Monday, August 31, 2009
டெல்லி புத்தக விழாவில் ஜஸ்வந்த் சிங் நூலுக்கு ஏக கிராக்கி
டெல்லி யில் 15வது புத்தக விழா தொடங்கியுள்ளது. மத்திய கம்பெனி விவகாரத்துறை இணை அமைச்சர் சல்மான் குர்ஷித் இதைத் தொடங்கி வைத்தார். செப்டம்பர் 6ம் தேதி வரை இது நடைபெறுகிறது.
இந்த புத்தக விழாவில் அபுதாபி, ஈரான், சீனா, பாகிஸ்தான் , அமெரிக்கா மற்றும் பிராங்க்பர்ட் புத்தக விழா ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.
இலக்கியத்திற்கு இந்த ஆண்டு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 230க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் தங்களது படைப்புகளை இங்கு காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கின்றனர்.
இந்த ஆண்டு வைக்கப்பட்டுள்ள நூல்களில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது ஜஸ்வந்த் சிங்கின் ஜின்னா நூல்தான். அந்த நூலுக்கு ஏக கிராக்கி ஏற்பட்டுள்ளதாம்.
Sunday, August 30, 2009
பா.ஜ.க.வின் பரிதாபமும், பார்ப்பனர்களின் பார்வையும்
பாரதிய ஜனதா கட்சியில் இன்று நிலவும் உள்கட்சிச் சண்டையில் பெரும்பாலும் பார்ப்பனர்களின் பார்வை எப்படி இருக்கும் என்பதை திருவாளர் சோ ராமசாமி மூலம் தெரிந்துகொள்ளலாம்.
ஜஸ்வந்த் சிங் எழுதிய நூலில் படேலைப்பற்றி குறை சொல்லப்பட்டுள்ளது என்பதை அந்தக் கட்சியினர் பெரிதுபடுத்துகின்றனர். அதற்குக் காரணம் படேல் இந்துத்துவாவாதிகளுக்குச் சாய்காலாக இருந்து வந்ததுதான். ஜின்னா புகழப்பட்டு இருக்கிறார் என்பதைவிட படேல் குறை சொல்லப்பட்டிருக்கிறார் என்பதுதான் இவர்களைப் பொறுத்தவரை தூக்கலாக இருக்கிறது.
இந்த உண்மையைத் துக்ளக் தலையங்கத்திலும் சோ ஒப்புக்கொண்டும் எழுதியுள்ளார். சர்தார் படேலை பா.ஜ.க. ஒரு முன்னோடியாகக் கருதுகிறது என்பது ஊரறிந்த விஷயம், இதை ஜஸ்வந்த் மட்டும் அறியாதவரா என்ன? இதன்மூலம் எங்களப்பன் குதிருக்குள் இல்லை என்று கூறி தன் அடையாளத்தைக் காட்டிக் கொண்டுள்ளார்.
பார்ப்பனர்களின் எண்ணமெல்லாம் அத்வானியோ, நரேந்திர மோடியோ பா.ஜ.க.வின் தலைமைப் பீடத்துக்கு வரவேண்டும் என்பதுதான்.
ஏனிந்த இருவர்மீது மட்டும் இவர்களுக்குப் பற்று, பாசம்? இவர்கள்தான் ஆர்.எஸ்.எஸின் தீவிரத்தன்மை கொண்டவர்கள் _ இந்துத்துவா என்னும் உலைக் களத்தில் தயாரிக்கப்பட்ட குரூரமான ஆயுதங்கள்.
பா.ஜ.க.வின் ஆட்சிமன்றக் குழுவிலும், தேர்தல் குழுவிலும் நரேந்திர மோடிக்கு இடம் இல்லை என்ற நிலையில், இதனைக் கண்டித்து எழுதியவர்தான் இந்த சோ (துக்ளக், 14.2.2007, தலையங்கம்).
கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் என்ற ஒன்றைக் கற்பித்து சிறுபான்மை மக்களான 2000 முஸ்லிம்களைக் குரூரமான முறையில் கொன்று குவிப்பதற்கும், அவர் களின் வீடுகளையும், வணிக நிறுவனங்களையும் எரியூட்டி சாம்பல் ஆக்கியதற்கும் பின்னணியில் இருந்தது நரேந்திர மோடியின் தலைமையிலான ஆட்சியே! சகல அதிகாரங்களையும், சக்திகளையும் பயன்படுத்தி இந்தப் படுகொலைகளும், திட்டமிட்ட நாச வேலைகளும் நடந்தன.
குற்றவாளிகள்மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தால் மீண்டும் பல வகையில் புலன் விசா ரணை நடத்தி வழக்குகளை நடத்தவேண்டும் என்று உச்சநீதிமன்றமே ஆணையிட்டுள்ளது என்றால், நிலைமையைப் புரிந்துகொள்ளலாமே!
இவ்வளவுக் குரூரமான ஒரு ஆசாமி பதவி விலக வேண்டும் என்று பிரதமராக இருந்த வாஜ்பேயியே விரும்பிய நிலையில், அதற்கு முட்டுக்கட்டை போட்டவர் அத்வானிதான் என்ற உண்மைகளும் வெளியில் வந்துவிட்டன.
அத்வானியோ, மோடியோ தான் தலைமைப் பொறுப்புக்கு வரவேண்டும் என்று பார்ப்பன சக்திகள் விரும்பியதற்குக் காரணமே ஹிட்லர் பாணியில் சிறுபான்மை மக்களை முற்றிலுமாக அழிக்கக் கூடிய மனநோயாளிகள் இவர்கள்தான் என்று உறுதியாக அடையாளம் கண்டதுதான் - நம்பியதுதான்.
அத்வானி தலைமையில் தானே பா.ஜ.க. தோற்றது? மோடி பிரச்சாரம் செய்தும்தானே தோற்றது? என்ற கேள்வி எழலாம். உண்மைதான். அவ்விருவரின் முயற்சிகள் இல்லையென்றால், இந்தளவுகூட வெற்றி கிட்டியிருக்காது. தோல்வி இன்னமும் கடுமையாக இருந்திருக்கும் என்று சப்பைக் கட்டு கட்டும் (துக்ளக் தலையங்கம், 2.9.2009) சாமர்த்தியத்தை ரசிக்கவேண்டும்.
கொலைக் குற்றவாளியாக நிறுத்தப்பட்ட ஒருவனின் வழக்குரைஞர் _ என் கட்சிக்காரர் அந்த இடத்தில் இருந்ததால்தான் குறைந்த அளவு கொலைகள் விழுந்தன. வேறு யாராவது இருந்திருந்தால் அன்றைய சூழலில் மேலும் பல கொலைகள் விழுந்திருக்கும்; அதனால் என் கட்சிக்காரரை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரினால் எப்படியிருக்கும்? இந்தப் பாணியில் தான் இந்த ஞாயிற்றுக்கிழமை வக்கீலான திருவாளர் சோ வக்காலத்துப் போட்டு எழுதுகிறார்.
என்னதான் சாமர்த்தியத்தைக் காட்டினாலும், எடுத்துக்கொண்ட வழக்கின் பலகீனம் அவரைக் குப்புறத் தள்ளிவிட்டது; பிள்ளை பிழைத்தபாடில்லை; விளக்கெண்ணெய்க்குக் கேடாகத்தான் முடிந்துள்ளது.
கட்சியின் சகலப் பொறுப்புகளிலிருந்து விலகு வதாகவும், திட்டமிட்டிருந்த ரத ஊர்வலத்தையும் கைவிட்டதாகவும் அத்வானி கூறும் நிலை ஏற்பட்டுவிட்டது.
லஸ்கர் தீவிரவாதிகள் 160 பயணிகளுடன் விமானத்தைக் கடத்திய நிகழ்வில், தீவிரவாதிகளை விடுதலை செய்ததும், அவர்களைப் பத்திரமாக காந்தகாரில் கொண்டு விட்டதும் தமக்குத் தெரியாது என்று உள்துறை அமைச்சராக இருந்த ஒருவர் (அத்வானி) எழுதுகிறார் என்றால், எப்படிப்பட்ட நாணயக்காரராக இருக்கவேண்டும். இத்தகைய வர்கள்தான் சோ போன்ற பார்ப்பனர்களின் கண்ணில் பிரமாதமான மனிதர்கள், வெட்கக்கேடு!
-------------------"விடுதலை" தலையங்கம் 29-8-2009
தமிழ்நாட்டில் உலமாக்கள், பணியாளர் நல வாரியம் அமைக்கப்பட்டது
தமிழக அரசு செய்திக் குறிப்பு:
2009-2010ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையில் மாநிலத்தில் உள்ள பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் மத்ரஸாக்களில் உள்ள உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கென உலமாக்கள் மற்றம் பணியாளர்கள் நல வாரியம் ஒன்று அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
மேற்காணும் அறிவிப்பின்படி தமிழ்நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களில் உள்ள உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கென உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைத்து அரசு ஆணையிடுகிறது.
இந்நலவாரியத்தில் தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் மற்றும் மதரஸாக்களில் பணிபுரியும் ஆலிம்கள், பேஷ் இமாம்கள், அரபி ஆசிரியர்கள் / ஆசிரியைகள், மோதினார்கள், பிலால்கள் மற்றும் இதர பணியாளர்கள், தர்காக்கள் மற்றும் அடக்கஸ்தலங்கள், தைக்காக்கள், ஆஷூர்கானாக்கள் மற்றும் முஸ்லிம் அனாதை இல்லங்கள் ஆகிய நிறுவனங்களில் பணிபுரியும் முஜாவர் உள்ளிட்ட பணியாளர்களை உறுப்பினர்களாகச் சேர்க்கலாம்.இவ்வாறான நிறுவனங்களில் பணிபுரியும் 18 வயது நிரம்பிய 60 வயதுக்கு மேற்படாத பணியாளர்கள் பதிவு பெற தகுதியுடையவர்கள் என அரசு ஆணையிடுகிறது.
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்திற்கு சுற்று சூழல் மற்றும் வக்ஃபு அமைச்சர் மைதீன் கான் தலைவராக நியமனம் செய்யப்படுகிறார். இவ்வாரியத்தில் அலுவல் சார்ந்த உறுப்பினர்களாகக் கீழ்க்கண்ட அலுவலர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
அரசு சார்ந்த உறுப்பினர்கள்
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை அரசு நலத்துறை செயலாளர்,
நிதித்துறை முதன்மைச் செயலாளர்,
வருவாய்த்துறை முதன்மைச் செயலாளர்,
சமூக நலத்துறை முதன்மைச் செயலாளர்,
பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர்,
உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர்,
தொழிலாளர் நலத் துறை ஆணையாளர்,
சிறுபான்மை நலன் ஆணையர்,
பிற்படுத்தப்பட்டோர் நலன் ஆணையர்,
தமிழ்நாடு வக்ஃப் வாரிய முதன்மை செயல் அலுவலர்
ஆகியோர் அரச சார்ந்த உறுப்பினர்களாகவும்.
அலுவல் சாரா உறுப்பினர்கள்
தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவரும் லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரி பேராசிரியருமான மௌலவி ஏ.இ.எம். அப்துர் ரஹ்மான்,
மாநில பொதுச் செயலாளரும் மவ்லவீ அப்துல் காதர்,
மாநில பொருளாளர் மௌலவி எஸ்.எம். முஹம்மது தாஹா,
மாநில ஜமாஅத்துல் உலமா சபை கௌரவ தலைவரும் வீரசோழன் ஜாமிஆ கைராத்துல் இஸ்லாம் அரபிக் கல்லூரி முதல்வருமான மௌலவி ஓ.எம். அப்துல் காதிர் பாகவீ,
திருநெல்வேலி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவரும் அல்ஹசனாத்துல் ஜாரியா அரபிக் கல்லூரி முதல்வருமான மௌலவி டி.ஜே.எம். சலாஹுத்தீன்,
வேலூர் மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாளரும் வாணியம்பாடி மஃதினுல் உலூம் அரபிக்கல்லூரி முதல்வருமான மௌலவி முஹம்மது வலியுல்லாஹ்,
மாநில துணைப் பொதுச் செயலாளரும் பாபநாசம் ஆர்.டி.பி. காலேஜ் அரபித் துறை பேராசிரியருமான மௌலவி தேங்கை ஷர்புத்தின்,
சென்னை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை தலைவரும் மண்ணடி மஸ்ஜிதே மஃமூர் தலைமை இமாமான மௌலவி ஓ.எஸ்.எம். முஹம்மது இல்யாஸ்,மாநில தகவல் தொடர்பு நிறுவனர் சிதம்பரம் மௌலவி முஹம்மது இஸ்மாயில் நாஜி,
குடியாத்தம் தாருல் உலூம் சயீதிய்யா அரபிக் கல்லூரி நிறுவனர் மௌலவி முஹம்மது அய்யூப்,
தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை செயலாளரும், மன்பவுஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரி பேராசிரியருமான மௌலவி எஸ். முஜீபுர் ரஹ்மான்,தமிழ்நாடு பிலால்கள் சங்கம் தலைவர் ஏ. முஹம்மது யூனுஸ்,
தமிழ்நாடு இஸ்லாமிய ஆலயப் பணி உடல் உழைப்பு பிலால்கள் நல சங்கம் மாநில பொதுச் செயலாளர் முஹம்மது அலி பேக்,
தமிழ் மாநில இமாம்கள் பேரவை மௌலவி எம்.ஜி. ஷிஹாபுத்தீன்,
சென்னை மந்தைவெளி தலைமை இமாம் மௌலவி ஜி.கே. முஹம்மது இல்யாஸ் ரியாஜி
ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
உலமாக்கள் மற்றும் இதர பணியாளர்களின் சமூக, கல்வி மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான அரசு செயற்படுத்தும் பல்வேறு திட்டங்களின் செயலாக்கத்தை கண்காணித்து இப்பிரிவினரின் மேம்பாட்டினை உறுதி செய்ய தக்க ஆலோசனைகளை இவ்வாரியம் அரசுக்கு வழங்கும்.
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களைச் சேர்த்து வாரிய உறுப்பினர்களுக்கு அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் பல்வேறு நல உதவிகளும் வழங்கப்பட வேண்டும் என்று முடிவுச் செய்து உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை மற்றும் உதவி தொகைகள் வழங்குவதற்கான வழி முறைகள் குறித்து அரசு கீழ்க்கண்டவாறு ஆணையிடகிறது.
அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கீழ்க்கண்ட பல்வேறு நல உதவிகள் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினர்களாக பதிவு செய்த கொள்பவர்களுக்கும், அவர்களது குடும்பத்தாருக்கும் வழங்கப்படும்:
விபத்து ஈட்டுறுதி திட்டம்
விபத்தினால் மரணம் ஏற்பட்டால் ரூ. 1 லட்சம் உதவித் தொகை.
விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை.
இயற்கை மரணத்திற்குள்ளானவர் குடும்பத்திற்கு உதவித் தொகை ரூ. 15 ஆயிரம்.
கல்வி உதவித் தொகை
10-ம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு ஆயிரம் ரூபாய்,
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆயிரம் ரூபாய்,
11-ம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு ஆயிரம் ரூபாய்,
12-ம் வகுப்பு படித்து வரும் பெண் குழந்தைக்கு ரூ.1,500
12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவருக்கு ரூ.1,500,
முறையான பட்டப் படிப்புக்கு ரூ.1,500,
மாணவர் இல்ல வசதியுடன் முறையான பட்டப் படிப்புக்கு ரூ.1,750,
முறையான பட்ட மேற்படிப்புக்கு ரூ.2 ஆயிரம்,
மாணவர் இல்ல வசதியுடன் முறையான பட்ட மேற்படிப்புக்கு ரூ. 3 ஆயிரம்.
தொழிற்கல்வி பட்டப் படிப்புக்கு ரூ. 2ஆயிரம்,
மாணவர் இல்ல வசதியுடன் தொழிற் கல்வி பட்டப்படிப்புக்கு ரூ.4 ஆயிரம்,
தொழிற் கல்வி மேற்படிப்புக்கு ரூ.4 ஆயிரம்,
மாணவர் இல்ல வசதியுடன் தொழிற் கல்வி பட்ட மேற்படிப்பு ரூ. 6 ஆயிரம்,
ஐ.டி.ஐ. அல்லது தொழிற் பயிற்சி படிப்புக்கு ரூ.1,000,
மாணவர் இல்ல வசதியுடன் ஐ.டி.ஐ. அல்லது பல்தொழில் பயிற்சி படிப்புக்கு 1,200,
திருமண உதவித் தொகை ரூ.2 ஆயிரம்.
மருத்துவ உதவித் தொகை
மகப்பேறு மாதம் ஒன்றுக்கு ரூ.1000 வீதம் மொத்தம் 6000 ரூபாய்,
கருச்சிதைவு, கருக்கலைப்பு ரூ.3000,
மூக்குக் கண்ணாடி செலவுத் தொகையை முதியோர் ஓய்வூதியம் மாதந்தோறும் ரூ.400.
உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தின் உறுப்பினர்-செயலராக தமிழ்நாடு வக்ஃபு வாரியத்தின் முதன்மைச் செயல் அலுவலர் நியமனம் செய்யப்படுகிறார்.
18 வயது முடிவடைந்த, அனால் 60 வயது முடிவடையாத ஒவ்வொருவரும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்ய தகுதி பெற்றவராவார்.
தற்போது நடை முறையில் உள்ள உலமா ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு இந் நலவாரியத்தில் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படக்கூடாது.
உறுப்பினர் பதவிக்குரிய விண்ணப்பங்களை தகுதி வாய்ந்த நபருக்கு வழங்கி அவர்களிடமிருந்து பெறப்பட்ட உறுப்பினர் சேர்க்கை விண்ணப்பங்களைத் தொகுத்து, உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வக்ஃபு காண்காணிப்பாளர்கள் / வக்ஃபு ஆய்வாளர்களின் உதவியுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையின நல அலுவலர் வாங்குவார்.
நிதி உதவி வழங்கக் கோரும் விண்ணப்பங்களை ஆய்வு செய்து தகுதியான உறுப்பினர்களுக்கு நல உதவிகளை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் மூலம் வழங்கப்படும்.
வாரிய உறுப்பினர் சேர்க்கைக்குரிய விண்ணப்ப படிவம், வாரியத்தின் விதிமுறைகள், வாரியத்தின் இதர செயல்பாடுகள் முதலிய அனைத்திற்கும் தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தின் மூலம் நடைமுறைப் படுத்தப்படும் இதர அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியங்களில் பின்பற்றப்படும் அனைத்து நடைமுறைகளும் மேற்கொள்ளப்படும்.
பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகத்திற்கு தேவையான நிதி உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தின் நிதியிலிருந்து வழங்கப்படும்.
மேற்காணும் நிதி உதவிகள் யாவும் தகுதியான நபர்களுக்கு மட்டுமே அளிக்கப்படும்.
அரசு / அரசு சார்ந்த மற்றும் அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரிந்து அந்நிறவனங்களில் வழங்கப்படும் அனைத்து சலுகைகளையும் பெறும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் இத்திட்டங்களின் கீழ் பயன்களை பெற இயலாது.
வேறு நல வாரியங்களில் உறுப்பினராக உள்ள உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் ஏதேனும் ஒரு நல வாரியத்தின் மூலம் மட்டும்தான் நலத்திட்ட உதவிகளைப் பெற தகுதியுடையவர் ஆவார்.
மேற்குறிப்பிட்டுள்ள பணிகள் மாவட்டங்களில் சீராக நடைபெறுவதைக் கண்காணிக்கவும் ஆய்வு செய்யவும் மாநில அளவில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்திற்கு அதிகாரம் அளித்து ஆணையிடப்படுகிறது.
சேர்க்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை, அடையாள அட்டை வழங்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை, நல உதவிகள் இனம் வாரியாக வழங்கப்பட்ட எண்ணிக்கை மற்றும் தொகை, மொத்த பயனாளிகளின் எண்ணிக்கை மற்றும் தொகை போன்ற விவரங்கள் அடங்கிய அறிக்கையினை பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை அரசுக்கு அனுப்பி வைக்குமறு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.புதியதாகத் தோற்றுவிக்கப்படும் இந்நலவாரியத்தில் உலமாக்கள் மற்றும் பணியாளர்களின் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் அமலாக்கத்தைக் கண்காணிக்கவும், மேலும் புதிய திட்டங்கள் அமுல் படுத்தப்படுவது குறித்து அரசுக்கு ஆலோசனைகள் வழங்கவும், மற்றும் இக்குழுவினை முதல் நிலைக் குழுவாகவும் (தினப்படி / பயணப்படி பெறுவதற்கு), இதன் பதவிக் காலம் 3 ஆண்டுகள் என நிர்ணயித்து, அரசு ஆணை வெளியிடுகிறது.
மேற்குறிப்பிட்டவாறு நல உதவிகள் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்யப்படும் உறுப்பினர்களுக்கு வழங்குவதற்காகவும், இதுதொடர்பான பிற பணிகளை மேற்கொள்வதற்காகவும் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்திற்கு ரூ. 10 லட்சம் நிதி ஒப்பளிப்பு செய்து அரசு ஆணையிடுகிறது.
இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 8 மாதத்தில் 84 வங்கிகள் திவால்
தொடர்ந்து நீடித்து வரும் நிதி நெருக்கடியை இது காட்டுகிறது. வெள்ளிக்கிழமையன்று அஃபினிட்டி வங்கி, மெய்ன்ஸ்ட்ரீட் வங்கி, பிராட்போர்ட் வங்கி ஆகியவை மூடப்பட்டன.
கடந்த ஆண்டில் வெறும் 25 வங்கிகள் தான் மூடப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு அதை விட மூன்று மடங்கு வங்கிகள் இதுவரை மூடப்பட்டுள்ளன.
இதுதவிர எந்த நேரத்திலும் மூடப்படும் அபாயம் உள்ளதாக 416 வங்கிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனவாம்.
அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்புவதற்கான அறிகுறிகள் காணப்பட்டாலும் கூட சிறிய வங்கிகளால் தாக்குப் பிடியாத நிலையே அங்கு காணப்படுகிறது.
தனக்குரிய பாதுகாப்பை விலக்க சோம்நாத் சாட்டர்ஜி கோரிக்கை
இதுதொடர்பாக சிதம்பரத்திற்கு சோம்நாத் சாட்டர்ஜி எழுதியுள்ள கடிதத்தில், நான் டெல்லிக்கு வரும்போதெல்லாம் நான் தங்குவதற்காக தற்காலிகமாக ஒதுக்கப்பட்டுள்ள வீட்டில் பாதுகாவலர்கள் குவிக்கப்படுகிறார்கள்.
ஆனால் இந்தப் பாதுகாப்பை நான் விரும்பவில்லை. எனவே தயவு செய்து எனக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை விலக்கிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இத்தகைய பாதுகாப்பு அளிப்பதற்கான தகுதியில் நான் இல்லை என்பதை உணர்கிறேன் என்று கூறியுள்ளார் சோம்நாத்.
சமீபத்தில் 30 விஐபிக்களுக்கு அளிக்கப்பட்ட எக்ஸ் பிரிவு பாதுகாப்பை விலக்கிக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்தது. இந்த நிலையில் தனக்கு பாதுகாப்பு தேவையில்லை என்று சோம்நாத் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.
சென்னையில் 1 கோடி மொபைல் போன் இணைப்புகள்!
100 பேருக்கு 131 மொபைல் இணைப்புகள் உள்ளன. பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட மொபைல் இணைப்புகளைப் பெற்றுனர். இதில் லேண்ட் லைன் இணைப்புகள் சேராது என்பது குறிப்பிடத்தக்கது.
இருந்தாலும் புதுப்புது மொபைல் போன் ஆபரேட்டர்கள் வந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் எம்டிஎஸ், ஐடியா ஆகிய இரு நிறுவனங்கள் சென்னையில் சேவையைத் தொடங்கியுள்ளனர்.
ஏற்கெனவே பிஎஸ்என்எல், ரிலையன்ஸ், ஏர்டெல், டாடா இன்டிகாம், வோடபோன் மற்றும் ஏர்செல் போன்றவை களத்தில் உள்ளன. மேலும் ஒரு புதிய நிறுவனமும் இவர்களுடன் இணைகிறது.
அதிக மொபைல் இணைப்புகள் கொண்ட நகரங்களில் முதலிடத்தில் இருப்பது புதுடெல்லி. இங்கு 2.4 கோடி இணைப்புகளும், மும்பையில் 2.08 இணைப்புகளும் உள்ளன. இவற்றுக்கு அடுத்து வருவது சென்னை!
நந்தவனத்தில் ஒரு ஆண்டி...
அந்த குழுக்கள், தங்களது அறிக்கைகளை சமர்பித்துள்ளன. அது குறித்த ஆய்வு, நேற்றைய கூட்டத்தில் முக்கியமாக இடம் பெறவில்லை. இதுபற்றி 18ம் தேதி நடக்கும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். நாட்டில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. ஏழை மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து, தற்போதைய மத்திய அரசு பதவிக்கு வந்தது. ஆனால், விலைவாசி உயர்வால், ஏழை மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். எனவே, கட்சியின் தேர்தல் பிரசாரத்தில், விலைவாசி உயர்வே முக்கிய அம்சமாக இடம் பெறும். ராமர் பாலம் பிரச்னை மற்றும் அணுசக்தி ஒப்பந்தம் ஆகியவற்றுக்கு, பிரசாரத்தில் முக்கியத்துவம் தரப்படாது. அதை விட, உள்நாட்டு பாதுகாப்பு பிரச்னைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.
கர்நாடக சட்டசபை தேர்தலில், உள்ளூர் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இவ்வாறு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பா.ஜ., மத்திய தேர்தல் நிர்வாக குழுவில் முன்பு, 19 உறுப்பினர்கள் இருந்தனர். இதை, ஆறு உறுப்பினர்களாக குறைத்து, தலைவராக வெங்கையா நாயுடுவை நியமித்து கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். இதற்கு சுஷ்மா சுவராஜ் போன்ற முன்னணி தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
நந்தவனத்தில் ஒரு ஆண்டி...கதையாக இறுதியில் ராமரை கூத்தாடி இப்பொழுது போட்டு உடைத்துவிட்டு நாட்டுப்பிறச்சனைதான் மக்களிடம் செல்லும் என்று ஞானதோயம் வந்துவிட்டது இந்த கேடிகளுக்கு!
Saturday, August 29, 2009
குழந்தைகள் கடத்தல்: உலகின் 3-வது பெரிய 'வர்த்தகம்'!
போதைப் பொருள் கடத்தல், ஆயுதங்கள் கடத்தல் ஆகியவற்றுக்கு அடுத்தபடியாக, உலகில் லாபகரமாக (?!) நடக்கும் 3-வது மிகப் பெரிய சட்டவிரோதத் தொழில் "குழந்தைகள் கடத்தல்'' என்பது அதிர்ச்சியளிக்கும் விஷயம். உலக அளவில் ஆண்டுக்கு 7 லட்சம் முதல் 35 லட்சம் பேர் வரை கடத்தப்படுகின்றனர் என்கிறது கணக்கெடுப்பு ஒன்று.
அதிலும், குழந்தைகள் கடத்தலுக்கான பிரதான இலக்கு இந்தியாவும், பாகிஸ்தானும். எல்லையில் ஊடுருவும் தீவிரவாதிகளும்; எல்லையைக் கடக்கும் குழந்தைகளும் இங்கு அதிகம்.
நம் நாட்டில் மொத்தம் உள்ள சுமார் 28 லட்சம் பாலியல் தொழிலாளர்களில் 25 சதவீதம் பேர் 18 வயதுக்கும் குறைவானவர்கள்; சிறுவர்கள். குடும்ப வறுமையால் இத்தொழிலில் ஈடுபடும் அல்லது ஈடுபடுத்தப்படும் குழந்தைகள் அதிகம் பேர் உண்டு. இவர்களுக்கு இணையாக, கடத்தப்பட்ட குழந்தைகளும் உள்ளனர் என்கிறது அந்த கணக்கெடுப்பு.
பிச்சை எடுக்க, தீவிரவாதத்தில் ஈடுபடுத்த, உடல் உறுப்புகளுக்காக, பாலியல் தொழிலுக்காக குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். பெண் சிசுக்கொலை, பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்படுவது என அதிகம் பாதிக்கப்படுவது பெண் சமுதாயம். இதனால், ஆண்-பெண் விகிதங்களில் ஏற்படும் மாற்றம், சமுதாயத்தின் போக்கை ஏற்கெனவே மாற்றியமைக்கத் தொடங்கிவிட்டது.
இதன் அடுத்த முகத்தை அண்மையில் காட்டியது "தத்து மையங்களில் இருந்து குழந்தைகள் விற்பனை' எனும் செய்தி. பேசும் திறனற்ற பிஞ்சுக் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம், தத்து மையங்களைக் கண்காணிப்பதில் அரசு கோட்டைவிட்டதை வெளிக்கொண்டு வந்தது.
ஒரு மாவட்டத்தில் எத்தனை தத்து மையங்கள் செயல்படுகின்றன? அவற்றில் எவை அரசு அங்கீகாரம் பெற்ற தத்து மையங்கள்? என்பதைக் கண்காணிக்கத் தவறியதன் விளைவை அரசு நன்கு உணர்ந்து கொண்டது. தற்போது தத்து மையங்கள், அரசின் கண்காணிப்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
"பணத்துக்காக பள்ளிச் சிறுவன் கடத்திக் கொலை' எனும் சம்பவங்களும் தற்போது அதிகரிக்கத் தொடங்கிவிட்டன. பணத்துக்காக கடத்தப்படும், விற்பனை செய்யப்படும் சிறார்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் ஆண், பெண் என எவ்விதப் பாகுபாடுமின்றி, குழந்தைகளைக் கடத்திச் சென்று, பணம் கேட்டு பெற்றோரை மிரட்டுகின்றனர்.
"தமிழக மக்கள் தொகையில் 35 சதவீதம் பேர் குழந்தைகள். இவர்களில் தினசரி நூற்றுக் கணக்கானோர் காணாமல்போவதாக புகார் வருகிறது. இவர்களில் பலர் திரும்பக் கிடைப்பதே இல்லை' எனக் குறிப்பிடுகிறது தமிழக அரசின் "மிஸ்ஸிங் சைல்டு பீரோ' அமைப்பு.
பெண்கள், குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுக்க மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்துள்ளது தமிழக அரசு. அதேபோல, மாவட்ட அளவிலான ஆலோசனைக் குழுக்களும் செயல்படுகின்றன. மாநில, மாவட்ட அளவிலான அதிகாரிகள் கூடுவதும், ஆலோசனை நடத்துவதுமாகக் கலைகின்றனர். ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்யத் தவறியதன் விளைவு, குழந்தைகள் கடத்தப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
ஒருங்கிணைப்புக் குழுவினர் இடையே போதிய ஒருங்கிணைப்பு இல்லாதது, இத்திட்டத்தின் தோல்விக்கு மிக முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. குழந்தைக் கடத்தல் தொடர்பாகத் தகவல் தெரிவிக்க இலவச தொலைபேசி எண்.1098 அதுபற்றிய விவரம் எத்தனை பேருக்குத் தெரிந்திருக்கிறது? குறிப்பாக குழந்தைகளுக்கு.
இதில் குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு தவறு, பெற்றோர் மற்றும் பள்ளிகளின் தரப்பில் ஏற்படுகிறது. சரியானபடி நடக்கவில்லை என்பதற்காக பெற்றோர், ஆசிரியர்களின் தண்டனைக்குப் பயந்து ஓடிப்போன குழந்தைகள் எண்ணிக்கையும் அதிகம். குழந்தைகள் தங்களிடமிருந்து விலகிச் செல்லாத சூழலை பெற்றோரும், கல்வி நிறுவனங்களும் உருவாக்கத் தவறியதன் விளைவு, காணாமல்போன குழந்தையைத் தேடி அலைய வேண்டிய சூழலை உருவாக்குகிறது.
இதுதொடர்பாக, மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் பெண்கள், குழந்தைகள் கடத்தலைக் கட்டுப்படுத்த முடியும். தற்போது மாவட்ட அளவில் குழு இருந்தாலும், ஒவ்வொரு கிராம ஊராட்சி அளவிலான குழுவாக அதை மாற்றி, குழந்தைகள் கடத்தப்படுவது தொடர்பான விழிப்புணர்வை பட்டிதொட்டிகளுக்கும் பரவச் செய்யலாம்.
அதேபோல, காணாமல்போன, கடத்தப்பட்ட சிறுவர்கள் பற்றிய அறிவிப்பை வெளியிடும் ஊடகங்கள், பெண்கள், குழந்தைகள் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வுப் பிரசாரங்களுக்கு அதிக முக்கியத்துவம் தருவதில்லை.
குழந்தைகள் நாடாளுமன்றம் அமைக்கும் பல தொண்டு நிறுவனங்கள், அவர்களுக்குள் பொதிந்து கிடக்கும் பல குமுறல்களை வெளிக்கொணர்ந்துள்ளன. இவற்றை ஆக்கபூர்வமான வழியில் பயன்படுத்த அரசு தவறிவிட்டது.
தமிழகத்தில் சிலை கடத்தல், விபசாரத் தடுப்பு, திருட்டு விசிடி தடுப்பு போன்றவற்றுக்குத் தனிப்பிரிவு கொண்டிருக்கும் தமிழக காவல்துறை "குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு' எனத் தனிப் பிரிவு தொடங்கவும் முன் வர வேண்டும்.
இதுதவிர, குழந்தைத் தொழிலாளர் முறையை முற்றிலும் அகற்றுவோம் எனும் குறிக்கோளுடன் கோடிக்கணக்கான ரூபாய் நிதியை ஒதுக்கிடும் மத்திய, மாநில அரசுகள், குழந்தைகள் கடத்தலைத் தடுக்கவும் முக்கியத்துவம் தர வேண்டும். இல்லையெனில், தொலையும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பதை எவராலும் தடுக்க முடியாமல் போகும்.
எதிர்காலச் சந்ததியினரின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கும் கடத்தல் சம்பவங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவது அவசியம். சட்டத்தைக் கடுமையாக்கினாலும் தவறில்லை.
தீவிரவாதத் தடுப்புக்கு என அளிக்கும் முக்கியத்துவம், குழந்தைகள் கடத்தல் தடுப்புக்கும் அளிக்கப்பட வேண்டும். நாட்டின் வளம் இப்படியும் கொள்ளைபோகிறது; இதைத் தடுத்தாக வேண்டியது அவசர அவசியம்.
நன்றி: தினமணி
|
---|
Sunday, August 23, 2009
கார்கில் சவப்பெட்டி ஊழல் வழக்கு: குற்றப்பத்திரிக்கை
கார்கில் போரில் மரணமடைந்த வீரர்களுக்காக சவப்பெட்டி வாங்கியதில் பெருமளவில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது. இதில் அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜார்ஜ் பெர்னான்டசுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டப்பட்டது.
இது தொடர்பான வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ தயாராகி வருகிறது.
இந்நிலையில் ஜார்ஜ் பெர்னான்டசுக்கு இதில் எந்தவித தொடர்பு இல்லை என்றும் இந்த ஊழலில் ஒரு அமெரிக்க கம்பெனி மற்றும் 3 இந்திய ராணுவ அதிகாரிகள் ஆகியோர் மீது மட்டுமே குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிகிறது.
ஜிம்பாப்பே நாட்டில் 50 லட்சம் பேர் பட்டினி: ஐ.நா.
இது தொடர்பாக ஐ.நா.சபை ஒரு ஆய்வு அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
ஜிம்பாப்வேயில் சுகாதார சூழ்நிலை மிக மோசமான நிலைக்கு சென்றிருக்கிறது. ஏற்கனவே அங்கு “எய்ட்ஸ்” நோய் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்த நிலையில் காலரா நோய் பரவி ஏராளமானோரை பலி கொண்டு உள்ளது. இது வரை 98 ஆயிரத்து 592 பேர் காலராவுக்கு பலியாகி உள்ளனர்.
பாதுகாப்பான குடிநீர், சுகாதார வசதியின்மைதான் காலரா பரவுவதற்கு காரணமாக உள்ளது. காலரா நோயினால் மேலும் 60 லட்சம் பேர் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது.
உணவு பொருள் இருப்பு மிகவும் குறைந்து விட்டது. மக்களுக்கு தேவையான அளவுக்கு உணவு பொருட்கள் வினியோகம் கிடைக்க வில்லை. இதனால் 50 லட்சம் பேர் பட்டினி கிடக்கிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் முதலில் குடியேறியவர்கள் முஸ்லீம்களே!
சென்னை: மயிலாப்பூர் என்றால் உடனே நினைவுக்கு வருவது பிராமண சமூகத்தினர்தான். ஆனால் ஒரு காலத்தில் அங்கு பெரும்பான்மையாக வசித்தவர்கள் முஸ்லீம்கள் என்கிறார் ஆற்காடு இளவரசர் நவாப் முஹம்மது அப்துல் அலீ. இதை நம்பித்தான் ஆக வேண்டும் என்கிறார் அவர்.
பதிமூன்றாம் வது நூற்றாண்டின் தொடக்கத்திலேயே சென்னை நகரில் முஸ்லீம்கள் குடியேறி விட்டனர். மெட்ராஸ் முஸ்லீம்கள் மற்றும் மசூதிகள் என்ற பெயரில் ஒரு ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை இயக்கியிருப்பவர் எஸ்.அன்வர். இந்த டாக்குமென்டரி குறித்து அன்வரும், ஆற்காடு நவாப்பும் செய்தியாளர்களிடம் கூறுகையில், வெனிஸ் நகரத்து வியாபாரியான மார்க்கோபோலா, தனது சுற்றுலா கையேட்டில் அந்தக் காலத்து சென்னை நகர வாழ்க்கை குறித்து தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.அதில், 13வது நூற்றாண்டில் மயிலாப்பூர் பகுதியில் முஸ்லீம்கள் பெருமளவில் வாழ்ந்ததாக அவர் கூறியுள்ளார்.
போர்ச்சுகீசியரான டுவார்ட் பார்போசா தனது நூலில் கூறுகையில், 16வது நூற்றாண்டின் தொடக்கத்தில், மயிலாப்பூரில் உள்ள புனித தாமஸின் கல்லறையை (இப்போது சாந்தோம்) அங்குள்ள முஸ்லீம்கள்தான் பாதுகாத்து, பராமரித்து வந்தனராம்.
மதரஸா பட்டனம் என்பதுதான் உருமாறி மதராஸ் என்று வந்திருக்கலாம் என்றும் ஒரு கருத்து உள்ளது.
அதேபோல இன்று அழைக்கப்படும் சைதாப்பேட்டை முன்பு சைதாபாத் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்துள்ளது. அங்கு 18வது நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆற்காடு நவாப் சதாத்துல்லா கான் ஒரு மசூதியைக் கட்டி அந்தப் பகுதிக்கு சைதாபாத் என்று பெயரிட்டார்.
அதேபோல சென்னையின் முதல் மசூதியைக் கட்டியவர் ஒரு இந்து வியாபாரி என்பது சுவாரஸ்யமான விஷயம். அவரது பெயர் காசி வீரண்ணா. மூர் தெருவில் 1670களில் அவர் ஒரு மசூதியைக் கட்டினார். காசி வீரண்ணாவுக்ுக கோல்கண்டா சுல்தான்களுடன் நல்ல தொடர்பு இருந்தது.
ஆங்கிலேயர்கள் நமது நாட்டுக்கு வந்தபோது நமது நாட்டில் நிலவிய சமூக நல்லிணக்கத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. காரணம், அப்போது மக்கள் மத ரீதியாகவ பிரிந்து கிடக்கவில்லை. அனைவரும் ஒன்றாக, நல்லிணக்கத்துடன் வசித்து வந்தனர்.
உதாரணத்திற்கு, முஸ்லீம் மன்னர்கள் இந்துக்களை உயர் அதிகாரிகளாக வைத்திருந்தனர். விஜய நகர மன்னர்கள், முஸ்லீம்களை உயர் பதவிகளில் வைத்திருந்தனர்.
இந்தியாவின் ஆத்மாவாக அப்போதே மதச்சார்பின்மை இருந்து வந்துள்ளது. அப்போது அனைத்து மதத்தினரும் சம உரிமைகளுடன், சம அந்தஸ்துடன் வாழ்ந்து வந்துள்ளனர்.
Monday, August 17, 2009
டாக்கா: ரன்வேயில் சறுக்கிய ஜெட் ஏர்வேஸ் விமானம்-பயணிகள் தப்பினர்
டாக்கா: டாக்காவிலிருந்து டெல்லிக்குக் கிளம்பிய ஜெட் ஏர்வேஸ் விமானம் ரன்வேயில் சறுக்கியது. இருப்பினும் விமானத்தில் இருந்த 139 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.
இன்று காலை 10.10 மணிக்கு டாக்காவில் உள்ள ஜியா சர்வதேச விமான நிலையத்திலிருந்து போயிங் 737 ரக ஜெட் ஏர்வேஸ் விமானம் 139 பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் டெல்லிக்குக் கிளம்பியது. டேக் ஆப் ஆகச் சில விநாடிகள் இருக்கும்போது, திடீரென மூன்று மீட்டர் தூரத்திற்கு விமானம் சறுக்கிச் சென்றது.
இதனால் விமான நிலையத்தில் பீதி ஏற்பட்டது. இருப்பினும் விமானத்தில் இருந்த 139 பேரும் காயமின்றி தப்பினர்.
உடனடியாக விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறக்கப்பட்டனர். விமானம் பரிசோதிக்கப்பட்ட பின்னர் கிளம்பிச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் காரணமாக டாக்கா விமான நிலையத்தில் அனைத்து உள்ளூர் மற்றும் வெளிநாட்டு விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டது. இச்சம்பவம் காரணமாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னையில் அவசரமாக தரையிறங்கிய விமானம்...
இன்று காலை சென்னையிலிருந்து டெல்லி நோக்கி புறப்பட்ட ஸ்பைஸ் ஜெட் விமானம் ஒன்று கிளம்பிய சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மீண்டும் சென்னையில் அவசரமாக தரையிறங்கியது.
கோவையில் 16 பேருக்கு ஸ்வைன்-தமிழகத்தில் 77 பேர் பாதிப்பு
கோவையில் அவிலா காண்வென்ட் மெட்ரிகுலேசன் பள்ளியைச் சேர்ந்த ஒரு மாணவருக்கு ஸ்வைன் ப்ளூ தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதே பள்ளியைச் சேர்ந்த இன்னொரு சிறுமிக்கும் நோய் தாக்குதல் ஏற்பட்டு சிகிச்சைக்குப் பின் இப்போது உடல் நிலை தேறியுள்ளது.
அதே போல நீலகிரியைச் சேர்ந்த சென்னையில் பயிலும் 15 வயது மாணவருக்கும், பெங்களூரில் பணியாற்றி வரும் பொள்ளாச்சியைச் சேர்ந்த 31 வயது இளைஞருக்கும் பன்றிக் காய்ச்சல் நோய் தாக்குதல் உள்ளது.
இந்த மூவர் உள்பட 4 பேர் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மொத்தத்தில் கோவையில் இதுவரை 16 பேருக்கு ஸ்வைன் ப்ளூ பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதே போல நாகர்கோவிலில் ஸ்வைன் ப்ளூ அறிகுறியுடன் இருவர் மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் தமிழகத்தில் ஸ்வைன் ப்ளூவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 77 ஆக உயர்ந்துள்ளது.
Wednesday, August 12, 2009
திண்டுக்கல்லில் 6, சென்னையில் 3 குழந்தைகள் பாதிப்பு-நெல்லை இளைஞருக்கும் அறிகுறி
அதே போல மும்பையிலிருந்து நெல்லை வந்த வாலிபர் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கடந்த 2 நாட்களில் ஒரு வயது, 3 வயது, 5 வயதுடைய 3 குழந்தைகள் காய்ச்சல், சளியுடன் சிகிச்சைக்காக வந்தனர்.
இது பன்றி காய்ச்சல் நோய் அறிகுறி என்பதால், அந்த 3 குழந்தைகள் ரத்த மாதிரி, சளி ஆகியவை எடுக்கப்பட்டு பரிசோதனைக்கான கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து, அந்த 3 குழந்தைகளுக்கும் தனி வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
குழந்தைகளின் பெயர்களை வெளியிட டாக்டர்கள் மறுத்துவிட்டனர்.
3 குழந்தைகளுக்கும் பன்றி காய்ச்சல் நோய் உள்ளதா? என்பதை அறியும் பரிசோதனை முடிவு இன்று வெளிவருகிறது. அதன் அடிப்படையில்தான் பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்படும்.
திண்டுக்கல்லில் 6 மாணவர்களுக்கு பாதிப்பு:
திண்டுக்கல்லில் 6 பள்ளி மாணவர்கள் பன்றிக் காய்ச்சல் அறிகுறி காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அங்குள்ள டட்லி மேல்நிலைப்பள்ளியில் இவர்கள் படித்து வருகிறார்கள். அனைவரும் 11ம் வகுப்பு மாணவர்கள் ஆவர். கடந்த ஒரு வாரமாக இவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் இதுவரை குணம் ஏற்படவில்லை. இதையடுத்து அவர்களது ரத்த மாதிரி சோதனைக்கு அனுப்பபப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லை இளைஞருக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி
இதற்கிடையே மும்பையிலிருந்து நெல்லை வந்த வாலிபர் பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது சளி, ரத்தம் சென்னைக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை மனக்காவலன் பிள்ளை நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் பேச்சிமுத்து. மும்பையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஊருக்கு வந்தார். பேச்சுமுத்துவுக்கு சளி, காய்ச்சல் இருந்து வந்தது.
இதையடுத்து அவர் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு பன்றிக்காய்ச்சல் நோய்க்கான அறிகுறிகள் இருப்பதை கண்டறிந்தனர். இதை தொடர்ந்து அவரை தனி அறையில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
பேச்சிமுத்துவின் ரத்தம் மற்றும் சளி மாதிரி எடுத்து சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை டீன் கனகராஜ் கூறும்போது கடந்த ஒரு வாரமாக பேச்சிமுத்துவுக்கு சளி, காய்ச்சல் இருந்து வந்துள்ளது. இதனால் அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனி அறையில் வைத்து சிகிச்சை அளித்து வருகிறோம்.
சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ள சளி மாதிரியின் ரிசல்ட் வந்தால்தான் முடிவு தெரியும். பன்றிக்காய்ச்சலுக்கான மாத்திரைகள் இங்கு இல்லை. பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டால் சென்னையில் இருந்து சுகாதார துறையினர் அதற்கான மருந்தை அனுப்பி வைப்பர்.
இருப்பினும் தேவையான மருந்து, மாத்திரைகளை பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Tuesday, August 11, 2009
ரியாலிட்டி ஷோக்களும் அம்பலமாகும் அந்தரங்கமும்!
‘‘உங்களுக்கு இந்த நிகழ்ச்சி பிடிக்கவில்லை என்றால் நீங்கள் பார்க்காதீர்கள். டி.வி.யை ஆஃப் செய்துவிடுங்கள். ஏன் இந்த கோர்ட் அதை தடைசெய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்? சமுதாயத்தின் ஒழுக்கத்தைப் பாதுகாப்பது கோர்ட்டின் வேலை கிடையாது! இதைவிட சீரியஸான வேறு பல பிரச்னைகளை நாங்கள் கவனிக்க வேண்டியிருக்கிறது!’’
-ஸ்டார் பிளஸ் சேனலில் ஒளிபரப்பாகும் சர்ச்சைக்குரிய ‘சச் கா சாம்னா’ (உண்மையை சொல்லும் கணம்!) நிகழ்ச்சிக்கு தடைவிதிக்கக் கோரிய மனுவை டிஸ்மிஸ் செய்துவிட்டு, டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஏ.பி.ஷாவும் மன்மோகனும் கூறிய ‘பொறுப்புள்ள’ வார்த்தைகள் இவை. இப்போதெல்லாம் நீதிபதிகளுக்கு, சேது பாலத்தை ராமர்தான் கட்டினாரா என்று வரலாற்று ஆராய்ச்சி செய்வதற்கு நேரமிருக்கிறது. ‘உங்க பொண்டாட்டி எது சொன்னாலும் அதுக்கு தலையாட்டுங்க; அதுதான் குடும்பத்துக்கு நல்லது’ என்று யோசனை சொல்வதற்கு நேரமிருக்கிறது. ‘தினமும் வீட்டில் தேசியக்கொடியை ஏற்றுங்கள்’ என்று தேசபக்தியையே தண்டனையாகத் தருவதற்கு நேரமிருக்கிறது. சமூக சேவை செய்யுமாறு ஜாமீன் கேட்பவர்களுக்கு நிபந்தனை விதிக்கவும் நேரமிருக்கிறது... இவை எதையுமே நாம் தவறு என்று சொல்லவில்லை. ஆனால், இவை எல்லாமே இந்தியாவின் எந்த சட்டத்துக்கும் உட்படாத விஷயங்கள்;
தங்கள் வரம்புக்கு உட்படாத இப்படிப்பட்ட எத்தனையோ விஷயங்கள்மீது கட்டுப்பாடு செலுத்தும் நீதிபதிகள், ‘சச் கா சாம்னா’வை ஏன் விட்டார்கள்? இத்தனைக்கும் மற்ற எல்லா விஷயங்களையும்விட இது பயங்கரம்! இந்தியா மீது சீனா போர் தொடுத்து சேதம் விளைவிப்பதைவிட, மிக மோசமான கலாசார படையெடுப்பு இது. சாம்பிளுக்கு இந்த நிகழ்ச்சியில் கேட்கப்படும் கேள்விகளை கவனியுங்கள்... -
* ஸ்மிதா மத்தாய் இரண்டு குழந்தைகளின் தாய். அமைதியான, பொறுப்பான குடும்பத் தலைவி. அவரிடம் கேட்கப்பட்ட கேள்வி, ‘‘என்றைக்காவது நீங்கள் உங்கள் கணவரைக் கொன்றுவிட நினைத்தீர்களா..?’’ ஸ்மிதாவின் கணவர் டோனியும் மாமியாரும் சற்று தூரத்தில் ஆடியன்ஸ் வரிசையில் புன்சிரிப்போடு உட்கார்ந்திருக்கிறார்கள். ஸ்மிதா கொஞ்சமும் யோசிக்கவில்லை. ‘‘ஆமாம்... அவர் மொடாக்குடியராக இருந்தபோது அவரை சாகடித்துவிடலாம் என நினைத்தேன்’’ என்கிறார். திடீரென அந்த இடம் நிசப்தமாகிறது. எல்லா கண்களும் ஸ்மிதாவின் கணவர் டோனியையும் மாமியாரையும் நோக்குகின்றன. அவர்கள் வேதனையோடு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறார்கள். டோனி கண்கலங்குகிறார்.
* ஆல்வின் டிசோஸா சில நாட்களுக்கு முன்புதான் திருமணம் செய்துகொண்டவர். ஜாலியாக ஹனிமூன் போய்விட்டு நேராக ஸ்டுடியோவுக்கு வந்திருக்கிறார். ‘‘உங்கள் மனைவியோடு படுக்கையில் நெருக்கமாக இருக்கும்போது, இன்னொரு பெண்ணின் நினைப்பு உங்களுக்கு வந்திருக்கிறதா?’’ என்ற கேள்வியைக் கேட்டபோது டிசோஸா நிலைகுலைந்தார். கொஞ்சம் அவஸ்தையோடு, ‘‘ஆமாம்’’ என்று ஒப்புக்கொண்டார். ‘‘இப்போ இருக்கற மனைவிமாதிரி இல்லாம வேற அழகான, வித்தியாசமான இன்னொரு பெண் உங்களுக்கு மனைவியா வந்திருக்கணும்னு கனவு கண்டீங்களா?’’ & இது அடுத்த கேள்வி. அவர் இதற்கும் ‘‘ஆமாம்’’ என்று பதில்சொல்ல, ஆடியன்ஸோடு உட்கார்ந்து எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டிருந்த அவர் மனைவி பூர்வஸ்ரீ தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார்.
-‘சச் கா சாம்னா’ நிகழ்ச்சி ஏற்படுத்தி இருக்கும் அதிர்ச்சி போலவே, அதற்குக் கிடைத்திருக்கும் வரவேற்பும் அதிகம். அறிவையும் திறமையையும் சோதிக்கும் ‘குரோர்பதி’ போன்ற நிகழ்ச்சிகளுக்கு வரவேற்பு குறைந்துவிட்டது. முறையற்ற உறவுகளும் சதிகார பெண்களுமாக நகரும் மெகா சீரியல்கள் டி.ஆர்.பி. ரேட்டிங்கை நிலையாக வைத்திருந்தாலும், திடீரென இந்தியில் பொழுதுபோக்கு சேனல்கள் பல போட்டியில் குதித்தன. எல்லோருமே ரேட்டிங்கை காப்பாற்ற நடத்திய போட்டியில், வழக்கமான நிகழ்ச்சிகளைத் தாண்டிய விபரீத சிந்தனைகள் உள்ளே குதித்தன. மெகா சீரியல்களில் முறைகேடான உறவுகளும், சதிகளும்தான் எப்போதுமே ஹாட் டாபிக். அதையே மனிதர்களின் நிஜவாழ்க்கையிலிருந்து எடுத்தால்? இப்படி தனி மனிதர்களின் அந்தரங்க அசிங்கத்தை அம்பலமாக்கும் நிகழ்ச்சி வந்துவிட்டது!
உண்மையை அப்பட்டமாகச் சொல்லிவிட்டார்கள் என்றாலும், இதன்பிறகு டோனியால் தன் மனைவி ஸ்மிதா மத்தாயோடு நிம்மதியாகத் தூங்கமுடியுமா? குழந்தைகள் ஸ்மிதாவோடு எப்படி இயல்பாக பழகுவார்கள்? ஆல்வின் டிசோஸாவும் அவரது மனைவி பூர்வஸ்ரீயும் சேர்ந்து வாழ்வது சாத்தியமா? அறிமுகமில்லாத யாராவது ஒருவர் உங்களிடம் இப்படிக் கேட்டால், உங்களுக்கு கோபம் எந்த அளவுக்கு வரக்கூடும் என்பதை நீங்களே அறியமாட்டீர்கள்!
ஆனால் 3 கோடி பேர் பார்க்கும் ஒரு டி.வி. நிகழ்ச்சியில் இப்படி சிக்கலான கேள்விகளைக் கேட்கிறார்கள். பரிசுப்பணத்துக்காக ஆசைப்பட்டு, மக்களும் தங்கள் அந்தரங்க ரகசியங்களைத் துப்புகிறார்கள்!
‘நெருங்கிய நண்பரான சச்சின் தனக்கு இன்னும் உதவியிருக்கலாம்’ என வினோத் காம்ளி சொன்னது சர்ச்சையானதே... அந்த நிகழ்ச்சிதான் இது! காம்ளியிடம் கேட்கப்பட்டது சச்சின் பற்றிய கேள்வி மட்டுமில்லை! ‘நீங்கள் எத்தனை பெண்களை படுக்கையில் சந்தித்தீர்களோ, அவர்கள் எல்லோரது பெயரும் உங்களுக்குத் தெரியுமா?’, ‘நீங்கள் எந்தப் பெண்ணுடனாவது உறவு வைத்து, அவள் வயிற்றில் குழந்தை உருவாகி, அதைக் கலைத்துவிடச் சொன்னீர்களா?’ என்ற இரண்டு அதிரடிக் கேள்விகளும் கேட்கப்பட்டன... இரண்டுக்குமே அவர் ‘ஆமாம்!’ என்றார். காம்ளியின் மனைவி சிரித்தபடி நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
அமெரிக்காவில் பிரபலமான ‘தி மொமென்ட் ஆஃப் ட்ரூத்’ என்ற ரியாலிட்டி ஷோவின் அப்பட்டமான காப்பி இது. இதே நிகழ்ச்சியைக் காப்பியடித்து, இதுவரை 24 நாடுகளில் வேறு வேறு பெயர்களில் ஷோ நடத்தியிருக்கிறார்கள். எல்லா நாடுகளிலும் பிரச்னை! கிரீஸ் நாட்டில் ஒரு டி.வி.யில், ‘என் பொண்டாட்டியைவிட, அவளோட தம்பி மேல எனக்கு அட்ராக்ஷன் அதிகம்’ என தனது விபரீத ஆசையை அப்பட்டமாக வெளியில் சொல்ல, ‘என்னடா இது வேறு டிராக்கில் போகிறதே...’ என அரண்டு போன அரசாங்கம் நிகழ்ச்சியைத் தடைசெய்துவிட்டது. கொலம்பியாவில் ஒரு பெண், ‘ஆக்சுவலா என் கணவரை கூலிப்படை வைத்துக் கொலை செய்ய முடிவு பண்ணினேன். இதுக்காக ஒரு கேங்குக்கு அட்வான்ஸ்கூட கொடுத்தேன்’ என அதிரடியாக உண்மையைச் சொன்னார். விபரீதம் புரிந்து அரசு தடைவிதித்தது. இப்படி மேற்கத்திய கலாசாரத்துக்கே சரிவராத ஒரு விஷயத்தை, குடும்ப உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நம் மண்ணுக்கு இறக்குமதி செய்திருக்கிறார்கள்.
‘அப்பட்டமான உண்மையை சொல்லவேண்டும்’ என்பதுதான் இந்த ரியாலிட்டி ஷோவின் அடிப்படையான நிபந்தனை. நிகழ்ச்சியில் பங்கேற்கிற எல்லோரிடமும், அவர்களது சொந்தவாழ்க்கை பற்றிய அந்தரங்கமான 50 கேள்விகள் முதல்கட்டமாக கேட்கப்படும். குற்றவாளிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு போலீசார் பயன்படுத்தும் பாலிகிராப் சோதனையில், அவர்களது பதில்கள் சோதிக்கப்படும். பிறகு லைவ் புரோகிராமில் இதிலிருந்து மிக மோசமான 21 கேள்விகளை ஆடியன்ஸ் முன்னிலையில் திரும்பவும் கேட்பார்கள். நிகழ்ச்சியைப் பார்க்கும் 3 கோடிக்கும் மேற்பட்டவர்கள் மத்தியில், அவர்களின் அந்தரங்கம் அம்பலமாகும். கேள்விக்கு ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்று ஒற்றைவார்த்தை பதில்தான் சொல்லவேண்டும். தப்பாக பதில் சொன்னால், பாலிகிராப் காட்டிக்கொடுத்துவிடும். இப்படித்தான் ஒரு பெண்ணிடம், ‘உங்கள் கணவரைத் தவிர வேறு ஆண்கள் யாருடனாவது உறவு வைத்துக்கொள்ள நீங்கள் ஆசைப்பட்டீர்களா?’ என்று கேள்வி கேட்டார்கள். அவர், ‘இல்லை’ என்றார். ஆனால் பாலிகிராப், ‘அவர் சொல்வது பொய்’ என்றது. ஆடியன்ஸ் வரிசையில் உட்கார்ந்திருந்த கணவரும் மாமியாரும் அந்தப் பெண்ணை உஷ்ணப்பார்வை பார்த்தார்கள். வீட்டுக்குப் போனபிறகு என்ன ஆனதோ?! அவர் இன்னமும் கணவரோடு சேர்ந்துதான் வாழ்கிறாரா என்பது தெரியவில்லை...
எதற்காக இதையெல்லாம் சகித்துக்கொள்கிறார்கள்? நிகழ்ச்சியில் எல்லா கேள்விகளுக்கும் சரியாக பதில் சொல்லும் நபருக்கு முதல் பரிசு ஒரு கோடி ரூபாய். ஒரு வருஷமாக இந்த நிகழ்ச்சி தொடர்ந்து நடக்கும் அமெரிக்காவிலேயே இன்னும் யாரும் முதல் பரிசை வாங்கவில்லை. இங்கு அதிகபட்சமாக காம்ளி பத்து லட்ச ரூபாய் ஜெயித்திருக்கிறார்.
ஆண்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க, ‘எப்போதாவது நீங்கள் விபசாரி வீட்டுக்குப் போய் சுகம் அனுபவித்திருக்கிறீர்களா?’, ‘உங்கள் மனைவியைத் தவிர வேறு யார் வயிற்றிலாவது உங்கள் குழந்தை வளர்ந்திருக்கிறதா?’ என்பது போன்ற கேள்விகள் கேட்கிறார்கள். பெண்களிடமும் இதேமாதிரி அஸ்திரம்... ‘உங்கள் கணவருக்குக் கண்டிப்பாகத் தெரிய வாய்ப்பில்லை என்றால், ரகசியமாக வேறொரு ஆணோடு சுகம் அனுபவிப்பீர்களா?’
காம்ளி போன்ற பிரபலங்கள் என்றில்லை... முன்பின் அறிமுகமில்லாத எளிய மனிதர்களின் அந்தரங்கம் வெட்டவெளிச்சமாவதைக்கூட, கூசாமல் இப்படி மூன்று கோடிக்கும் மேற்பட்டவர்கள் பார்க்கிறார்கள். பொதுவாகவே இந்தியர்கள் கிசுகிசு பிரியர்கள் என்றாலும், நிகழ்ச்சியில் கேட்கப்படும் இதேமாதிரி கேள்விகளை அடுத்த விட்டைப் பார்த்து மானசீகமாகக் கேட்க ஆரம்பித்தால் வக்ரமான விபரீதம் தீனி போடாமலே வளர்ந்துவிடும் ஆபத்து இருக்கிறது என்பதுதான் இதில் பிரச்னை!
ஆனால் இந்த நிகழ்ச்சியை அநியாயத்துக்கு நியாயப்படுத்துகிறார் இதன் தயாரிப்பாளர் சித்தார்த் பாசு. ‘‘எல்லா உண்மைகளையும் மனசுக்குள் போட்டுப் புதைப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது? இப்படிப்பட்ட ஆசைகள் மக்களின் அடிமனசில் பதுங்கியிருக்கிறது என்பதை வெளிச்சத்தில் காட்டும் முயற்சிதான் இந்த நிகழ்ச்சி. மாயத்திரையை விலக்கி, சமூகத்தின் நிஜத்தைக் காட்டும் கண்ணாடி. மக்கள் தங்கள் உறவுகளை, ஆசைகளை உண்மையோடு மதிப்பிடு செய்துபார்க்கிறார்கள். இப்படி உண்மையைச் சொன்னபிறகு அவர்கள் மன பாரம் இறங்கியதால் ஆறுதலடைகிறார்கள்’’ என்கிறார் அவர்.
ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க ஆட்களே கிடைக்கவில்லை. ஆனால் நிகழ்ச்சி ஒளிபரப்பாக ஆரம்பித்த பிறகு, ஒரே வாரத்தில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் வந்து குவிந்திருக்கின்றனவாம். ஆனால் காம்ளி போன்ற சிலரைத் தாண்டி பிரபலங்கள் பலர் இதில் பங்கேற்க மறுத்துவிட்டனர். ஆளாளுக்கு ஒரு காரணம்... ‘சில உண்மைகளைச் சொன்னால் என் எதிரிகள் மட்டுமில்லை.. நண்பர்களும் செத்துப்போய்விடுவார்கள்’ என்று தான் பங்கேற்க மறுத்ததற்குக் காரணம் சொல்கிறார் இயக்குனர் மகேஷ் பட்.
இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் நீண்ட நேரம் விவாதப் பொருளானது. ராஜ்ய சபாவில் கட்சி வித்தியாசமின்றி பல எம்.பி.க்கள் கவலையோடு இதைப் பற்றிப் பேசினார்கள். சமீபத்திய நாடளுமன்ற வரலாற்றில் தனிநபர் குற்றச்சாட்டுகளோ, கூச்சல்களோ இல்லாமல் நிகழ்ந்த ஒரு விவாதமாக இது இருந்தது. இதைத் தொடர்ந்து நிகழ்ச்சி தயாரிப்பாளருக்கு தகவல் தொடர்பு அமைச்சகம் நோட்டீசும் அனுப்பியது. ஆனாலும் ஒரு நிகழ்ச்சியை தடை செய்யும் அதிகாரம் அரசுக்குக் கிடையாது என்பதால் அதற்குமேல் போகமுடியாது.
ராஜ்ய சபா முன்னாள் துணைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லா இந்த நிகழ்ச்சியை கடுமையாக எதிர்க்கிறார். ‘‘உண்மைகளை ஒப்புக்கொள்ளச் செய்வது நல்ல விஷயம்தான்... கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு செய்கிற ஒரு தொழிலதிபரைக் கூப்பிட்டு, அவர் செய்த மோசடியை ஒப்புக்கொள்ளச் செய்யுங்கள். பல கொலைகளைச் செய்த ஒரு தீவிரவாதியைக் கூப்பிட்டு, அவன் செய்த குற்றங்களை ஒப்புக்கொள்ளச் செய்யுங்கள். இப்படியெல்லாம் செய்தால் அது சமூக சேவை. அதைவிட்டு இப்படிக் குடும்பங்களை சீரழிப்பது அட்டூழியம். உண்மையை ஒப்புக்கொண்டு பன பாரத்தை யாராவது இறக்கிவைக்க விரும்பினால், அவர்கள் சர்ச்சுக்குப் போய் பாவமன்னிப்பு கேட்டுக்கொள்ளட்டும். டி.வி.யில் எதையும் அம்பலமாக்க வேண்டாம்’’ என்கிறார் அவர்.
எளிய மக்களின் அந்தரங்க அசிங்கத்தை அம்பலமாக்கி ‘ஸ்டார் பிளஸ்’ காசு பார்க்கிறது; ‘என்.டி.டி.வி. இமாஜின்’ சேனலின் ரேட்டிங்கை உயர்த்த இன்னொரு பக்கம் ராக்கி சாவந்த் மாபெரும் புரட்சியைச் செய்திருக்கிறார். ஆமாம்... ‘ராக்கி கா சுயம்வர்’ என்ற நிகழ்ச்சியை நடத்தி, டி.வி. வழியாக தனக்கு மாப்பிள்ளை தேடுகிறார். இதற்கும் 12 ஆயிரம் பேர் அப்ளிகேஷன் போடுகிறார்கள்; ஏற்கனவே திருமணமானவர்கள் உட்பட. இந்து திருமணச் சட்டத்தின்படி, இரண்டாவது திருமணம் சட்டவிரோதம்; இப்படி செய்பவர்களை உடனடியாக சிறையில் அடைக்கலாம் என்பதைத் தெரிந்தே, சேனல் இப்படிப்பட்டவர்களை பங்கேற்க அனுமதிக்கிறது. ஆடியன்ஸுக்கு போரடிக்காமல் இருக்கவேண்டும் என்பதற்காக, ராக்கி தன் அம்மாவையும் சகோதரனையும் ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் பேசுகிறார். அநேகமாக அடுத்து ஏதாவது ஒரு நடிகை தனது டைவர்ஸை டி.வி. மூலமாக வாங்கி, தன் கணவரை அசிங்கமாகத் திட்டி, அவர் தன்னை என்னவெல்லாம் செய்தார் என்று ‘லைவ் புரோகிராமில்’ கதறியபடி சொல்லக்கூடும். யார் கெட்டால் என்ன... டி.வி.க்கு ரேட்டிங்தானே முக்கியம்.
இன்னொருபக்கம் ‘கலர்ஸ்’ சேனல் ‘பாலிகா வது’ என்ற தொடர்மூலம் பால்ய விவாகத்தை அப்பட்டமாக ஆதரிக்கிறது. ஆனந்தி என்கிற குட்டிப்பெண் ஜெகதீஷ் என்கிற சிறுவனை திருமணம் செய்துகொள்ளும் கதை இது. இந்தத் தொடரைப் பார்க்கிற குழந்தைகள் மத்தியில் ஒரு தொண்டு நிறுவனம் கருத்துக்கணிப்பு செய்தது. ‘சின்னவயசுல கல்யாணம் பண்ணிக்கறது நல்லது... ஸ்கூல்ல எனக்குத் தர்ற ஹோம் ஒர்க்கை செய்யறதுக்கு ஒரு பொண்ணு கிடைப்பாளே!’ என்று பையன்கள் பலர் சொன்னார்களாம். ‘கல்யாணம் பண்ணிக்கிட்டா நிறைய நகை கிடைக்கும்; அழகழகா டிரஸ் கிடைக்கும்’ என்று சிறுமிகள் சந்தோஷமாக சொல்லியிருக்கிறார்கள். திருமணம் என்பது நகைகளும் ஆடைகளும் ஹோம் ஒர்க்கும் மட்டும்தான் என்கிறமாதிரியான கருத்தை விதைப்பது எவ்வளவு ஆபத்தானது?
திரைப்படங்களில் மோசமாக ஏதாவது ஒரு விஷயம் நுழைந்தால், அதை தடுத்து கத்தரி போடுவதற்கு சென்சார் இருக்கிறது. சென்சார் போர்டு முழுமையாக அதன் வேலையைச் செய்வதில்லை என்ற குறை இருந்தாலும்கூட, அது இருக்கிறதே என்ற பயத்திலாவது பலர் மோசமான விஷயங்களைத் தராமல் தவிர்க்கிறார்கள். டி.வி.க்கு எந்த சென்சாரும் கிடையாது. இதற்கும் கட்டுப்பாடுகள் போடவேண்டும் என்ற விவாதம் இப்போதுதான் எழ ஆரம்பித்திருக்கிறது. இப்படி கட்டுப்பாடுகள் இல்லாத ஒரு விஷயத்திற்கு லகானாக நீதிமன்றம்தான் இருக்கவேண்டும் என நினைத்து வழக்கு போட்டிருக்கிறார்கள்.
ஆனால் தங்கள் பொறுப்பை தட்டிக்கழிக்கும் தவறைச் செய்திருக்கிறார்கள் நீதிபதிகள். இதே விதியை அப்படியே சினிமாவுக்கும் பொருத்திப் பார்த்தால் விபரீதமாக இருக்காதா... ‘பிடிக்காத சீன்கள் இருக்கும் படத்தை விரும்பாதவர்கள் தியேட்டருக்குப் போகவேண்டாம்; சென்சார் போர்டைக் கலைத்துவிடுங்கள்; அவர்கள் ஏன் சமூக ஒழுக்கத்துக்கு காவல் புரியவேண்டும்?’ என்று சொல்வார்களா இந்த நீதியரசர்கள்?!
- நாடோடி
தேங்க்ஸ் டு : http://www.thenaali.com/thenaali.aspx?A=608
கடல் உள்வாங்கியது:பட்டினப்பாக்க பதட்டம்
இதனால் இங்கு வசித்த மக்கள் அலறியடித்துக் கொண்டு சாலை வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். பட்டினப்பாக்கம் பகுதி கடலில் கடந்தசில மாதங்களாகவே இருந்து வந்தகடல் கொந்தளிப்பு இன்று காணப்பட வில்லை. சுனாமி எச்சரிக்கையையும் மீறி சில வாலிபர்கள் கடலின் தன்மையை நோட்டமிட்டப்படி இருந்தனர்.
வழக்கமான கொந்தளிப்புடன் காணப்படும் கடல் இன்று சுமார் 200 அடி தூரம் வரை உள்வாங்கி காணப்பட்டது. இங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்தின் பின் பகுதியை தொட்டபடி நிற்கும் கடல் அலைகள் இன்று பல அடி தூரத்துக்கு அப்பால் நகர்ந்து சென்றது.
பின்னர் சிறிது நேரத்திலேயே கொந்தளிப்பு இல்லாமல் வழக்கமான இடத்துக்கு கடல் அலைவந்து சென்றது. 10 நிமிடத்துக்கு ஒரு முறை இது போன்ற மாற்றங்கள் காணப்பட்டது. ஆனால் சுனாமி ஏதும் ஏற்பட வில்லை. தொடர்ந்து கடல் மாற்றத்தால் அந்த பகுதியில் பீதி காணப்படுகிறது.
ஒண்ணுமில்லை… பக்தி கொஞ்சம் ‘முத்திடுச்சி’!
ரசிகர்களின் பக்தி முற்றினால் நடிகைகளுக்கு கோயில் கட்டுவார்கள்… அதுவே சாமியார்கள் என்றால் அதே நடிகைகளை ஆஸ்ரமத்துக்கு அல்லது கோயிலுக்கு வரவழைத்து ஆசி வழங்குவார்கள். சன்னியாசத்தை விளம்பரமாக்காத சாமியார்கள் இதில் சேர்த்தியில்லை!
சில தினங்களுக்கு முன் ஸ்ரீராமச்சந்திரபுரா மடத்தின் 36வது பீடாதிபதியான சங்கராச்சாரி ஸ்ரீ ராகவேஸ்வர பாரதி சுவாமி என்பவர் பிரபல இந்தி நடிகை மல்லியகா ஷெராவத்தை தமது மடத்துக்கு வரவழைத்து அவரது கையால் ஹனுமான் பூஜையைத் தொடங்கி வைக்கச் சொல்லி சந்தோஷப்பட்டார்.
ஒரு சங்கராச்சாரி, அதுவும் அனுமன் பூஜையைகவர்ச்சி நடிகையை வைத்துத் துவங்குவதா என பரபரப்பு எழுந்தது அப்போது.
இப்போது இன்னொரு சாமியார் (பூசாரி?) ஷில்பா ஷெட்டிக்கு முத்தம் கொடுத்து பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
மும்பை புறநகர்ப் பகுதியில் உள்ள பொவாய் நாக தேவதை ஆலயத்துக்கு நாக பஞ்சமிக்காக சென்ற ஷில்பா ஷெட்டிக்கு ராஜ மரியாதை தந்த அந்த பூசாரி, அவரை தொட்டு உச்சி முகர்ந்து, கன்னத்தில் முத்தமிட்டு தன் பக்தி மற்றும் ஷில்பாவுக்கான ஆசீர்வாதத்தை உலகுக்குத் தெரிவித்தார். அந்தப் படங்கள் :
-விதுரன்
ஆபாசத்தின் உச்சகட்டம் குமுதம்.காம்
இணையத்திலும் இளைஞர்களை இழுக்கும் வண்ணம் ஆபாச மார்கட்டிங் செய்து வருகிறது. குமுதம்.காம்-இல் இருந்து வந்த விளம்பரத்தை பாருங்கள். "பொழுது போக்கின் உச்ச கட்டம், இணையத்தில் உறுப்பினராகுங்கள் குதூகலமடையுங்கள்" என சொல்கிறது குமுதம். அதை விளம்பரப்படுத்தப் போடுவதோ ஆபாச படங்கள். ஆபாசத்தின் உச்சகட்டம் குமுதம்.காம்.
ஆனந்த விகடன், குமுதம், குங்குமம் போன்ற மஞ்சள் பத்திரிக்கைகள் இப்போது நீலப் பத்திரிக்கைகளாக சீரழிந்து வருகின்றன.
இந்திய சமத்துவ நாடா? ம. பி., பள்ளிகளில் போஜன மந்திரம் அறிமுகம்
மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா ஆட்சி நடக்கிறது. ஏற்கனவே இங்குள்ள பள்ளிகளில் தினமும் சூரிய நமஸ்காரம் செய்யும் திட்டம் அமல்படுத்தப் பட் டுள் ளது. இந்நிலையில், மதிய உணவு சாப்பிடுவதற்கு முன் போஜன மந்திரத்தை சொல்ல வேண்டும் என, கல்வித்துறை அமைச்சர் அர்ச்சனா சிட்னிஸ் அறிவுறுத்தியுள்ளார். அடுத்த மாதம் 5ம் தேதியிலிருந்து 4,000 அரசு பள்ளிகளில்
படிக்கும் மாணவர்கள், மதிய நேரத்தில் போஜன மந்திரத்தை சொல்லி விட்டு சாப்பிடலாம் (தினமலர் 05/07/2009).
இந்தியாவின் பெருமையே சமத்துவம் என்று சொல்லுபவர்களே, தினமும் சூரிய நமஸ்காரம் செய்வதும், போஜன மந்திரம் சொல்லுவதும் தான் சமத்துவமா?
இந்திய சட்டத்தை பார்த்தாலும், சமய சார்பற்ற நாடு என்று சொல்லுகிறது. ஆனால், பிஞ்சு வயதிலேயே பார்ப்பனிய சடங்கை செய்ய வைப்பது எந்தவிதத்தில் சரி?
இதே மாதிரி, வேறொரு மாநிலத்தில் கிருத்தவ, முஸ்லிம் மத சடங்கை செய்ய வைத்தால் இந்து பாசிஸ்டுகள் ஏற்றுக்கொள்வார்களா?
காஷ்மீர் அரசுக்கு பெரும் சிக்கல்
கடந்த 2006ம் ஆண்டு அப்போதைய முதல்வர் குலாம் நபி ஆசாத், ஜம்முவில் நடந்த கூட்டத்தில் பேசுகையில்,காஷ்மீரில் மத்திய பல்கலைக்கழகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த பல்கலைக்கழகம் ஜம்முவில் அமைக்கப்படும், ஸ்ரீநகரில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார். இதனால், ஜம்மு மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். இதன்பிறகு ஆட்சிமாறியது.
மத்திய பல்கலைக்கழகம், தலைநகர் ஸ்ரீநகரில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு ஜம்மு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, டெல்லிக்கு சென்ற முதல்வர் உமர் அப்துல்லா, 2 மத்திய பல்கலைக்கழகங்கள் அமைக்க மத்திய அரசின் அனுமதியை பெற்றார். ஜம்முவில் ஒன்றும், ஸ்ரீநகரில் ஒன்றும் அமைக்கப்படும் என்று அறிவித்தார். இதையடுத்து சற்று அமைதி ஏற்பட்டது.
இந்த நிலையில், ஸ்ரீநகரில் மத்திய பல்கலைக்கழகத்தில் பணியாற்ற ஊழியர்கள் விண்ணப்பிக்க கேட்டு, நாளிதழ்களில் கடந்த 20 நாட்களுக்கு முன் விளம்பரம் வெளியானது. ஆனால், ஜம்முவில் தொடங்குவது பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. இதையடுத்து ஜம்மு மக்கள் கோபம் அடைந்துள்ளனர்.
கடந்த 19 நாட்களாக ஜம்முவில் அரசுக்கு எதிராக மாணவர்கள் போராரட்டம் நடத்தி வருகின்றனர். இது பற்றி ஜம்மு மாணவர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் புபிந்தர் சிங் கூறுகையில், ஜம்முவை மாநில அரசு புறக்கணிப்பது புதிதல்ல,. ஜம்முவில் மத்திய பல்கலைக்கழகம் அமைப்பதில் அரசுக்கு சிறிதும் ஆர்வம் இல்லை.
மாணவர்கள் சங்க போராட்டத்தினால்தான், 2 பல்கலைக்கழகங்கள் தொடங்க முதல்வர் அனுமதி பெற்றார். ஆனால், அதை தொடங்குவதில் பாரபட்சம் காட்டுகிறார்.
ஜம்மு சம்பா பகுதியில் மத்திய பல்கலைக்கழகத்தை உடனே தொடங்க வேண்டும். அத்துடன், ஸ்ரீநகரில் இந்திய மேலாண்மை கல்வி நிறுவனம் தொடங்கினால், ஜம்முவிலும் தொடங்க வேண்டும்.
அதுவரை எங்கள் போராட்டம் தொடரும். போராட்டம் தீவிரமாகாமல் தடுக்க வேண்டியது அரசின் பொறுப்பு. இல்லாவிடில் கடந்த ஆண்டு அமர்நாத் விவகாரத்தில் நடந்த போராட்டம் போல் மிகப் பெரும் போராட்டமாக மாறும் என்பது உறுதி என்றார்.
தமிழகம்,அந்தமானில் சுனாமி எச்சரிக்கை
அந்தமானில் நிலநடுக்கம் 7.6 ஆக பதிவாகியது. இதன் பாதிப்பு சென்னை, கன்னியாகுமரி, கடலூர் , நாகை உள்ளிட்ட பல இடங்களில் உணரப்பட்டது.
இதனையடுத்து நாகையில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லவில்லை.
அந்தமானில் 7.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து இந்தியா , வங்கதேசம் , மியான்மர், இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் பாதிப்பு சென்னை , விசாகப்பட்டினம். புவனேஸ்வர் உள்ளிட்ட நகரங்களிலும் உணரப்பட்டது.
Monday, August 10, 2009
மோசர் பியர் இந்தியா நிறுவனம் ரூ. 2978 கோடி வரி ஏய்ப்பு
கடந்த 2000-01ம் ஆண்டில் மோசர் பியர் நிறுவனம் வரியைக் கட்டாமல் ஏய்த்து விட்டதைத் தொடர்ந்து வருமான வரித்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி கபாடியா தலைமையிலான பெஞ்ச் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி மோசர் பெயருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
மும்பையில் 2 பயணிகள் ரயில் மோதல்-11 பேர் காயம்
மேற்கு ரயில்வேயை சேர்ந்த மும்பை, மாஹிம் ரயில் நிலையத்துக்கு அந்தேரிக்கு செல்லும் 9 பெட்டிகள் கொண்ட பயணிகள் ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது ரயில் நிலையத்தில் முதல் பிளாட்பாரத்தில் போரிவில்லி பகுதிக்கு செல்லும் ரயில் நி்ன்று கொண்டிருந்தது.
இந்த நேரத்தில் ரயில்வே நிலையத்தில் உள்ள மின்சார சிக்னல் விளக்குகள் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்தேரி செல்லும் பயணிகள் ரயில் மதியம் 1.05 மணிக்கு நின்று கொண்டிருந்த ரயில் மீது மோதியது.
இந்த விபத்தில் 2 ரயில்வே ஊழியர்கள், 4 பெண்கள் உட்பட மொத்தம் 11 பேர் காயமடைந்தார்கள்.
இந்த விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு கமிஷ்னர் பிரசாந்த் குமார் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இது குறித்து மேற்கு ரயில்வேயின் துணை பொது மானேஜர் ஆர்எஸ் சக் கூறுகையில்,
ரயிலின் வேகம் 15-20 கிமீட்டருக்குள் இருந்ததால் பெரிய விபத்து நேரவில்லை. சிக்னல் சரியாக தான் செயல்பட்டுள்ளது. டிரைவர் கவனக்குறைவுடன் செயல்பட்டுள்ளார். காயமடைந்தவர்கள் அருகிலிருந்த சியான் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். அவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றார்.
Sunday, August 9, 2009
போதையில் கார் ஓட்டிய பெண் மாஜிஸ்திரேட் பலி
டெல்லியை சேர்ந்தவர் மீரா ( 44) சப்-டிவிசனல் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றி வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உண்டு.
நேற்று அதிகாலை 4 மணியளவில் அவர் குடிபோதையில் அவுட்டர் டெல்லி பகுதியில் காரை ஓட்டிச் சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து இன்னொரு வாகனத்தின் பின் பகுதியில் மோதியது.
இதில் மீரா பலத்த காயமடைந்து காரின் இருக்கையிலேயே பலியானார். ஆனால், இவரால் மோதப்பட்ட வாகனம் அங்கிருந்து தப்பிவிட்டது.
விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்த மீராவுக்கு 7 வயதில் பெண் குழந்தை உள்ளது.
7 மாதங்களில் அமெரிக்காவில் வேலையிழந்தோர் 10 லட்சம்!
இந்தச் செய்தி உலகப் பொருளாதார நிபுணர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. சர்வதேசப் பொருளாதாரம் வீழ்ச்சியிலிருந்து மீண்டு வருவதாக கருத்து பரப்பப்பட்டு வரும் சூழலில், மீண்டும் பெருந்தொகையிலான வேலையிழப்புகள் நடந்திருப்பது, எதிர்காலம் குறித்த பயத்தை உண்டாக்கியிருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.
அமெரிக்காவில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து கிடப்பதால், பல நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு மாதமும் வேலையிழப்போர் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் சற்றே இந்த நிலையில் மாற்றம் தெரிவது போன்ற தோற்றம் தெரிந்தது. ஆனால் அடுத்த ஒரே மாதத்தில் நிலைமை தலைகீழாகிவிட்டது. கடந்த ஆறு மாதங்களில் இல்லாத அளவுக்கு 97343 பணியாளர்கள் பலவேறு நிறுவனங்களிலிருந்து வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விவரங்களை அமெரிக்க அரசே அரவித்துள்ளது. அடுத்த மாதம் இந்த எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டக் கூடும் என அச்சம் தெரிவித்துள்ளது அமெரிக்கா.
2009-ம் வருடம் துவங்கி இந்த 7 மாதங்களில் மட்டும் அமெரிக்காவில் பணியிழந்தோர் எண்ணிக்கை 10 லட்சத்தை நெருங்குகிறது. 2008-ல் முதல் 7 மாதங்களில் 579260 பேர் வேலை நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.
இந்த இரு ஆண்டுகளிலும் இதுவரை 20 லட்சம் பேர் வேலை இழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாகவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோமொபைல் மற்றும் ஐடி துறையில்தான் அதிக பணியாளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
திருச்சியில் மாணவன் நரபலி?-ஒருவன் சரண்
திருச்சி எடமலைப்பட்டிபுதூரைச் சேர்ந்த துப்புறவுத் தொழிலாளி முருகேசனின் மகன் மணிகண்டன் (13). ஆறாம் வகுப்பு படித்து வந்த இந்தச் சிறுவன் சில நாட்களுக்கு முன் இரட்டைமலை ஒண்டிகருப்புசாமி கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்றான்.
ஆனால், இரவாகியும் வீடு திரும்பாததால் பல இடங்களில் தேடிய பெற்றோர் போலீசில் புகார் செய்தனர். இந் நிலையில் நேற்று அருண்குமார் (24) என்பவர் நீதிமன்றத்தில் திடீரென சரணடைந்தார்.
அவர் தனது வாக்குமூலத்தில் மணிகண்டனை எடமலைப்பட்டிபுதூர் ரயில்வே தண்டவாளம் அருகே கொன்று போட்டு விட்டதாகக் கூறினார். இதையடுத்து போலீசார் அப் பகுதியில் உடலைத் தேடினர்.
அப்போது கருமண்டபம் கொல்லங்குளத்தில் மணிகண்டனின் உடல் கழுத்து அறுபட்ட நிலையில் மிதந்தது.
அவன் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இவரை அருண்குமார் நரபலி கொடுத்தாரா அல்லது வேறு யாராவது நரபலி தந்துவிட்டு வழக்கை திசை திருப்ப அருண்குமாரை சரணடைய வைத்துள்ளார்களா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Saturday, August 8, 2009
குஜராத்: 50000 முஸ்லீம்களுக்கு ஸ்காலர்ஷிப் மறுப்பு
இந்த சர்ச்சையால் முதல்வர் நரேந்திர மோடிக்கு புதுப் பிரச்சினை உருவாகியுள்ளது.
சிறுபான்மையின மாணவர்களுக்கு மத்திய அரசு ஸ்காலர்ஷிப் உதவியை வழங்குகிறது. சிறுபான்மை வகுப்பைச் சேர்ந்த ஏழை, மாணவ, மாணவியர் பள்ளிப் படிப்பை முடிப்பதற்காக இந்த உதவி செய்யப்படுகிறது.
இந்த ஸ்காலர்ஷிப் தொகையில், 75 சதவீதத்தை மத்திய அரசும், 25 சதவீதத்தை மாநில அரசும் ஏற்கின்றன. அனைத்து மாநிலங்களிலும் இப்படித்தான் உள்ளது. ஆனால் குஜராத்தில் மட்டும், 25 சதவீத பங்கை ஏற்க முடியாது என்று மோடி அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இதனால் இங்கு மட்டும் ஸ்காலர்ஷிப்பை வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
ஏழை முஸ்லீம் சமுதாய மாணவர்களுக்கு மட்டும் ஆண்டு தோறும் ரூ. 22 லட்சம் உதவித் தொகையை மத்திய அரசு வழங்கி வருகிறது. இதில் குஜராத்துக்கு மட்டும் ரூ. 57 ஆயிரத்திற்கும் கூடுதலாக வழங்கப்படுகிறது.
ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சம் அல்லது அதற்குக் கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த முஸ்லீம் மாணவர் அல்லது மாணவி இந்த ஸ்காலர்ஷிப் பெறத் தகுதி படைத்தவர் ஆவார். அழருக்கு ரூ. 800 முதல் ரூ. 1500 வரை ஸ்காலர்ஷிப் கிடைக்கும்.
கடந்த ஆண்டு இந்த ஸ்காலர்ஷிப்பை எதிர்த்து மத்திய அரசுக்கு மோடி அரசு ஒரு கடிதம் எழுதியது. அதில் இப்படி இனம் பார்த்து நிதியுதவி செய்வது நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்று கூறப்பட்டிருந்தது. மேலும் கடந்த ஆண்டு மத்திய அரசின் இந்த ஸ்காலர்ஷிப் உதவியை யாருக்கும் தராமல் விட்டு விட்டது குஜராத் அரசு.
இந்த ஆண்டும் இதுவரை ஸ்காலர்ஷிப் உதவியை யாருக்கும் வழங்கவில்லை மோடி அரசு. இதனால் முஸ்லீம் ஏழை, மாணவ, மாணவியருக்கு மத்திய அரசின் உதவி கிடைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மோடி அரசின் செயல் அரசியல் சட்டவிரோதமானது என்று காங்கிரஸ் கட்சி கூறுகிறது. அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், இது பிரதமரின் 15 அம்சத் திட்டங்களில் ஒன்று. சிறுபான்மையினர் மேம்பாட்டை கருத்தில் கொண்டு வரப்பட்ட திட்டம். அனைத்து மாநிலங்களும் இதை ஏற்றுள்ளபோது, குஜராத் மட்டும் எதிர்ப்பது நியாயமல்ல என்றார்.
அமெரிக்கா: மேலும் மூன்று வங்கிகள் மூடல்!
இவற்றுடன் சேர்த்து அமெரிக்காவில் இதுவரை மூடப்பட்ட வங்கிகளின் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.
பொருளாதார வீழ்ச்சி காரணமாக வங்கித் துறை அமெரிக்காவில் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. வங்கிகள் தொடர்ந்து செயலிழந்து வருகின்றன. லேஹ்மன் பிரதர்ஸ் தொடங்கி பல பிரபல வங்கிகள் சீட்டுக்கட்டு மாளிகை போல சரிந்தன. 69 வங்கிகள் இதுவரை மூடப்பட்டன.
இப்போது பர்ஸ்ட் ஸ்டேட் வங்கி (First State Bank), பர்ஸ்ட் கம்யூனிட்டி வங்கி (Community First Bank) மற்றும் கம்யூனிட்டி நேஷனல் வங்கிகளும் (Community National Bank) மூடப்பட்டுள்ளன. இவை ப்ளோரிடா மற்றும் ஓரகானை மையமாகக் கொண்டு இயங்கி வந்தன.
இந்த வங்கிகளுக்கு ரிஸீவராக அமெரிக்காவின் பெடரல் டெபாஸிட் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தை நியமித்துள்ளது அமெரிக்கா.
இவற்றில் பர்ஸ்ட் ஸ்டேட் வங்கி மற்றும் கம்யூனிட்டி நேஷனல் வங்கிகளை ஸ்டெர்ன்ஸ் வங்கிக் கிளைகளாக செயல்பட வைக்க பெடரல் டெபாஸிட் இன்ஷூரன்ஸ் முடிவு செய்துள்ளது.
கம்யூனிட்டி பர்ஸ்ட் வங்கியை ஹோம் பெடரல் வங்கியுடன் இணைக்கிறார்கள்.
இந்த காலாண்டில் 305 வங்கிகள் பெரும் பிரச்சினைகளுக்கு உள்ளாகும் எனக் கணித்துள்ள பெடரல் டெபாஸிட் இன்ஷூரன்ஸ், வருகிற 2013-ம் ஆண்டுக்குள் இன்ஷூரன்ஸ் தொகையாக 70 பில்லியன் டாலர்கள் வரை செலவாகும் எனத் தெரிவித்துள்ளது.
இந்திய இராணுவத்தால் கற்பழிக்கப்படும் காஷ்மீர்!!
காஷ்மீர் மாநிலத்தில் அமைதியான முறையில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் நடந்து முடிந்திருப்பதையும், அம்மாநிலத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித் திருப்பதையும் பார்த்து அம்மாநில மக்கள் சுதந்திரம் கேட்பதை விட்டுவிட்டு, மீண்டும் தேசிய நீரோட்டத்தில் கலந்துவிட்டதாக இந்திய அரசு மயக்கம் கொண்டிருந்தது. இந்த மயக்கத்தை அம்மாநிலத்தின் தென்பகுதியிலும் தலைநகர் சீறிநகரிலும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வரும் போராட்டங்கள் கலைத்துப் போட்டுவிட்டன.
காஷ்மீரின் தென்பகுதியில் அமைந்துள்ள ஷோபியன் என்ற நகரைச் சேர்ந்த 22 வயதான நீலோஃபர் ஜானும் அவரது மைத்துனியும் 17 வயதான பள்ளி மாணவியுமான ஆஸியா ஜானும் மே 29 அன்று அக்கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் அமைந்திருக்கும் தங்களின் ஆப்பிள் தோட்டத்திற்குச் சென்றிருந்தனர். அதிகாலை யிலேயே சென்றுவிட்ட அவ்விருவரும் இரவு 10 மணியாகியும் வீடு திரும்பாததால், நீலோஃபரின் கணவர் இது பற்றி அருகிலுள்ள போலீசு நிலையத்தில் புகார் அளித்தார்.
மறுநாள் அதிகாலை நேரத்தில், நீலோஃபரின் ஆப்பிள் தோட்டத்திற்குச் செல்லும் வழியில் ஓடும் சிற்றாறு ஒன்றில் அந்த இரு இளம் பெண்களின் சடலங்கள் போலீசாலும் பொதுமக்களாலும் கண்டுபிடிக்கப்பட்டன. உடலெங்கும் காயங்களோடும் ஆடைகள் கிழிந்த நிலையிலும் அவர்களது சடலங்கள் ஆற்றின் ஓரத்தில் ஒதுங்கிக் கிடந்தன. அகால ‘மரணமடைந்த’ நீலோஃபர் நிறைமாதக் கர்ப்பிணி என்பதும் ஆஸியா ஜான் படிப்பில் கெட்டிக்கார மாணவி என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. அவ்விரு இளம் பெண்களும் இறந்து கிடந்த நிலையைப் பார்த்த பொதுமக்கள், “அவர்கள் போலீசாராலோ அல்லது இராணுவச் சிப்பாகளாலோ கும்பலாகப் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம்” எனச் சந்தேகம் கொண்டனர்.
இந்த மர்மமான ‘மரணங்கள்’ பற்றி விசாரணை நடத்தி, பிரேதப் பரிசோதனை நடத்தி மக்களின் சந்தேகங்களைத் தீர்க்க வேண்டிய போலீசாரோ சடலங்களைப் பார்த்த நிமிடமே, “அவர்கள் ஆற்றில் மூழ்கி இறந்து போனதாகத் தெரிவதாகவும், பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரியவில்லை என்றும்” முடிவு செய்தனர். மேலும், இச் சம்பவம் பற்றி உடனடியாக முதல் தகவல் அறிக்கைப் பதிவு செய்யவும் மறுத்து விட்டனர். காஷ்மீர் மாநில முதல்வர் ஓமர் அப்துல்லாவும் போலீசாரின் தடாலடி முடிவுக்கு ஒத்தூதினார்.
‘‘அரசாங்கமும் போலீசும் யாரையோ பாதுகாக்க முயலுவதாக’’ச் சந்தேகப்பட்ட பொதுமக்கள், அவ்விரு இளம் பெண்களின் படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டிக்கக் கோரி ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர். இதனையடுத்து, அப்பெண்களின் சடலங்கள் ஷோபியன் அரசு மருத்துவ மனையில் பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. எனினும், போலீசின் நெருக்குதல் காரணமாக அரசு மருத்துவர்கள் ‘இம்மரணங்கள்’ பற்றி எவ்வித முடிவையும் அறிவிக்காமல் மௌனமாக இருந்துவிட்டனர். எனவே, வேறு நடுநிலையான மருத்துவர்களைக் கொண்டு பிரேதப் பரிசோதனை செய்யக் கோரி பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கினர்.
புல்வாமா நகரைச் சேர்ந்த அரசு மருத்துவர்கள் நடத்திய இரண்டாவது பிரேதப் பரிசோதனையும், அப்பெண்கள் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டார்களா இல்லையா என்பது பற்றியோ, அவர்கள் எப்படி இறந்து போனார்கள் என்பது பற்றியோ முடிவான அறிக்கை எதனையும் தரவில்லை என்றே கூறப்படுகிறது. ஆர்ப்பாட்டங்கள் பரவுவதைக் கட்டுப்படுத்துவதில் மும்மரமாகத் திரிந்த போலீசார், இரண்டாவது பிரேதப் பரிசோதனை முடிந்தவுடனேயே அச்சடலங்களைப் புதைத்துவிடுமாறு கூறிவிட்டனர். புதைக்கப்பட்ட சடலங்களை மீண்டும் தோண்டியெடுப்பது உள்ளூர் மக்களின் உணர்வுகளைக் காயப்படுத்தும் எனக் கூறி, மூன்றாவது பிரேதப் பரிசோதனை என்ற யோசனையைத் திட்டவட்டமாக மறுத்துவிட்டது, மாநில அரசு.
தீவிரவாதிகளைக் கண்டுபிடிக்க ஏகப்பட்ட உளவுப் பிரிவுகளை வைத்திருக்கும் அரசுக்கு, இந்த ‘மரணங்களுக்கு’ப் பின்னுள்ள மர்மங்களைக் கண்டுபிடிப்பதில் பெரிய சிரமமொன்றும் இருந்திருக்க முடியாது. போலீசும், அரசும், தேசியவாதிகளும் கூறிவருதைப் போல இந்த மரணங்கள் விபத்தினால் நேர்ந்தவை என்பது உண்மையாகவே இருந்தாலும், அவ்வுண்மையை காசுமீர் மக்கள் நம்பக்கூடிய நடுநிலையான அமைப்பின் மூலம் நிரூபிப்பதற்கும் அரசு தயாராக இல்லை. மாறாக, மக்களின் கோபத்திற்கு வடிகால் வெட்டுவதற்காக, வழக்கம் போலவே விசாரணை கமிசன்களை அமைத்திருக்கிறது, அம்மாநில அரசு. மேலும், நியாயம் கேட்டுப் போராடும் மக்களை ஒடுக்குவதற்காக பொது அமைதியைப் பாதுகாக்கும் சட்டம் உள்ளிட்ட பல்வேறு அடக்குமுறைகளை ஏவிவருகிறது. இப்பிரச்சினை தொடர்பாக போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நடந்துவரும் மோதல்களில் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒரு சிறுவன் இறந்து போனான். சையத் ஷா கீலானி, ஷாபிர் ஷா, மிர்வாயிஸ் உமர் ஃபாரூக், யாசின் மாலிக், ஜாவேத் மிர் ஆகியோர் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலிலும், சிறைச்சாலையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.
காஷ்மீர் மக்கள் போதிய ஆதாரங்கள் எதுவுமின்றி போலீசையும் துணை இராணுவப் படைகளையும் சந்தேகிப்பதாக இந்திய தேசியவாதிகள் அலுத்துக் கொள்கிறார்கள். ஒரு குற்றம் நடந்தால், அது பற்றி விசாரிக்க போலீசார் பழைய குற்றவாளிகளை விசாரிக்க ‘அழைத்து’ச் செல்வதில்லையா? அது போலத்தான் காஷ்மீர் மக்களின் சந்தேகத்தையும் பார்க்க வேண்டும்.
ஏறத்தாழ பத்து ஆண்டுகளுக்கு முன்பு, வாஜ்பாயின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்கக் குடியரசுத் தலைவராக இருந்த பில் கிளிண்டன் இந்தியாவிற்கு வந்த சமயத்தில், காஷ்மீரில் பாதுகாப்புப் படைகளோடு நடந்த ‘மோதலில்’ ஐந்து முசுலீம்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அந்த ஐவரும் எல்லைதாண்டி வந்த பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கப்பட்டனர். இப்படுகொலையை எதிர்த்து காஷ்மீர் மக்கள் போராடி யிருக்காவிட்டால், அந்த ஐவரும் சிட்டிசிங்புரா கிராமத்தைச் சேர்ந்த அப்பாவி முசுலீம்கள் என்ற உண்மை வெளியுலகுக்குத் தெரிந்திருக்காது.
ஜம்மு-காஷ்மீர் போலீசுத் துறையைச் சேர்ந்த சிறப்பு நடவடிக்கைக் குழு பணம், பதவிகளைப் பிடிக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே அப்துல் ரஹ்மான் பத்தர், ஷௌகத் கான், நஸிர் அகமது தேகா உள்ளிட்ட பல அப்பாவி முசுலீம்களைத் தீவிரவாதிகள் என முத்திரை குத்தி சுட்டுக் கொன்ற உண்மை 2007-இல் அம்பலமானது. இப்படுகொலைகளுக்கான ஆதாரங்களை அழித்துவிட்டதாக மப்பில் திரிந்த காக்கிச்சட்டை கிரிமினல்களை காஷ்மீர் மக்களின் போராட்டம்தான் சட்டத்தின் முன் நிறுத்தியது.
போலீசோ அல்லது பாதுகாப்புப் படையினரோ இவ்விரு பெண்களையும் கடத்திக்கொண்டு போ, பாலியல் பலாத்காரப்படுத்திய பின் கொன்றிருக்கக்கூடாதா என்ற கேள்வியை எழுப்ப மறுக்கும் இந்திய தேசிய வாதிகள், இப்படுகொலைகளுக்கு நியாயம் கேட்டு நடக்கும் போராட்டங்களை, அப்போராட்டங்கள் இந்திய இராணுவத்தைக் குற்றம் சுமத்தும் ஒரே காரணத்திற்காகவே, அவற்றை இனவெறியையும், மதவெறி யையும் தூண்டிவிடும் போராட்டங்கள் என அவதூறு செய்து வருகிறார்கள். மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்துவிட்ட பிரிவினைவாதிகள் மீண்டும் செல்வாக்குப் பெறவே மக்களைத் தூண்டிவிடுவதாகக் குற்றஞ்சுமத்துகிறார்கள்.
காஷ்மீரின் தென்பகுதியில் போராடிவரும் மக்கள் “குற்றவாளிகளைக் கண்டுபிடித்துத் தண்டி!” எனக் கோரிதான் போராடுகிறார்களேயொழிய, சுதந்திரம் கேட்டுப் போராடவில்லை. ஓட்டுப் பொறுக்குவதற்கு மட்டும் காஷ்மீர் மக்களை அணுகும் இந்திய தேசிய காங்கிரசுக் கட்சி இப்போராட்டத்திற்கு தலைமை தாங்கட்டுமே, யார் வேண்டாமென்று சோன்னது? பிரிவினைவாதிகளைவிட, காங்கிரசுக் கும்பல் உள்ளிட்ட இந்திய தேசியவாதிகள்தான் காஷ்மீர் மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாமல் தனிமைப்பட்டுக் கிடக்கின்றனர்.
நீலோஃபரும், ஆஸியாவும் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுத்தான் கொல்லப்பட்டனர் என்பது நிரூபணமானால், காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதுமே போராட்டங்கள் வெடித்துவிடும் என்பதனால்தான், ஷோபியன் போலீசார் முதல் பிரேதப் பரிசோதனை நடத்திய மருத்துவர்களிடம், “அப்பெண்கள் பாலியல் பலாத்காரபடுத்தப்பட்டிருந்தால் அவ்வுண்மையை மறுக்க வேண்டும் அல்லது மழுப்ப வேண்டும்” என நெருக்குதல் கொடுத்ததாகவும்; இரண்டாவது பிரேதப் பரிசோதனையை நடத்திய மருத்துவர்களுள் ஒருவர் ஷோபியன் நகர மக்களிடம் அவர்கள் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுள்ள உண்மையைச் சோன்னதற்காக மாவட்ட போலீசு கண்காணிப்பாளரால் கடிந்து கொள்ளப்பட்டதாகவும் “தெகல்கா” வார இதழில் (20 ஜூன் 2009) பிரேம் சங்கர் ஜா என்றொரு பத்திரிகையாளர் குறிப்பிட்டுள்ளார். எனவே, இந்திய தேசியவாதிகள் அவதூறு செய்து வருவது போல காஷ்மீர் மக்களின் போராட்டங்கள் உண்மையைக் கண்டுபிடிக்கத் தடையாக இல்லை. மாறாக, அதிகார வர்க்கம்தான், உண்மை வெளியே தெரிந்தால், இந்திய தேசியம் நாறிவிடும் என்பதால், உண்மையை அமுக்கிவிட முயன்று வருகிறது என்று கூற வேண்டும்.
பிரிவினைவாதத்தையோ, பிரிவினைவாத அமைப்புகளையோ ஏற்றுக் கொள்ளாத காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த முசுலீம் அறிவுத் துறையினர்கூட, இராணுவமும், போலீசும் வரைமுறையின்றி நடத்திவரும் மனித உரிமை மீறல்களும், இராணுவமும், துணை இராணுவப் படைகளும் திரும்பப் பெறப்படாமல் காஷ்மீரை ஆக்கிரமித்துக் கொண்டிருப்பதுதான் மக்களின் சந்தேகங்களுக்கும் போராட்டங்களுக்கும் அடிப்படையாக அமைகின்றன எனச் சுட்டிக் காட்டியுள்ளனர்.
இவையனைத்தும் காஷ்மீர் அமைதியாக இல்லை என்பதைத்தான், இந்திய தேசியத்தைப் பிரதிநிதித் துவப்படுத்தும் எந்தவொரு அமைப்பையும் அம்மக்கள் நம்பத் தயாராக இல்லை என்பதைத்தான் எடுத்துக் காட்டுகின்றன. அதனால்தான் சந்தேகத்திற்கிடமான ஒவ்வொரு மரணமும், சந்தேகத்திற்கிடமான அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் (அமர்நாத் கோயில் நில மாற்றம் போன்றவை) அம்மாநிலத்தில் பெரும் கொந்தளிப்புகளை உருவாக்கிவிடுகிறது. இப்போராட்டங்களை அவதூறு செய்தோ அடக்குமுறைகளை ஏவியோ ஒடுக்கிவிட இந்திய அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. அம்முயற்சிகள் அனைத்தும் எரிகிற நெருப்பில் எண்ணெ வார்ப்பது போலவே அமைந்து விடுகின்றன.
குட்டு உடைகிறது!
காஷ்மீர் மக்கள் நடத்திய போராட்டங்களையடுத்து, அம்மாநில அரசு, “நீலோஃபர் ஜானும், ஆஸியா ஜானும் இறந்து போனதற்கான உண்மையான காரணத்தையும், சூழ்நிலையையும் மற்றும் இப்பிரச்சினையை யொட்டி நடந்த போராட்டங்களை அரசு அணுகிய விதம் குறித்தும்” விசாரிப்பதற்கு ஓய்வு பெற்ற ஜம்மு-காஷ்மீர் உயர்நீதி மன்ற நீதிபதி முஸாபர் ஜான் என்பவர் தலைமையில் விசாரணை கமிசன் ஒன்றை அமைத்தது. அக்கமிசன் அளித்துள்ள இடைக்கால அறிக்கையில், “அப்பெண்கள் பாலியல் பலாத்காரப் படுத்தப்பட்டுப் பின் கொல்லப்பட்டுள்ளதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாக”ச் சுட்டிக் காட்டி யிருக்கிறது. மேலும் போலீசார், பிரேதப் பரிசோதனை நடத்திய மருத்துவ அதிகாரிகள், தடய அறிவியல் நிபுணர்கள் ஆகியோரின் திறமையின்மையாலும், நிர்வாகக் குளறுபடிகளாலும் இந்த ஆதாரங்கள் அழிந்து போவிட்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளது. இதனையடுத்து, போலீசு மற்றும் மருத்துவ துறையைச் சேர்ந்த சில அதிகாரிகள் இடைக்காலப் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
“ஆதாரங்கள் ‘அழிந்து’ போகும் அளவிற்கு திறமைக் குறைவாக நடந்து கொள்ளக் காரணம் என்ன?” என்ற கேள்விக்கான பதிலை இடைக்கால பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகளிடமிருந்து வாங்கிவிட்டால், இந்த ‘மர்ம’ மரணங்களுக்குப் பின்னுள்ள பெரிய மனிதர்களின் பெயர்கூட அம்பலமாகிவிடாதா? அந்த இரு பெண்களுள் ஒருவர் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டதற்கான ஆதாரங்களை போலீசார் மறைக்க முயன்று முடியாமல் போன பிறகும், தேசியவாதிகள் இக்கேள்வியை எழுப்ப மறுத்து வருகிறார்கள். மாறாக, இக்கமிசன் புதிய ஆதாரங்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை எனக் கூறி, இந்த இடைக்கால அறிக்கையை ஒதுக்கித் தள்ளுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். அப்பெண்களைப் பாலியல் பலாத்காரப்படுத்திக் கொலை செய்த பெரிய மனிதர்களே ‘மனசாட்சிக்குப் பயந்து’ குற்றத்தை ஒப்புக்கொண்டால்கூட, “அதற்கும் ஆதாரம் ஏதாவது வைத்திருக்கிறாயா?” என இவர்கள் கேட்டாலும் ஆச்சரியப்பட முடியாது!
-புதிய ஜனநாயகம், ஜூலை-2009
Thursday, August 6, 2009
சங்கரராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரன் எஸ்கேப் !!
காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கு நடந்தால் தங்களுக்கு தண்டனை கிடைப்பது நிச்சயம் என்று பயந்த்து சங்கராச்சாரி கும்பல். வழக்கை பாண்டிச்சேரிக்கு மாற்றிக் கொடுத்த்துடன், தமிழக அரசின் அரசு வழக்குரைஞர் இந்த வழக்கை நடத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டு ஜெகத்குரு எஸ்கேப் ஆவதற்குத் தோதாக சன்னலைத் திறந்து விட்டது உச்ச நீதிமன்றம்.
புதுவை செசன்சு நீதிமன்றத்தில் நடந்த கொலை வழக்கின் குறுக்கு விசாரணையில் பிரதான சாட்சியங்களான சங்கரராமனது மனைவி பத்மாவும், மகளான மைத்ரேயியும், கோயில் ஊழியர்களும் ஏற்கனவே அளித்த வாக்குமூலத்திற்கு எதிராக மாற்றிச் சொல்லியருக்கிறார்கள். தாங்கள் கொலைசெய்த கொலைகாரர்கள் எவரையும் கண்ணால் பார்க்கவில்லை என்றும், போலீசார் காட்டிய புகைப்படங்கள் மூலமாகத்தான் அவர்களைத் தெரிந்து கொண்டதாகவும் சொல்லியிருக்கிறார்கள். சங்கர்ராமன் வீட்டிலிருந்து கைப்பற்ற ஆவணங்களில் இருக்கும் கையெழுத்து அவருடையதல்ல என்றும் அவரது மனைவியும் மகளும் தெரிவித்திருக்கிறார்கள். இவர்களை பிறழ் சாட்சிகள் (hostile witnesses) என்று அரசு தரப்பு அறிவித்திருக்கிறது.
இதற்கு முன்னரே இரண்டு சாட்சிகள் பிறழ்சாட்சிகளாகி விட்டனர். தங்கள் சாட்சிகளாக அரசு தரப்பு கொண்டுவந்து நிறுத்திய இவர்களையே இனி அரசு தரப்பு குறுக்கு விசாரணை செய்யும். அந்த குறுக்கு விசாரணை கூர்மையாக நடத்தப்பட்டால், சாட்சிகள் பொய் சொல்வது நிரூபக்கப் படலாம். பெஸ்ட் பேக்கரி வழக்கில் நடந்தது போல. அந்த வழக்கில் பணத்தால் விலை பேச முடியாத, மோடியால் மிரட்ட முடியாத தீஸ்தா சேதல்வாத் உள்ளிட்டவர்கள் அர்ப்பணிப்போடு பணியாற்றினர். இந்த வழக்கில் அப்படி நடக்குமா? சொல்ல முடியாது.
இந்துக்களின் லோககுரு இன்னும் சில மாதங்களில் எந்த தவறும் செய்யாத மகானாக விடுதலை அடைவார். தனது கணவனை கோரமாக ரவுடிகளை வைத்துக் கொன்றது ஜெயேந்திரன்தான் என்பது பத்மாவுக்கு நன்கு தெரியும். எல்லாப் பத்திரிகைகளுக்கும் பேட்டி கொடுத்திருக்கிறார். உலகுக்கும் அதில் சந்தேகமில்லை. நக்கீரன் பேட்டியிலேயே இந்த சங்கர்சாரி இதை தெனாவெட்டாக பெருமையடித்திருக்கிறார். எனில் என்ன நடந்தது?
தனது கணவன் கொடூரமாக கொலைசெய்யப்பட்தை அறிந்திருக்கும் பத்மாவை அவ்வளவு சுலபமாக பணத்திற்கு விலைபேசியிருக்க முடியாது. வழக்கு நடக்கும்போது அடையாளம் தெரியாதவர்களால் மிரட்டப்படுவதை அப்போதே பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார் பத்மா.
சங்கரமடத்தின் சொத்து மதிப்பு ஏறத்தாழ பத்தாயிரம் கோடிகள் தேறும். அம்பானி முதல் எல்லா முதலாளிகளுக்கும், சேஷன், கலாம் முதலான அதிகார வர்க்கத்தினருக்கும் பிரம்ம ஞானத்தை வழங்கும் இடமல்லவா சங்கரமடம்! பாபர் மசூதியை இடித்த சங்கபரிவாரத்தின் சார்பில் முசுலீம் அமைப்புக்களிடமும் கட்டைப் பஞ்சாயத்து பேசியவரல்லவா ஜெயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்?
ஆளும் வரக்க்திற்கு தரகன், இந்து மதவெறி அமைப்புகளின் லோக குரு ஆயுள் தண்டனையில் உள்ளே போனால் தர்மத்தை யார் நிலைநாட்டுவது? ஆள்பவர்கள் கைவிட்டு விடுவார்களா என்ன?
சீனியரும் ஜூனியரும் சீக்கிரமே விடுதலையாகி விடுவார்கள். அன்று இந்தக் கொலைகள் பற்றியும் இவர்களது லீலைகள் பற்றியும் கதை கதையாக வந்தவை, பாதிக்கப்பட்டவர்களின் பேட்டிகள், ஆகிய அனைத்தும், இந்த உலகம் பார்த்த, படித்த அனைத்தும், பொய்யாய் புனைகதையாய் போய்விடும்.
“பிரம்ம ஸத்யம் ஜெகன் மித்யா” என்றார் ஆதிசங்கரர். அதாவது பிரம்மம் தான் உண்மையானது. நாம் காணும் இந்த உலகம் மாயை என்றார். அந்த ஆதிசங்கரன் பெயரிலேயே போலி டாகுமெண்டு தயார் பண்ணி, காஞ்சி மடத்தை உருவாக்கியவர்கள் அல்லவா கும்பகோணத்துப் பார்ப்பனர்கள்! உலகம் பொய் என்று நிரூபிக்கப் பட்டுவிட்டது. பிரம்மம் எது? உருட்டுக் கட்டையா, ஏ.டி.எம் மா?
எனினும், இந்த ஜனநாயக நாட்டில் சங்கரசாச்சாரி சட்டப்படிதான் விடுவிக்கப் பட இருக்கிறார். டஜன் கணக்கில் கொலைகள் செய்த ரவுடிகளும், கோடிக்கணக்கில் கொள்ளையடித்த அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் முதலாளிகளும் சட்டப்படி விடுவிக்கப்படவில்லையா? அந்த ஜனநாயக உரிமை சங்கராச்சாரிக்கு மட்டும் கிடையாதா என்று ஆன்மீக மெய்யன்பர்கள் கேட்கலாம். உண்டு, உண்டு, உண்டு.
இல்லை என்று சொல்வதற்கு இனி கண்ணால் கண்ட சாட்சி ஒருவர் மட்டுமே இருக்கிறார். வரதராஜ பெருமாள். அவர் வருவாரா?
வெறும் ரூ.63 கோடிக்கு 5 விமான நிலையங்களை தாரை வார்த்த மகாராஷ்ட்ரா!
95 வருட குத்தகை அடிப்படையில் இந்த விமான நிலையங்களை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஏர்போர்ட் டெவலப்பர்ஸ் நிறுவனத்துக்குக் கொடுத்துள்ளது, மகாராஷ்ட்ர மாநில தொழில்துறை வளர்ச்சிக் கழகம் (MTDC).
நிச்சயம் இது குறைவான தொகைதான். ஆனால் அரசு எடுத்த முடிவு இது. வேறு நிறுவனங்களுக்கு என்றால் இதைவிட 5 மடங்கு அதிக தொகை கிடைத்திருக்கும், என்று மகாராஷ்ட்ர தொழில் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
யாவர்மால், நான்டெட், லாத்தூர், உஸ்மானாபாத் மற்றும் பாராமதி விமான நிலையங்களைத்தான் இப்படி தூக்கிக் கொடுத்துள்ளனர்.
இப்போது பொருளாதார நிலைமை சரியில்லாததால், இந்தத் தொகையோ போதும் என்று அரசு முடிவு செய்துவிட்டதாக மகாராஷ்ட்ர தொழில்துறை செயலாளர் ஏஎம் கான் தெரிவித்துள்ளார்.
அதனால்தான் வெறும் ரூ.63 கோடிக்கு 5 விமானங்களை, ஏதோ பாம்பே அல்வா மாதிரி 95 வருடத்துக்கு எழுதி வைத்திருக்கிறார்கள்.
விஷயம் வெளியில் கசியத் துவங்கிய பிறகு, மிகப் பெரிய போராட்டங்களை நடத்த பொது நல அமைப்புகள் மற்றும் எதிர்கட்சிகள் தயாராகி வருகின்றன.
Wednesday, August 5, 2009
தமிழகத்தில் டென்டருக்காக நடந்த லஞ்ச பேரம், வெளியான இரகசிய விடியோ
ஆளுங்கட்சியான தி.மு.க-வின் மாநில தொண்டரணி இணைச் செயலாளர், தமிழ்நாடு மின்வாரிய உயர்மட்ட ஆலோசனைக் குழு உறுப் பினர் என்றும் முன்னாள் கதர் வாரிய மகளிர் கூட்டுறவு சங்க தலைவர் என்றும் இவரது கறுப்பு - சிவப்பு பெயரோடு சொல்கிறது விசிட்டிங் கார்டு’! பளிச்சென்று முதல்வர் கருணாநிதியும் துணை முதல்வர் மு.க.ஸ்டாலினும் அந்த விசிட்டிங் கார்டில் புன்னகை பூக்கிறார்கள். எம்.ஏ., எம்.ஃபில் முடித் திருப்பதாகவும் சொல்கிறது இவரது கார்டு.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப் பாளையத்தில் தான் இவருக்கு வீடு என்றாலும்,
காயத்ரி ஸ்ரீனிவாஸ் நமக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்திருந்தது கோவை பீளமேடு அண்ணாநகரில் உள்ளஅவருடைய பங்களாவில்!
”ஆளுங்கட்சியின் பெயரால்… மத்திய - மாநில அமைச்சர்களிடம் சொல்லி காரியத்தை முடித்துக் கொடுப்பதற்கு ஏராளமான புரோக்கர்கள் இருக்கி றார்கள். அவர்களில் டாப் மோஸ்ட் புள்ளிதான் சத்தமில்லாமல் செயல் படும் காயத்ரி ஸ்ரீனிவாஸ்…” என்று தொடர்ந்து பல மாதங்களாக நமக்கு வந்துகொண்டிருந்த தகவல்களை உறுதிப்படுத்த எல்லா வழிகளிலும் முயன்றுகொண்டிருந்த சமயத்தில்தான், மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் கான்ட்ராக்ட் கள்எடுத்துக் கொடுக்கும் இடைத்தரகர் ஒருவர் நம்மைத் தொடர்பு கொண்டார்.
”அநியாயம் நடக்குதுங்க. முந்தியெல்லாம் காசு கொடுத்தா, அது போக வேண்டிய இடத்துக்கு முழுசா போயிடும். வேலையும் முடிஞ்சிடும். இப்போ நடுவில் உள்ள நந்திகளுக்கு தீனி போட்டே எங்க சொத்து அழிஞ்சுடும் போலிருக்கு. அதிலும் காயத்ரி ஸ்ரீனிவாஸ் மூலமா போனா, ரெட்டிப்பு செலவு ஆகுது. என்ன பண்றது? வேற யார் மூலமா போனாலும் காரியம் நடக்காதுனு கட்சிக்காரங்களே சொல்றாங்களே…” என்று சலித்துக் கொண்டார் அந்த இடைத்தரகர்
அப்போதும் நாம் நம்பத் தயாராக இல்லை. ஜூ.வி-க்கு மிக நம்பகமான ஒரு நபர், ”ரகசிய வீடியோ பதிவாகவே ஒரு பேரம் நடத்திப் பார்த்துவிட்டால் என்ன?” என்று முன்வர… அடுத்தடுத்து நடந்தன வேகமான ஏற்பாடுகள். இடைத்தரகர் அளித்த விவரங்களை மிக கவனமாக உள்வாங்கிக் கிரகித்துக்கொண்டபின்…. இரண்டு பேராக இந்த ஆபரேஷனைச் செய்வது என்று முடிவானது. அதாவது, இடைத்தரகர் போல நடிக்க ஒருவர்…. மத்திய அரசின் கான்ட்ராக்டைப் பெற விரும்பும் ஆந்திர மாநிலத்துக் கம்பெனியின் அதிகாரியாக ஜூ.வி. நபர் ஒருவர்…!
ஆப்டிகல் ஃபைபர் கேபிள்களை சாலைகளில் பதிப்பதற்காகத் தொலைத் தொடர்புத் துறையின் - பி.எஸ்.என்.எல்-லின் டெல்லி தலைமையகம் கடந்த ஜூலை மாதம் வெளியிட்டிருந்த டெண்டர் அறிவிப்புதான் இந்த இருவர் டீமின் ‘பொறி’!
காயத்ரி ஸ்ரீனிவாஸை தொடர்பு கொள்ளக்கூடியது என்று நம்மிடம் அளிக்கப்பட்ட செல்போன் நம்பரில் தொடர்பு கொண்டார் ‘இடைத்தரகர்’ (அதாவது இடைத்தரகராக நடிக்க முன்வந்தவர்). ஏற்கெனவே இன்னொரு நபர் மூலம் கான்ட்ராக்ட் தொடர்பான விவரங்களை காயத்ரி ஸ்ரீனிவாஸ் காதுக்கு அனுப்பி வைத்துவிட்டு… அதன்பிறகுதான் செல்போனில் விஷயத்துக்கு வந்தார். அந்த ஆடியோ பதிவு இதோ (’இடைத்தரகர் தொடர்புகொண்ட செல் நம்பர் 9442578555. தொடர்பு கொண்ட தேதி ஜூலை 23, வியாழன் மதியம் சுமார் 3 மணி) -
இடைத்தரகர்: ”மேடம்… அவங்க என்ன சொல் றாங்க… இப்ப… அதாவது… டெண்டர் டேட் ஆகஸ்ட் ஏழாம் தேதி தள்ளி வச்சிருக்காங்க.”
எதிர்முனை பெண் குரல்: ”சரி!”
இடைத்தரகர்: ”இப்ப டெண்டர் ஃபைல் எல்லாம் வந்துடுச்சு. நாளைக்கு நைட் கிளம்பி சனிக்கிழமை காலையிலே உங்களை பார்க்கட்டுமா?”
எ.மு.பெ.கு: ”எங்கே வந்து பார்க்கறீங்க?”
இடைத்தரகர்: ”கோயமுத்தூர்ல?”
எ.மு.பெ.கு: ”ரைட்டு! அவங்க (டெண்டர் எடுக்க விரும்பும்) கம்பெனியோட ஜி.எம்-மையும் ஒருதடவை அனுப்பி வைக்கிறேன்னு சொன்னாங்க. அவரு வந்து கன்ஃபார்ம் பண்ணுவாரு…”
இடைத்தரகர்: ”அவரு வந்து கன்ஃபார்ம் பண்ணு வாரு… இன்பிட்வீன் உங்களுக்கு என்ன சேரவேண்டியதோ அதை பேசிட்டு ஒரு டோக்கன் அட்வான்ஸ் மாதிரி த்ரீ டேஸ்ல குடுக்கச் சொல்லிடறேன். ஏன்னா… நாள் நெருங்கிதான் இருக்கு!”
எ.மு.பெ.கு: ”ஆகஸ்ட் ஏழுன்னா ஃபுல் டீடெயில் ஸையும் கொண்டாந்துடுங்க.. அவரு(?) சி.எம்.டி-யை (பி.எஸ்.என்.எல். அதிகாரி?) வச்சுப் பேசுவாரு. சனி, ஞாயிறு மெட்_ராஸ்ல இருப்பாருனு நினைக்கிறேன்… இல்லேன்னா ஊட்டி வந்திடுவாரு. அப்படி ஊட்டி வந்தார்னா, நீங்க கோயமுத்தூர் வரும்போது ஊட்டிக்குப் போய் பார்த்துடலாம்.”
இடைத்தரகர்: ”ஓ.கே… ஓ.கே. உங்களை முதல்ல பார்த்துட்டோம்னா அவங்களுக்கு சேட்டிஸ்ஃபை ஆயிடும்!”
எ.மு.பெ.கு: ”ரைட்டு!’
இடைத்தரகர்: ”ஏன்னா… மேடம்னாலேதான் எல்லாம் முடியும்னு நான் சொல்லி வச்சிருக்கேன்!….”
இவ்வாறாக நீளும் அந்த தொலைபேசி உரையாடலின் பதிவை முதலில் பத்திரப்படுத்திக் கொண்டோம். ”மீடி யேட்டரே இதுல கிடையாது… டைரக்டா அவரே(?)தான் பேசுவாருங்க” என்பது போன்ற டெல்லி தொடர்புகள் தவிர, வேறு பல விஷயங்களும் அந்த உரையாடலில் பேசப்படுகின்றன. இப்போதைக்கு அவை இந்தக் கட்டுரைக்குத் தொடர்பில்லாததால் வாசகர்களின் பார்வைக்கு அளிக்கவில்லை!
ஜூலை 25-ம் தேதி, சனிக்கிழமை காலை 10.40 மணிக்கு கோவையில் பீளமேடு அண்ணாநகர் வீட்டில் காயத்ரி ஸ்ரீனிவாஸ் எதிரில் இடைத்தரகராக ஒரு நபரும் ஜூ.வி. நபரும் ஆஜராகிவிட்டார்கள். நேராக அந்த வீட்டுக்குப் போய்விட முடியவில்லை. பக்கத்துத் தெருவிலேயே நம்மை நிற்கும்படி செல்போனில் உத்தர விட்டார்கள்!
நாமும் அங்கே இனோவா காரை நிறுத்திவிட்டுக் காத்திருக்க… ‘ராஜேஷ்’ என்று தன்னை அறிமுகப் படுத்திக்கொண்ட ஒரு நபர் அங்கே வந்து காரில் ஏறிக்கொண்டு காயத்ரி ஸ்ரீனிவாஸ் வீட்டுக்கு வழி காட்டினார் (நமது வீடியோ கேமரா பதிவு முழுவதும் இவரும் வருகிறார். விவரமறிந்த தி.மு.க. வட்டாரத்தில் இவர் உருவத்தைக் காட்டி விசாரித்தபோது, ”ராஜேஷ்னா சொன்னாரு? இவர் பேரு சந்திரமோகனாச்சே… அருப்புக்கோட்டை பக்கத்துல பாளையம்பட்டிதான் இவரோட சொந்த ஊரு. அருப்புக்கோட்டையில் கேபிள் ஆபரேட்டரா கஷ்டப்பட்டு ஜீவனம் பண்ணிக் கிட்டிருந்தார் சந்திரமோகன்… செஞ்சியார் மத்திய அமைச்சரா இருக்கும்போது சி.பி.ஐ. வழக்கில் அவரோட உதவியாளர் பாபு மாட்டுனாரே ஞாபகம் இருக்கா..? பாபுவுக்கு ரொம்ப வேண்டப்பட்டவரா சந்திரமோகன் ஆயிட்டாருன்னு பிறகு சொன்னாங்க. இப்ப கோவை ஏரியாவில் காரு, பங்களானு ஜம்முனு இருக்கிற சந்திரமோகன், தன்னை காயத்ரி ஸ்ரீனிவாஸோட உதவி யாளர்னு சொல்லிக்கிறாரு” என்று நமக்கு வேறுவிதமான விளக்கம் ‘ராஜேஷ்’ பற்றி கிடைத்தது!).
நிற்க….
‘ராஜேஷ்’ என்கிற சந்திரமோகன் இனோவா காரில் ஏறிக்கொண்டதோடு இடைத்தரகரிடமும் ஜூ.வி. நபரிடமும் பல்வேறு விதமான கேள்விகளைக் கேட்டு திருப்தி ஆனவுடன்தான், காயத்ரி ஸ்ரீனிவாஸின் பங்களா வுக்கு அழைத்துச் சென்றார். மேற்கொண்டு நடந்ததை ஜூ.வி. நபர் இங்கே விவரிக்கத் துவங்குகிறார் -
வீட்டுக்குள் போன ‘ராஜேஷ்’, அங்கிருந்த வேலைக் காரரிடம், ”பீமா எக்கட?” (பீமா எங்கே) என்றார். கொஞ்ச நேரத்தில் கொழுகொழுவென்று ஒரு கறுப்பு நாய் ஒன்று எங்களை நோக்கி ஓடி வந்தது.
”அது எதுவும் செய்யாதுங்க. எங்க மேடமுக்கு எல்லாமே இந்த பீமாதான்” என்றபடி எங்களை சோபாவில் அமரச் செய்த ‘ராஜேஷ்’ கலை நயம்மிக்க ஊஞ்சலில் அமர்ந்துகொண்டார். அந்த வீட்டு ஹாலின் ஷோகேஸில் ஸ்டாலின், ஆற்காட்டார், அன்பழகன் என தி.மு.க-வின் மூத்த தலைவர்களுடன் காயத்திரி ஸ்ரீனிவாஸ் சேர்ந்து நிற்கும் புகைப்படங்கள் அழகாக, வரிசையாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. தன் மகனோடு தானும் சேர்ந்து தமிழக முதல்வர் கருணாநிதியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனியாக தொங்க விட்டிருந்தார் காயத்ரி.
பீமா, ஹாலைச் சுற்றி ஒரு ரவுண்ட் அடித்து பெட் ரூமுக்குள் போனபிறகு காயத்ரி பெட்ரூமிலிருந்து ஹாலுக்கு பிரசன்னமாகி, எங்கள் எதிரில் சோபாவில் அமர்ந்துகொண்டார்.
காயத்ரி ஸ்ரீனிவாஸ்: ”என்ன மேட்டர்? செப்பண்டி!”
இடைத்தரகர் : ”ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் டெண்டர்தான், மேடம்… தமிழ்நாட்டுல இருநூறு கிலோ மீட்டருக்கு கேபிள் பதிக்க (என்னைக் காட்டி) இவங்க கம்பெனி பிளான் பண்ணுது!”
காயத்ரி: ”என்ன பர்ப்பஸ்?”
காரில் அந்த வீட்டை அடையும்போதே ‘ராஜேஷ்’ வசம் இடைத்தரகர் முழு விவரம் சொல்லி, டெண்டர் காப்பியும் கொடுத்திருந்ததால்… அவரே காயத்ரியிடம் எல்லாம் விளக்குகிறார், தெலுங்கில்!
இடைத்தரகரைப் பார்த்து காயத்ரி: ”ராஜா(?) சேஸ்தாரு… ராஜாதான் செய்வாரு!”
இடைத்தரகர்: ”மேடம் பத்தி சொன்னாங்க. கேள்விப்பட்டுதான் உங்களைப் பிடிச்சு இந்த வேலையைச் செய்யலாமுன்னு….”
காயத்ரி: ”பை எலெக்ஷன் வருது… எப்படியும் (கட்சியில் எனக்கு) புரோக்ராம் கொடுத்துடுவாங்க. தொகுதிக்குப் போகணும். அதில்லாம பீமாவை விட்டுட்டு எங்கயும் போக மாட்டேன். டெல்லிக்கு, சென்னைக்குப் போனாலும்கூட பீமாவையும் கூட் டிட்டுப் போயிடுவேன். போன வாரம் மினிஸ்டர்(?) இங்கதான் தங்கியிருந்தாரு!”
இடைத்தரகர்: ”இந்த வீட்டுலயா?”
காயத்ரி: ”குன்னூருக்குப் போனவர், போன வேகத்துலயே இறங்கிட்டாரு. அவருக்கு குளிர் ஒத்துக் காது. கோயம்புத்தூர் வந்து ரெஸிடன்ஸியில அவரு தங்கிட்டாரு. அமைச்சரை ஹோட்டல்ல ரெஸ்ட் எடுக்க விட்டுட்டு அவங்க ஒய்ஃப் எங்க வீட்டுல தங்குனாங்க. உங்க மேட்டரை அமைச்சர்கிட்ட சொல்லிடறேன். உங்களை இந்த வேலைக்காக யார் முன்னால உட்கார வைக்கிறேங்கறதுதான் இங்க முக்கியம்! இதைப் போலத்தான் பி.எஸ்.என்.எல். கான்ட்ராக்ட் ஒண்ணை முடிச்சுக் கொடுத்தேன். இதோ இவரோட (’ராஜேஷ்’ பக்கம் கைகாட்டி) ஃபிரெண்டுக்குதான் முடிச்சுக் கொடுத்தோம். அது பி.எஸ்.என்.எல். விளம்பர கான்ட்ராக்ட்…”
இடைத்தரகர்: (ஏற்கெனவே விவரம் தெரிந்தவராக) ”செஞ்சியார் பி.ஏ-வா இருந்த பாபுவுக்கா?”
காயத்ரி: ”ஆமா…!”
இடைத்தரகர்: ”ராஜாவுக்கு வேணுங்கறதை நாங்களே தரணுமா?”
காயத்ரி: ”அவர் வாங்க மாட்டார். என்ன பண்ணணுங்கறதை அவரே சொல்லுவார்!”
ராஜேஷ்: ”அதையெல்லாம் ஸ்பிளிட் பண்ணி பிரிச்சுடுவாங்க…”
காயத்ரி: ”நீங்க உங்க மேட்டரை மினிஸ்டரை வெச் சிட்டு எக்ஸ்ப்ளெய்ன் பண்ணணும். சி.எம்.டி-யெல்லாம் பழம் தின்னு கொட்டை போட்ட ஆளு. என்ன பண்ணணுமோ அதை அவர் பார்த்துக்குவாரு. (டெல்லி?) சஞ்சார் நிகம் ரிசப்ஷன்ல உங்களை உட்கார வெச்சு, மேலே அனுப்பிடுவேன். என் பேர்கூட (விசிட்டர் புக்கில்?) வராது. மினிஸ்டரே கூப்பிட்டாதான் உங்களால அந்த கட்டடத்துக்குள்ள போகமுடியும். அவரோட பி.ஏ. செந்திலியாவும் அங்கே இருப்பார். உங்களுக்கு மினிஸ்டர் பர்ஸனல் சிட்டிங் கொடுப்பார். அதுக்கெல்லாம் நான் கியாரண்டி! ஆனா ஒண்ணு.. நாங்க ஃபிளைட் சார்ஜ் போட்டு டெல்லிக்கு வர மாட்டோம். என்கூட ஒருத்தர் வருவாரு. பெரிய புராஜெக்ட்னாத்தான் மினிஸ்டர் வருவாரு…”
ராஜேஷ்: ”இந்த மாதிரி விஷயமெல்லாம் ஒரே சேனல்லதான் நீங்க மூவ் செய்யணும்!”
காயத்ரி: ”நான் ரொம்பவும் வெளியில வரமாட்டேன். தமிழ்நாட்டுல இ.பி. விவகாரங்களையெல்லாம் இவருதான் (ராஜேஷ்) பார்த்துக்குவாரு. மேட்டூர் தெர்மல் பிளான்ட்ல ஆஷ் எடுக்கறதுக்கெல்லாம் இவர்தான் போவாரு. ஸ்டேட்ல இ.பி., ஹெல்த், டிரான்ஸ்போர்ட், ஹைவேஸ் எதுனாலும் நம்ம வேலையை முடிச்சுக்கிடலாம்.”
ராஜேஷ்: ”ஆமா… நாலும் நைன்ட்டி நைன் பர்சன்ட் முடிச்சிடலாம்!”’
காயத்ரி: சாமிநாதன் (நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன்?) நம்ம பையன் தான். என் சொந்த முயற்சியிலதான் மினிஸ்டர் ஆனான். இ.பி-யிலும் பெரிய லெவல்னா சொல்லுங்க. நீட்டா முடிச்சுடலாம். எங்க இருந்தாலும் என்னோட பாலிஸி என்ன தெரியுமா? சம்பந்தப்பட்ட அமைச்சரோடவே டைரக்ட் சிட்டிங் ஏற்பாடு செஞ்சிடுவேன். சக்சஸ்தான் எனக்கு முக்கியம்!”
இடைத்தரகர் ஆப்டிகல் ஃபைபர் கேபிள் பதிப்பது பற்றி சொல்லச் சொல்ல… காயத்ரி சிறு நோட்டில் குறிப்பெடுத்துக் கொண்டார்.
தமிழ்நாட்டில் மொத்தம் 244 கிலோமீட்டருக்கு வை-மேக்ஸ் உள்ளிட்ட புதிய தொழில்நுட்பத்துக்காக ஆப்டிகல் ஃபைபர் கேபிளை பதிப்பதற்கான கான்ட் ராக்ட் என்றும், இந்த மாநிலத்தில் மட்டும் 60 கோடி ரூபாய்க்கான விவகாரம் என்றும் ராஜேஷ§டன் உரை யாடல் நடக்கிறது. 3-ஜி மற்றும் வை-மேக்ஸ் பற்றி விளக்கமாகவே கேட்டுக் கொள்கிறார் காயத்ரி.
”தமிழ்நாட்டுல மட்டும்தான் கான்ட்ராக்ட் எடுப் பீங்களா? ஆந்திரா, கர்நாடகாவுலகூட எடுக்கலாமே..?” என்றும் என்னிடம் (ஜூ.வி. நபர்) கேட்டபடியே கையடக்க நோட்டில் விவரங்களைக் குறிப்பெடுத்துக் கொள்கிறார்.
என்னை (ஜூ.வி. நபர்) கான்ட்ராக்ட் பெற விரும்பும் கம்பெனியின் ஜி.எம். என்று அறிமுகப்படுத்தியிருந்ததால் இடையிடையே சில விவரங்களை ‘ராஜேஷ்’ கேட்டு செக் பண்ணிக்கொண்டே இருந்தார். உரையாடல் நடந்துகொண்டிருந்தபோதே, ‘ராஜேஷ்’ வைத்திருந்த செல்போனை வாங்கி யாருக்கோ டயல் செய்தார் காயத்ரி. படுஅந்நியோந்நியமாக அவர் பேசியதன் விவரம் இதுதான் -
”நான்தான் காயத்ரி ஸ்ரீனிவாஸ்! நேத்து நைட் வந்துட் டீங்களா? (இடைவெளி) ஊட்டிக்கு வர்றீங்களா? (இடை வெளி) எப்ப டெல்லிக்குப் போறீங்க? (இடைவெளி) அப்படியா, சரி நான் நேர்ல வந்து உங்களைப் பார்க் கறேன்!”
போனை கட் செய்தவர் எங்கள் பக்கம் திரும்பி, ”இந்த வீக் அவர் ஊட்டிக்கு வரலையாம். திங்கள்கிழமை டெல்லிக்குக் கிளம்புறாராம். அவர் ஊட்டிக்கு வந்தார்னா இப்பவே உங்களை இவருகூட (’ராஜேஷ்’ என்கிற சந்திரமோகன்) அனுப்பி வச்சிருப்பேன்!”
இடைத்தரகர்: ”நீங்க எப்ப அரசியலுக்கு வந்தீங்க, மேடம்?”
காயத்ரி: சிரித்துக் கொண்டே.. ”ஆச்சு, இருபது வருசமாச்சு..! நான் அரசியலுக்கு வந்ததே பிஸினசுக்காகத்தான்… வேற எதுக்கும் இல்ல!”
மீண்டும், பி.எஸ்.என்.எல். ஆப்டிகல் கேபிள் பற்றி விலாவாரியாகப் பேசினார். திரும்பவும் சந்திரமோகன் டெண்டர் குறித்த விஷயங்களை காயத்ரிக்கு தெலுங்கிலும் தமிழிலுமாக விளக்கினார்.
”மொத்த கான்ட்ராக்டையும் உங்க ஒருத்தருக்கே தரமாட்டாங்க புரிஞ்சுதா?” என்றும், ”உங்க கான்ட்ராக்டுக்குள்ளே இன்னொருத்தர் யாராச்சும் ஒரு பார்ட் எடுத்து செய்யறதா இருந்தா, அதுக்கும் நீங்க தயாரா இருக்கணும், புரிஞ்சுதா?” என்றும் காயத்ரி எங்களிடம் கேட்டு உறுதி வாங்கிக்கொண்டார்.
இடையிடையே தி.மு.க-வின் பெருந்தலைகள், குடும்பங்கள் பற்றி சில ‘புள்ளி’விவரங்கள் வந்து விழுந்தன. அவையெல்லாம் இந்த விவகாரத் தோடு தொடர்பில்லாதவை என்பதாலும், தேவையில்லாமல் யார் மனதையும் புண்படுத்தக்கூடாது என்பதாலும் இங்கே வெளியிடாமல் தவிர்க்கிறோம்.
ராஜேஷ்: ”கேபிள் பதிக்கிற கான்ட்ராக்ட் மட்டும்தான் நீங்க எடுக்கப் போறீங்களா..? இல்லாட்டி அதுக்கான கேபிளும் சப்ளை பண்ண விரும்பறீங்களா?”
இடைத்தரகர்: ”கேபிள் பதிக்கறதுக்கு மட்டும்தான் நாங்க டெண்டர் கேட்கலாமுன்னு இருக்கோம். மொத்த புராஜெக்ட் காஸ்ட் எப்படியும் இருநூறு கோடிக்கு மேல வரும்னு சொன்னாங்க…”
காயத்ரி: ”கோடின்னா அந்த வீடு(?) கண்டிப்பா உள்ளே வந்துடும், புரியுதுங்களா, அதான்… சம்பந்தப்பட்ட குடும்பம் உள்ளே வரும். (அடுத்தடுத்து ஆளுங்கட்சியில் சில பெரிய பெயர்களாகச் சொல்லி) ………. பிரஷ்ஷர் வரும். இப்படித்தான் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பு சம்பந்தமா பி.எஸ்.என்.எல் விளம்பர கான்ட்ராக்டை பாபு கேட்டப்ப, அமைச்சர் தரலை. ‘நீ பாகிஸ்தான் மேட்ச் வரும்போது விளம்பரம் கேளு, தர்றேன்’னாரு. சொன்னபடியே தந்தாரு. ஏன்னா எல்லாரையும் அட்ஜஸ்ட் பண்ணி அவர் போயாகணும். அவர் உட்கார்ந்திருக்கற இடம் அந்த மாதிரி. தனக்கு சிம்மாசனம் கொடுத்த(?) இடத்துக்கு ஏதாவது கொடுத்தாகணும்ங்கறது அவரோட பாலிஸி. சென்ட்ரல் கவர்ன்மென்ட்ல ஒரு இணை அமைச்சரை தனியா போட்டு இதையெல்லாம் வாட்ச் செய்வாங்க. அதிகாரிங்க ஒரு லாபி பண்ணுவாங்க. நம்ம அமைச்சர் அவங்களை மறுத்துப் பேச மாட்டார். ஏன்னு உங்களுக்குப் புரியுதா? நாமளா இருந்தா… ‘நான்தான் மந்திரி! மூடிட்டு கையெழுத்துப் போடு’னு (அதிகாரிகளிடம்) சொல்லுவோம். அவர் அப்படியெல்லாம் இல்லை!”
இடைத்தரகர்: ”இவ்வளவு யதார்த்தமா பேசறீங்க… இவ்ளோ தூரம் இன்ட்ரடியூஸ் பண்றீங்க. உங்களுக்கு ஒரு ட்வென்ட்டி லேக்ஸ் (இருபது லட்சம்) வரைக்கும் கொடுக்கலாம்னு இவங்ககிட்டே (என்னைக் காட்டி) சொன்னேன், மேடம்!”
காயத்ரி: ”பணத்தை முதல்ல வாங்க மாட்டோம். முதல்ல டெல்லிக்குப் போவோம். நானும் உங்களைப் புரிஞ்சுக்கணும் இல்லையா… நீங்க டெல்லிக்கு வாங்க. அங்கே ரிசப்ஷன் எப்படி இருக்குனு பாருங்க. அப்புறமா பார்த்துக்கலாம். நீங்க இவ்வளவு தூரம் சொல்றீங்க. இந்த புராஜெக்டை சக்ஸஸ் பண்ணிக் காட்டுறேன். அப்புறம் நீங்களே பார்த்துக் கொடுங்க! அந்தக் குடும்பமே(?) தலையிட்டாலும் பரவாயில்லை. ஆற்காட்டாரை வெச்சு முடிச்சுத் தரேன்!”
ராஜேஷ்: ”இங்கதான் பெரிய குடும்பம்… பிரஷ்ஷர்னு இருக்கும். வேற ஸ்டேட்லயெல்லாம் இப்படியெல்லாம் இல்ல!”
காயத்ரி: ”மேட்டர்னு பெத்தாயின முந்தட்டுல பெட்டுத்தோம். (விஷ யத்தை பெரியவர் முன்னாடி வெப்போம்) சக்சஸ் சேஸ்தாம். நீங்க மினிஸ்டரைப் பார்க்கும்போது நல்லா விளக்கமா புரியுறமாதிரி பேசிடணும். இல்லைன்னா அவர் தன்னோட பி.ஏ-வைப் பார்க்கச் சொல்லிட்டுப் போயிடுவாரு. எப்ப டெண்டர் முடியுது? டெண்டர் போட்டுத்தான் இதைப் பண்ணணுமா? மினிஸ்டரே பண்ணிடக் கூடாதா?”
உடனே, இடைத்தரகர் முதலி லிருந்து அந்த டெண்டர் பற்றி விவரிக்கும் காட்சிகளும், அதை காயத்ரி குறிப்பெடுத்துக் கொள்வதும் நாங்கள் கொண்டு போன ரகசிய வீடியோ கேமராவில் அப்படியே பதிவாகியுள்ளது.
காயத்ரி: ”மினிஸ்டர் தொகுதிக்கு வந்தா இதைப் பத்திப் பேச முடியாது. இந்தப் பொம்பளை இங்க ஏன் வந்தாங்கன்னு தொகுதியில பார்ப்பாங்க. அவரும் நம்மளை பார்க்க மாட்டாரு. நாம் டெல்லிக்கு போய்த்தான் இந்த மேட்டரை முடிக்கணும். புதன்கிழமை டெல்லிக்குப் போயிடணும். வியாழக்கிழமை காலையில மினிஸ்டர் வீட்டுக்குப் போய் நேர்ல உங்க விஷயத்தைப் பத்திப் பேசிடுவேன். அப்புறம் நிகம் (தொலைத் தொடர்பு டெல்லி அலுவலகம்) வந்து பார்த்திடுவாரு…”
இடைத்தரகர்: (என்னைக் காட்டி) ”நான்தான் இந்த கம்பெனிக்காரங்களை உங்களுக்கு அறிமுகம் செஞ்சு வெச்சிருக்கேன். ரொம்ப நாளா உங்க அப்பாயின்ட் மென்ட் கிடைக்காம கஷ்டப்பட்டு உங்களைப் பார்க்க வெச்சிட்டேன். எனக்கு இதுல என்ன பங்குங்கறதையும் நீங்களே சொல்லிடுங்க, மேடம்…”
காயத்ரி சிரித்துக் கொண்டே தலையாட்டுகிறார்.
ராஜேஷ்: ”அம்மா யாரையும் விட்டுர மாட்டாங்க. நீங்க கேக்கவே வேண்டியதில்லை. அவங்களை
நம்புங்க…”
மீட்டிங் முடியும் தருணத்தில் திரும்பவும் அறைக்குள் இருந்து பீமா வருகிறது. நாம் கொண்டு போயிருந்த ஸ்வீட் பாக்ஸை வாயால் கவ்வி காயத்ரியிடம் கொடுக்கிறது.
காயத்ரி: ”எதுன்னாலும் இது என்கிட்டதான் கொடுக்கும். எனக்குப் பிடிச்சதை கொடுக்கும். என் மனசு இதுக்குப் புரியும்!” என்று சொல்லிக் கொண்டிருக் கும்போதே இடைத்தரகர் தயார் செய்து எடுத்துப் போயிருந்த பி.எஸ்.என்.எல். தொடர்பான டெண்டர் கோப்புகளை பீமா சட்டென்று கவ்விக்கொண்டு ஓடவும்….
காயத்ரி: ”பார்த்தீங்களா… பீமா கவ்வியாச்சு. இந்த வேலையை பீமா செய்யச் சொல்லுது!” என்றபடியே வாசல் வரை வந்து எங்கள் இருவருக்கும் விடை கொடுத் தார்.
அடுத்தநாள், ஜூலை 26-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை ‘இடைத்தரகராக’ நடித்தவருக்கு போன் செய்தார் ‘பிரகாஷ்’ என்று அறிமுகப்படுத்திக்கொண்ட நபர். அழைப்பு வந்த செல் நம்பர் 9842299722.
”மினிஸ்டர்கிட்டே பேசியாச்சு… நாங்க அந்த கம்பெனி ஜி.எம்-கிட்டே அர்ஜென்ட்டா பேசணும். முக்கியமா மேடம்தான் பேசணும்னு சொன்னாங்க. அவரைப் பேசச் சொல்லுங்க” என்கிற ரீதியில் அடுத்தடுத்து போன் வந்துகொண்டே இருந்தது.
‘ராஜா’ என்றும் ‘மினிஸ்டர்’ என்றும் காயத்ரி ஸ்ரீனிவாஸ் கூறுவது மத்திய அமைச்சரும், சம்பந்தப்பட்ட துறைக்கு பொறுப்பானவருமான ஆ.ராசாவை குறிப்பிட்டுத்தான் என்றே புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. அமைச்சரின் பெயரால் நடக்கும் இந்த பேரத்தின் மூலம் நிஜமாகவே கான்ட்ராக்ட்டுகளை முடிக்க முடியுமா… அப்படி இதற்குமுன் முடிக்கப்பட்டிருக்கிறதா என்பதையெல்லாம் கண்டு பிடிக்கும் பொறுப்பை மத்திய - மாநில அரசுகளிடமே ஒப்படைக்கிறோம். இந்த ஆபரேஷனுக்குப் பிறகு நமது இருவர் டீம் பதிவு செய்து கொண்ட விவரங்களையும், எந்த இடத்திலும் அளிக்கத் தயாராகஇருக்கிறோம்.
காயத்ரி ஸ்ரீனிவாஸ் என்கிற இந்தப் பெண்மணி ஆளுங்கட்சியான தி.மு.க-வைச் சேர்ந்தவர்! அவரிடம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள போலீஸாரே விசாரணை நடத்தினால் எதிர்க்கட்சிகளாலும் மற்றவர்களாலும் அது ஒருதலைபட்சமாக பார்க்கப்படும் என்று முதல்வர் கருதினால்… பேசாமல் இதை சி.பி.ஐ. விசாரணைக்கேகூட விட்டுவிடலாம்.
இரகசிய கேமராவில் பதிவு செய்யப்பட்ட நேரடி வீடியோ காட்சிகள்
ஜுனியர் விகடன் 2009 ஆகஸ்ட்-2