Tuesday, January 13, 2009

குவைத்தில் மாபெரும் சமூக நீதி மாநாடு



குவைத்தில் ஜனவரி 1, 2009 அன்று இஸ்லாமிய வழிகாட்டி மையத்தின் (ஐழுஊ) சார்பாக சமூக நீதி கருத்தரங்கம் நடை பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு லக்கி பிரிண்டர்ஸ் நிறுவன உரிமையாளர் ஏ. சுலைமான் பாட்சா தலைமை தாங்கி னார். மௌலவி நசீர் அஹமது ஜமாலி நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார். ஐ.ஜி.சி. மாணவர் ஜாஸிம் அப்துல் லத்தீஃப் “சமூகப் பணியும் இஸ்லாத்தின் ஒரு முக்கியக் கடமை’’ என்ற அர்த்தம் தரக்கூடிய வசனங்களை ஓதினார். சகோ. நாகூர் சுல்தான் வரவேற்புரை ஆற்றினார். தமுமுக மாநிலச் செயலாளர் எம். தமிமுன் அன்சாரி, திராவிட இயக்க தமிழர் பேரவை செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.



சுப.வீ அவர்கள் தமிழ்நாட்டில் பாஸிஸ பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக ஒடுக்கப்பட்ட சமூகங்கள் அனைத்தும் ஒன்றுபட வேண்டும் என்றார். சகோ. தமிமுன் அன்சாரி தமது உரையில், “தமிழ்நாட்டில் இன்று ஒரு மாபெரும் சமுதாய மாற்றம் நடந்து கொண்டிருக்கிறது. அத்தகைய எழுச்சி யில் குவைத் தமிழ் சமூகமும் பங்கு கொள்ள வேண்டும்’’ என்று அழைப்பு விடுத்தார். இந்த எழுச்சி 1995ஆம் ஆண்டு தொடங்கி 2009ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒரு அரசியல் இயக்கமாக மாற இருப்பதைச் சுட்டிக் காட்டினார். மேலும் பேராசிரியர் தாஜுதீன், தமிழர் சமூக நீதி பேரவை தமிழ் நாடான் ஆகியோரும் உரை நிகழ்த்தினார்கள்.


குவைத் தட்பவெட்ப நிலை திடீரென கடுமை யாக மாறிய போதும் மக்கள் திரளாக வந்திருந்தது ஒரு புதிய சமூக எழுச்சி யாக இருந்தது. தலைவர் லால்குடி இக்பால் அனைவருக்கும் நன்றி கூறினார்.


ஜனவரி 2, 2009 அன்று தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம், குவைத் மண்டலம் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்ட “தேசம் நாமே என்போம்’’ என்ற சமூக நிகழ்ச்சி மாலை 4 மணிக்கு நடை பெற்றது. ஐ.ஜி.சி. மாணவர் ஜாஸிம் அப்துல் லத்தீஃப் சூரா இஹ்லாஸ் ஓதி, ஏகத்து வத்தைக் கூற, நிகழ்ச்சி இனிதே தொடங்கியது. தமிழ் முஸ்லிம் கலாச் சாரப் பேரவையின் (கூஆஊஹ) முன்னாள் தலைவரும், பிமா (குநனநசயவiடிn டிக ஐனேயைn ஆரளடiஅ ஹளளடிஉயைவiடிளே) என்ற அமைப்பின் முன்னாள் செயலாளருமான சகோ. டானா முஹம்மது இக்பால் தலைமையில் தமுமுக - குவைத்தின் செயலாளர், பொறியாளர் ஷாநவாஸ் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.


தமுமுக குவைத் மண்டல பத்திரிகை செயலாளர் சகோ. பெருங்களூர் முஜிபுர் ரஹ்மான் அனைவரையும் வரவேற்றார். சகோ. டானா இக்பால் பாலஸ்தீனத்தைப் பற்றியும், இந்திய முஸ்லிம்களின் இன் றைய அவல நிலை பற்றியும் எடுத்துச் சொன்னார்கள். “நமது தேசம், நாமே காப்போம்’’ என்ற தலைப்பில் பேராசிரியர் சுபவீரபாண்டியன் உரையாற்றினார். “வேண்டும் மறுமலர்ச்சி’’ என்ற தலைப் பில் தமிமுன் அன்சாரி உரையாற்றினார்.

தமிமுன் அன்சாரியின் பாலஸ்தீனப் படுகொலைகளைப் பற்றிய பேச்சு அனை வரது சிந்தனையையும் தூண்டும் வித மாக அமைந்தது. இறுதியில் தமுமுகவின் செயல்பாடுகள், பணிகள், எதிர்காலத் திட்டங்களைப் பற்றிய கேள்விகளுக்கு மிக நேர்த்தியான பதில்களைக் கூறி அனைவரது பாராட்டுதலையும் பெற்றார்.


குவைத்தில் கடந்த நான்கு வருடத் தில் தமிழக முஸ்லிம்களால் நடத்தப்பட்ட நிகழ்ச்சிகளில் அதிக மக்கள் பங்கு கொண்ட நிகழ்ச்சியாக இது அமைந்தி ருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: