Tuesday, January 13, 2009

காஸா துயரம் துடிக்கும் உயிர்களைக் காப்பாற்றத் தடை! வெடிக்கும் மருத்துவர்கள்!!




ஜோர்டானைச் சேர்ந்த நரம்பியல் நிபுணர் டாக்டர் முஹம்மத் அல் ஹாலிதி. அவர் மனம் இப்போது போல் எப்போதுமே வேதனை அடைந்திருக்காது. பாலஸ்தீனில் மக்கள் படும் துயரங்களைக் கண்டு வேதனையடைந்த ஹாலிதி, அவர்களுக்கு உதவுவதற்காக பல்லாயிரம் மைல்களைக் கடந்து பயணம் செய்தார்.


இஸ்ரேலின் தரைவழி தாக்குதல், வான்வழி தாக்குதல், கடல்வழி தாக்கு தலை சந்தித்து சொல்லொ ணாத் துயரங்களை அனுபவித்து வரும் அந்த அப்பாவி மக்களைக் காப்பாற்றலாமே என்ற தவிப்பில் அவர் பயணம் செய்தார். காஸா எல்லையை நெருங்கினார். ஆனால் எகிப்தின் அதிகாரிகள் டாக்டர் முஹம்மத் அல் ஹாலிதியை தடுத்தனர். 14 நாட்களுக்கு மேலாக வேதனையில் வாடிவரும், கொடும் காயங்களால் அலறும் மக்களைக் காப்பாற்றச் சென்ற அவர், எகிப்திய அதிகாரிகளால் தடுக்கப் பட்டார்.


ஒரு நாள், இரண்டு நாள், மூன்று நாள் என காத்திருந்தார். காஸா - எகிப்திய எல்லையில் மூன்று நாள் காத்திருந்தும் பலனில்லை. தயவு செய்து என்னை காஸாவிற்குள் செல்ல அனுமதியுங்கள் என கெஞ்சினார். “நான் என்னுடைய சொந்த பொறுப்பில் செல்கிறேன், என்னுடைய உயிருக்கு நானே பொறுப்பு, தயவு செய்து எல்லை களைத் திறந்து விடுங்கள், அங்கே ஏராளமான குழந்தைகளும், முதியவர் களும், பெண்களும் மருத்துவ உதவி யின்றி இறந்து கொண்டிருக்கிறார்கள்’’ என கெஞ்சுகிறார்.




இந்த டாக்டர் மட்டுமல்ல. உலகெங் கிலுமிருந்து வந்த நூற்றுக்கணக்கான டாக்டர்களும் இவ்வாறு காஸா எல்லை யில் நுழைய முடியாமல் தவிக்கிறார்கள். மலேஷியா, இந்தோனேஷியா, துருக்கி, கிரீஸ் முதலிய நாடுகளிலிருந்து டாக்டர் கள் மனம் பதைபதைக்க நின்றனர்.


“காஸாவுக்கு செல்லும் யாருடைய உயிருக்கும் உத்தரவாதம் தர முடியாத நிலையில் இருக்கிறோம்’’ என எகிப்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹாத்தம் அல் ஜபலி கூறினார்.


“அங்கு தாக்குதல் நிறுத்தப்படட்டும், பிறகு நாங்கள் உங்களை உள்ளே அனுமதிப்போம்’’ எனக் கூறி நிர்தாட் சண்யமாக மறுத்து விட்டார். அவர் மறுத்துக் கொண்டி ருக்கும் போது காஸாவில் 800 பேருக்கும் மேல் பலியாகி இருந்த னர். 220க்கும் மேற் பட்ட பெண்களும், 100க்கும் மேற்பட்ட குழந்தை களும் பலியாகி இருந்தனர். மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படு காயம் அடைந்திருந்தனர்.


எகிப்து, ரஃபா எல்லையைத் திறந்து வைத்திருந்தது. காஸாவிலிருந்து மக்களுக்கு உலகைப் பார்க்கும் ஒரே கண்ணாடியாக ரஃபா எல்லை மட்டுமே அமைந்திருந்தது. அந்தப் பகுதி வழி யாகவே படுகாயம் அடைந்தவர்கள் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.


அவசர சிகிச்சை செய்தால் பிழைக்க வாய்ப்புண்டு என்ற நிலையில் உள்ளவர்கள் ஏராளமானவர்கள் இறந்து போன செய்தியறிந்து எல்லையிலுள்ள நூற்றுக்கணக்கான மருத்துவர்கள் வேதனையில் ஆழ்ந்தனர். சில நூறு மீட்டர் தூரம் மட்டுமே உள்ள பகுதியில் ஏராளமானவர்கள் அவதியில் இருக்கும் நிலையில் நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லையே, இது வெட்கக்கேடாக இருக்கிறது என வேதனைப்படுகிறார் முஹம்மத் அல் ஹாலித்.


இஸ்ரேலின் அத்துமீறல்களையும், அராஜகங்களையும் மவுனமாக பார்த்துக் கொண்டு மட்டுமே இருக்க முடிகிறது.


எது எப்படியாயினும் ஒருநாள் நாங்கள் காஸாவில் நுழையத்தான் போகிறோம் என உறுதிபடக் கூறுகிறார் டாக்டர் முஹம்மத் அல் ஹாலிதி.

No comments: