Saturday, June 12, 2010

'ரஞ்சிதா' புகழ் நித்யானந்தா செக்ஸ் சாமியார் பிணைப்பில் விடுதலை.

'ரஞ்சிதா' புகழ் நித்யானந்தா பிணைப்பில் விடுதலை.

நித்யானந்தாவின் பழைய கதைகள் அனைவரும் அறிந்தது . சிறையில் இருந்த அவர் ஜாமீன் கேட்டு வக்கீலை நியமித்திருந்தார் அது தொடர்பாக,நேற்று முன்தினம் விசாரணை நடந்த போது, நித்யானந்தா தரப்பில் ஆஜரான வக்கீல் ஆச்சார்யா, "சாமியார் சன்னியாசியல்ல' என்று வாதாடினார். ஜாமீன் மனு மீது இன்று தீர்ப்பு வழங்கப்படும் என்று நீதிபதி சுபாஷ் தெரிவித்திருந்தார். இந்த மனு, நேற்று மதியம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நித்யானந்தா வக்கீல் ஆச்சார்யா கூறுகையில், ""நித்யானந்தா மீது கூறப்பட்ட புகார்கள் எதுவும் நிரூபிக்கப்பட வில்லை. அரசு தரப்பில் நித்யானந்தா மீது கூறப்பட்டுள்ள புகாருக்கு சரியான சாட்சியங்களை இதுவரை சமர்ப்பிக்கவில்லை. நித்யானந்தா மீது, எந்த தனி நபரும் புகார் கொடுக்கவில்லை. நித்யானந்தா உடல்நிலை கருதியும், எந்த நேரமும் விசாரணைக்கு அவர் ஒத்துழைப்பு கொடுப்பார் என்பதையும் தெரிவித்துக் கொண்டு, அவருக்கு ஜாமீன் வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்,'' என்றார்.

வழக்கை விசாரித்த நீதிபதி சுபாஷ் ஆதி கூறியதாவது: நித்யானந்தா, ஒரு லட்சம் ரூபாய் ரொக்க ஜாமீனும், இதே தொகைக்கு, உள்ளூரைச் சேர்ந்த இரு நபர் ஜாமீனும் வழங்க வேண்டும். 15 நாட்களுக்கு ஒருமுறை ராம்நகர் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராக வேண்டும். தன்னை நிரபராதி என்று நிரூபிக்கும் வரை ஆன்மிக சொற்பொழிவுகளோ, பயிற்சி வகுப்புகளோ நடத்தக்கூடாது. வழக்கு விசாரணை முடியும் வரை வெளியூர்களுக்கு செல்லக் கூடாது. அவரது பாஸ்போர்ட்டை, போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைக்க வேண்டும். போலீஸ் விசாரணைக்கு அழைக்கும் போது ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி சுபாஷ் ஆதி கூறினார்.


நித்யானந்தாவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டாலும், இந்த ஜாமீன் உத்தரவை, ராம்நகர் கோர்ட்டில் சமர்ப்பித்து, அவர்களின் அனுமதியின் பேரில், ராம்நகர் கிளை சிறையில் இருக்கும் நித்யானந்தாவை வெளியில் கொண்டு வரலாம். இன்றும், நாளையும் கோர்ட் விடுமுறை என்பதால், திங்கட்கிழமை தான் நித்யானந்தா, சிறையிலிருந்து வெளியே வருவார். இதற்கிடையில், கர்நாடகா சி.ஐ.டி., போலீசாரால் முடக்கி வைக்கப்பட்டுள்ள நித்யானந்தா வங்கி கணக்குகள் தொடர்பான விசாரணை, வரும் 18ம் தேதியும், தன் மீதான வழக்குகளை ரத்து செய்யக்கோரி, கர்நாடகா ஐகோர்ட்டில் நித்யானந்தா தாக்கல் செய்திருந்த மனு, வரும் 24ம் தேதியும் விசாரணைக்கு வருகின்றன. இந்த வழக்கின் முக்கிய சாட்சியாக கருதப்பட்ட நடிகை ரஞ்சிதாவை பற்றிய எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை. போலீஸ் தரப்பிலோ, நித்யானந்தா தரப்பிலோ எந்த தகவலும் சமர்ப்பிக்கவில்லை.

No comments: