Monday, June 7, 2010

உயிரைக் குடித்த பேஸ்புக்

இளைஞர்கள் மத்தியில் சமூக இணையதளமான பேஸ்புக் பிரபலமானது. இதனைப் பயன்படுத்தி பலர் மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் இந்த இணைய தளத்தின் காரணமாக ஒரு கொலை

ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது அந்த அரசாங்கத்தை மட்டுமல்லாது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

ஆஸ்திரேலியாவைச் சார்ந்த 18 வயது இளைஞி நோனா பிளோமிசாப். இவர் பேஸ்புக்கில் தனது முழு விபரங்களையும் வெளியிட்டு தனது நண்பர்களுடன் தொடர்பு வைத்திருந்தார். இவரைத் தொடர்பு கொண்ட கிறிஸ்டோபர் ஜேம்ஸ் என்ற 20 வயது இளைஞர் தான் மிருக நலச் சங்கத்தில் வேலை செய்வதாக தெரிவித்தார். இவரது பேஸ்புக் இணையதளத்திலும் இவ்வாறே குறிப்பிட்டிருந்தார். நோனாவும் மிருக நலத்தில் ஆர்வம் கொண்டிருந்ததால் ஜேம்ஸூடன் நட்பு வைத்திருந்தார். நோனாவின் மதிப்பைப் பெற்ற ஜேம்ஸ் நோனாவுக்கு வேலை வாங்கித் தருவதாக கூறி தன்னோடு சுற்றுலா வருமாறு அழைத்துச் சென்றிருக்கிறார்.

சுற்றுலா சென்று இரண்டு நாட்கள் கழித்து மே 14ம் திகதி சிட்னியின் கடற்கரையோரத்தில் நோனா பிணமாக கிடந்தார். சடலத்தை கைப்பற்றியுள்ள காவல்துறையினர் கிறிஸ்டோபர் ஜேம்ஸை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் காரணமாக பொதுமக்கள் பேஸ்புக்கில் தங்களைப் பற்றிய தகவல்களை வெளியிட வேண்டாம் என ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இவ்வாறான சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வந்தாலும் பேஸ்புக்கின் மீதான கவர்ச்சி குறைந்தபாடில்லை. இணையம் மூலம் ஏற்படுகின்ற நட்பை நம்பி நம்மைப் பற்றிய முழுமையான தகவல்களை வெளியிடாமல் வைத்திருப்பது பாதுகாப்பானது.

No comments: