Tuesday, February 17, 2009

குஜராத் முஸ்லிம்கள்நிலை; அத்வானி காமெடி!

வருங்கால இந்தியப்பிரதமர்[?] என்று வர்ணிக்கப்படும் திருவாளர் அத்வானி ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, பாரதீய ஜனதாக்கட்சி முஸ்லிம்களுக்கு எதிரானது என்ற மாயை உருவாக்கப்பட்டுள்ளது. நரேந்திரமோடியின் ஆட்சியின் கீழ் முஸ்லிம்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகிறார்கள் என்று திருவாய் மலர்ந்துள்ளார்.

முஸ்லிம்களாக பிறந்த ஒரே காரணத்திற்காக மோடியின் ஆதரவோடு பயங்கரவாதிகள் கோரத்தாண்டவம் ஆடியதை, காந்திபிறந்த மண்ணை கொலைக்களமாக ஆக்கியதை, சொந்த மண்ணில் இன்றும் அகதிகளாக வாழ்வதை, சாட்சியங்கள் அழிக்கப்பட்டு/ மிரட்டப்பட்டு, கொல்லப்பட்ட ஜனாசாக்களோடு வழக்கையும் புதைத்ததை வாகையாய் மறைத்து மோடிக்கு வஞ்சப்புகழ்ச்சி பாடுகிறார் அத்வானி. அன்று மட்டுமல்ல இன்றும் முஸ்லிம்கள் குஜராத்தில் அகதிகளாகஅச்சத்தோடு வாழ்ந்துவருவதை மனித உரிமைக்கு குரல்கொடுக்கும் மாண்பாளர் ,மனித உரிமைப் போராளி தீஸ்தா செட்டில்வாட் அவர்களின் வார்த்தையிலிருந்து அத்வானி புரிந்துகொள்ள சிலதுளிகள்.

29, பிப்ரவரி 2002-க்கு வெகுகாலத் துக்கு முன்பே ஆரம்பித்துவிட்டது. திட்டமிட்டு சிறுபான்மையினரைத் தனிமைப்படுத்துதல், குஜராத் நகர்ப் புறத்தை ஒரு சமுதாயத்தினர் வாழும் பகுதியாக ஒதுக்கி வைத்தல், பாடப் புத்தகங்களில் சிறுபான்மை சமூகத் தினரை கேவலப்படுத்தி எழுதுதல் இந்தக் காரியங்கள் யாவும் இனப்படுகொலை நிகழ்த்தப்படுவதற்கு குறைந்தது ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிட்டு செய்யப்பட்டன. இனப்படு கொலை ஒரு இரவில் நடப்பதல்ல. அது ஒன்றும் மேஜிக் அல்ல. அது ஒரு திட்டமிடப்பட்ட செயல். மௌனமாக இருப்பதன் மூலம் குற்றச்செயலுக்கு உடந்தையாக இருந்ததை பெரும்பான்மை சமூகம் ஒத்துக்கொள்கிறது. குஜராத் இதற்கு மிகச்சிறந்த உதாரணம்.

நண்பர்களே, 29, பிப்ரவரி, 2009 இனப்படுகொலை நடந்து எட்டாண்டுகள் நிறைவடைந்திருக்கும். பெஸ்ட் பேக்கரி வழக்கு பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். ஆனால் எங்கள் குழு 67 வழக்குகளுக்காகப் போராடிக் கொண்டுள்ளது.வழக்கை உயிருடன் வைத்தி ருக்க மூன்று நான்கு ஆண்டு களாக நாங்கள் உச்சநீதிமன்றத் தோடு போராட வேண்டி யிருந்தது. காலம் கடந்துவிட்டது, இந்த வழக்குகள் எல்லாம் குஜராத்தி லேயே அழுகிச் சாகட்டும் என்று சொல்லி தடுப்பதற்கு தன் சக்தியை யெல்லாம் பிரயோகித்துப் பார்த்தது குஜராத் அரசு. ஆனால் குஜராத்தில் பயங்கரமான சூழ்நிலைகளில் வசிக்கும் 468 சாட்சிகள் இன்னும் துணிச்ச லோடும் மனசாட்சியோ டும் சாட்சி சொல்ல தயாராக இருக்கிறார்கள் என்று பெருமை யோடு சொல்லிக் கொள்கிறோம். அவர்கள் அச்சுறுத்தப்படுகிறார்கள், அவமானப் படுத்தப்படுகிறார்கள். அவர்கள் வசதி படைத்தவர்களும் அல்ல. தங்களது பண்ணை நிலத் தில் கூடாரம் அடித்துக் கொண்டு வசிக்கும் அவர்கள் நீதி கிடைக்க வேண்டும் என்பதில் மட்டும் உறுதியாக இருக்கிறார்கள். அமைப்பு அவர்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை

ஜஹீராவை நான் பழிசொல்ல மாட்டேன். பெரியதொரு விளையாட்டில் அவர் ஒரு பகடைக்காய் மட்டுமே. வடோதரா பி.ஜே.பி எம்.எல்.ஏ செய்த காரியம் அது. தூக்கி எறிவதற்கு ரொம்ப எளிமை யானது பணம்தான். பலவீனமான இளம்பெண் என்ன செய்வாள்? உச்ச நீதிமன்றத்துக்கு எதிரான ஒரு முறையீடு என்னிடம் இன்னும் உள்ளது. பொய் சாட்சி சொன்னதற்காக அவளுக்கு ஒரு ஆண்டு தண்டனை கொடுத்தார்கள். ஆனால் அவளுக்கு லஞ்சம் கொடுத்த மது ஷிவாசுக்கு ஒரு மாதம்கூட தண்டனை கொடுக்கவில்லை. நமது அமைப்பு முறையில் எங்கோ தவறு உள்ளது.

கண்முன்னே வேதனைக்கன்னீர் வடிக்கும் ஒரு சமுதாயத்தை, பார்த்தீர்களாஆனந்தக்கண்ணீரை? என்று சொல்வதுபோல் உள்ளது அத்வானியின் அர்த்தமற்ற பேச்சு. இப்படிப்பட்டவர் பிரதமர் வேட்பாளராம்! பாவம் இந்தியா!!

No comments: