Sunday, August 30, 2009

அமெரிக்காவில் 8 மாதத்தில் 84 வங்கிகள் திவால்

நியூயார்க்: அமெரிக்காவில் கடந்த 8 மாதங்களில் மட்டும் 84 வங்கிகள் திவால் ஆகி மூடப்பட்டுள்ளன.

தொடர்ந்து நீடித்து வரும் நிதி நெருக்கடியை இது காட்டுகிறது. வெள்ளிக்கிழமையன்று அஃபினிட்டி வங்கி, மெய்ன்ஸ்ட்ரீட் வங்கி, பிராட்போர்ட் வங்கி ஆகியவை மூடப்பட்டன.

கடந்த ஆண்டில் வெறும் 25 வங்கிகள் தான் மூடப்பட்டன. ஆனால் இந்த ஆண்டு அதை விட மூன்று மடங்கு வங்கிகள் இதுவரை மூடப்பட்டுள்ளன.

இதுதவிர எந்த நேரத்திலும் மூடப்படும் அபாயம் உள்ளதாக 416 வங்கிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனவாம்.

அமெரிக்காவின் பொருளாதாரம் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்புவதற்கான அறிகுறிகள் காணப்பட்டாலும் கூட சிறிய வங்கிகளால் தாக்குப் பிடியாத நிலையே அங்கு காணப்படுகிறது.

No comments: