Wednesday, December 31, 2008

தேவையான கோரிக்கையும், தேவையற்ற எதிர்ப்புகளும்!



இந்தியாவில் நடக்கும் ஒவ்வொரு முக்கிய நிகழ்வுகளுக்கும் ஒர் ஒற்றுமை உண்டு. ஒரு முக்கிய சம்பவம் நிகழும் போதும் அதற்கு முந்தைய சம்பவங்கள் அனைத்தும் முக்கியமிழந்து போகும். அது பற்றிய விவாவதங்களும், செய்திகளும் குறைந்து போகும். அரசும், ஊடகமும் இதற்கு துணை நிற்கும். ஒருவகையில் இது திட்டமிட்ட சதியாகக்கூட இருக்கலாம். அந்த வகையில் பார்க்கும்போது தற்போதைய மும்பை தாக்குதலுக்கும் ஒரு வகையில் தொடர்பு இருப்பதனை நாம் மறுக்கவும் கூடாது, மறைக்கவும் கூடாது. எந்த ஊடகங்களை நாம் பார்க்க நேர்ந்தாலும் மும்பைத்தாக்குதல் பற்றிய ஏதாவது ஒரு முக்கிய செய்தி இடம் பிடித்திருக்கும். யாராவது ஒரு வெளிநாட்டு தலைவர் இந்தியாவிற்கு வந்து துக்கம் விசாரித்துவிட்டு சென்றிருப்பார். இந்திய அதிகாரிகளின் முகத்தில் மகிழ்ச்சி வழிந்தோடும். இது ஒரு புறம் இருக்கட்டும். இவர்களை விடுங்கள்!

இந்தியாவில் நடந்த ஏறக்குறைய அனைத்து குண்டு வெடிப்புகளூக்கும் ஆர்.எஸ்.எஸ். என்ற பயங்கரவாத அமைப்பின் குண்டர்கள்தான் காரணம் என்ற உண்மை செய்தி கசிந்ததே அதனை நாம் எப்படி மறந்தோம்? உண்மையை மறைக்க நினைத்தவர்களுக்கு நாம் மறந்த போன விஷயம் ஊக்கமாக மாறுவதற்கு முன்பு நாம் விழித்துக்கொள்ள வேண்டும். நல்லவேளையாக அப்துல் ரஹ்மான் அந்துலே என்ற அமைச்சர் இது பற்றி நாடாளுமன்றத்திலேயே குரல் எழுப்பி இந்தியா முழுவதும் உள்ள எம்போன்றவர்களின் நியாயமான எதிர்பார்ப்பினை நிறைவேற்றியிருக்கிறார்.

மாலேகான் உள்ளிட்ட நாட்டில் நடந்த பல குண்டுவெடிப்புகளில் ஹிந்து பயங்கரவாதிகளின் சதித்திட்டம் இருப்பதாக கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து கர்கரே கொல்லப்பட்டிருப்பதனால் இதுபற்றி தனியானதொரு விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தார். சாதாரண குடிமகனின் குரலை அவர் அங்கு ஒலித்தார். உடனே பா.ஜ.க மற்றும் சிவசேனை உறுப்பினர்கள் பொங்கி எழுந்து அந்துலே மீது வசைமாறி பொழிந்தனர். யாருக்கும் அஞ்சாது துணிச்சலுடன் குரல் எழுப்பிய அந்துலேயை உடனே பதவி நீக்கம் செய்யவேண்டும் என்று கூச்சலிட்டனர். அதிலும் சிலர் ஒருபடி மேலே போய் அந்துலே பாகிஸ்தானின் கையாளாக செயல்படுகிறார் என்றும் கூச்சலிட்டனர். துரதிஷ்டவசமாக காங்கிரஸ் கட்சியும் அந்துலே பக்கம் நிற்காமல் சங்பரிவாரத்தினருக்கு ஆதரவு கரம் நீட்டியது மிகவும் கேவலமானது. விசாரணை என்றவுடன் சங்பரிவாரத்தினருக்கு ஏன் இவ்வளவு பயம்? விசாரணை தானே கோரினார். சாத்விக்கள் பழி தீர்த்தனர் என்று கூறவில்லையே. பிறகு ஏன் இப்படி அலறுகிறார்கள்? நாட்டின் மீது உண்மையான பற்றுக்கொண்ட கோடானுகோடி மக்களின் மனசாட்சியை நாடாளுமன்றத்தில் பிரதிபலித்ததனாலா? இல்லை விசாரணையில் தங்களின் முகமூடி கிழிந்துவிடும் என்ற பயத்தினாலா? சங்பரிவாரத்தினரின் கூச்சலுக்கு பயந்து காங்கிரஸ் வேண்டுமானால் அந்துலே மீது நடவடிக்கை எடுக்கலாம். ஆனால் அவர் எழுப்பிய கோரிக்கையை தொடர்ந்து மக்களின் மனதில் உள்ள நியாயமான சந்தேகங்களூக்கு நிச்சயம் பதில் சொல்ல வேண்டும் என்பதனை நினைவில் கொள்ளட்டும். (முஸ்லிம்களுக்கு துரோகம் இழைப்பது காங்கிரஸுக்கு ஒன்றும் புதிதில்லையே).

1) கர்கரே தான் கொல்லப்பட்டதற்கு சில நாட்களூக்கு முன்பு பத்திரிக்கையாளர்களிடம் "சில அடிப்படைவாதிகளிடமிருந்து தனக்கு கொலை மிரட்டல் வந்திருப்பதாக" தெரிவிக்கிறார். இதற்கும் கர்கரே கொல்லப்பட்டதற்கும் தொடர்பு இருக்குமா என்பது பற்றி விசாரிப்பதில் என்ன தவறு இருக்கிறது.

2)கர்கரேவை கொன்றவர்கள் காவல்துறையினரின் வாகனத்தில் எவ்வாறு வந்தார்கள்?

3)கர்கரேவைக் கொன்றவர்கள் பாகிஸ்தானியர் என்றால் அவர்கள் மராத்திய மொழியில் பேசினாதாக அங்குள்ளவர்கள் எப்படி சொல்கிறார்கள்?

4)கர்கரே கொல்லப்பட்டவுடன் நரவேட்டை நரேந்திர மோடி அவசர அவசரமாக அனுதாபம் தெரிவிப்பது மக்களை ஏமாற்றவா?

5)கர்கரேவுக்கு நரேந்திர மோடி வழங்கிய பணத்தினை கர்கரே குடுப்பத்தினர் வாங்க மறுத்ததேன்?

6)கர்கரே கொல்லப்பட்ட இடமான காமா மருத்துவமனைக்கு அவரைப் போகும் படி அவருக்கு அறிவுறுத்தியது யார்?

7)மும்பை தாக்குதலின் போது கொல்லப்பட்ட சுமார் 170 அப்பாவி மக்களூம் தனியாக குறிவைக்கப்படாத போது மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் சாத்வி போன்ற சங்பரிவார இயக்கத்தினரை கைது செய்த போலீஸ் உயர் அதிகாரியினர் மட்டும் குறிவைக்கப்பட்டது எப்படி?


மக்களின் மனதில் தோன்றியிருக்கும் இதுபோன்ற சந்தேகங்கள் ஒரு புறம் இருக்கட்டும். பயங்கரவாதம் தானே நாட்டில் அதிமுக்கியமான பிரச்சனை. பயங்கரவாத்தினை ஒழிப்பதற்கு தானே அரசு பல கோடிகளை செலவழித்து வருகிறது. பயங்கரவாதத்தினை ஒழிப்பதற்குத்தானே பல படைகளை உருவாக்கி வருகிறது. அப்படி உருவாக்கப்பட்ட ஒரு படைதானே பயங்கரவாத ஒழிப்புப் படை. அதன் தலைவர் கொல்லப்பட்டது குறித்தே விசாரணை நடத்த அரசு தயக்கம் காட்டும் போது சாதாரண குடிமகனின் மரணம் குறித்து அரசு எப்படி அக்கறை காட்டும். மும்பை ஹோட்டல் மீட்பு போராட்டத்தில் அப்பாவி மக்களை காப்பதற்க்காக தன்னுயிரை இழந்த கமாண்டோ படையினர் பற்றி கவலை காட்டும் அரசு கர்கரே மரணம் பற்றி ஏன் அவ்வளவாக கவலை காட்ட மறுக்கிறது?

இதனால் அரசிற்கு அப்படி என்ன இழப்பு ஏற்பட போகிறது? கர்கரே சுட்டுக்கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்துவதில் சாத்விகளை ஆதரிக்கும் அத்வானிகளுக்கு உடன்பாடு இல்லாமல் இருப்பதில் ஆச்சர்யமில்லை. ஆனால் சோனியா காந்திக்கும் இதில் ஏன் உடன்பாடில்லை.?

பயங்கரவாதத்தினை ஒழிக்க வேண்டும், பயங்கரவாத செயலில் ஈடுபடுபவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் அரசிற்கு உண்மையிலேயே இருக்குமேயானால் இனியும் தாமதிக்காமல் கர்கரே உட்பட போலீஸ் உயர் அதிகாரிகள் கொல்லப்பட்டது குறித்தும் விசாரணை நடத்தி எம்போன்ற சாதாரண குடிமகனின் எண்ணத்தில் தோன்றியிருக்கும் சந்தேகத்தினை களைய முன்வர வேண்டும். இல்லை, மும்பையில் நடந்த அனைத்து பயங்கரவாத செயல்களுக்கும் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தீவிரவாத அமைப்புதான் காரணம் என்று அமெரிக்காவின் அறிக்கையிலேயே உறுதியாக இருக்குமேயானால் மக்கள் மனதில் தோன்றியுள்ள சந்தேகங்கள் நீங்காமல் அரசின் மீதான நம்பகத்தன்மை குறைந்து போகும் என்பதில் ஐயமில்லை.

வாசகர்: Faizur Hadi M
thanks to :சத்தியமார்க்கம்.

No comments: