Tuesday, June 8, 2010

முஸ்லிம்கள் - விடுதலைப்புலிகள்

பாலஸ்தீனத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இஸ்ரேலிய பாசிசம் நடத்தும் இனவெறிக்கு நிகரான போக்கை மேற்கொள்வதில் விடுதலைப்புலிகள் என்ற பயங்கரவாத அமைப்பு எப்போதும் முன்னணி வகிக்கின்றது. ஆனால் சர்வதேச அளவில் இஸ்ரேலுக்கு எதிராக வரும் கண்டனங்கள் போன்று விடுதலைப்புலிகளுக்கு எதிரான கண்டனங்கள் உலகில் ஒலிக்கவில்லை. முஸ்லிம்களுக்கு எதிரான வெறியாட்டத்திற்கு இவர்களுக்கு 'தமிழீழம்' என்ற முகமூடி தேவைப்பட்டது - பயன்பட்டது. கடந்த 25 ஆண்டுகளில் இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக இந்த வெறியர்கள் நடத்திய கொலையாட்டங்கள் வெளி உலகிற்கு ஒரு நாள் நிச்சயம் தெரியவரும்.


ஆகஸ்ட் மாதம் அங்கு நடந்த - விடுதலைப் புலிகள் நடத்திய - அதனால் உயிரிழந்த முஸ்லிம்களை நினைவுக் கூறுவோம். அவர்களின் மறுமை வாழ்வுக்காக துஆ செய்வோம். இணைய ஆசிரியர்

மனித உரிமைகளுக்கான பல்கலைக்கழக ஆசிரியர்கள் (யாழ்ப்பாணம்) அமைப்பினால் 08.05.1991 அன்று வெளியிடப்பட்ட அறிக்கை இலக்கம் 7 இலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பகுதியின் தமிழ் மொழிபெயர்ப்பு

பக்கம் 16

2.5 காத்தான்குடி

இந்திய அமைதி காக்கும் படை நிலைகொண்டிருந்த காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் காத்தான்குடி முஸ்லிம்களுடன் நல்லுறவைக் கொண்டிருந்ததுடன், பிரச்சினையான சமயங்களில் அங்கு அடைக்கலம் பெற்றும் வந்தனர். டிசம்பர் 1989ல் இப்பகுதி புலிகளின் கட்டுப்பாட்டில் வந்த போது, முதல் இரண்டு வாரங்கள் அவர்களது நடைமுறைகள் மிகவும் சிறப்பான முறையில் அமைந்திருந்தது. அப்போது முஸ்லிம்களின் நம்பிக்கையும் உயர்மட்டத்தில் இருந்தது. ஆயினும் இதன் பின்னர் நிலைமைகள் படிப்படியாக கீழ்மட்டங்களுக்கு வீழ்ச்சியடையத் தொடங்கின. புலிகளால் கோரப்பட்ட அதிகளவு கப்பம் பெருமளவு வணிகத்திலேயே தங்கியிருந்த மக்களை பெரிதும் சுமைக்குள்ளாக்கியது. முஸ்லிம்களின் சுயாதீனமான நடவடிக்கை எதற்கும் பாதகமான அணுகுமுறைகளை புலிகள் ஆரம்பித்தனர். சிறியளவு புலி ஆதரவாளர்களுக்கான எதிரப்புகளும் அதற்கான பதில் நடவடிக்கைகளும் காணப்பட்டன.

ஆயினும் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட முஸ்லிம் தலைமைத்துவம் புலிகளை உரிய முறையில் அணுகி தொடர்ந்த தலையீட்டின் ஊடாக விடயங்களைச் சரிப்படுத்தி வந்தது. சம்மேளனமானது 'புலிகள் முஸ்லிம்களுக்கு மதிப்பளித்து அவர்களது சுய நிர்ணய உரிமையை புலிகள் ஏற்றுக் கொள்ளாத வரை அவர்களுடன் தொடர்பு வைத்திருப்பது இகழ்வுக்குரியது' எனும் நிலைப்பாட்டைக் கொண்டிருந்த கடும்போக்குடைய இளைஞர்களிடமிருந்து குறிப்பிடத்தக்களவு அழுத்தத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. சம்மேளனம் ஏனைய முஸ்லிம் தலைவர்களுடன் இணைந்து புலிகளை பொறுப்புணர்வுடன் நடக்க வைக்கத்தக்க நட்புறவான அழுத்தத்தை தொடர்ந்து ஏற்படுத்திய போதிலும், முஸ்லிம்களின் அனைத்து சுயாதீன கருத்து வெளியீட்டு வகைகளையும் உடைக்கத் தக்கதாக புலிகளால் தடைசெய்யப்பட்டது.

யோகி கிழக்குக்கு வருகை தந்த போது, உள்ளூர்த் தலைமைகள் சம்மேளனத்தின் மீதான தடை ஏற்படுத்தியுள்ள பாதகமான சூழ்நிலை குறித்து அவருக்கு விளக்கினர். அவர்கள் புலிகளை எதிர்க்கவோ புலிகளின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கவோ முஸ்லிமகள் எவ்விதத்திலும் முயற்சிக்கவில்லை என்றும், யோகி இத்தடையை உத்தியோகபூர்வமாக நீக்கினாலும் அவர்கள் வழமை போன்று செயற்பட முடியும் என்றும் விளக்கினர். யோகி இத்தடையை நீக்கினார் எனினும் முஸ்லிம்களின் ஏனைய கோரிக்கைகள் மீது பாராமுகமாகவே செயற்பட்டார். ஓரளவு வழமையான நிலைகளும் உறவும் தொடர்ந்தன. காத்தான்குடியின் மூத்த தலைமுறையோடு அடிக்கடி நட்புறவான தொடர்புகளைக் கொண்டவர்களாக புலிகளின் பிராநதியத் தலைவர்களான நியூற்றன், கரிகாலன், டேவிற் மற்றும் ரஞ்சித் அப்பா ஆகியோர் காணப்பட்டனர்

ஜூன் யுத்தம்: யுத்தத்தின் ஆரம்பத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தின் நேரடி தரைவழிப் பாதைகள் மூடப்பட்டதாலும், தமிழ் வர்த்தகர்களும் அவர்களது லொறிகளும் மாவட்டத்திற்கு வெளியே செல்ல முடியாததாலும், காத்தான்குடி வர்த்தகர்கள் கல்முனையிலிருந்து பொருட்களை முக்கியமாக உணவுப் பொருட்களைப் பெற்றுக் கொண்டதாலும், மட்டக்களப்பு மாவட்ட மக்களிடையே காத்தான்குடியின் முக்கியத்துவம் அதிகரித்ததோடு, காத்தான்குடி முழு மாவட்டத்துக்குமான உணவு மூலமாக மாறியது. வெளியில் வசிக்கும் மக்கள் உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்ய கூட்டம் கூட்டமாக காத்தான்குடிக்கு வருகை தந்தனர்.

ஜின்னா ஹாஜியார் காத்தான்குடியின் மஞ்சந்தொடுவாய் எல்லைப் பகுதியில் வசிக்கும் அரிசி ஆலை உரிமையாளர் ஆவார். அவர் ரஞ்சித் அப்பாவை அறிந்திருந்தார். யுத்தம் உக்கிரமான பொழுதில் ரஞ்சித் அப்பாவிடம் ஜின்னா ஹாஜியார் அப்பாவித்தனமாக 'காத்தான்குடி மக்களுக்கு தீங்குகள் ஏற்படாமல் நீங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டிருந்தார். அச்சமயம் சிங்கள பொலிசாருடன் சேர்த்து முஸ்லிம் பொலிசாரும் பெரும் எண்ணிக்கையில் புலிகளால் கொல்லப்பட்டிருந்தும், காத்தான்குடியின் பொது நிலைப்பாடு இதை யுத்த அடிப்படையில் நியாயப்படுத்தத் தக்கதாகவே அமைந்திருந்தது.

ஜூன் 26ம் திகதி புலிகள் காத்தான்குடிக்குள் பெரும் எண்ணிக்கையில் பிரவேசித்து ஊரடங்கை பிரகடனப்படுத்தி பிரதான வீதியின் இருபுறங்களிலும் அமைந்திருந்த கடைகளை களவாடத் தொடங்கியது மக்களைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. விடயத்தை அறியாமல் பிரதான வீதிக்கு வந்த ஒருவர் கொல்லப்பட்டார். மாவட்டத்தில் தமிழ் கிராமங்களையும் உள்ளடக்கியாதாகத் தொடர்ந்த ஒன்றாகவே இக் களவுகள் காணப்பட்டாலும், பள்ளிவாயல் ஒன்றின் வருமானத்துக்காய் இயங்கிய அப் பள்ளிவாயலின் அருகில் காணப்பட்ட 3 கடைகள் புலிகளால் எரியூட்டப்ட்டமை முஸலிம்களை மிகவும் பாதித்தது. புலிகள் அங்கிருந்து சென்ற உடனேயே விரைந்த மக்களால் பள்ளிவாயல் தீயிலிருந்து பாதுகாக்கப்பட்டது. தொடர் கடைத்தெருக் களவாடல்கள் மாவட்ட மக்களின் உணவு விநியோகத்தை முற்றாகவே முடக்கியது.

உள்ளூர் முஸ்லிம் தலைமைகள் ரோமன் கத்தோலிக்க திருச்சபை அதிகாரிகளுடன் நட்புறவான பிரதிநிதுத்துவப்படுத்தலைக் கொண்டிருந்தனர். களவாடலின் ஒரு வார நிறைவில் புலிகளின் உள்ளுர்த் தலைவர்களான நியுற்றன் மற்றும் ரஞ்சித் அப்பா ஆகியோர் காத்தான்குடிக்கு வந்து 15 மூத்தோருடன் சந்திப்பொன்றை மேற்கொண்டனர். இதில் தவறுக்காக மன்னிப்பையும் கோரியிருந்தனர். மேலும் எதிர்காலத்தில் புலிகளின் நன்னடத்தைக்கான உறுதியையும் அளித்திருந்தனர்.

முஸ்லிம்கள் சற்றே நம்பிக்கையுடன் காணப்பட்ட போதும், அதற்கு பெரும் ஊறு விளைவிக்கும் வகையில் புலிகள் காத்தானகுடிக்குத் தெற்கே 3 மைல் தூரத்திலுள்ள குருக்கல்மடத்தில் ஜூலை 12ம் திகதி 68 முஸ்லிம்களைப் படுகொலை செய்தனர். கொல்லப்பட்ட அனைவரும் காத்தான்குடியைச் சேர்ந்தோர் ஆயினும், இதற்கான காரணத்தை கண்டறியும் பாங்கில், புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேறிய முஸ்லிம் ஒருவர் கஞ்சிக்குடிச்சாறு பகுதியில் அமைந்திருந்த புலிகளின் மறைவிடத்தை இராணுவத்துக்கு காட்டிக்கொடுத்தமைக்குப் பழிவாங்கவே இப்படுகொலைகள் இடம்பெற்றன எனும் கதை ஒன்று அப்போது நிலவியது.

ஆகஸ்ட் 3 மனிதப் படுகெலைகள்: விபரங்கள் 4ம், 5ம் இலக்க அறிக்கைகளில் உள்ளன, இப்படுகொலைகள் முஸ்லிம்களிடம் புலிகளுடன் எவ்வாறானதொரு தொடர்பையும் வைத்திருக்க முடியாது எனும் மனநிலையைத் தோற்றுவித்தன. இவையும் ஜூலை 12 படுகொலைகள் போன்றே எவ்வித அடிப்படையும் அற்றவை. சம்மேளன செயலாளரால் யார் இக்கொலைகளைச் செய்தது என்பதில் நிறைந்திருந்த குழப்பத்தை தணிக்கும் முகமாக ஒரு அறிக்கை விடுக்கப்பட்டது. மக்களிடம் ராணுவமே பொறுப்பு என்ற கதைகளும் காணப்பட்டன ஆயினும் உள்ளுர்த் தலைவர்கள் புலிகள் அவ்விடத்தில் காணப்பட்டதையும், அவர்களே பொறுப்பென்பதையும் விபரித்தனர்

ஆகஸ்ட் 3 பள்ளிவாயல் படுகொலைக்கு சற்று முன்னர் ஜின்னா ஹாஜியாரின் வீட்டுக்குச் சென்ற ரஞ்சித் அப்பா அவரின் மருமகன் எங்கே என்று கேட்டுள்ளான். மருமகனின் சிறிய மகன் தந்தை குளியலறையில் இருப்பதாகக் கூறினார். ரஞ்சித் அப்பா அங்கு அடிக்கடி வருபவர் ஆகையால் எதையும் வித்தியாசமாக அவர்கள் உணரவில்லை. மருமகன் ரஞ்சித் அப்பாவை சந்திக்க வெளியே வந்ததும் அவனால் மனையியினதும் மகனினதும் முன்னிலையிலேயே சுட்டுக்கொல்லப்பட்டார். பின்னர் ரஞ்சித் அப்பாவின் தலைமையில் வந்திருந்த புலிகள் அணி இரு பள்ளிவாயல்களுக்குச் சென்று இரவு 8.30 அளவில் 102 பேரைச் சுட்டுக் கொன்றது. இப்படுகெலைகள் முஸ்லிம்களின் தொழுகையின் மிகப் புனிதமான சுஜூது நிலையில் இருந்தோர் மீது மேற்கொள்ளப்பட்டது.

சுஹதாக்கள் விபரம்


03 ஆகஸ்ட் 1990 அன்று காத்தான்குடி 1ம் குறிச்சி மீரா ஜும்ஆப் பள்ளிவாயல் மற்றும் ஹுஸைனியாப் பள்ளிவாயல் ஆகியவற்றில் இசாத் தொழுகையில் ஈடுபட்டிருந்த போது தமிழீழ விடுதலைப் புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் விபரம்

எம். எஸ். எம். அக்ரம் (06)
எம். எஸ். எம். தல்ஹான் (08)
எஸ். ஏ. எம். இம்தியாஸ் (09)
எம். சீ. எம். றிஸ்வான் (10)
எம். ஐ. ஜரூன் (10)
எஸ். செய்யது அஜ்மல் (10)
எம். ஐ. அஸ்றப் (11)
எம். ஐ. எம். ஆரிப் (12)
எம். கமர்தீன் (12)
எம். ஐ. எம். அஜ்மல் (12)
ஏ. எல். மக்கீன் (12)
எம். எஸ். எம். பௌசர் (12)
ஏ. எல். அபுல்ஹசன் (12)
வை. எல். எம். ஹரீஸ் (12)
எம். எஸ். எம். ஜவாத் (13)
எம். எஸ். பைசல் (13)
எம். பீ ஜவாத் (13)
யூ. எல். எம். அனஸ் (13)
ஏ. எல் அப்துல் சமத் (14)
எச். எம். பௌசர் (14)
ஏ. ஜௌபர் (14)
எம். எஸ். எம் சகூர் (14)
ஏ. சமீம் (14)
பீ. எம். முஹம்மத் பஸ்லூன் (15)
எம். இஸ்ஸதீன் (15)
எம். எம். எம். பைசல் (15)
எம். வை. இனாமுல் ஹசன் (16)
எம். இக்பால் (16)
எஸ். எம். சித்தீக் (16)
எம். ஐ. ஜௌபர் (17)
கே. எல். முஹம்மத் றாபி (17)
எம். எம். எம். ஜௌபர் (17)
எஸ். சுல்பிகார் (17)
யூ. எல். முஹைதீன் (17)
எம். ரீ. ஜௌபர் (17)
எஸ். ஏ. எம் ஐன்சாத் (18)
எச். கே. எம். ஆரிப் (18)
ஐ. றபீக் (18)
எம். எஸ். அப்துல் முத்தலிப் (18)
எம். ஏ. எம். அமீன் (20)
ஏ. எல் சலாஹுதீன் (20)
எம். எம். அஸ்றப் கான் (20)
எம். எஸ். ஏ. சுஹைப் (20)
ஏ. எல் சலாஹுதீன் (20)
எம். ஐ. ஹுசைன் (20)
எம். எம். ஜுனைத் (21)
எம். அப்துல் நவாஸ் (21)
எம். ஏ. பௌசர் (21)
எம். ஐ. ஹசன் (22)
எம். ஆர். அப்துல் சலாம் (23)
எஸ். எல். எம். ஜுனைத் (23)
எம். எஸ். அப்துல் றஹீம் (25)
ஏ. பீ. எம். யாசீன் (26)
எம். எல். எம். தாஹிர் (27)
எம். ஐ. அப்துல கபூர் (28)
யூ. எல். எம். இப்றாஹீம் (28)
எம். ஐ. கமால்தீன் (30)
ஏ. பாறூக் (30)
ஏ. றம்ளான் (30)
ஏ. நூர்தீன் (30)
ஏ. கே. ஹாறூன் (31)
எஸ். எச். எம். நஸீர் (32)
எம். சம்சுதீன் (33)
எம். பீ. எம் ஜுனைத் (34)
வீ. எம். இஸ்மாயில் (37)
எம். ஏ. சீ. எம். புஹாரி (35)
எம். சீ. எம். பரீத் (35)
பீ. எம். எம். இப்றாஹீம் (35)
எம். ஐ. ஏ. அஸீஸ் (37)
எஸ். ஏ. மஜீத் (37)
எம். உமர் லெப்பை (38)
எம். ஹனீபா (38)
எம். பீ. ஏ. சமத் (38)
எம். எம். இஸ்மாயில் (40)
ஏ. சீ. எம். நஸ்றுதீன் (40)
எச். எம். எம். சமசுன் (40)
எம். ஏ. எம். அப்துல் காதர் (40)
எம். எஸ். எம். சஹாப்தீன் (41)
கே. எம். ஏ. அஸீஸ் (42)
கே. எல். எம். றஹ்மதுல்லா (42)
எச். எம். மீராலெப்பை (43)
எம். ஏ. தம்பிலெப்பை (45)
என். எம். இஸ்மாயில் (45)
பீ. எம். அப்துல் காதர் (45)
எம். எம். ஹனீபா (46)
ஏ. ஆர். ஆதம் பாவா (47)
எம். எஸ். அப்துல் முத்தலிப் (47)
எம் லெப்பைத்தம்பி (48)
ஏ. எம். சலாஹுதீன் (48)
எம். ஐ. ஆதம்லெப்பை (52)
ஏ. சரீபுதீன் (52)
ஆர். எம் அன்வர் (53)
எம். எம். காசிம் (54)
எம். எம். அசனார் (55)
எம். ரீ. எம். அசனார் (55)
ஏ. எல். கச்சி முஹமமத் (56)
ஏ. ஆதம் லெப்பை (57)
ஏ. எம். முஹம்மத் முஸ்தபா (59)
எஸ். எம். ஹயாத்து கலந்தர் (60)
ஏ. எம். கலந்தர் லெப்பை (60)
எம். எம். சஹாப்தீன் (60)
ஏ. பக்கீர் முஹைதீன் (65)
எம். எல். முஹம்மத் முத்து (70)
எஸ். எம். எம். முஸ்தபா (72)
12 ஆகஸ்ட் 1990 அன்று ஏறாவூர் சதாம் ஹுசைன் கிராமத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளால் மிலேச்சத்தனமாக வெட்டியும் சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் விபரம்.

ஏ. றஹ்மத்தும்மா (40) பெண்
எம். பீ. ஹிதாயா (16) பெண்
எம். பீ. சரீனா (14) பெண்
எம். பீ. ஹபீபா (12) பெண்
ஏ. உசனார் (30) ஆண்
யூ. லாபிர் (03) ஆண்
எம். எல். சீனி முஹம்மத் (47) ஆண்
எஸ். எம். அஸ்மி (11) ஆண்
எம். மஹ்மூத் லெப்பை (70) ஆண்
சாஹிறா உம்மா (65) பெண்
எஸ். எம். காசிம் லெப்பை (37) ஆண்
எம். எஸ். நதீமா (27) பெண்
சீ. ஏ. எம். இஸ்மாயில் (46) ஆண்
வீ. ரீ. கதீஜா பீவி (30) பெண்
எம். எல். றமீஸ் (16) ஆண்
எம். எல். சமீமா (10) பெண்
எம். எல். எப். றிஸ்னா (05) பெண்
எம். ஐ. எம். சானாஸ் (05 மாதம்) பெண்
எஸ். எம். வெள்ளைத்தம்பி (70) ஆண்
ஏ. பீ. வெள்ளை உம்மா (65) பெண்
ஏ. எல். புஹாரி (30) ஆண்
வீ. ரீ. பரீதா (25) பெண்
ஏ. றிபாகா (01) பெண்
எஸ். ஏ. ஆயிஸா (25) பெண்
எம். ஜனூபா (20) பெண்
எஸ். சனூஸியா (01) பெண்
வீ. ஆமினா (40) பெண்
எம். எஸ். மதீனா உம்மா (23) பெண்
எம். எஸ். ஜிப்ரியா (12) பெண்
எம். எஸ். றமீஸா (10) பெண்
எம். எஸ். றம்சுலா (07) பெண்
எம். எஸ். சஹீலா (04) பெண்
எம். எஸ். மஹ்ரிபா (25) பெண்
எஸ். எல் நஜீபா (04) பெண்
எஸ். எல். நஸ்ரின் (06) பெண்
எம். பீ. பொன்னி உம்மா (65) பெண்
எம். பீ. மஹ்மூத் (55) ஆண்
ரீ. கே. சிமிலத்தும்மா (70) பெண்
ரீ. கே. சின்னலெப்பை (75) ஆண்
ஏ. ஆமினா (65) பெண்
எம். எப். நசார் (18) ஆண்
ஏ. செல்லத்தும்மா (45) பெண்
வை. ஐ. அலியார் (50) ஆண்
ஐ. எம். ஹம்சா (25) ஆண்
எம். எச். நிபாஸ் (14) ஆண்
ஐ. இஸ்மாயில் (45) ஆண்
எல். காதர் (18) ஆண்
எம். சீ. வெள்ளைத்தம்பி (50) ஆண்
வை. எம். சரீப் (30) ஆண்
கே. பீ. கச்சி முஹம்மத் (50) ஆண்
எம். ஐ. பாறூக் (35) ஆண்
எம். எல். தாஹிர் (25) ஆண்
ஏ. எல். அமீனா உம்மா (57) பெண்
எம். ஐ. குழந்தை உம்மா (40) பெண்
எம். ஐ. எம். ஜாபிர் (23) ஆண்
எஸ். ஐ. எம் முஹைதீன் பாவா (50) ஆண்
எம். ஐ. சீனி முஹம்மத் (75) ஆண்
ஏ. ஹயாத்து முஹம்மத் (50) ஆண்
ஐ. ஜுனைத் (40) ஆண்
எம். எஸ். ஐதுரூஸ் (11) ஆண்
வீ. கே. காசிம் லெப்பை (38) ஆண்
வீ. கே. கச்சி உம்மா (40) பெண்
எம். ஐ. காதர் அலி (35) ஆண்
சீ. ஏ. அனீஸா உம்மா (45) பெண்
சீ. ஏ. சுலைஹா (50) பெண்
யூ. எம். இஸ்மாயில் (58) ஆண்
யூ. சர்வான் உம்மா (38) பெண்
எம். ஐ. எஸ். லரீபா (17) பெண்
எம். எல். எம். சித்தீக் (15) ஆண்
எம். ஐ. சபீரா (06) பெண்
எம். ஐ. எம். தாஹிர் (06) ஆண்
யூ. ஐ. எஸ். உம்மா (40) பெண்
எச். எம். ஜெமீலா (20) பெண்
எச். எம். ஜனூரா (18) பெண்
எச். எம். ஹிதாயா (08) பெண்
எச். எம். பஸ்மி (03) ஆண்
எச். எம். இஸ்மாயில் (30) ஆண்
ஏ. எம். ஆமினா உம்மா (20) பெண்
எம். ஐ. பர்சானா (02) பெண்
எம். ஐ. பர்சான் (01) ஆண்
எச். கே. அஹ்மத் லெப்பை (81) ஆண்
ஏ. எல். நயிமுதீன் (12) ஆண்
ஏ. எல். பாத்தும்மா (10) பெண்
ஏ. எல். அன்சாரா (1 மாதம்) பெண்
ஜே. எம். நௌபர் (11) ஆண்
பீ. எம். நூர்ஜஹான் (16) பெண்
பீ. எம். ஹாஜறா (24) பெண்
யூ. எல். ஏ. சதார் (13) ஆண்
ஆர். ஹிதாயா (10) பெண்
எம். கே. முஹம்மத் லெப்பை (20) ஆண்
வீ. கே. நஜீமா (30) பெண்
ஏ. எஸ். பைரூஸ் (8 மாதம்) ஆண்
எஸ். எல். ஹபீபா (19) பெண்
எம். எல். ஜுனைத் (47) ஆண்
ஜே. பரீதா (16) பெண்
ஏ. ரீ. றாவியா உம்மா
ஆர். பைரூசா (19) பெண்
ஆர். எம். சித்தீக் (08) ஆண்
யூ. எம். சீனத்தும்மா (37) பெண்
எம். வை. எம். பசீர் (03) ஆண்
எஸ். எல். சுலைமாலெப்பை (40) ஆண்
எஸ். எல். சுலைஹா உம்மா (35) பெண்
எம். வை. எம். சபீர் (26) ஆண்
ஜே. சுலைமாலெப்பை (38) ஆண்
ஆர். எப். றம்சியா (06) பெண்
எம். என். எம். நியாஸ் (17) ஆண்
எம். சீ. எம். தாஹிர் (20) ஆண்
யூ. எல். ஜமால்தீன் (35) ஆண்
எச். எம். அப்துல் சமது (23) ஆண்
எம். எல். ஹனீபா (60) ஆண்
எம். இஸ்மாயில் (28) ஆண்
ஏ. அப்துல் மஜீத் (1 வாரம்) ஆண்
எம். எல். மரியம் பீவி (28) பெண்
ஏ. எல் சமீர் (10) ஆண்
யூ. எல். எப். மர்ழியா (35) பெண்
நன்றி: காத்தான்குடி இணையம்.

No comments: