மாக‌ சித்த‌ரிக்கும் ப‌ட‌ங்க‌ளான‌ True Lies(1994), Executive Decision(1996),Freedom Strike(1998)ஆகிய‌ ப‌ட‌ங்க‌ளுக்கு அமெரிக்க‌ ராணுவ‌ த‌லைமைய‌க‌மான‌ பென்ட‌க‌னே உத‌வி செய்துள்ள‌து.அதே போல‌ அர‌புப் பெண்க‌ளையும் ஹாலிவுட் ப‌ட‌ங்க‌ள் இர‌ண்டாந்த‌ர‌ப் பெண்க‌ளாக‌, த‌ர‌ங்கெட்ட‌வ‌ர்க‌ளாக‌ச் சித்த‌ரிக்கின்ற‌ன‌ என்று ஜாக் ஷ‌ஹீன் கூறுகிறார். இடுப்பைகுலுக்கி ஆடும் முகத்திரை அணிந்த பெண்களாகவும்,மெல்லிய அரைகுறை ஆடைகள் அணிந்த ஆபாசப்பெண்களாகவும் அவர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள்.Sheltering Sky(1990),saadia(1953),Beast of Morocco(1966) போன்ற படங்கள் இதற்கு உதாரணம்.

Leopard Women(1920),Night Hawks(1981) ஆகிய படங்களில் அரபுப்பெண்கள் மேலை நாட்டினரைக்கொல்வதற்காக குண்டுகளைத் தங்கள் உடல்களில் கட்டிக்கொண்டு அலையும் கொடூரர்களாக சித்தரிக்கப்படுகிறார்கள்.
இந்நிலைக்கு என்ன காரணம் என்று ஜாக் ஷஹீன் ஆராய்ந்தார்.அரப் இஸ்ரேல் மோதல்,பேராசை,The Mummy போன்ற படங்கள் கோடி கோடியாக சம்பாதித்துக்கொடுத்தன.திரைப்படங்கள் பற்றிய நடுநிலையான, கடுமையான விமர்சனங்கள் இல்லாமை,பொதுமக்கள் காட்டும் அமைதி,முஸ்லிம்கள் ஹாலிவுட் களத்தில் அதிகம் இல்லாமை ஆகியவைகள் அவர் ஆய்வில் கண்டுபிடித்த காரணங்களில் சில."உண்மையான ஆர்வமிக்க இளம் திறமையாளர்கள் முன் வரவேண்டும்.அவர்கள் அரபுகளைப்பற்றிய தவறான கருத்துக்களை களையும் வண்ணம் நல்ல தரமான படங்களை தயாரிக்கவேண்டும்".என்று ஜாக் ஷஹீன் கூறுகிறார். ஆம் முஸ்லிம்க‌ள் திரைப்ப‌ட‌ம் என்னும் வ‌லிமையான‌ ஊட‌க‌ ஆயுத‌த்தை கையில் எடுக்க‌வேண்டும்.
அத‌னைஇஸ்லாமிய‌ப்ப‌டுத்த‌வேண்டும்.ஆபாச‌ம்,வ‌ன்முறை,ஒருதலைப்ப‌ட்ச‌ம்,ஒரு த‌லைமுறையையே அழிக்கும் வ‌ண்ண‌ம் ம‌றைமுக‌ப் பிர‌ச்சார‌ம் என்று அனைத்து அக்கிர‌ம‌ங்க‌ளும் இல்லா ஒரு புதிய‌ திரையுல‌கை உருவாக்க‌வேண்டும்.இதுதான் இப்போதைய‌ தேவை.
க‌ட்டுரையாள‌ர்:MSAH
Source:The Gulf Today May 15,2008.
Thanks:Vidiyal Velli Monthly July,2008.

Wednesday, July 1, 2009

துபாய் ம‌ருத்துவ‌ம‌னையில் சுய‌நினைவிழ‌ந்து வாடும் இந்திய‌ர்


துபாய்: துபாய் ம‌ருத்துவ‌ம‌னையில் சுய‌நினைவிழ‌ந்த‌ நிலையில் இந்திய‌ர் ஒருவ‌ர் க‌ட‌ந்த‌ ஒரு மாத‌மாக அவ‌ச‌ர‌ சிகிச்சைப் பிரிவில் இருக்கிறார். இவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.

இந்திய‌ ம‌க்க‌ளுக்கு ப‌ல்வேறு ச‌முதாய‌ப் ப‌ணிக‌ளை ஆற்றிவ‌ரும் ஈமான் அமைப்பினர், அத‌ன் ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் முஹ‌ம்ம‌து தாஹா த‌லைமையில் ம‌ருத்துவ‌ம‌னையில் சிகிச்சை பெற்று வ‌ரும் இந்திய‌ர்க‌ளை வார‌ந்தோறும் ச‌ந்தித்து அவ‌ர்க‌ள‌து தேவைக‌ளை நிறைவேற்றி வ‌ருகின்ற‌ன‌ர்.

அவ்வாறு சென்ற‌ பொழுது க‌ட‌ந்த‌ ஒரு மாத‌ கால‌மாக‌ இந்திய‌ர் ஒருவ‌ர் அவ‌ச‌ர சிகிச்சைப் பிரிவில் நினைவிழ‌ந்த‌ நிலையில் சிகிச்சை பெற்று வ‌ரும் த‌க‌வ‌ல் அறிந்து அவரை பார்த்தன‌ர்.

அவர் யார் என்ப‌த‌ற்கான‌ சான்றுக‌ளும் எதுவும் அவ‌ரிட‌ம் இல்லாத‌ நிலையில் ம‌ருத்துவ‌ம‌னையில் சேர்க்க‌ப்ப‌ட்டுள்ளார். அவ‌ரைப் பார்க்கையில் த‌மிழ‌க‌ம், கேர‌ளா, ஆந்திரா உள்ளிட்ட‌ மாநில‌த்தைச் சேர்ந்த‌வ‌ராக‌ இருக்க‌லாம் என‌ க‌ருத்த‌ப்ப‌டுகிற‌து.

த‌மிழ் பேசும் போது ம‌ட்டும் இவ‌ர‌து பார்வை மேலும் கீழும் வ‌ருகிறது. என‌வே இவ‌ர் குறித்து த‌க‌வ‌ல் தெரிந்தால் ஈமான் ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹாவை 050 467 4399 / 050 51 96 433 எனும் அலைபேசியில் அல்ல‌து muduvaihidayath@gmail.com என்ற‌ மின்ன‌ஞ்ச‌லிலோ தொட‌ர்பு கொள்ள‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

அவ்வாறு த‌க‌வ‌ல் கிடைக்கும் ப‌ட்ச‌த்தில் அவ‌ரை ப‌த்திர‌மாக‌ அவ‌ர‌து குடும்ப‌த்தாரிட‌ம் சேர்ப்ப‌த‌ற்கான‌ ஏற்பாடுக‌ள் செய்ய‌ப்ப‌டும்.