டெல்லி
யில் 15வது புத்தக விழா தொடங்கியுள்ளது. மத்திய கம்பெனி விவகாரத்துறை இணை அமைச்சர்
சல்மான் குர்ஷித் இதைத் தொடங்கி வைத்தார். செப்டம்பர் 6ம் தேதி வரை இது நடைபெறுகிறது.இந்த புத்தக விழாவில் அபுதாபி, ஈரான், சீனா, பாகிஸ்தான்
, அமெரிக்கா
மற்றும் பிராங்க்பர்ட் புத்தக விழா ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர்.இலக்கியத்திற்கு இந்த ஆண்டு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்தியா
மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 230க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் தங்களது படைப்புகளை இங்கு காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கின்றனர்.இந்த ஆண்டு வைக்கப்பட்டுள்ள நூல்களில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது ஜஸ்வந்த் சிங்கின் ஜின்னா நூல்தான். அந்த நூலுக்கு ஏக கிராக்கி ஏற்பட்டுள்ளதாம்.
No comments:
Post a Comment