நாகர்கோவில்: தனது மகளையே கர்ப்பமாக்கி, அவரை கொலையும் செய்த தந்தை கைது செய்யப்பட்டார்.
குமரி மாவட்டம் அருமனை பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் புரூஸ்வெல்ட். அவரது முதல் மனைவியின் மகள் ஜாஸ்மின் (16), மார்த்தாண்டத்தில் ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். பிளஸ்-2 செல்ல இருந்தார்.
கடந்த 29ம் தேதி காலை புரூஸ்வெல்ட்டும், அவரது 2வது மனைவி ஐடாவும், ஐடாவின் சொந்த ஊரான திருவரம்பு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பினர்.
அப்போது வீட்டின் பின்புறக் கதவு திறந்து கிடந்தது. உள்ளே உள்ள குளியலறையில் உள்ள நீர் தொட்டியில் ஜாஸ்மின் நிர்வாண நிலையில் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தார்.
வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. போலீஸ் மோப்ப நாய்களை திணறச் செய்ய வீட்டின் உள்புறம் முழுவதும் மிளகாய்ப் பொடி தூவப்பட்டிருந்தது.
போலீசார் ஜாஸ்மினின் உடலைக் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பரிசோதனையில் ஜாஸ்மின் 4 மாத கர்ப்பமாக இருந்தது தெரிய வந்தது.
மேலும் கொலை செய்யப்படும்போதும் அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
போலீஸ் விசாரணை நடத்தியபோது மாணவியின் தந்தை புரூஸ்வெல்ட் மீதே சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை உரிய முறையில் போலீசார் விசாரித்தபோது, தனது மகளையே பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கியதையும், கொலை செய்ததையும் ஒப்புக் கொண்டார்.
இது குறித்து போலீசார் கூறுகையில்,
ஓய்வு பெற்ற ராணுவ வீரரான புரூஸ்வெல்ட் கன்னமாமோடு அருகே உள்ள பி.எஸ்.என்.எல். டவரில் வாட்ச்மேனாக வேலை பார்த்து வந்தார். அவரது முதல் மனைவி இறந்ததையடுத்து ஐடா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இவருக்கு முதல் மனைவி மூலம் பிறந்தவர் தான் ஜாஸ்மி்ன்
புரூஸ்வெல்டின் தந்தை, தனது சொத்துக்களை ஜாஸ்மின் பெயருக்கு தனது சொத்துக்களை எழுதி வைத்து விட்டார்.
வீட்டில் ஐடா இல்லாதபோது புரூஸ்வெல்ட் வேறு ஒரு பெண்ணுடன் உறவு கொண்டிருந்ததை ஜாஸ்மின் பார்த்து விட்டார். இதையடுத்து புரூஸ்வெல்ட தனது மகள் என்று பாராமல் ஜாஸ்மினையும் மிரட்டி, தனது ஆசைக்கு இணங்க வைத்து, தகாத உறவு வைத்துள்ளார்.
இதனால் ஜாஸ்மின் கர்ப்பமானார். அவர் 4 மாதம் கர்ப்பமானதால் வயிறு பெரிதானது. இதனால் அவரை பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப முடியாத நிலையும், கருக்கலைப்பு செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டது.
ஜாஸ்மின் கர்ப்பமானது வெளியில் தெரிந்தால் அவமானமாகிவிடும் என்பதால் அதிலிருந்து தப்பிக்க அவரை கொலை செய்ய புரூஸ்வெல்ட் முடிவு செய்தார்.
இந் நிலையில் கடந்த 28ம் தேதி இரண்டாவது மனைவி ஐடாவின் ஊரான திருவரம்புக்கு புரூஸ்வெல்ட் சென்றார். ஊருக்குப் புறப்படும்போதே மகள் ஜாஸ்மினுக்கு தூக்க மாத்திரைகள் கலந்த பாலை குடிக்க வைத்தார்.
திருவரம்பு சென்றதும் தனக்கு அவசர வேலை இருப்பதாகக் கூறிவிட்டு புரூஸ்வெல்ட் கிளம்பினார். அங்கிருந்து நேராக தனது வீட்டுக்கு வந்தார்.
தூக்க மாத்திரை கலந்த பாலை குடித்ததால் ஜாஸ்மின் மயங்கிக் கிடந்தார். அந்த நிலையிலும் அவரை பாலியல் பலாத்காரம் செய்த புரூஸ்வெல்ட், பின்னார் கயிற்றால் ஜாஸ்மினின் கழுத்தை இறுக்கி, தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொலை செய்தார்.
இது கொள்ளை சம்பவம் போல தெரிவதற்காக பீரோவையும், சூட்கேசையும் உடைத்து பொருட்களை சிதறடித்துவிட்டு, மிளகாய் பொடியையையும் தூவினார்.
15 பவுன் நகைகளையும், ரூ. 5,000 பணத்தையும் தனது ஷூவுக்குள் மறைத்துவிட்டு, மனைவியின் ஊருக்குச் சென்று, மாலையில் அவருடன் ஒன்றும் தெரியாதவர் போல திரும்பி வந்துள்ளார்.
இதையெல்லாம் அவரே வாக்குமூலமாகத் தந்துள்ளார் என்றனர் போலீசார்.