சென்னை: செல்போன் பேசியபடி பேருந்துகளை இயக்கிய 31 அரசு பஸ் டிரைவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
செல்போன் பேசியபடி பேருந்துகளை இயக்குவதால் தொடர் விபத்துகள் ஏற்பட்டதையடுத்து அரசு போக்குவரத்து கழகங்களுக்கு முதல்வர் கருணாநிதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
அரசு பஸ் டிரைவர்கள் செல்போன் பேசியபடி பேருந்துகளை இயக்குவதால் தொடர் விபத்துகள் ஏற்பட்டதையடுத்து அரசு போக்குவரத்து கழகங்களுக்கு முதல்வர் கருணாநிதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
இதன்படி அரசு பஸ் டிரைவர்கள் பணியின்போது செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டது. இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இதைக் கண்காணிக்க கிளை மேலாளர்கள், கண்காணிப்பாளர்களுக்கும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் திடீரென்று அரசு பஸ்களில் ஏறி டிரைவர்களை சோதனையிட்டு வருகின்றனர்.
இந்த சோதனைகளில் தமிழகம் முழுவதும் ஏராளமான அரசு போக்குவரத்து கழக டிரைவர்கள் செல்போன் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதல் முறை அவர்கள் எச்சரித்து அனுப்பப்பட்டனர்.
ஆனாலும் டிரைவர்கள் பணியின்போது செல்போனை கொண்டு செல்வது நிற்கவில்லை.
இதையடுத்து 226 டிரைவர்களிடமிருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அவர்களுக்கு நோட்டீசும் தரப்பட்டது.
இந் நிலையில் செல்போன் பேசிக்கொண்டே பஸ்சை ஓட்டிச்சென்ற 31 டிரைவர்கள் மீது போக்குவரத்துக் கழகம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது. அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்னர்.
இதில், சென்னை மாநகர் போக்குவரத்துக் கழக டிரைவர்ள் 2 பேரும், விழுப்புரம் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த 6 பேரும், கோவை போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்த 7 பேரும், சேலம் போக்குவரத்து கழகத்தைச் சேர்ந்த 2 பேரும் அடங்குவர்.
மேலும் வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 6 மண்டலங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 63 டிரைவர்கள் பிடிபட்டனர். இவர்களது செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்ன.
இந்ச செல்போன்களை அதிகாரிகள் சோதனையிட்டபோது 6 டிரைவர்கள் பணியில் இருந்தபோது செல்போனில் பேசியிருந்தது தெரியவந்ததால் அவர்களும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மற்றவர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் தரப்பட்டுள்ளது.
கோவையில் பிடிபட்ட 62 டிரைவர்களில் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கும்பகோணம் போக்குவரத்து கழகத்திலும் செல்போன் வைத்திருந்த 52 டிரைவர்கள் பிடிப்பட்டனர்.
இதில் ஒருவர் மட்டும் செல்போனை பயன்படுத்தியதால் அவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
பணியின்போது டிரைவர்கள் செல்போனை பயன்படுத்தினால் அது பற்றி பயணிகள் புகார் செய்யலாம் என்றும் அரசு அறிவித்துள்ளது. 94450-30516, 93833-37639 ஆகிய எண்களில் பயணிகள் புகார் தரலாம்.
சென்னையில் இது தொடர்பான எண்கள் அடங்கிய ஸ்டிக்கர் எல்லா பஸ்களிலும் ஒட்டப்பட்டு வருகின்றன.
No comments:
Post a Comment