Saturday, December 6, 2008

பாபரி மஸ்ஜித் உரிமை மீட்பு தினம்!

பாபரி மஸ்ஜித் உரிமை மீட்பு தினம்!
இலட்சிய வெற்றி கிடைக்கும் வரை ஓயமாட்டோம்!!







பரிதாபமாய் நின்ற பாபரி மஸ்ஜித்
நம் நாட்டுக்கு ஏற்படுத்தப்பட்ட களங்கம் இன்னும் துடைக்கப்படாமலேயே இருக்கிறது. இந்திய முஸ்லிம் களின் இதயங்களில் எரிகணையால் துளைத்தாற் போன்ற அந்த துரோகச் செயல் நிகழ்ந்து 15 ஆண்டுகள் முடிவடையப் போகிறது.

ஆம். டிசம்பர் 6 என்ற சரித்திரக் கரும்புள்ளியாய் மாறிய அந்த நாளை இந்த நாடும் மக்களும் மறக்கத் தயாராக இல்லை.
உச்சநீதிமன்றத்தின் மாண்பினையும், இந்தியாவின் இறையாண்மையையும் சமாதானத்தையும் பேணியவர் கள் முஸ்லிம்கள். சங்பரிவார் சக்திகளின் சதிகளினால் இறைவனின் ஆலயத்தை இழந்த அவர்கள் எவ்வித உணர்ச்சிக் கொந்தளிப்புக்கும் இலக்காகாமல் ஒற்று மையைப் பேணினார்கள். பாபரி பள்ளிவாசல் தகர்க்கப் பட்ட நிகழ்வு போன்ற ஒரு அடாத செயல் வேறு எந்த சமூகத்திற்காவது நிகழ்ந்திருந்தால் இந்த தேசத்தின் ஒற்றுமையே கேள்விக்குறியாகி இருக்கக்கூடும். ஒரு சிலை அல்லது ஒரு உருவப் படம் அல்லது ஒரு நினைவிடம் சேதப்படுத்தப்பட்டால் அந்த ஊரே அல்லோல கல்லோலப் பட்டிருக்கும். சேதப்படுத்தப்பட்ட அவர்களது புனித சின்னம் அதே இடத்தில் வைக்கப் படுவதாக அரசினால் வாக்களிக்கப்பட்டு பின்னர் அதே இடத்தில் அவை நிறுவப்பட்ட பின்னரே அந்த சமுதாயம் அமைதியடையும். அந்த அரசாங்கமும் நிம்மதிப் பெருமூச்சு விடும். அதைப் போலவே முஸ்லிம்களுக்கு அரசாங்கத்தால் வாக்குறுதி வழங்கப்பட்டது. அன்றைய பிரதமர் நரசிம்மராவ், பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட அதே இடத்திலேயே கட்டித் தரப்படும் என வாக்குறுதி அளித்தார்.



>

நான்கே நாட்களில் இடித்த குற்றவாளிகள் குறித்த வழக்கு தொடர்பாக விசாரணைக் குழுவும் அமைக்கப் பட்டது. லிபர்ஹான் என்ற உலக மகா(!) புண்ணிய(!) வான் தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப் பட்டது.


விசாரணைக்குழு இன்று எந்த கதியில் இருக்கிறது என்பதையே ஒரு விசாரணைக்குழு வைத்துதான் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவல நிலையிலே லிபர்ஹான் ஆணையம் நீதி விசாரணையின் லட்சணம் இருந்தது. 46, 47வது முறையாக நீட்டிக்கப்பட்டு இனி அது மேலும் ஒரு தடவை நீட்டிப்பதற்காக மட்டும்தான் கூடும் என்றே நினைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப் பது மகா அவமானகரமான ஒன்று.



இந்நிலையில், மற்றொரு டிசம்பர் 6 நம்மை நோக்கி வருகிறது. ஆர்த்தெழுந்து அறப்போர் தொடுக்க உரிமை மீட்பு பேரியக்கம் போர்ப்பரணி பாடி புறப்படத் தயாராகி விட்டது.


பாபரி மஸ்ஜித் தகர்ப்பு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். பாபரி மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை முதன்மை கோரிக் கையாக்கி அகில இந்திய அளவில் போராட்டக் களம் அமைத்தது தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம். அதன்பிறகே அதுகுறித்த விழிப்புணர்வு இந்தியா முழுவதும் பரவியது.

பாபரி பள்ளிவாசல் தகர்ப்பு சதிகாரர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படும் நாள் எந்நாளோ என அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், 2008 டிசம்பர் 6ஆம் தேதி நாடு தழுவிய ரயில் மறியல் போராட்டத்திற்கு தமுமுக செயல் வீரர்கள் தயாராகி விட்டார்கள். அவர்களது எழுச்சிமிகு போராட்டத்தில் பங்கேற்க தமிழக முஸ்லிம்கள் குடும்பம் குடும்பமாக திரளத் தொடங்கி விட்டார்கள்.

கேடுகெட்ட அரசுகளால் காப்பாற்ற முடியாத பாபரி மஸ்ஜித்


உணர்ச்சிப் பிழம்பாக மக்கள் பாபரி மஸ்ஜித் கோரிக்கைக்காக - அறப்போருக்காக ஆயத்தம் ஆகும் வேளையில் நாட்டு மக்களை பிளவுபடுத்தும் கும்பல் பாபரி பள்ளிவாசல் உரிமை மீட்பு போராட்டத்தை கொச்சைப்படுத்துவதைப் போன்று வெற்றி நாள் என கோஷமிட்டுக் கொண்டு கடந்த ஆண்டுகளைப் போலவே அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் முயற்சி யில் ஈடுபட்டிருப்பதாகவே தோன்றுகிறது. காவல்துறை யினர் இதுபோன்ற வன்முறைக்கு வித்திடுவோரின் நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது. டிசம்பர் 6 அன்று கலவர சக்திகளை குழப்பம் விளைவிக்க அனுமதிக்கக் கூடாது.

டிசம்பர் 6 அன்று தமிழகம் முழுவதும் ரயில்களின் இயக்கத்தை தமுமுக செயல் வீரர்களின் அறப் போராட் டம் தடுத்து நிறுத்தப் போகிறது இன்ஷாஅல்லாஹ். இதுவரை இல்லாத அளவு எழுச்சிமேல் எழுச்சியாக டிசம்பர் 6 போராட்டம் வெற்றி முகம் காண்கிறது. இலட்சியத்தில் வெற்றி காணும் வரை ஓய்வில்லை உறக்க மில்லை. உரிமைகளை மீட்கும் வரை நமது அறப்போர் முற்றுபெறப் போவதில்லை.


இந்திய பூபாகத்தில் பாபரி மஸ்ஜித் மீதான உரிமையை மீட்பது முழுமுதல் லட்சியம் என தமிழக மக்களின் உரிமைகள் பேணும் பேரியக்கமாம் தமுமுக சூளுரைக்கிறது.

thanks to :tmmk.in

No comments: