Thursday, August 6, 2009

வெறும் ரூ.63 கோடிக்கு 5 விமான நிலையங்களை தாரை வார்த்த மகாராஷ்ட்ரா!

Airport
மும்பை: மகாராஷ்ட்ரா மாநிலத்தின் 5 விமான நிலையங்களை வெறும் ரூ.63 கோடிக்கு அனில் அம்பானிக்கு தாரைவார்த்துக் கொடுத்துள்ளது அம்மாநில அரசு.

95 வருட குத்தகை அடிப்படையில் இந்த விமான நிலையங்களை அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஏர்போர்ட் டெவலப்பர்ஸ் நிறுவனத்துக்குக் கொடுத்துள்ளது, மகாராஷ்ட்ர மாநில தொழில்துறை வளர்ச்சிக் கழகம் (MTDC).

நிச்சயம் இது குறைவான தொகைதான். ஆனால் அரசு எடுத்த முடிவு இது. வேறு நிறுவனங்களுக்கு என்றால் இதைவிட 5 மடங்கு அதிக தொகை கிடைத்திருக்கும், என்று மகாராஷ்ட்ர தொழில் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

யாவர்மால், நான்டெட், லாத்தூர், உஸ்மானாபாத் மற்றும் பாராமதி விமான நிலையங்களைத்தான் இப்படி தூக்கிக் கொடுத்துள்ளனர்.

இப்போது பொருளாதார நிலைமை சரியில்லாததால், இந்தத் தொகையோ போதும் என்று அரசு முடிவு செய்துவிட்டதாக மகாராஷ்ட்ர தொழில்துறை செயலாளர் ஏஎம் கான் தெரிவித்துள்ளார்.

அதனால்தான் வெறும் ரூ.63 கோடிக்கு 5 விமானங்களை, ஏதோ பாம்பே அல்வா மாதிரி 95 வருடத்துக்கு எழுதி வைத்திருக்கிறார்கள்.

விஷயம் வெளியில் கசியத் துவங்கிய பிறகு, மிகப் பெரிய போராட்டங்களை நடத்த பொது நல அமைப்புகள் மற்றும் எதிர்கட்சிகள் தயாராகி வருகின்றன.

No comments: