Thursday, January 8, 2009

பாஜக தலைமையகத்தில் திருட்டுப்போன கோடிகள் தீவிரவாதிகளுடையதா? தொடரும் சந்தேகங்கள்



தமிழ்மாறன்

அரசியல் கட்சிகள் நடத்துவது என்பது லேசுப்பட்ட காரியமல்ல. அதிலும் அகில இந்திய கட்சிகள் நடத்துவது என்பது கத்திமேல் நடப்பது போல் கந்தகக் கிடங்குகளில் உலவச் செல் வதைப் போல கடினமான ஒன்றுதான். எவ்வளவு பணத்தைக் கொட்டினாலும் போடு போடு என வயிறு நிறையாமல் கத்தி மிரட்டும் ராட்சத யானை அது. காங்கிரஸ் கட்சி துவக்க காலத்தில் பல்வேறு தியாகங்களை நிதி ஆதாரங் களைப் பெருக்கும் விஷயத்திற்காக காங்கிரஸ் செய்ய வேண்டியிருந்தது. காந்தி, ஆஸாத், நேதாஜி போன்றோரின் தியாகம் அளவிட முடியாதவை. ஜவஹர் லால் நேரு தனது அலகாபாத் ஆனந்த பவனத்தையே கட்சிக்காக விற்றுத் தீர வேண்டிய நிலை ஏற்பட்டது. இன்று காங்கிரஸ் அதிக காலம் இந்தியாவை ஆட்சி செய்த ஒரே ஆளும் கட்சி என்கிற விதத்திலும் அது செழிப்புடன் கொழிப் புடன் காட்சி அளிக்கலாம்.


இந்தியாவில் பல மாநிலங்களில் ஆட்சி செலுத்தும் இடதுசாரிகளின் நிலை இன்றும் வீதிக்கு வீதி உண்டியல் குலுக்கும் நிலையிலேயே உள்ளது. நிதி என்ற இரட்டை மிரட்டல் வார்த்தையைக் கண்டு அஞ்சியே இன்று எத்தனையோ அதிரடி முடிவுகளை எடுக்க முடியாமல் அடக்கி வாசிக்கின்றன.
ஆனால் பாஜக என்ற பழமைவாத, மதவாத, பிரிவினைவாத பாசிச கட்சிக்கு பணம் ஒரு பிரச்சினையாக என்றுமே இருந்ததில்லை. ஏனெனில் அவர்கள் இரண்டு எம்பிக்கள் கூட பெறாத கால கட்டங்களில் கூட தனி விமானங்களில் தேர்தல் பிரச்சாரங்களுக்காக பரந்த இந்திய தேசம் முழுவதும் பறந்தார்கள்.


பாஜகவின் தலைவர்கள் என்றாலே கட்டுக்கட்டாக பணம் வாங்கிய வீடியோ காட்சிகள் உங்களுக்கு நினைவு வராமல் போகாது.


எந்த அளவுக்கு அவர்கள் கீர்த்தி நிறைந்தவர்கள் (!) என்றால் ராணுவத்தி னருக்கான சவப்பெட்டிகள் விஷயத்தில் கூட கேவலமான முறையில் முறைகேடு களை நிகழ்த்தினார்கள். ஆட்சியில் இருந்தால்தான் இந்த லட்சணம். ஆட்சியில் இல்லாவிட்டால் வாலை சுருட்டிக் கொண்டு தேமே என உட்காரு வார்கள் என சிலர் நினைக்கலாம். அந்த நினைப்பையும் கெடுப்பதைப் போன்ற ஒரு கண்றாவிக் காட்சி பாஜகவின் அகில இந்திய தலைமையகத்தில் அரங்கேறியுள்ளது.


கதவு எண் 11, அசோகா சாலை, புது டெல்லி என்பது பாஜகவின் அகில இந்திய தலைமை அலுவலகம் அமைந்திருக்கும் முகவரியாகும்.
இங்கு அக்கட்சியின் அகில இந்தியத் தலைவர் ராஜ்நாத் சிங்கின் பிரத்யேக அறைக்கு அடுத்தபடியாக ஒரு சிறிய மர்மமான அறை அமைந்திருக்கிறது. இது அலுவலகத்திலேயே மிகவும் முக்கியத்துவம் (!) வாய்ந்த அறை. ஆம் கட்சிக்காக வழங்கப்படும் பணத்தில் கணக்கு (!) காட்டியது போக மீதமுள்ள கரன்சிக் கட்டுகள் பதுக்கி வைக்கப்படும் அறை அதுவாகும்.


கடந்த மாதம் 26ஆம் தேதி அந்த அறையில் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்ட பணம் தான், பாஜகவின ரால், பாஜகவுக்கு வழங்கப்பட்ட பணம், பாஜக அலுவலகத்தில் இருப்பவர்களால் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளை யடிக்கப்பட்ட பணம் இரண்டு கோடியே அறுபது லட்சம் எனக் குறிப்பிடப்பட் டாலும் நிஜமான தொகை இதை விட அதிகமாக இருக்கும் என்றே கருதப் படுகிறது.


திருடுபோனதோ மிகப்பெரிய தொகை. ஆனால் இதுகுறித்து முறை யான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வில்லை.


காவல்துறையினரிடம் புகார் கொடுத் திருக்க வேண்டும் என்றுதானே நினைப்பீர்கள்? மாறாக இவர்கள் தனியார் புலனாய்வு அமைப்பிடம் இது தொடர்பான விசாரணையை ஒப்படைத்துள்ளனர்.


வெளியுலகத்திற்கு தெரிய வேண் டாம் என்பதற்காக சில நிழல் உலக மனிதர்கள் செய்யும் வேலையை நாட்டின் பிரதான எதிர்க்கட்சியும், அடுத்தும் ஆட்சிக்கு வரப் போவது நாங்களே என எகிறிக் குதித்து எட்டாக்கனிக்கு ஏப்பம் விடுபவர்கள் செய்யலாமா? காவல்துறையினரை இன்னும் அணுகாதது ஏன்?


இந்திய நாட்டின் காவல்துறையின் மீது பாஜக தலைமைக்கு நம்பிக்கை இல்லையா?


திருட்டு போனது உண்மையில் இரண்டு கோடியே அறுபது லட்சம் தானா? அல்லது அதைவிட எத்தனை மடங்கு கோடிகள் திருட்டு போனது என்ற உண்மை அம்பலமாகி விடும் என்ற அச்சமா?


கோடானு கோடி ரூபாய்களை கொட்டிக் கொடுத்தது யார்? அவர் களைப் பற்றிய தகவல்களை பாஜக வெளியிடுமா?


கோடிகளைக் கொடுத்து தனிநபரா? குழுவா? குழுக்களா? குழுக்கள் என்றால் ஆயுதம் தாங்கிய குழுக்களா? அல்லது ஆயுதம் ஏந்துவதற்கு தூண்டும் குழுக்களா? மாலேகான் குண்டு வெடிப்புகளில் சிக்கிய தீவிரவாதி களுடன் பாஜகவின் தலைவர் ராஜ்நாத் சிங்கின் சகோதரர் ஒருவரின் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் பாஜக தலைமையகத்தில் திருட்டு போனதாகக் கூறப்படும் கோடிக் கணக்கான ரூபாய்கள் குறித்த நியாய மான சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும்.


பாஜக அலுவலகத்தில் திருட்டு போன பணம், பயங்கரவாதிகளிட மிருந்து வந்த பணமா? அல்லது திருட்டு சம்பவம் என்ற பெயரில் பயங்கரவாதி களுக்கு கொண்டு செல்வதற்காக கொண்டு செல்லப்பட்ட பணமா? என பல்வேறு திடுக்கிடும் சந்தேகங்களை பாஜகவைப் பற்றி நன்கு அறிந்தவர்களே தெரிவித்து வரும் நிலையில் மத்திய அரசும் டெல்லி மாநில அரசும் அலட்சி யம் காட்டுவது ஏன்? விசாரணைக்கு உத்திரவிடுவதில் தாமதம் ஏன்?

No comments: