'எதிரிக்கு எதிரி நமக்கு நண்பன்' இது அரசியல்கட்சிகளின் வேதமொழி. 'முஸ்லிம்களுக்கு எதிரி நமக்கு நண்பன்' இது இந்துத்துவாவின் வேதமொழி. இந்துத்துவாக்கள் இந்தியாவில் மட்டும்தான் முஸ்லிம்களுக்கு எதிராக இருக்கிறார்கள் என நாம் நினைத்தால் ஏமாந்துபோவோம்உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்களுக்கு எதிரான சக்திகளோடு கைகோர்த்து உலகஅளவில் முஸ்லிம்களை கருவறுக்கும் 'ஆக்டோபஸ்' கரங்கள் இந்துத்துவாவுடையது என்பதுதான் உண்மை.
சமீபத்தில் மாலேகான் குண்டுவெடிப்பு தொடர்பாக கைதுசெய்யப்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரி, இந்தியாவில் இந்துத்துவா ஆட்சியை ஏற்படுத்த இஸ்ரேலிடம் உதவி கோரிய செய்தி நாம் அறிந்ததே! இப்போது இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான சிந்தனைகொண்ட விடுதலைபுலிகளுக்கு உதவிய செய்தியும் வெளியாகியுள்ளது.
இலங்கையில்போரை நிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து டெல்லியில் ம.தி.மு.க. சார்பாக நடைபெற்ற உண்ணாவிரதத்தில் அத்வானி கலந்துகொண்டார். அத்வானி மேடையில் இருக்கும்போது வைகோ பேசியதாக அவர்களின் அதிகாரப்பூர்வ இதழான சங்கொலியில் வந்துள்ள செய்தியிலிருந்து ஒருதுளி;
வாஜ்பேயி பிரதமராக இருந்தபோது ஜார்ஜ் பெர்னாண்டஸ் ராணுவ மந்திரியாக இருந்தார்.விடுதலைபுலிகளுக்கு பன்னாட்டுக்கடலில் போகின்ற எந்தப்பொருளையும் தடுக்கக்கூடாது என்று வாஜ்பேயி, அத்வானி, பெர்னாண்டஸ் ஆகியோர் முடிவுஎடுத்தனர். இதை நான் தில்லியில் பதிவு செய்ய விரும்புகிறேன் இதுபோன்று இன்னும் பல செய்திகளை காலம் வரும்போது பதிவுசெய்வேன் என்று பேசியுள்ளார்.
வாஜ்பேயி ஆட்சியிலிருந்தபோதும் விடுதலைப்புலிகள் அமைப்பு இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கம்தானே! தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு செல்லும் பொருட்களை கண்டுகொள்ளாமல் இருக்க இவர்கள் முடிவெடுத்து இருந்திருக்கிறார்கள் எனில், இவர்களின் எண்ணம் என்ன? விடுதலைப்புலிகள் மீது இவர்களுக்கு கருணை வந்தது ஏன்? தமிழ் பற்றினாலா? இல்லை இல்லை. புலிகள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் எனவே புலிகள் மூலம் முஸ்லிம்களை கருவறுக்கலாம் என்ற எண்ணம்தானே!
இதைதான் இனம் இனத்தோடு சேரும் என்பார்களோ!
Monday, February 23, 2009
Sunday, February 22, 2009
மோடியின் புதிய 'முகமூடி'!
அகமதாபாத்: முஸ்லீம்களின் வெறுப்பு வளையத்திலிருந்து பாஜகவையும், தன்னையும் மீட்டு வெளியே கொண்டு வரும் புதிய தந்திரமாக, குஜராத் மாநிலத்தின் புதிய டிஜிபியாக முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த அதிகாரியை முதல்வர் நரேந்திர மோடி நியமித்துள்ளதாக கருதப்படுகிறது.
குஜராத் மாநிலத்தின் புதிய டிஜிபியாக முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த சபீர் கந்தவாவாலா நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் மாநிலம் உருவான 50 ஆண்டுகளில் முஸ்லீம் அதிகாரி ஒருவர் டிஜிபி பதவிக்கு வந்துள்ளது இதுவே முதல் முறையாகும்.
இதற்கு முன்பு இருந்து வந்த டிஜிபி பி.சி.பாண்டேவுக்குப் பதில் சபீர் புதிய டிஜிபியாகியுள்ளார். 2002ம் ஆண்டு நடந்த கோத்ரா வன்முறையின்போது பெரும் சர்ச்சையில் சிக்கியவர் இந்த பாண்டே என்பது குறிப்பிடத்தக்கது.
முஸ்லீம் அதிகாரி ஒருவரை டிஜிபி பதவிக்கு மோடி கொண்டு வந்திருப்பது, பாஜக மற்றும் மோடி ஆகியோருக்கு முஸ்லீம் மக்களிடையே நல்ல பெயரை ஏற்படுத்திக் கொடுக்கும் தந்திரமாகவே கருதப்படுகிறது.
அதுவும் லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேர்தலில் பாஜகவுக்கு பெரும் வெற்றி கிடைக்காது என்று கருத்துக் கணிப்புகள் கூறி வரும் நிலையில், மோடியின் இந்த நியமனம் ஒரு அரசியல் மற்றும் மத ஸ்டண்ட் ஆகவே கருதப்படுகிறது.
சபீர், ஷியா முஸ்லீம் சமுதாயத்தின் தாவூதி போஹ்ரா பிரிவைச் சேர்ந்தவர். இந்த சமுதாயத்தினர் பல ஆண்டுகளாகவே மோடிக்கு ஆதரவாக உள்ளவர்கள்.
1973ம் ஆண்டு பேட்ஜ் ஐபிஎஸ் அதிகாரியான சபீர், கோத்ரா வன்முறை தொடர்பான வழக்குகளை மறு பரிசீலனை செய்ய உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் இடம் பெற்றிருக்கிறார்.
குஜராத் மாநில ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கத் தலைவராகவும் இருக்கிறார். கடந்த 2007ம் ஆண்டே இவர் விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் அதை மாநில அரசு நிராகரித்து விட்டது.
கடந்த வாரம்தான் டிஜிபி அந்தஸ்துக்கு சபீர் உயர்த்ப்பட்டார். ஊழல் தடுப்புப் பிரிவு தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.
ஆனால் சபீரை டிஜிபியாக்கியிருக்கும் சமயம்தான் மோடி மீதான சந்தேகத்தை அதிகரிக்கிறது.
மாயா சர்ச்சையிலிருந்து மீளும் முயற்சி ...
காரணம், மோடி அமைச்சரவையில், மகளிர், குழந்தைகள் நலம் மற்றும் உயர் கல்வித்துறை இணை அமைச்சராக உள்ள மாயா கோட்னானியால் ஏற்பட்டுள்ள களங்கத்திலிருந்து திசை திருப்பும் முயற்சியாகவே சபீரின் நியமனத்தை எதிர்க்கட்சிகள் பார்க்கின்றன.
2002ம் ஆண்டு நடந்த கோத்ரா வன்முறையின்போது மாயா கோத்னானி நடந்து கொண்ட விதம் குறித்து பெரும் சர்ச்சை உள்ளது. அப்போது நடந்த கலவரத்தில் மாயா மீதும் ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அது நிலுவையிலும் உள்ளது.
இந்த வழக்கு விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வருகிறார் மாயா. இதையடுத்து பி்ப்ரவரி 2ம் தேதி இவரை தலைமறைவு குற்றவாளியாக உச்சநீதிமன்றத்தால் நியமிக்க்பட்ட சிறப்பு புலனாய்வுப் படை அறிவித்தது.
மாயா மீதான வழக்கு என்ன?
2002ம் ஆண்டு நடந்த முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையின்போது நரோடா பாடியா பகுதியில் ஒரு கும்பல் அங்கிருந்த முஸ்லீம்களைத் தாக்கியது.
அப்போது அங்கு நடந்த வன்முறையைத் தூண்டி அரங்கேற்றியவர் மாயா கோத்னானி என்பது சிறப்புப் புலனாய்வுப் படையின் குற்றச்சாட்டு.
அது மட்டுமல்லாது கண்ணில் படுபவர்களையெல்லாம் கொல்லுமாறும், பொருட்களை சூறையாடுமாறும், பெண்களைக் கற்பழிக்குமாறும் வன்முறைக் கும்பலுக்கு மாயா உத்தரவிட்டார் என்பதுதான் மிக மிக முக்கியமான குற்றச்சாட்டு.
மாயாவுடன், வி.எச்.பி. தலைவர் ஜெயதீப் படேலும் என்பவரும் இணைந்து இந்த வன் கொடுமையை அரங்கேற்றியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நரோடா பாடியா பகுதியில் நடந்த வன்முறையில் மட்டும் முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்த 106 பேர் கொல்லப்பட்டனர். அவர்களது உடமைகள் சூறையாடப்பட்டன.
இந்த கொடுமையான வன்முறையை நேரில் பார்த்த சாட்சிகளி்ல் ஒருவரான ஷெரீப் மாலிக் என்பவர் சிறப்பு புலனாய்வுப் படையிடம் தாக்கல் செய்துள்ள வாக்குமூலத்தில், மாயா கோத்னானி மற்றும் ஜெயதீப் படேல் ஆகியோர்தான் அந்த வன்முறைக் கும்பலுக்கு நேரடியாக தலைமை தாங்கி உத்தரவுகளைப் பிறப்பித்தனர்.
அவர்கள்தான் அந்தக் கும்பலை கொலை செய்யவும், பொருட்களை சூறையாடவும், கற்பழிக்கவும் உத்தரவிட்டுக் கொண்டிருந்தனர்.
வன்முறைக் கும்பலிடம் தனது வண்டியில் வைத்திருந்த மண்ணெண்ணை கேன்களை எடுத்துக் கொடுத்து தீவைத்துக் கொளுத்துமாறு உத்தரவிட்டார் மாயா என்று கூறியுள்ளார்.
இப்படிப்பட்ட பின்னணியைக் கொண்ட மாயா நீதிமன்ற விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகாமல்இருந்து வந்தார். ஜனவரி 19 மற்றும் 31 ஆகிய தேதிகளில் நடந்த விசாரணையின்போதும் அவர் சம்மன் அனுப்பியும் வரவில்லை.
இதையடுத்து அவரை தேடப்படும் குற்றவாளியாக கோர்ட் அறிவித்தது.
இதையடுத்து மாயா தலைமறைவாகி விட்டார். பின்னர் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார். அதில் அவருக்கு முன்ஜாமீன் கிடைத்தது.
தேடப்படும் குற்றவாளியாக மாயா அறிவிக்கப்பட்டதும் அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க வேண்டும் என மோடிக்கு கோரிக்கைகள் எழுந்தன. ஆனால் அவரோ அதை நிராகரித்து விட்டார். மாயாவும், நான் அப்பாவி, ராஜினாமா செய்ய மாட்டேன் என்று விட்டார்.
கொடும் வன்முறையைத் தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டு, முன்ஜாமீனும் மாயாவுக்குக் கிடைத்ததால் கோத்ரா வன்முறையால் பாதிக்கப்பட்ட முஸ்லீம் சமுதாயத்தினர் பெரும் கொதிப்பும்,அதிருப்தியும் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில்தான் முஸ்லீம் அதிகாரி ஒருவரை டிஜிபியாக்கியுள்ளார் மோடி. எனவே இந்த நியமனம் முற்றிலும் அரசியல் சாயம் கொண்டது. முஸ்லீம் சமுதாயத்தினரை ஐஸ் வைக்கும் செயல் என குஜராத் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
முஸ்லீம் சமுதாயத்தினரை சமாதானப்படுத்த முயலும் மோடியின் இன்னொரு முகமூடிதான் இந்த டிஜிபி நியமனம் என்றும் கருதப்படுகிறது.

Saturday, February 21, 2009
இஸ்லாத்தில் சிறந்த செயல் எது?
"திண்ணமாக அல்லாஹ் மென்மையானவன்; அனைத்து விஷயங்களிலும் மென்மையை விரும்புகிறான்'' என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரீ, முஸ்லிம்)
"இஸ்லாத்தில் சிறந்த செயல் எது?'' என ஒரு மனிதர் இறைத்தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவியதற்கு, ''நீர் (பிறருக்கு) உணவளிப்பதும், நீ அறிந்தோருக்கும், அறியாதோருக்கும் ஸலாம் கூறுவதுமாகும்'' என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அப்துல்லா இப்னு அம்ரு நூல்: புகாரீ, முஸ்லிம்)
(ஒரு முறை) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு உதவி செய்" என்று கூறினார்கள்.
மக்கள், "இறைத்தூதர் அவர்களே! அக்கிரமத்துக்குள்ளானவனுக்கு நாங்கள் உதவுவோம். அக்கிரமக்காரனுக்கு நாங்கள் எப்படி உதவுவோம்?" என்று கேட்டனர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "அவனுடைய கைகளைப் பிடித்து (அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து)க் கொள்வாய் (இதுவே, நீ அவனுக்குச் செய்யும் உதவி)" என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நூல்: புகாரி

பொறுப்பை மறந்த மக்கள் பிரதிநிதிகள்[?]
நமது ஜனாயக நாட்டில் மக்கள் தத்தமது கோரிக்கைகளை சட்டமியற்றும் அவைகளில் எடுத்தியம்புவதற்காக, பாராளுமன்றத்திற்கு/ சட்டமன்றத்திற்கு பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து அனுப்புகிறார்கள். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு அரசு, ஊதியம்- மானியம்- சலுகைகள் என்று மக்களின் வரிப்பணத்திலிருந்து வழங்குகிறது. மக்களின் வரிப்பணத்திலிருந்து தங்களை வளப்படுத்திக்கொண்ட சில பிரதிநிதிகள் மக்களை மறந்து, தாம் அங்கம் வகிக்கும் அவையின் கண்ணியத்தை மறந்து அவையை கலவரகாடாக்கி அவையை நடக்கவிடாமல் செய்து அவையின் மாண்பை குலைப்பதை பார்க்கிறோம்.
சமீபத்தில் உ.பி., ஆந்திரா மற்றும் ஒரிஸ்ஸாவில் சட்டமன்றத்தில் நடந்த கலவரத்தை உதாரணமாக கூறலாம். அவ்வளவு ஏன்? நம்முடைய தமிழகத்தில், எதிர்கட்சியினர் ஏதேனும் ஒரு காரணத்தை சொல்லி வெளியேறுகிறார்கள். அல்லது வெளியேற்றப்படுகிறார்கள். இலங்கை தமிழர் பிரச்சினையில் தொடர்ந்து எதிர்கட்சியினரின் வெளிநடப்பு தொடர்கிறது. இலங்கை தமிழர்மீது கொண்டுள்ள அக்கறை பாராட்டத்தக்கதே! ஆனால் உங்களை நம்பி தேர்ந்தெடுத்து அனுப்பிய மக்கள் பிரச்சினையை புறந்தள்ளி, 'வெளிநடப்பு' என்ற கொள்கையை கடை பிடிப்பது நியாயமா?
மேலும், அரசு தவறு செய்யும்போது சரியான முறையில் வாதங்களை எடுத்துவைத்து வாதாடவேண்டிய பொறுப்புள்ள எதிர்கட்சித்தலைவர் ஜெயலலிதா சட்டமன்றத்துக்கு 'கையெழுத்து' போட மட்டுமே செல்கிறார் எனில், இவர்களை தேர்ந்தெடுத்த மக்கள்தான் பரிதாபத்திற்குரியவர்கள்.
மேலும், நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கக்கூடிய பாராளுமன்றத்தில் ஏதேனும் பிரச்ச்சினைகளை எழுப்பி அவையை ஸ்தம்பிக்க செய்வதிலேயே சில உறுப்பினர்கள் குறியாக உள்ளனர். இரு நாட்களாக இலங்கை பிரச்சினையை மையமாக வைத்து, ம.தி.மு.க., பா.ம. க. எம்பிக்கள் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். வேறு சில கட்சிகள் வேறு பிரச்சினைகளை எழுப்பியதை தொடர்ந்து அவையை நடத்தமுடியாத நிலைக்கு தள்ளப்பட்ட சபாநாயகர் திரு. சோம்நாத் சட்டர்ஜி கடும் கோபத்துடன்,
உங்களின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. இப்படியே போனால் அவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கவேண்டிய நிலை வரும். அவை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக உங்களுக்கு 'அலவன்ஸ்' தருவது மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதாகும் என்று கூறியுள்ளார்.
சட்டர்ஜி அவர்களின் கூற்று நிதர்சனமான உண்மையாகும். கோடிகளை செலவு செய்து நடத்தப்படும் அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் உறுப்பினர்களுக்கு அந்த மாத சம்பளம் உள்ளிட்ட அத்துணை சலுகைகளையும் ரத்து செய்தால்தான் கொஞ்சமேனும் திருந்துவார்கள். இவை எல்லாவற்றிற்கும் மேலாக வாக்களிக்கும் மக்கள், தேர்தல் நேரத்தில் வாக்கு கேட்டுவரும் இவர்களிடம் கடந்த பதவிகாலத்தில் அவை நடந்த நாட்கள் எத்தனை, அதில் இவர்கள் கலந்துகொண்ட நாட்கள் எத்தனை,தொகுதி நலன்பற்றி அவையில் இவர்கள் எழுப்பிய பிரச்சினைகள் என்ன? அவையில் இவர்களின் தனிப்பட்ட நடவடிக்கை என்ன? என்பதையெல்லாம் கேட்டு பரிசீலித்து வாக்களிக்கவேண்டும். இல்லையேல், ஒன்று ஓய்வெடுப்பார்கள்; அல்லது ஒன்றுக்கும் உதவாமல் வெளிநடப்பு செய்வார்கள் அல்லது சபையை நடக்கவிடாமல் செய்வார்கள். மக்கள் விழித்து கொண்டால் சரி!

Tuesday, February 17, 2009
குஜராத் முஸ்லிம்கள்நிலை; அத்வானி காமெடி!
வருங்கால இந்தியப்பிரதமர்[?] என்று வர்ணிக்கப்படும் திருவாளர் அத்வானி ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, பாரதீய ஜனதாக்கட்சி முஸ்லிம்களுக்கு எதிரானது என்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளது. நரேந்திரமோடியின் ஆட்சியின் கீழ் முஸ்லிம்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகிறார்கள் என்று திருவாய் மலர்ந்துள்ளார்.
முஸ்லிம்களாக பிறந்த ஒரே காரணத்திற்காக மோடியின் ஆதரவோடு பயங்கரவாதிகள் கோரத்தாண்டவம் ஆடியதை, காந்திபிறந்த மண்ணை கொலைக்களமாக ஆக்கியதை, சொந்த மண்ணில் இன்றும் அகதிகளாக வாழ்வதை, சாட்சியங்கள் அழிக்கப்பட்டு/ மிரட்டப்பட்டு, கொல்லப்பட்ட ஜனாசாக்களோடு வழக்கையும் புதைத்ததை வாகையாய் மறைத்து மோடிக்கு வஞ்சப்புகழ்ச்சி பாடுகிறார் அத்வானி. அன்று மட்டுமல்ல இன்றும் முஸ்லிம்கள் குஜராத்தில் அகதிகளாகஅச்சத்தோடு வாழ்ந்துவருவதை மனித உரிமைக்கு குரல்கொடுக்கும் மாண்பாளர் ,மனித உரிமைப் போராளி தீஸ்தா செட்டில்வாட் அவர்களின் வார்த்தையிலிருந்து அத்வானி புரிந்துகொள்ள சிலதுளிகள்.
29, பிப்ரவரி 2002-க்கு வெகுகாலத் துக்கு முன்பே ஆரம்பித்துவிட்டது. திட்டமிட்டு சிறுபான்மையினரைத் தனிமைப்படுத்துதல், குஜராத் நகர்ப் புறத்தை ஒரு சமுதாயத்தினர் வாழும் பகுதியாக ஒதுக்கி வைத்தல், பாடப் புத்தகங்களில் சிறுபான்மை சமூகத் தினரை கேவலப்படுத்தி எழுதுதல் இந்தக் காரியங்கள் யாவும் இனப்படுகொலை நிகழ்த்தப்படுவதற்கு குறைந்தது ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டு செய்யப்பட்டன. இனப்படு கொலை ஒரு இரவில் நடப்பதல்ல. அது ஒன்றும் மேஜிக் அல்ல. அது ஒரு திட்டமிடப்பட்ட செயல். மௌனமாக இருப்பதன் மூலம் குற்றச்செயலுக்கு உடந்தையாக இருந்ததை பெரும்பான்மை சமூகம் ஒத்துக்கொள்கிறது. குஜராத் இதற்கு மிகச்சிறந்த உதாரணம்.
நண்பர்களே, 29, பிப்ரவரி, 2009 இனப்படுகொலை நடந்து எட்டாண்டுகள் நிறைவடைந்திருக்கும். பெஸ்ட் பேக்கரி வழக்கு பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். ஆனால் எங்கள் குழு 67 வழக்குகளுக்காகப் போராடிக் கொண்டுள்ளது.வழக்கை உயிருடன் வைத்தி ருக்க மூன்று நான்கு ஆண்டு களாக நாங்கள் உச்சநீதிமன்றத் தோடு போராட வேண்டி யிருந்தது. காலம் கடந்துவிட்டது, இந்த வழக்குகள் எல்லாம் குஜராத்தி லேயே அழுகிச் சாகட்டும் என்று சொல்லி தடுப்பதற்கு தன் சக்தியை யெல்லாம் பிரயோகித்துப் பார்த்தது குஜராத் அரசு. ஆனால் குஜராத்தில் பயங்கரமான சூழ்நிலைகளில் வசிக்கும் 468 சாட்சிகள் இன்னும் துணிச்ச லோடும் மனசாட்சியோ டும் சாட்சி சொல்ல தயாராக இருக்கிறார்கள் என்று பெருமை யோடு சொல்லிக் கொள்கிறோம். அவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள், அவமானப் படுத்தப்படுகிறார்கள். அவர்கள் வசதி படைத்தவர்களும் அல்ல. தங்களது பண்ணை நிலத் தில் கூடாரம் அடித்துக் கொண்டு வசிக்கும் அவர்கள் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருக்கிறார்கள். அமைப்பு அவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை
ஜஹீராவை நான் பழிசொல்ல மாட்டேன். பெரியதொரு விளையாட்டில் அவர் ஒரு பகடைக்காய் மட்டுமே. வடோதரா பி.ஜே.பி எம்.எல்.ஏ செய்த காரியம் அது. தூக்கி எறிவதற்கு ரொம்ப எளிமை யானது பணம்தான். பலவீனமான இளம்பெண் என்ன செய்வாள்? உச்ச நீதிமன்றத்துக்கு எதிரான ஒரு முறையீடு என்னிடம் இன்னும் உள்ளது. பொய் சாட்சி சொன்னதற்காக அவளுக்கு ஒரு ஆண்டு தண்டனை கொடுத்தார்கள். ஆனால் அவளுக்கு லஞ்சம் கொடுத்த மது ஷிவாசுக்கு ஒரு மாதம்கூட தண்டனை கொடுக்கவில்லை. நமது அமைப்பு முறையில் எங்கோ தவறு உள்ளது.
கண்முன்னே வேதனைக்கன்னீர் வடிக்கும் ஒரு சமுதாயத்தை, பார்த்தீர்களாஆனந்தக்கண்ணீரை? என்று சொல்வதுபோல் உள்ளது அத்வானியின் அர்த்தமற்ற பேச்சு. இப்படிப்பட்டவர் பிரதமர் வேட்பாளராம்! பாவம் இந்தியா!!

Monday, February 16, 2009
அணு விஞ்ஞானி ஹோமி ஜஹாங்கீர் பாபா
அணுசக்தித் துறையில் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் உருவாக கடுமையாக உழைத்த ஆதாரப் புருஷராக விளங்கியவர், இந்திய அணுசக்தி விஞ்ஞானத் துறையின் ஆதாரக்கல் அறிஞர் ஹோமி ஜஹாங்கீர் பாபா.
இந்திய அணுசக்தி விஞ்ஞானத் துறையின் ஆதாரக்கல் அறிஞர் ஹோமி ஜஹாங்கீர் பாபா. அணுசக்தித் துறையை இந்தியாவில் நிர்மானித்த அந்தப் பெரும் சிற்பி 30.10.1909ல் பிறந்தவர். குழந்தைப் பருவத்தில் ஒரு குழந்தை தூங்கவேண்டிய நேரத்திற்கும் மிகமிகக் குறைவாக ஹோமி தூங்கியதால் தந்தை ஜஹாங்கீர் தாய் மெஹ்ரூன் கவலை கொண்டு மருத்துவரிடம் காட்டியபோது குழந்தையிடம் அபார மூளைச் சக்தி இருப்பது தெரியவந்தது. எந்த அளவுக்கு இருந்த தென்றால் 15 வயதில் ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்பு குறித்த 'தியரி'யைப் புரிந்து கொள்ளுமளவுக்கு இருந்தது.
1930ல் கேம்ப்ரிட்ஜில் மெக்கானிக்கல் இன் ஜினீயரிங் முடித்தவருக்கு 1934ல் ஐசக் நியூட்டன் ஃபெல்லோஷிப் விருது கிடைத்தது. 1937ல் அவர் எழுதிய Cascade Theory of Electron Showers என்ற ஆய்வுக் கட்டுரை அவருக்கு உலகப்புகழைச் சேர்த்தது. Cosmic Radiation உள்ளிட்ட அவரது ஆய்வுகள் இயற்பியல் துறையில் புதிய சாதனைகளைப் படைத்தன. பல நாடுகளிலுள்ள நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் அழைத்தும் அவற்றை மறுத்து 1939ல் இந்தியா திரும்பிய ஹோமி பாபா 'விஞ்ஞான முன்னேற்றமே இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்லும்' என்று பிரகடனப்படுத்தி அதற்காகக் கடுமையாக உழைத்தார்.
31 வயதில் 'மெம்பர் ஆஃப் ராயல் சொஸைட்டி' விருதும் (1941) அதற்கடுத்த ஆண்டு ஆடம்ஸ் விருதும் (1942) பெற்றார். 1945ல் Tata Institute of Fundamental Research நிறுவனம் தொடங்க இவரே காரணமாகும்.
Atomic Explosion, Production of Isotopes, Purification of Uranium முதலியன குறித்து முதன் முதலாக இந்தியாவில் ஆய்வு செய்து இந்தியாவில் அறிவார்ந்த சூழலை ஏற்படுத்திய இந்திய அணுசக்தி விஞ்ஞானத் துறைத் தந்தை இவர். நாடு சுதந்திரமடைந்ததும் Atomic Research Centre ஒன்றை அரசு தொடங்குவதற்கு வகை செய்த ஹோமி பிரதமர் நேருவுக்கு நெருங்கிய தோழராக விளங்கினார்.மத்திய அரசில் அணுசக்தித் துறை என்று தனியாகவே ஒரு துறை பிரதமர் நேருவின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் தொடங்கப்பட வைத்தார். இவரது முயற்சியால் 20.01.1957ல் ஆக்கப்பணிகளுக்காக அணுசக்தி உற்பத்திக்கு வித்திடப்பட்டது. 1955ல் அணுசக்தி சம்பந்தமாக ஜெனீவாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்துகொள்ளப் பாபாவே முன் நின்று அனைத்தையும் செய்து முடித்தார்.
ஹோமி ஜஹாங்கீர் பாபாவின் கடுமையான முயற்சியின் விளைவாகவே தாராப்பூர் (மகாராஷ்டிரம்), ராணா பிரதாப் சாகர் (ராஜஸ்தான்), கல்பாக்கம் (தமிழ்நாடு) ஆகிய மூன்றிடங்களிலும் அணுசக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் மையங்கள் உருவாயின. இந்தியாவிலேயே தோரியம், புளூட்டோனியம் முதலியவற்றைச் சரியான முறையில் உற்பத்தி செய்யவும், விவசாயம், தொழில், மருத்துவம், உயிரியல் துறைகளுக்குப் பயன்படும் ரேடியோ ஐசோடோப்பைத் தயாரிக்கவும் ஹோமி பாபா ஆற்றிய பங்கு அளவிடற்கரியது.
பெங்களூரிலிருந்து 80 கி.மீ. தூரத்தில் கெளரி பிட்னூர் எனுமிடத்தில் நிலநடுக்கம் மற்றும் பாதாள அணு வெடிப்பு சம்பந்தமான ஆராய்ச்சி மையம் ஒன்று அமையவும்,கல்கத்தா, அஹமதாபாத், கேரளா, காஷ்மீர் முதலிய இடங்களில் பல்வேறு விஞ்ஞான மையங்கள் அமையவும், அணுசக்தித் துறையில் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் உருவாகவும் கடுமையாக உழைத்த ஆதாரப் புருஷராக விளங்கியவர் ஹோமி ஜஹாங்கீர் பாபா.
18.05.1974ல் பொக்ரான் (ராஜஸ்தான்) முதல் அணுசக்திச் சோதனையின் வெற்றி மூலம் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனாவைத் தொடர்ந்து உலகளவில் ஆறாவது நாடாக இடம்பெற்று இந்தியா உயர்ந்ததென்றால் அதன் அடிப்படை நாதமாக விளங்கியது பாபா ஆரம்பித்து வளர்த்து வந்த கண்டுபிடிப்புகளும் ஆராய்ச்சி முயற்சிகளும்தான்.
அனைத்துலக மாநாட்டிற்காக 24.01.1966 அன்று ஏர் இந்தியா போயிங் 707 விமானத்தில் பயணித்தபோது பனிப்புயல் தாக்க ஏற்பட்ட விபத்தில் வபாத்தானவர் ஹோமி பாபா. உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் பல்வேறு அமைப்புகளிடமிருந்தும் பல்கலைக் கழகங்களிடமிருந்தும் எண்ணற்ற விருதுகளைப் பெற்றவர் ஹோமி பாபா. இவரது அரிய தொண்டு என்றென்றும் நினைவு கூரப்பட வேண்டுமென்ற எண்ணத்தில்தான் மும்பை அணுசக்தி ஆராய்ச்சி மையம் 12.01.1967 முதல் 'பாபா அணுசக்தி ஆராய்ச்சி மையம்' ( Bhabha Atomic Research Centre ) எனப் பெயரிடப்பட்டது.
மத்திய அரசு அக்டோபர் 2008 அக்டோபர் 2009 ஹோமி ஜஹாங்கீர் பாபா நூற்றாண்டு என்று அறிவித்திருக்கிறது. சமீபத்தில் பிரதமர் மன்மோகன்சிங் இவர் படத்தைத் திறந்து வைத்துப் புகழஞ்சலி செலுத்தினார். என்றாலும் திருமணம் கூட செய்துகொள்ளாமல் இந்திய அணுவிஞ்ஞானத் துறைக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட ஹோமி ஜஹாங்கீர் பாபா பிற முஸ்லிம் அறிவியலாளர்கள் மற்றும் தலைவர்களைப் போன்றே மறைக்கப்படுகிறாரென்பதும் மறக்கடிக்கப்படுகிறாரென்பதும் வேதனைக்குரியதே!
நன்றி : இனிய திசைகள் மாத இதழ் ஜனவரி 2009
Saturday, February 14, 2009
மானுட வசந்தம்,துபைவாசிகளே வாங்க!!
துபாய் ஈமான் அமைப்பு டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது பங்கு பெறும் மானுட வசந்தம் நிகழ்ச்சி இன்ஷா அல்லாஹ் 27.02.2009 வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணிக்கு துபாய் இந்திய கன்சுலேட் அரங்கில் நடத்த இருக்கிறது.இந்நிகழ்வில் இஸ்லாம் குறித்த அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க இருக்கிறார் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது.தமிழன் தொலைக்காட்சி வாரந்தோறும் தொடர்ந்து ஒளிபரப்பு செய்யும் இந்நிகழ்ச்சி துபாயிலும் பதிவு செய்யப்படுகிறது.இஸ்லாம் பற்றிய உங்களது சந்தேகங்களை எந்த தயக்கமும் இன்றி கேட்கலாம்.பாரபட்சமில்லாத உங்கள் உணர்வுகளை உன்னதமாக உணர்த்தலாம்.சகோதர சமுதாயத்தினர் சமர்ப்பிக்கும் கேள்விகளை முன்னுரிமையாக்கலாம்.இந்நிகழ்சி முழுவதும் தமிழன் தொலக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.அனைத்து சமூகத்தினரும் அணி திரண்டு வாரீர்
குறிப்பு : இரவு உணவு அனைவருக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்புக்கு ஈமான் துபாய்
050 51 96 433 / 050 58 53 888 / 050 467 4399
முஸ்லீம் அல்லாத மாற்று மத நண்பர்களை அழைத்து செல்லுங்கள்,மார்க்கத்தை அழகிய முறையில் அறிமுகப்படுத்துங்கள்.

மண்ணறையை நோக்கி மாலேகோன் விசாரணை!?
மராட்டிய மாநிலம் மாலேகோனில் கடந்த ஆண்டு செப்டம்பர் 29-ஆம் தேதி குண்டுவெடிப்பு நடந்தது. இந்தக் குண்டு வெடிப்பை நிகழ்த்தியது முழுக்க முழுக்க இந்துத்துவ பயங்கரவாத அமைப்பான இந்து ஜாக்ரன் மன்ச் தான் என்பது இந்த வழக்கை விசாரித்து வரும் ATS - (Anti Terrorist Squad) மூலம் தெரியவந்தது.
மேலும் இந்த நாசவேலையில் ஈடுபட்டுள்ளது தொடர்பாக பெண் சாமியார் பிரக்யாசிங், ராணுவ அதிகாரி புரோகித், சாமியார் தயானந்த் பாண்டே, ரமேஷ் உபாத்யாயா, ராகேஷ் தவாடே, சுதாகர் சதுர்வேதி மற்றும் சமீர் குல்கர்னி உள்பட 11 பேரை மராட்டிய மாநில தீவிரவாத தடுப்புப் படை கைது செய்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில் மும்பைத் தீவிரவாத தாக்குதலின்போது படுகொலை செய்யப் பட்ட மகராஷ்ட்ராவின் தீவிரவாதத் தடுப்புப் படை ATSயின் தலைவரான ஹேமந்த் கார்கரேயின் படுகொலைக்குப் பிறகு 90 நாட்களில் தீர்ந்துவிடும் என்று கார்கரே தன்னுடைய கடைசி பேட்டியில் உறுதியாக சொன்ன மாலேகான் வழக்கின் கதி என்ன வாகும்? என்ற நாட்டு மக்களின் கவலையை நிஜமாக்கும் விதத்தில் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
மகராஷ்ட்ரா மாநில தீவிரவாதத் தடுப்புப் படையின் தற்காலிகத் தலைவராக கே.பி. ரகுவன்ஷி என்ற அதிகாரி நியமிக்கப் பட்டுள்ளார். இவர் குறித்த நெருடலான சர்ச்சைக்குரிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஜனவரி 22, 2008 ஆம் ஆண்டு ஹேமந்த் கார்கரே தீவிரவாதத் தடுப்புப் படை தலைவராக பொறுப்பு ஏற்றார். அதற்கு முன்புவரை இதே ரகுவன்ஷிதான் ATS-ன் தலைமைப் பொறுப்பில் இருந்து வந்தார்.
அப்போது அத்தனை தீவிரவாத வழக்குகளிலும் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே வளைத்துப் பிடித்து விசாரித்தவர்தான் இந்த பாசிச சங்பரிவார் கூட்டாளி கே.பி. ரகுவன்ஷி. மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியான ராணுவத்தைச் சேர்ந்த அதிகாரி கர்னல் புரோஹித்துக்கு நெருங்கிய நண்பர் இவர் என்பதும் இப்போது தெரிய வந்துள்ளது.
ஷிவானந்த் திவாரியின் கருத்து:-
இந்தத் திடுக்கிடும் தகவல்களை மேற்கொள் காட்டி ரகுவன்ஷியை தீவிரவாதத் தடுப்புப் படைத் தலைவர் பதவியை விட்டு நீக்க வேண்டும் என ஐக்கிய ஜனதாதள ராஜ்ய சபா உறுப்பினர் ஷிவானந்த் திவாரி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ரகுவன்ஷி தீவிரவாதத் தடுப்புப் படைத் தலைவராக ஹேமந்த் கார்கரே பொறுப்பேற்பதற்கு முன்னதாக பதவி வகித்து வந்தார். ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் அந்தப் பதவியை வகித்து வந்தார். 2005ஆம் ஆண்டு தீவிரவாதத் தடுப்புப் படை தலைமையகத்துக்கு வந்து உளவு எடுப்பது குறித்து வகுப்பு எடுப்பதற்கு கர்னல் புரோஹிதுக்கு ரகுவன்ஷி அழைப்பு விடுத்ததாகவும் குறிப்பிட்ட ஷிவானத் திவாரி ரகுவன்ஷியை உடனடியாக நீக்க வேண்டும் என கடுமையாகக் கருத்து தெரிவித்தார்.
அத்தனை தீவிரவாத வழக்குகளிலும் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை மட்டுமே வளைத்துப் பிடித்து விசாரித்தவர்தான் இந்த பாசிச சங்பரிவார் கூட்டாளி கே.பி. ரகுவன்ஷி.
போலீஸ் காவலுக்கு அனுமதி மறுப்பு:-
இந்த நிலையில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பிரக்யாசிங் உள்ளிட்ட 11 பேரின் காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் மும்பையில் உள்ள கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். அரசுத் தரப்பில் வழக்கறிஞர் ரோகிணி சாலியன் ஆஜரானார். அவர், "மாலேகானில் குண்டுவெடிப்பதற்கு முன் குற்றம் சாட்டப்பட்ட மற்றவர்களுக்கும் சுதாகர் சதுர்வேதிக்கும் இடையே நடந்த உரையாடல் அடங்கிய சி.டி.யை அவரது வீட்டில் கைப்பற்றி உள்ளோம். மேலும் இந்த வழக்கில் தேடப்படும் ராம்ஜி கால்சங்கரா சதுர்வேதி வீட்டில்தான் தங்கி இருந்துள்ளார். இதுபற்றி சதுர்வேதியிடம் மேலும் விசாரிக்க வேண்டி இருப்பதால் அவருக்கு போலீஸ் காவல் வழங்க வேண்டும்" என்றார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஒய்.டி. ஷிண்டே, விசாரணைக்காக போலீஸ் காவலுக்கு அனுமதி மறுத்து பிரக்யாசிங் உள்பட 11 பேரையும் வரும் 20-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். மேலும் தயானந்த் பாண்டே கோர்ட்டுக்கு வெளியில் வைத்து சகோதரரின் செல்போன் மூலம் தனது மகனுடன் பேச நீதிபதி அனுமதி வழங்கினார். இதுவே முஸ்லிம்களாக இருந்தால் அவர்களின் நிலை என்னவாக இருந்திருக்கும் என்பதை நாம் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.
உண்மை நிலை :-
இது ஏதோ மலேகானில் மட்டும் நடந்த ஒன்றல்ல. தமிழகத்தில் - திருநெல்வேலி மாவட்டம் - தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு அருகிலும் இதுபோன்ற குண்டு வெடிப்பைச் செய்ததும் ஆர்.எஸ்.எஸ். மதவாதிகள்தான் என்று கண்டுப் பிடிக்கப்பட்டதும் அந்தச் சம்பவத்தில் இந்து முன்னனியைச் சேர்ந்த ரவி, கே.டி.சி.குமார், இலட்சுமி நாரயண சர்மா ஆகிய மூன்று பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதும் வாசகர்கள் அறிந்ததே. ஆனால், குண்டுகள் வெடித்தவுடன் அப்போது அதன் பின்னணியில் பாகிஸ்தானும் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு SIMIயும் இருப்பதாகச் சொல்லப்பட்டு, இஸ்லாமியத் தலைவர்கள் பலரும் "இந்திய இஸ்லாமியர்களுக்கிடையே குழப்பம் விளைவிக்கும் இது போன்ற நடவடிக்கைகளை பாகிஸ்தான் கைவிட வேண்டும்" என்கிற ரீதியில் கண்டனம் தெரிவித்து ஒற்றுமையை வலியுறுத்தி அறிக்கைகள் விட்டதும் நினைவை விட்டு மாறாதவை.
தீவிரவாத எதிர்ப்புப் படைக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டதோடு விசாரணைக்கு அனைத்து உதவிகளையும் நல்கி வந்த மஹாராஷ்டிர துணை முதல்வர் R.R. பாட்டிலும் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
எனவே மாலேகான் விசாரணை என்ன ஆகும் என்று ATSஇல் பணிபுரிபவர்களே சந்தேகம் எழுப்பியுள்ளனர். ஹேமந்த் கார்கரே மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் வீணாகி விடுமோ என்ற அச்சம் தற்போது அனைவரையும் ஆட்கொண்டுள்ளது.
"தண்டிக்கப்படாத கிரிமினல் குற்றங்கள் மேலும் கிரிமினல்களை உருவாக்கும்" என்கிற குஷ்வந்த் சிங்கின் வாதத்திற்கு இன்னோர் உதாரணம் 1992-ல் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் சரிவர தண்டிக்கப்பட்டிருந்தால் அதன் பிறகான பல தேசிய இழப்புகள் தவிர்க்கப்பட்டிருக்கும். இந்த உண்மையை நாடும் நாட்டு மக்களும் அறியும்வரை நம்முடைய லட்சியப் பயணங்கள் தொடர வேண்டும்.
நன்றி: ஃபிர்தௌஸ் - புதிய தேசம்(பெப்ருவரி 2009)
Sunday, February 8, 2009
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில்
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில்
மனிதநேய மக்கள் கட்சி தொடக்கம்
இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் செய்யக் கோரி தீர்மானம்
தாம்பரம், பிப்.8-
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள மனித நேய மக்கள் கட்சி இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்றியது.
வாகனங்களில் வருகை
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், மனித நேய மக்கள் கட்சி என்னும் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளது. இதன் தொடக்கவிழா மாநாடு சென்னையை அடுத்த தாம்பரத்தில் நேற்று நடந்தது. இதற்காக தாம்பரம் ரெயில்வே மைதானத்தில் டெல்லி செங்கோட்டை வடிவில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது.
மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பஸ்,வேன், கார்களில் ஆயிரக்கணக்கில் த.மு.மு.க.வினர் திரண்டு வந்திருந்தனர். நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்களும் தங்களது குழந்தைகளுடன் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
ஆயிரத்துக்கும் மேலானோர், வாகனங்களில் வந்ததால் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் போலீசாருடன் த.மு.மு.க. தொண்டர் அணியினர் இணைந்து பணியாற்றினர். மாநாட்டையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
புதிய கட்சி உதயம்
மனித நேய மக்கள் கட்சி தொடக்க விழாவையொட்டி நேற்று காலையில் மனித நேய மக்கள் கட்சி மாநில பொதுச் செயலாளர் பி.அப்துல் சமது தலைமையில் சமூக நீதி கருத்தரங்கம் நடைபெற்றது. பேராசிரியர் ஹாஜா கனி வரவேற்றார்.
பேராசிரியர் அ.மார்க்ஸ், பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன், பேராசிரியர் தஸ்தகீர், அருள் ஆனந்த், கஜேந்திரன், தேவநேயன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினார்கள்.
மாலையில், மனித நேய மக்கள் கட்சி தொடக்க விழா நடைபெற்றது. த.மு.மு.க. முன்னாள் பொருளாளர் சையத் நிசார் அகமது, மனித நேய மக்கள் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். நெல்லை மாவட்ட ஜமாஅதிதுல் உலமா தலைவர் மவ்லவி சலாஹுத்தீன் ரியாஜி, பேராயர் எஸ்றா சற்குணம், இரட்டை மலை சீனிவாசன் பேரவை தலைவர் எஸ்.என்.நடராஜன், பழங்குடி மக்கள் தேசிய பிரதிநிதி சுரேஷ் சுவாமி காணி, அஹிலுஸ் ஸிண்ணா ஆய்வு மைய நிறுவனர் மவ்லவி முஜிபுர் ரஹ்மான் உமரி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
இதன் பின் மனித நேய மக்கள் கட்சி முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டது. கட்சி தொடங்கி வைக்கப்பட்டது குறித்து த.மு.மு.க. மாநில தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, வக்பு வாரிய தலைவரும், த.மு.மு.க. பொதுச் செயலாளருமான ஹைதர் அலி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். த.மு.மு.க. பொருளாளர் ரஹ்மத்துல்லா, துணை பொதுச் செயலாளர் ஜே.எஸ்.ரிபாயி, மாநில செயலாளர்கள், நிர்வாகிகள் பேசினர். மாநாட்டின் ஒழுங்குபடுத்தும் பணிகளை காஞ்சீபுரம் மாவட்ட த.மு.மு.க. செயலாளர் யாக்கூப் தலைமையில் த.மு.மு.க.வினர் செய்திருந்தனர். முடிவில் காஞ்சீபுரம் மாவட்ட தலைவர் மீரான் மொய்தீன் நன்றி கூறினார்.
சுத்தப்படுத்துவோம்
மாநாட்டில் த.மு.மு.க. தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா பேசும்போது, `ஒரு முஸ்லிம் என்ற முறையில் நமது நாட்டின் முன்னேற்றத்திற்கு உழைப்பது நமது கடமையாகும். அரசியல் சாக்கடை என்று சொல்லி நாம் அதிலிருந்து ஒதுங்கியிருக்க முடியாது. இந்த சாக்கடையை சுத்தப்படுத்தும் தலையாய பணி நமக்கு இருக்கிறது. நமது நாட்டின் உள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகாணவும், சமூக நீதியை நிலைநாட்டுவதற்காகவும் மனித நேய கட்சி உதயமாகியுள்ளது' என்று கூறினார்.
போரை நிறுத்தவேண்டும்
மேலும், தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்புகளில் 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கி இருப்பதை 6 சதவீதமாக உயர்த்தவேண்டும், முஸ்லிம்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப பாராளுமன்றம், சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகளில் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கவேண்டும், பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டவிரோத செயல்கள், தடுப்புச் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும், இலங்கையில் உடனடியாக போரை நிறுத்த இந்தியா முயற்சிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட 20 தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.
நன்றி : தினத்தந்தி
சிமி தடை நிலைக்காது - அஜித் ஸாஹி!
உலக வர்த்தகமையத்தின் மீது நடத்தப்பட்ட 'இரட்டைக் கோபுரத் தாக்குதலைச்' சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பாஜக, 'இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கத்தை' 2001 ஆம் ஆண்டு தடை செய்து, தங்களின் நீண்டநாள் கனவை நிறைவேற்றிக் கொண்டது. பின்னர் ஒவ்வொரு இரு வருடங்களிலும் தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் மதசார்பற்ற காங்கிரஸ் அரசு அத்தடையை நீட்டித்து வருகிறது. இந்தியாவில் நடக்கும் தீவிரவாதச் செயல்பாடுகளுக்குக் காரணமாக இன்று சுட்டிக்காட்டப்படும் சிமி, தெளிவான ஒரு பலிகடாவாகும் என 11 முக்கிய நகரங்களில் 3 மாத காலம் செலவழித்து ஆய்வு செய்த தெஹல்கா ஆசிரியர் அஜித் ஸாஹி உறுதியுடன் கூறுகிறார். அவரிடம் அவரது ஆய்வு தொடர்பாக ஒரு சிறு நேர்காணல்:
அரசு, காவல்துறை, ஊடகங்கள் ஆகிய எல்லாமே இணைந்து ஒருமித்தக் குரலில் "சிமி ஒரு தீவிரவாத இயக்கம்" எனக் கூறும் பொழுது நீங்கள் "இல்லை" எனக் கூறுகின்றீர்கள். இதனைக் குறித்து ஆராய உங்களைத் தூண்டியது எது?
ஒரு பத்திரிகையாளனின் சத்தியத்தின் மீதான விருப்பமே இதற்குத் தூண்டுகோலாக இருந்தது. சிமி விஷயத்தில், குற்றச்சாட்டுகள் அனைத்துமே ஒருதலைபட்சமானது என எனக்குத் தோன்றியது. காவல்துறை மற்றும் அரசு இயந்திரங்களோடு இணைந்து ஊடகங்களும் சிமி வேட்டையில் பங்காளிகளாகச் செயல்படும் வேளையில், இதற்கு ஏதாவது வெளிவராத மறுபக்கம் உண்டா? என்பதைக் குறித்து ஆராய வேண்டியது, ஒரு பத்திரிகையாளன் என்ற நிலையில் எனது கடமையாக இருந்தது. அவ்வாறு சிமியுடன் தொடர்பு படுத்தப்பட்ட வழக்குகளை ஆய்வதற்கும் அவ்வியக்கத்தின் முன்னாள் தலைவர்களுடன் சந்திப்புகள் நடத்துவதற்கும் தீர்மானித்தேன்.
அது நடந்தது நான்கு மாதங்களுக்கு முன்னர். விசாரணையின் இறுதிபலன் என்னவாக இருக்கும் என்பதைக் குறித்து அன்று எவ்வித ஊகமும் இல்லாமல் இருந்தது. முழுக்க முழுக்க திறந்த மனதுடன் அதனை அணுகினேன். ஆனால், மூன்று மாத ஆய்வின் முடிவில் என் முன்பாக வெளிப்பட்டவை அனைத்தும் அதிர்ச்சியளிக்கக் கூடிய உண்மைகளாக இருந்தன.
அதாவது, சிமிக்கெதிரான குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவைகளாக இருந்தனவா?
நான் ஆய்வு செய்த வழக்குகள் அனைத்துமே பொய்யான குற்றச்சாட்டுகளை உடையவை என என்னால் உறுதியாகக் கூற இயலும். அவற்றுக்கு எந்தவொரு ஆதாரமும் இல்லை.
அரசாங்கம் சிமிக்கு எதிராக ஏன் திரும்பியுள்ளது?.
என்னுடைய பார்வையில் சிமி ஒரு பலிகடாவாகும். இதில் குற்றவாளிகள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளவை ஊடகங்களே. காரணம், நாட்டில் குண்டுவெடிப்புகளோ வேறு ஏதாவது அசம்பாவிதங்களோ ஏற்படும் பொழுது, காவல்துறையையும் அரசாங்கத்தையும் ஒருவித நிர்பந்த நிலைக்குள்ளாக்குவது ஊடகங்களாகும். "குற்றவாளிகளை இதுவரை ஏன் பிடிக்கவில்லை?" என அவை கேட்கின்றன. இதுபோன்ற சம்பவங்களில் ஒன்றோ இரண்டோ தினங்களில் குற்றவாளிகளைக் கண்டு பிடித்துக் கைதுசெய்தல் என்பது நடக்காத காரியமாகும். ஆனால், பலமான நிர்பந்தம் மூலம் யாரையாவது கைதுசெய்ய வேண்டிய நிலைக்கு அதிகாரிகள் கட்டாயச் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர். இச்சூழலில்தான் சிமி தீவிரவாத இயக்கமாக ஆக்கப்படுகின்றது.
இதன் அர்த்தம், தீவிரவாத சம்பவங்களில் ஈடுபடும் உண்மையான குற்றவாளிகள் தப்பிக்கின்றனர் என்பதல்லவா?
நிச்சயமாக! அதுதான் நடக்கின்றது. வாயடைப்பதற்காக நிரபராதிகளைக் கைதுசெய்து சிறையிலடைக்கும் வேளையில், உண்மையான குற்றவாளிகள் தப்பித்துக் கொள்வதோடு ஒரு சாராரை அச்சத்துக்குள்ளாக்குதல் நிலைநிறுத்தப் படுகின்றது.
சிமிக்கு எதிரான ஆதாரங்கள் உண்டு எனக் கூறும் காவல்துறை மற்றும் அரசு அமைப்புகளால் அவற்றை நீதிமன்றம் முன்பு சமர்ப்பிக்க முடியாமல் போவதன் காரணம் என்ன?
அதைத்தான் நான் முன்பே கூறினேன். சிமிக்கு எதிரான வழக்குகள் அனைத்திலும் ஆதாரங்கள் ஒன்று கூட உறுதியானவை அல்ல. சிமிக்கெதிராக நாட்டின் பல பாகங்களிலுமாக 500 க்கும் மேற்பட்ட வழக்குகள் உண்டு என அரசு கூறுகிறது. சிமி தடை தொடர்பான வழக்கு விசாரிக்கப்படும் நீதிமன்றங்களின் முன்னிலையில் அவற்றில் மிகவும் உறுதியான ஆதாரங்களுடன் கூடிய வழக்குகளையே அரசு தரப்பு கொண்டு வரும் என சாமான்ய அறிவு உள்ளவர் கருதுவர். ஆனால், டில்லி உச்சநீதிமன்றத்தின் முன்னிலையில் கொண்டு வரப்பட்ட சிமி வழக்குகளில் ஒன்றுக்குக் கூட உறுதியான ஆதாரங்கள் எதுவுமே இல்லை. குற்றவாளிகள் எனக் கைதுசெய்யப் பட்டவர்களின் ஒப்புதல் வாக்குமூலங்களே அனைத்து வழக்குகளிலும் முக்கிய ஆதாரங்களாகச் சமர்ப்பிக்கப்பட்டன. குற்றம் சாட்டப் பட்டவர்களிடமிருந்து காவல்துறை முன்னிலையில் பெற்றுக் கொண்ட ஒப்புதல் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் நிற்காது என்பது யாருக்குத் தான் தெரியாது?. கைது செய்த காவல்துறையினர் உண்மையானவர்களாக இருந்தால், நீதிபதி முன்னிலையில் ஒப்புதல் வாக்குமூலங்களைப் பெற்றுக் கொண்டிருக்க வேண்டும். இது நடக்கவில்லை என்பதன் உண்மையான அர்த்தம், குற்றவாளிகள் எனக் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் எவருமே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கவில்லை என்பதேயாகும்.
நீதிமன்றத்தின் முதல் மூன்று தீர்ப்புகள் சிமியின் தடையினை உறுதி செய்திருந்தனவே?
அது சரிதான். ஆனால் நான் கூறுகிறேன், முதல் மூன்று தீர்ப்புகளும் கண்மூடித்தனமான பிழையாகும். காரணம், நீதிபதி கீதா மித்தலின் நீதிமன்றத்தில் முன்னிலையில் வைத்த ஆதாரங்களைத்தான் முதல் மூன்று நீதிமன்ற விசாரணைகளின்போதும் அரசு தரப்பு முன்வைத்து இருந்தது. தடைக்கு ஆதாரமாகக் காண்பிக்கப்பட்டுள்ள சூழ்நிலைகள் அன்றும் இன்றும் ஒன்றாகத்தான் இருந்தன. பள்ளிக் குழந்தைகள்கூட தயாராக்குவதற்குத் தயங்கும் விதம் நகைப்புக்குரியனவாக அந்த ஆதாரங்கள் இருந்தன. "காங்கிரஸ் அரசு ஆதாரங்கள் சமர்ப்பிக்காததே சிமியின் மீதான தடை நீக்கப்பட்டத் தீர்ப்பு வரக்காரணமாக அமைந்தது" என்ற பாஜகவின் குற்றச்சாட்டும் இதிலிருந்துப் பொய்யாகின்றது.
நீதிமன்றங்கள் பாரபட்சமாக செயல்படுகின்றன என்பதல்லவா இதன் அர்த்தம்?
சிமி தடைக்கு எதிராக முன்னாள் சிமித் தலைவர் ஷாஹித் பத்ர் ஃபலாஹி தாக்கல் செய்த மூன்று மேல்முறையீடுகள் உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகளாகத் தூசுபடிந்து கிடக்கின்றன. அதனைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள மரியாதைக்குரிய நீதிமன்றத்திற்கு இதுவரை நேரம் கிடைக்கவில்லை. ஆனால், சிமி மீதான தடை நீக்கிய டில்லி உயர்நீதிமன்ற நீதிபதி கீதா மித்தலின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு சமர்ப்பித்த மேல்முறையீட்டை எவ்வளவு வேகமாகப் பரிசீலனைக்கு எடுத்துத் தீர்ப்பு ஸ்டே செய்யப்பட்டது?. குறைந்தபட்ச வார்த்தைகளில் கூறினால், "இது முழு அநீதியாகும்"!.
சிமி விஷயத்தில் ஊடகங்கள் பாரபட்சமான நிலைபாடு எடுப்பதற்கான காரணம் என்ன?
அரசும் காவல்துறையும் கூறுவதைச் சந்தேகத்துடன் அணுகும் ஊடக நடைமுறை நமக்கு முன்பு இருந்தது. ஆனால், இன்றைய ஊடகச் செயல்பாடுகளை ஒரு தட்டச்சாளரின் வேலையோடு மட்டுமே உவமிக்க முடிகிறது. காவல்துறை கூறுவதை அப்படியே வரிபிசகாமல் அச்சில் ஏற்றும் நிலைமை!. பிரசுரிக்கப் படுபவற்றில் அநேகமானவை அடுக்கி வைத்தப் பொய்களும் விவரம் கெட்ட கதைகளுமாகும். தேசிய ஊடகங்கள் என பெருமையாக அழைக்கப்படுபவற்றின் நிலைமையிலும் பெரிய வித்தியாசமில்லை.
எதனால் இப்படி நிகழ்கின்றது?
முக்கிய காரணங்களில் ஒன்று, ஊடக முதலாளிகள் அரசு அமைப்புடன் இணைந்து நிற்கின்றனர் என்பதனாலாகும். அவர்கள் அரசிடமிருந்தும் காவல்துறையிடமிருந்தும் கள்ளத்தனமாக அனுகூலங்கள் பலவற்றையும் அனுபவிக்கின்றனர். எனவே, அரசோடும் காவல்துறையோடும் இணைந்து நிற்பதல்லாமல் வேறு எதைத்தான் இது போன்ற ஊடகங்களால் செய்ய முடியும்?
சிமி வேட்டையை அமெரிக்கத் தலைமையில் நடக்கும் தீவிரவாத எதிர்ப்புப் போரின் தொடர்ச்சியாகக் கருதலாமா?
இது ஒரு வகையில் மிகச் சரியான கணிப்பாகும். சக்தியுள்ளவர்களுடன் சார்ந்து நிற்பது என்ற ரீதியை இந்திய அரசு பின்பற்றியதன் நேரடிப் பலன் இது. உலகின் எல்லாப் பகுதியிலுமுள்ள இஸ்லாமிய முன்னேற்றங்களின் மீது தீவிரவாத முத்திரை குத்த அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது. தங்களுக்குக் கட்டுப்படாத ஈராக், ஆப்கான், இரான் போன்ற பல நாடுகள் அதன் பட்டியலில் உள்ளன. இரான், எத்தனை குழப்பங்கள் இருந்தாலும் துல்லியமாக ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்கும் நாடாகும். சாதாரண ஒரு மேயராக இருந்த அஹ்மதி நஜாத் அவ்வழியிலேயே அதிபர் ஆனார். ஜனநாயகத்தைக் குறித்துப் பெரிதாக நீட்டி முழக்கும் ஜார்ஜ் புஷ், "மத்திய ஆசிய நாடுகளை ஜனநாயக மயமாக்க இரானிடம் கோரிக்கை வைப்பது" ஒன்றே அவர் செய்ய வேண்டிய செயலாகும்.
சிமிக்கெதிரான தடை நீதிமன்றத்தில் வெற்றிபெறும் என்று தோன்றுகிறதா?
இவ்விஷயத்தை நன்றாக ஆய்ந்த ஒரு பத்திரிகையாளன் என்ற நிலையில், எனக்கு உறுதியாகக் கூற இயலும் - வழக்கில் சிமியின் பக்கம் பலமானதாகும். அவர்களுக்கு எதிரான ஆதாரங்கள் சட்டப்படி ஒருபோதும் தாக்குப் பிடிக்காது.
Saturday, February 7, 2009
குஜராத் மாநில வளர்ச்சிக்கு நரேந்திர மோடிதான் முழு காரணமா?
குஜராத்தின் வளர்ச்சிக்கு முதல்வர் நரேந்திர மோடி தான் முழுமையாக காரணம் என்று பலரும் கூறிக் கொண் டிருக்கிறார்கள். ஆனால் இது உண்மை அல்ல என்பதை புள்ளி விவரங்களின் அடிப் படையில் பார்த்தால் தெளி வாகப் புரியும்.
1994-95 இல் குஜராத்தின் வளர்ச்சி 13.2 விழுக்காடாகவும், 1994 முதல் 2001 வரை யிலான சராசரி வளர்ச்சி 10 . 13 விழுக்காடாகவும் இருக்கும் போது மோடி முதல்வராக இருக்கவில்லை. 1999 இல்தான் அவர் முதல்வரானார்.
1990 இல் குஜராத் இந்தி யாவின் முதல் மூன்று மாநிலங் களில் ஒன்றாக இருந்தது. 1960 இம்மாநிலம் உருவாக்கப் பட்டபோது எட்டாவது இடத்தில் இருந்த குஜராத் 20 ஆண்டு கால காங்கிரஸ் ஆட்சியில் மூன்றாவது இடத் திற்கு வந்தது. மின்உற்பத்திக்குத் தேவை யான கட்டுமானங்களில் 35 விழுக்காடு 1995-2000த்துக்கும் இடைப்பட்ட காலத்தில் காங் கிரஸ் ஆட்சியில் உருவாக்கப் பட்டது.
நாட்டின் பெட்ரோலியப் பொருள்களின் தயாரிப்பில் 49 விழுக்காடு குஜராத்தில் இருக் கிறது. நாட்டின் மிகப் பெரிய துறைமுகமான பவநகரும், மிகப் பெரிய ரிலையன்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு நிறு வனம் உள்ள ஜாம்நகரும் குஜராத்தில்தான் உள்ளன. இந்தியாவின்சோடா உப்பு தயாரிப்பில் 90 விழுக்காடு குஜராத்தில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது.
இவை அனைத்துமே குஜ ராத் முதலமைச்சராக நரேந்திர மோடி வருவதற்கு முன்பே இருந்தவைதான்.
குஜராத் மாநிலம் இன்று வளமாக இருப்பதாகக் கூறு வதில் என்ன வியப்பு இருக்க முடியும்? வழக்கமான முன் னேற்றத்திற்கிடையேயும் குஜராத்தின் தொழிலாளர் களில் 93 விழுக்காட்டினர் முறைசாராத் துறைகளில் பணியாற்றுபவர்களாகவே உள்ளனர். அதனால், வெறும் பொருளாதார வளர்ச்சியைக் கொண்டு மட்டுமே மக்களின் வாழ்க்கை மேம்பட்டு விட்ட தாகக் கூற முடியாது.
மனித வள மேம்பாட்டுக் குறி யீட்டில் 2003-04 இல் குஜராத் ஒரு இடம் பின்தங்கி இன்று கேரளா, பஞ்சாப், தமிழ் நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களுக்குக் கீழே உள் ளது. கிராமப்புற வளர்ச்சியில் அய்ந்தாவது இடத்தில் இருக் கும் குஜராத் முதலிடத்தில் உள்ள பஞ்சாபை விட பின் தங்கியே உள்ளது. தேசிய வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ் மற்ற மாநிலங்கள் பெறும் தொகை யில் பாதி அளவைத்தான் குஜராத் பெறுகிறது. அண்மை யில் பா.ஜ.க.வை விட்டு விலகிய உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வர் கல் யாண்சிங்தான் இத்தகவலை வெளியிட்டார் என்பது கவனிக்கத் தகுந்தது.
2005 இல் நடத்தப்பட்ட செயலாற்றல் மிக்க குஜராத் கண்காட்சியின் ஆலோசகர் களான எர்னஸ்ட் அண்ட் யங் எனும் நிறுவனம், மாநிலங் களில் செய்யப்படும் முதலீடு களைப் பொறுத்த வரை, கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு மாநிலங்கனை விட குஜராத் பின்தங்கியும், கர்நாட காவுக்கு இணையாக இருப் பதாகவும் தெரிவித் துள்ளது. தொழிலாளர் தரத்தைப் பொறுத்தமட்டில், அதே நிறுவனம் குஜராத்துக்கு வெறும் பி கிரேட் தந்துள் ளது. பல நிபந்தனைகள் நிறை வேற்றப்படவில்லை என்பதே இதன் காரணம்.
1996 இல் ஆசிய வளர்ச்சி வங்கி குஜராத்தை முதலீட்டு விஷயத்தில் இரண்டாவது இடத்தில் வைத்திருந்தது. 2005 இல் குஜராத் அய்ந்தாவது இடத்தில் வைக்கப்பட்டுள் ளது.
ஏற்கனவே குஜராத் முன் னிலையில் இருக்கும் போது, நரேந்திர மோடிதான் அதனை முன்னிலைப்படுத்தினார் என்று கூறுவதன் காரணம் என்ன? இதற்கு இரண்டு கார ணங்கள் உண்டு.
இங்குள்ள அனைத்து இந்து மதவாதிகளும் நுண் ணறிவு என்பதே அற்றவர்கள். மதக் கலவரங்களை முன் னின்று நடத்தும் திறமை படைத்தவர் என்பது மட் டுமே அவர்கள் மோடியைக் கொண்டாடுவதற்கான கார ணம். விரைவில் குஜராத்தின் பொருளாதார வளர்ச்சியில் இறங்கு முகம் தோன்றவே செய்யும். அதனால் வெகு கைலமாக முன்னணியில் இருந்த குஜராத் பின்நிலையை அடையும். ஆனால், ரத்த ஆறை ஓடச் செய்யும் திறமையை விட மோடியிடம் போலிப் புள்ளி விவரங்கள், கணக்குகள் காட்டும் திறமை அதிகமாக இருந்தது என்பதால் இந்த உண்மை மக்களின் கண்களுக் குத் தெரியாது. குஜராத்தின் கவுரவம் என்னும் உணர்ச் சியை மிகவும் தந்திரமாக மோடி தூண்டிவிட்டார். இதனால் குஜராத்தின் வளர்ச்சி விகிதத்தைப் பற்றி எவருமே கவலைப்படவில்லை.
தனிப்பட்ட முறையில் திறமை மிகுந்த நிர்வாகி என்று மோடி காட்டிக் கொண்டது தான் பல இந்திய நிறுவ னங்களைக் கவர்ந்தது. தரப்பட்டியலில் குஜராத் கீழே இறங்குவதைப் பற்றியும் அவர்கள் சிந்திக்கவே செய் தார்கள். ஆனால் அவர் களுக்கு வேண்டியது எல்லாம் மோடியின் வேகமான செயல் பாடு மட்டுமே. நானோ கார் தயாரிப்புக்கு மோடி பாது காப்பு மட்டும் கொடுக்க வில்லை; மூன்றே மாதங்களில் தேவையான பர்மிட்டுகளை மோடி தயார் செய்து ரத்தன் டாடாவுக்குக் கொடுத்தார். இது இதற்கு முன் எப் போதுமே கேள்விப்படாதது ஆகும். சட்டத்தைத் தன் விருப்பம் போல் வளைக்க இயன்ற மனிதர் ஒருவர் இங்கே இருக்கிறார்; ஆனால் என்ன - ஒன்று, அவருக்கு உங்களைப் பிடித்திருக்க வேண்டும்.
தனியார் முதலீட்டை மோடி வரவேற்றபோது, பெரிய, சிறிய நிறுவனங்கள் அவர் பக்கம் ஓடின. அரசியல் வாதிகளின் ஆதரவும், பாதுகாப்பும் தேடுவது என்ற இந்திய நிறுவனங்களின் மனப்பான்மை ஒன்றுதான் பொருளாதார தாராளமய மாக்கலின் தாக்கத்திலிருந்து தப்பியதாகும். செய்வது அனைத்தையும் வேகத்துடன் செய்வது என்ற மோடியின் வழியே முதலீட்டாளர்களைக் கவர்ந்தது. மோடியை இந்தி யாவின் எதிர்காலப் பிரத மராகவே அனில் அம்பானி காணத் தொடங்கிவிட்டார். அவரைத் தொடர்ந்து சுனில் மிட்டலும் மற்றவர்களும் இந்தப் பாட்டைப் பாட ஆரம்பித்துவிட்டனர்.
( 31-1-2009 நாளைய டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழில் தீபங்கர் குப்தா எழுதியுள்ள கட்டுரையின் தமிழாக்கம் இது.)
நன்றி;விடுதலை
Thursday, February 5, 2009
குஜராத் படுகொலைகள் - அமைச்சர் தலைமறைவு
குஜராத் படுகொலைகள் சம்பவத்தில் அம்மாநில அமைச்சர் ஒருவருக்கும் வி.எச்.பி. தலைவர் ஒருவருக்கும் முக்கியப் பங்கு உண்டு என்றும் இருவரும் தலைமறைவுக் குற்றவாளிகளாகக் கருதப்படுவதாகவும் இந்த வழக்கை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், அயோத்தியிலிருந்து கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி, சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்தபோது, கோத்ரா ரயில் நிலையத்தின் அருகில் எஸ்6 என்ற எண்ணுள்ள ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக அதில் பயணம் செய்த 57 கரசேவகர்கள் கொல்லப் பட்டனர். அந்தச் சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக பா.ஜ.க தெரிவித்தது. ஆனால், அது தற்செயலாக நடந்த விபத்துதான் என சில அரசியல் கட்சிகள் தெரிவித்தன.
அந்த விபத்து நடந்த உடனேயே குஜராத் முதல்வர் மோடி, கோத்ரா வந்தடைந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சில முக்கியமான ஆதாரங்களை அழித்ததாக 'ஜனசங்கர்ச் மஞ்ச்' என்ற அமைப்பின் வழக்கறிஞரான முகுள் சின்ஹா குற்றம் சாட்டியிருந்தார்.
கோத்ரா தீவிபத்தை அடுத்து முஸ்லிம்கள் மீது குற்றம் சாட்டி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆடிய நர வெறியாட்டத்தை குமுதம், தமிழரங்கம் போன்ற ஊடகங்கள் ஓரளவுக்கு வெளிக் கொண்டு வந்தன. ஆனால், குஜராத் முஸ்லிம்கள் மீது மோடியும் அவரது சங் பரிவாரங்களும் திட்டமிட்டு நடத்திய அராஜகத்தைச் சான்றுகளோடு முழுமையாக வெளிக்கொண்டு வந்த பெருமை டெஹல்கா.காம் தளத்தையே சேரும்.
இந்நிலையில், கோத்ரா வழக்கை மீண்டும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக, சுப்ரீம் கோர்ட் ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவைக் கடந்த 2008 மார்ச் மாதம் நியமித்தது. இக்குழுவின் தலைவராக ராகவன் நியமிக்கப்பட்டார். இதில், உ.பி. முன்னாள் டி.ஜி.பி. சத்பதி, ஐ.பி.எஸ், அதிகாரிகள் கீதா ஜோரி, சிவானந்ஜா மற்றும் ஆஷிஷ் பாட்டியா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். கோத்ரா ரயில் விபத்துச் சம்பவத்தையும் அது தொடர்புடைய ஒன்பது வழக்குகளையும் விசாரித்து வரும் இக்குழுவினர், எதிர்வரும் 15ஆம் தேதிக்குள் தங்களது இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட் கெடு விதித்தது.
இந்த வழக்கை மறு விசாரணை செய்த சிறப்புப் புலனாய்வுக் குழு, கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தில் குஜராத் மாநிலப் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் மாயா கோத்னானிக்கும் வி.எச்.பி. தலைவர் ஜெயதீப் பட்டேலுக்கும் முக்கியப் பங்கு உண்டு என தெரிவித்துள்ளது.
இது குறித்துச் சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவர் ராகவன் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது, "கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து நரோடா பாட்டியாவில் நடந்த கொலை வழக்கில் மாயா கோத்னானி மற்றும் ஜெயதீப் படேல் ஆகியோருக்குத் தொடர்பு உள்ளது. இது தொடர்பாக இருவருக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழு முன்பாக ஆஜராகும்படி பலமுறை சம்மன் அனுப்பியும் அவ்விருவரும் ஆஜராகவில்லை. நாங்கள் அனுப்பிய நோட்டீசுக்கும் அவர்கள் பதில் அளிக்க வில்லை. எனவே அவர்கள் இருவரையும் தலைமறைவுக் குற்றவாளிகளாக அறிவிக்கிறோம்" என்று அவர் தெரிவித்தார்.
உண்மைகள் உறக்கம் கலைந்து எழ வேண்டும்; குற்றவாளிகள் சட்டத்தின் முன் இழுத்து வரப்பட்டு தண்டிக்கப் படவேண்டும்!
Wednesday, February 4, 2009
இந்தியாவில் 1 கோடி பேர் வேலை இழக்கும் அபாயம்!
டெல்லி: இந்திய பொதுத் தேர்தலோடு பெரும் சோதனையும் சேர்ந்தே வருகிறது. ஆம்.. இந்த நிதியாண்டில் மட்டும் இந்தியாவில் 10 மில்லியன் மக்கள் அதாவது ஒரு கோடி பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் ஏற்றுமதி 22 சதவிகிதம் குறைந்துள்ளது. இன்னும் சில மாதங்களில் இந்த அளவு மேலும் கூடக் குறையலாம். எனவே இப்போதே 400 க்கும் மேற்பட்ட உற்பத்தித் தொழிற்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. இவற்றில் பணியாற்றிய 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வேலை இழந்துவிட்டனர். மேலும் 5 லட்சம் பணியாளர்கள் வேலை இழக்கும் வகையில் தொழிற்சாலைகள் உற்பத்தியை நிறுத்தி வருகின்றன. 40 லட்சம் முழுநேர / பகுதி நேர தொழிலாளர்கள் ஏற்கெனவே வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே பணியில் இருப்பதாக இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
"இதுவும்கூட இன்னும் சில மாதங்கள் வரைதான். எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் முடிந்தவரை எங்கள் தொழிலாளர்களை காப்பாற்றவே முயல்கிறோம். குறைந்த சம்பளத்துடனாவது அவர்களை வைத்திருக்க முயற்சி செய்கிறோம். ஆனால் அதற்குக் கூட வழியில்லாத அளவுக்கு ஏற்றுமதி குறைந்துவிட்டது. உள்நாட்டில் சப்ளை செய்யலாம் என்றால், இங்கே வெளிநாட்டுப் பொருட்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன. என்ன செய்வதென்றே புரியவில்லை.
பெரும்பாலான நடுத்தர மக்களுக்கு வாழ்வாதாரமாக உள்ள கார்மென்ட்ஸ் தொழில் முழுவதுமாக படுத்துவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளது, என்று அகில இந்திய தொழில்துறைக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த அபாயத்தை நன்கு உணர்ந்துள்ளதாகவும், இதைத் தடுக்க முடிந்தவரை அதிக நிதி உதவி அளித்து வேலை இழப்பைத் தடுக்க முயற்சிப்போம் என்றும் மத்திய நிதித்துறைச் செயலாளர் ராமநாதன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய ஜனநாயக முன்னணியில் MIP உடன் TMMK
சமீபத்தில் அரசியல் பயணத்தைத் துவக்கிய அஸ்ஸாம் ஐக்கிய ஜனநாயக முன்னணியின் (AUDF) தலைவர் பதுருத்தீன் அஜ்மலுக்கு பல மாநில முஸ்லிம் அமைப்புகள் வாழ்த்து தெரிவித்துள்ளதோடு, ஐக்கிய ஜனநாயக முன்னணியில் அங்கம் வகிக்கவும் இசைவு தெரிவித்துள்ளனர்.
திங்களன்று, டெல்லியிலுள்ள 'ப்ரஸ் கிளப் ஆஃப் இந்தியா' வில் AUDF ஐ அறிமுகப்படுத்திய அதன் தலைவர் பதுருத்தீன் அஜ்மல், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தேசிய அளவில் குறைந்தது ஆறு மாநிலங்களில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் எனக் குறிப்பிட்டார்.
அத்தோடு, தேசிய அளவில் முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் சமூகத்தின் அனைத்து அடித்தட்டு மக்களுடன், மதசார்பற்ற கட்சிகளும் தனது முன்னணியில் இணையுமாறு கோரிக்கையும் விடுத்தார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மில்லி இத்திஹாத் பரிஷத்தின் தலைவர் சித்தீக்குல்லாஹ் சவுத்ரி, AUDF அறிமுக நிகழ்ச்சியில் பதுருத்தீன் அஜ்மலுடனான தனது கலந்துரையாடலை, நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
புதிய தேசிய அரசியல் கட்சியின் அறிவிப்பை, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தலைவர் டாக்டர்.பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் வரவேற்றுள்ளார்.
நம்மிடம் பேசிய AUDF இன் செயல் தலைவர் ஹாபிஸ் ரஷீத் அவர்கள், 'தேர்தல் ஆணைய விதிகளின் அடிப்படையில், பொதுத் தேர்தல் நெருங்கி வரும் இந்த சந்தர்ப்பத்தில், தேசிய அளவிலான அரசியல் கட்சி பற்றிய அறிவிப்பு செய்ய இயலாத நிலையில் உள்ளோம். எனவே வெவ்வேறு மாநிலங்களில் ஐக்கிய ஜனநாயக முன்னணி UDF என்ற பதாகையின் கீழ் பல்வேறு பெயர்களில் நாம் இயங்குவோம். எதிர்வரும் 17.02.09 அன்று டெல்லியில் கூட உள்ள 'அகில இந்திய அரசியல் விவகார குழு' இதன் சாத்தியங்களைக் குறித்து ஆலோசித்து இறுதி செய்யும். அவ்வாலோசனைக் கூட்டத்தில் மேற்கு வங்கத்தின் MIP (மில்லி இத்திஹாத் பரிஷத்) உம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தமுமுக (TMMK)வும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்' எனக் குறிப்பிட்டார்.
தகவல் : டூசர்க்கில்ஸ் டாட் நெட்
தமிழில்: அபூஹாஜர்

Tuesday, February 3, 2009
இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து
கைபர்போலன் கணவாய் வழியாக இந்திய துணைக்கண்டத்தில் நுழைந்த ஆரியர்கள்,பிறப்பின் பெயரால் மனிதர்களில் தீண்டாமையை கடைபிடிப்பதையும்,கடவுளின்பெயரால் கற்பனையான மூடநம்பிக்கைகளையும் விதைப்பதை கண்ணுற்ற திரு.பெரியார் அவர்கள் அதை ஒழிப்பதற்கான பகுத்தறிவு முயற்சியில் ஈடுபட்டு ஒரு முடிவெடுத்தார். 'மூட்டைப்பூச்சியை ஒழிக்க வீட்டைகொளுத்திய கதையாக' கடவுளின் பெயரால் நடக்கும் அக்கிரமங்களை ஒழிக்க கடவுளே இல்லை என்ற பிரச்சாரத்தை முன்வைத்தார்.
பின்னாளில், தி.க. உடைந்து தி.மு.க.ஆனவுடன் அதன் தலைவர் அண்ணா, 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற தத்துவத்தை முன்வைத்தார்[இதுதான் இஸ்லாமிய கடவுள்கொள்கையாகும்] தி.மு.க. பிளந்து அண்ணாதி.மு.க. உதயமானவுடன், எம்.ஜி.ஆர். மூகாம்பிகையை வழிபட்டார். கருணாநிதியோ மஞ்சள் துண்டுக்கு மாறினார். அதற்கு வியாக்கியானமும் கொடுத்து மறைத்தார்.மேலும், சாய்பாபாவுடனும்,அமிர்தானந்தமயியுடனும் மேடையில் காட்சிதந்து அருள்பாலித்தார்[?] அத்துடன் 'கடவுளை நான் ஏற்றுக்கொள்கிறேனா என்பதைவிட கடவுள் என்னை ஏற்றுக்கொள்ளக்கூடிய பணியை செய்கிறேனா என்பதுதான் முக்கியம்' என்று திருவாய் மலர்ந்தார். ஜெயலலிதாவை சொல்லித்தெரியவேண்டியதில்லை. அவர் அண்ணா தி.மு.க.வை, அத்வானி தி .மு.கவாக நடத்திவருபவர்.
இப்படியான இவர்களின் பகுத்தறிவின் பரிணாம வளர்ச்சியாக[?] இன்று அண்ணா நினைவுநாளை முன்னிட்டு 31.கோவில்களில் சிறப்பு வழிபாடும், சமபந்தி விருந்தும் நடைபெறும் அன்று பகுத்தறிவு தி.மு.க.அரசு அறிவித்துள்ளது. இதில், ஸ்டாலின் உள்ளிட்ட அமைச்சர்களும் சபாநாயகர் உள்ளிட்ட எம்.எல்.ஏக்களும் கலந்து கொள்வார்களாம். இந்த பகுத்தறிவு தடுமாற்றத்தை கண்டிக்கவேண்டிய கி.வீரமணியோ கண்டுகொள்ளவில்லை. ஆனால் எதிர்பாராத பக்கத்திலிருந்து எதிர்ப்பு வந்துள்ளது.
இந்து மக்கள் கட்சி, இந்த சிறப்பு வழிப்பாடு-மற்றும் சமபந்திவிருந்து நடைபெறும் கோவில்கள் முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.நாத்திகரான அண்ணாவின் திதியை கோவில்களில் நடத்துவது ஆலயவிதிமுறைகளுக்கு முரணானதுஎன்று அக்கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறியுள்ளார்.
தவறான கொள்கைகளில் உறுதியிருக்காது என்ற வாக்கிற்கேற்ப, பகுத்தறிவு என்ற முலாம் பூசிக்கொண்டு பக்தர்களாக வலம்வரும் திராவிட கட்சியினரை, உண்மையான பகுத்தறிவு மார்க்கமான இஸ்லாத்திற்கு அழைக்கிறோம்.' இன இழிவு நீங்க இஸ்லாமே நன்மருந்து' என்ற பெரியாரின் வாக்கை, நீங்கள் உண்மையில் பெரியாரை பின்பற்றுவதாக இருந்தால் இஸ்லாத்தை ஏற்பதன்மூலம் பெரியாரின் வாக்கை உண்மைப்படுத்த முன்வாருங்கள்.
Monday, February 2, 2009
கிழிந்துதொங்கும் தேசவிரோதிகளின் முகமூடிகள்!
மாலேகாவ்ன் குண்டுவெடிப்புச் சதிகாரர்கள் மீது 20.1.2009இல் 4000 பக்கக் குற்றப்பத்திரிகை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நான்கு மாதங்கள் தீவிர விசாரணைக்குப் பிறகு - விசாரணை அதிகாரி ஹேமந்த் கார்கரே மும்பை தாக்குதலில் கொல்லப்பட்ட பிறகு - குற்றப்பத்திரிகை தாக்கலானது.
சிறீகாந்த் புரோகித் எனும் பார்ப்பன ராணுவ அதிகாரி முதன்மைக் குற்றவாளி. இந்து ராஷ்ட்ரம் அமைக்கத் திட்டமிட்டு, அரசியல் கூட்டம், கொடி போன்றவற்றையும் எழுதி வடிவமைத்து, இதற்கான சதிச் செயல்களில் ஈடுபடுவதற்குத் தேவையான வெடிப் பொருள்களை வாங்கிச் சேமித்தார் அல்லது ராணுவத்திலிருந்து திருடிச் சேமித்தார் என்று குற்றச் சாற்று.அவருடைய நோக்கம், இசுரேல் நாட்டின் உதவியுடன் போட்டி அரசாங்கம் ஒன்றை இந்தி யாவுக்கு எதிராக அமைப்பது என்றும் இந்தியாவை விட்டு வெளியேறி இசுரேலில் தஞ்சம் புகுந்து அங்கிருந்து போட்டி அரசை நடத்துவது என்பது தான்.
37 வயதான சன்னியாசினி பிரதிக்யா சிங் எனும் தாக்கூர் (சத்திரிய) ஜாதிப் பெண் முக்கிய குற்றவாளி.சுயம்பு சங்கராச்சாரி தயானந்த் பாண்டே எனும் பார்ப்பனர் கூட்டுச் சதிகாரர். இவருடன் இணைந்து சதித்திட்டம் போட்டவர் போர்க்கருவிகள் விற்பனையாளரான ராகேஷ் தாவ்டே என்பவர். 2006இல் நடந்த நாண்டெட் குண்டு வெடிப்பிலும் சம்பந்தப்பட்ட ஆள்.
இந்துமதவெறி அமைப்பான அபிநவ் பாரத் அமைப்பின் பொருளாளர் அஜய் ராஹிர்கர் பணம் திரட்டி உதவியவர். சுமார் 21 லட்சம் ரூபாய்க்கு மேல் நிதி திரட்டித் தந்துள்ளார்.இவர்கள் தவிர, சிவ நாராயணன் கல்சங்ரா, ஷியாம்லால் சாகு, ஜகதீஷ் மாத்ரே, சமிர் குல்கர்னி, சுதாகர் சதுர்வேதி, ரமேஷ் உபாத்யாயா என்று 11 பேர் குற்றம் செய்யத் தூண்டியோர் என்று குற்றப் பத்திரிகை கூறுகிறது.
சந்தீப் டாங்கே, ராம்ஜிகல் சங்ரா, முத்தாலிக் என்றழைக்கப்படும் பிரவீண் பாட்டில் என்கிற மூன்று குற்றவாளிகளும் பிடிபடாமல் உள்ளனர்.இவர்களைத் தவிர, சாமி அசீமானந்த் என்ற பெயர் கொண்ட குஜராத்தைச் சேர்ந்த டாங் பகுதியில் இருந்த சாமியார் ஒருவரையும் இன்னும் கண்டு பிடிக்க முடியாமல் இருக்கிறது. இந்த ஆளைப் பிடித்தால், பலசதிச் செயல்கள் பற்றிய விவரங்கள் வெளிவரும்.அத்துடன் அஜ்மீர் தர்காவிலும், அய்தராபாத் மெக்கா மசூதியிலும் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புச் சதிகள் பற்றிய விவரங்களும் வெளிவரும். ஆனால், இந்த ஆளுக்கு குஜராத்தின் மோடி அரசின் ஆதரவு இருக்கும் காரணத்தால் அவரைப் பிடிக்க முடியவில்லை.
மகாராட்டிர மாநிலத்தின் பயங்கரவாதத்தடுப்புப் பிரிவுக் காவல் துறைத் தலைவராகக் கூடுதல் பொறுப்பில் உள்ள ரகுவன்ஷி இதுபற்றிக் கூறும் போது, இவர்கள் இந்து ராஷ்ட்ரத்தை அமைத்திட இசுரேல் நாட்டின் உதவியை நாடத் திட்டமிட் டுள்ளனர் என்றும், அதற்கு முன்பாக இங்குள் ளோரின் ஆதரவை முதலில் திரட்டுவது என்றும் தீர்மானித்து விட்டனர் என்கிறார்.
இவர்களது திட்டம், சந்திப்புகள், பேச்சு வார்த்தைகள் எல்லாவற்றையுமே மடிக்கணினியில் பதிவு செய்து வைத்த அல்ட்ரா மாடர்ன் சதிகாரர்கள். காவல் துறை அனைத்தையும் அள்ளிக் கொண்டு வந்து வழக்கில் ஆவணங்களாகத் தாக்கல் செய்துள்ளனர்.தாலிபான், முஜாகிதீன் போன்ற இசுலாமியத் தீவிரவாதிகளின் செயல்களின் வீடியோ படக் காட்சிகளைப் போட்டுக்காட்டி இந்துமத வெறியைத் தூண்டி இசுலாமியர்களுக்கு எதிரான சதிச் செயல்களின் ஈடுபட அழைப்பு விடுத்துள்ளனர்.
காவல் துறையினரால் விசாரிக்கப்பட்ட ராணுவத் தினரையும் மதவெறிக் கட்சி ஆள்களையும் வழக்கில் சேர்க்காமல் விட்டுவிட்டனர். விசாரணை அலுவலர் ஹேமந்த் கார்கரே கொல்லப்பட்டு விட்டதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.வழக்கில் 400 சாட்சிகள் குறிக்கப்பட்டுள்ளனர். போஸ்லா மிலிட்டரிப் பள்ளியின் உறுப்பினர்களும் சாட்சிகளாக்கப்பட்டுள்ளனர். இந்தப் பள்ளியில் பயிற்சி அளித்து 1000க்கும் மேற்பட்டவர்களை இந்தியாவின் முப்படைகளிலும் சேர்த்து விட்டிருப்பதாகப் பயிற்சியாளர் கூறியிருக்கிறார் என்பது கவனிக்கத் தக்கது. ஆயிரத்தில் ஒருவன்தான் அகப்பட்டுள்ளான். மற்றவர்கள் என்ன செய்து மாட்டிக் கொள்வார்கள் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இந்தியத் தண்டனைச் சட்டப்பிரிவுகளின் படியோ, திட்டமிட்ட சதிச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் படியோ அவர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.ஆனால், வெளி நாட்டுக்குத் தப்பி ஓடி அந்நாட்டு ஆதரவைப் பெற்று, இந்திய நாட்டுக்கு எதிராகப் போட்டி அரசை நிறுவிட முயற்சி செய்தவர் மீது இந்திய இறையாண்மைக்கு எதிராகச் செயல்பட்ட அரசுத் துரோகக் குற்றச்சாட்டுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? எந்த நடவடிக்கையும் இல்லை! பார்ப்பனர்கள் என்பதால் சலுகையோ?
தரவு: தெகல்கா 31.1.09
நன்றி;விடுதலை
பதர்சயீத் ராஜினாமா செய்யத்தயாரா? பாயும் ஹைதர்அலி!
சில நாட்களுக்கு முன் சட்டமன்றத்தில் உரையாற்றிய, முன்னாள் வஃக்ப் போர்டு தலைவரும் அண்ணாதிமுக எம்.எல்.ஏவுமான பதர்சயீத், அம்மா ஆட்சியில் வஃக்ப்போர்டுக்கு சுதந்திரமளித்திருந்தார். ஆனால் இன்று வஃக்பு சொத்துக்களை ஆளும்கட்சிக்கு லீசுக்கு கொடுக்கிறார்கள். மேலும் வஃக்பு வாரியத்தின் மூலம் கட்சி வளர்க்கிறார்கள் என்று சாடினார்.
உடனே வஃக்ப் அமைச்சர் மைதீன்கான், ஆற்காட்டார் உள்ளிட்டோர், உறுப்பினர் ஆதாரங்களை தந்தால் நடவடிக்கை எடுக்கத்தயார் என்றனர்.அதற்கு பதர் சயீத் பதிலளிக்கவில்லை. இந்நிலையில், பதர்சயீதின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து தற்போதைய வஃக்ப் வாரியத்தலைவர் சகோதரர் ஹைதர் அலி அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில்,
பதர்சய்யீத் வஃக்ப்வாரிய தலைவராக இருந்தபோது, வஃக்பு வாரியத்தில் பதியப்பட்டிருந்த போரூர் ஷேய்க்மானியம் மஸ்ஜித் ஹைருன்னிஷா என்ற வஃக்புவை அது வஃக்பு சொத்துஇல்லைஎன தீர்மானம் நிறைவேற்றியுள்ளார். ௧௯௩௫ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட ரெவின்யூ மேப்பில் உள்ள பள்ளிவாசலையே, இல்லாத பள்ளிக்கு ஒரு நிர்வாகக்குழு தேவையில்லை என உத்தரவுபோட்டு ஐந்நூறு கோடி மதிப்புள்ள 52. ஏக்கர் வஃக்பு சொத்தை இழக்கும் நிலைக்கு தள்ளினார். நாங்கள் சுப்ரீம் கோர்ட் மூலம் அந்த சொத்தை மீட்க நடவடிக்கை எடுத்துவருகிறோம்.
மேலும் பதர்சய்யீத் மீதானகுற்றச்சாட்டை நான் நிரூபிக்கத்தயார். நான் அவர்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள், அவர் என்மீது சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகள் பற்றி சி.பி.சி.ஐ.டி. விசாரிக்கவேண்டும். என்மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் நான் பொதுவாழ்விலிருந்து விலகத்தயார். பதர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் எம்.எல்.எபதவியை ராஜினாமா செய்யத்தயாரா? என ஹைதர் அலி சவால்விட்டுள்ளார்.
உண்மையில் ஹைதர் அலி அவர்களின் துணிச்சலான சவால் வரவேற்கத்தக்கதே! அதே நேரத்தில், பதர்சய்யீத் தங்கள் மீது குற்றம் சுமத்தும்வரை, ஐநூறுகோடி சொத்து பற்றி மூச்சு விடாதது ஏன்? என்னைப்பற்றி கண்டுகொள்ளாதவரை உன்னைப்பற்றி நான் கண்டுகொள்ளமாட்டேன் என்பது போன்ற அளவுகோலா? அல்லாஹ் அறிந்தவன்.
இதுவரை இருந்த தலைவர்களிலிருந்து ஹைதர் அலி அவர்கள் மாறுபட்டவர். தவ்ஹீத் கொள்கையுடையவர். எனவே கடந்த காலங்களில் இருந்தவர்களால் பறிபோன வக்பு சொத்துக்களை மீட்பதோடு, கடந்த கால தவறுகள் தங்களின் காலத்திலும் வராமல் பாதுகாப்பது உங்களின் கடமையாகும்.
'நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள்;உங்கள் பொறுப்புகள் பற்றி விசாரிக்கப்படும் என்ற நபிமொழியை மனதில் கொண்டால் எல்லாம் சீர்பெறும் என்பது திண்ணம்.
Sunday, February 1, 2009
ஆலங்குளத்தில் இரட்டை தம்பளர் முறை 42 குடும்பங்கள் ஊரை விட்டு தள்ளி வைப்பு
ஆலங்குளம்: நெல்லை மாவட்டம் ஆலங்குளம் அருகே இரட்டை டம்ப்ளர் முறை நடைமுறையில் உள்ளதாகவும், ஒரு சமுதாயத்தை சேர்ந்த 42 குடும்பங்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகவும் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
ஆலங்குளம் ஊராட்சி ஓன்றியம் கல்லூத்து கிராமம், காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சமுத்திரபாண்டி. கழுநீர்குளம் பஞ்சாயத்தின் நான்காவது வார்டு உறுப்பினர்.
இவர் கலெக்டரிடம் அளித்த மனுவில், கல்லூத்தில் உள்ள டீக்கடையில் எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு இரட்டை தம்பளர் முறையில் டீ கொடுத்து வந்தனர். இதுகுறி்த்து மற்ற சமுதாயத்தை சேர்ந்தவர்களிடம் முறையிட்டு வந்தேன்.
இந்நிலையில் ஊர் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அந்த ஊரை சேர்ந்தவர்கள் என்னையும், எங்க ஊர் நாட்டாமையையும் அழைத்தனர். அந்த கூட்டத்திற்கு நான் செல்ல மறுத்து விட்டேன். 27ம் தேதி கூட்டத்திற்கு சென்ற ஊர் நாட்டாமையையும் அவதூறாக பேசியுள்ளனர்.
கடந்த 28ம் தேதி முதல் எங்கள் சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கு கடையில் டீ கொடுக்க மறுத்ததுடன் பலசரக்கு கடையில் பொருளை தரவும் மறுத்து விட்டனர். இதனால் கல்லூத்து கிராமத்தை சேர்ந்த ஒரு சமுதாய மக்கள் முத்து கிருஷ்ணபேரி அல்லது ஆலங்குளம் சென்று பொருட்களை வாங்க வேண்டியுள்ளது.
இதுகுறித்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க கோரி கடந்த 28ம் தேதி வீரகேரளம்புதூர் போலீசில் புகார் செய்தோம். ஆனால் போலீசார் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் ஆலங்குளம் தாலுகா அலுவலகத்தில் நடக்கும் சமாதான கூட்டத்துக்கு வரு்மாறு விஏஓவும் போலீசாரும் அழைத்தனர்.
ஆனால் புகார் மீது வழக்கு பதிவு செய்யாமல் சாமாதான கூட்டத்திற்கு அழைத்தது வேதனையை அளி்க்கின்றது. ஊரை விட்டு விலக்கியதால் 42 குடும்பங்கள் எங்கும் பொருட்கள் வாங்கமுடியாமல் அவதிப்படுவதாக அதே ஊரை சேர்ந்த கணேசன் கூறினார்.
இவர்களுடன் இதே ஊரை சேர்ந்த சொரிமுத்து, குமரேசன், மனித உரி்மைகள் களம் இயக்குனர் பரதன், அருந்ததியினர் பெண்கள் எழுச்சி இயக்கத்தின் மாநில அமைப்பாளர் முத்துமாரி ஆகியோரும் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

Folder Lock (பாதுகாப்பிற்கு சிறந்த மென்பொருள் )
இது தகவல் பாதுகாப்பிற்கு சிறந்த மென்பொருள் ஆகும் . இதன் மூலம் உங்கள் ஆவணங்களுக்கு Password கொடுத்து பாதுகாக்க முடியும். folder lock ஆனது password கொடுப்பது மட்டும் அல்லாது Data களை மற்றவர்கள் கண்டுபிடிக்க முடியாதவாறு hide பண்ணியும் விடுகிறது. அதனால் உங்கள் தகவலுக்கு 100 சதவீத பாதுகாப்பு கிடைக்கிறது. folder lock முலம் உங்கள் கணணியின் Drive களுக்கும் மற்றும் Usb Drive, CD Drive, Floppy drive களுக்கும் Password கொடுத்து பாதுகாக்க முடியும். இதன் இன்னொரு சிறப்பு இதை நீங்கள் உங்கள் Usb drive , External hard disk, cd, memory card போன்றவைகளில் வைத்து potable software ஆக பயன்படுத்தலாம். இது 4 வகையான theme களில் கிடைக்கிறது இதன் options சென்று இதன் பாதுகாப்பு தன்மையை உங்கள் வசதிக்கேற்ப கூடிக்கொள்ளலம்.
you can download
http://www.box.net/shared/0gt7u68lzo#Folder_Lock_Ver_5.9.5
Subscribe to:
Posts (Atom)