Thursday, December 25, 2008

இஸ்லாத்தை மறக்கச்செய்யும் பதவி




அன்பர்களே,

உலகத்தில் நமக்கு ஒரு அங்கீகாரம்/அதிகாரத்தை அடைவது என்பது வரவேற்கத்தக்கதே! ஆனால் அதை அடையும் வழி இஸ்லாத்திற்கு முரணாக இருக்கக்கூடாது. தமிழகத்தில் முஸ்லிம்களின் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளில் பெரும்பாலானவை ஏதாவது ஒரு அரசியல் கட்சிகளின் உட்பிரிவாகவே செயல்படுவதைப்பார்க்கிறோம். எனவேதான் இவர்கள் ஆதரிக்கக்கூடிய கட்சிகள் இஸ்லாத்திற்கோ/முஸ்லிம்களுக்கோ விரோதமாக நடந்தாலும் இவர்களால் தட்டிக்கேட்க முடியவில்லை.

முஸ்லிம்களுக்கு எதிரான எத்தனையோ விசயங்கள் நாட்டில் அரங்கேறியபோது தனது பதவியை ராஜினாமா செய்யாத சகோதரரர் காதர்மொய்தீன்அவர்கள், விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் கருணாநிதி சொன்னவுடன் தனது பதவியைராஜினாமா செய்தார். செய்துதான் ஆகவேண்டும் ஏனெனில், அவர் தி.மு.க.எம்.பி.யாவார்.

இதுமட்டுமன்றி, முஸ்லீம் அமைப்புகள் பிரசமுதாய மக்களிடமும் ஒரு நற்பெயரை பெற வேண்டுமென்ற எண்ணத்தில் இஸ்லாமிய வட்டத்தைதாண்டி செயல்பட்டு சர்ச்சைகளில் சிக்குவதும் உண்டு. காதற்மொய்தீன் அவர்கள் வேலூர் அருகே சாமியாரை சந்தித்ததும், இந்துமுன்னணி நிகழ்ச்சியில் பேசியதையும் குறிப்பிடலாம்.

மேலும், பிற சமுதாய மக்களின் பண்டிகைக்காலங்களில் இவர்கள் வாழ்த்து அறிக்கை வெளியிடுவார்கள். அதில்கூட ஒருதலைவர் வரம்புமீறி, 'கல்வியின் அன்னை சரஸ்வதியை நினைவுகூறும் இந்நாளில்' என்று குறிப்பிட்டிருந்தார்.

பிற சமுதாய மக்களுக்கு வாழ்த்துகூறுவது ஒருபக்கம் இருக்கட்டும்! நமது பெருநாள்களில் வாழ்த்து கூற நபியவர்கள் கட்டளையிடவில்லை. இருப்பினும், நமது சந்தோசத்தை பகிர்ந்து கொள்வதற்காக நாம் ஈத் முபாரக் சொல்லிக்கொள்கிறோம்.

பிற சமுதாய மக்களை கவர வேண்டும் என்ற நிலைப்பாடு நம் சமுதாய தலைவர்களில் ஒருவரை எங்கேபோய் நிறுத்தியிருக்கிறது என்பதை மேலே உள்ள படத்தைப்பாருங்கள். எம்.ஜி.ஆர். சமாதியில் அஞ்சலி செலுத்துகிறார். அகிலத்திற்கோர் அருட்கொடையாக வந்த அண்ணல்நபி[ஸல்] அவர்களுக்கே நினைவஞ்சலி செலுத்துமாறு மார்க்கம் கட்டளையிடாதபோது இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத ஒருவர் சமாதியில் அஞ்சலி செலுத்தவைத்தது எது..? பதவி போதைதானே!

தனக்கென ஒரு அமைப்பு வைத்திருப்பவர்கள் நிலையே இதுவென்றால், பிற அரசியல் கட்சிகளில் அங்கம்வகிப்பவர்களை பற்றி சொல்லவே வேண்டியதில்லை. தனது படத்தின் மூலம் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக மக்கள் மனதில்பதியவைத்த விஜய்கான்[?] கட்சியை சேர்ந்த முஸ்லிம்களின் விளம்பரம்;

அகிம்சையை சொன்னார் காந்தி

ஈகையை சொன்னார் நபிகள்

இவை அனைத்தையும் சொன்னார் கேப்டன்.

தனது போலி தலைவரை உய்ர்த்திப்பிடிப்பதற்காக உண்மைத்தலைவர்,உத்தம தலைவர் நபி[ஸல்]அவர்களை பின்னுக்கு தள்ளியதை பார்த்தீர்களா! இந்த கேப்டன்[?] சொல்லாததை,சொல்லமுடியாத அத்துணை போதனைகளையும் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பே சொன்னவர்கள் நபிஸல்]அவர்கள்.
எனவே, அரசியலில் அங்கம் வகிக்கும் முஸ்லிம்களே, நீங்கள் பிற சமுதாயமக்களை கவரவேண்டுமேனில், அவர்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை செய்யுங்கள். வரவேற்கிறோம். அதைவிடுத்து மின்மினி பூச்சிகளின் வெளிச்சத்திற்காக சத்தியஒளியை மறந்துவிடாதீர்கள்!
படங்கள்;நன்றி தினத்தந்தி
thanks : http://mugavai-abbas.blogspot.com/2008/12/blog-post_24.html

No comments: