Wednesday, January 28, 2009

மகாராஷ்ட்ரா; இது இந்தியாவின் மாநிலமா? இந்துத்துவாவின் மாநிலமா?



இந்துத்துவாவாதிகளுக்கு கொள்கை என்ற ஒன்று எப்போதுமே இருந்ததில்லை. தேசியம் என்பார்கள் அந்த தேசியத்தின் ஒரு அங்கமான முஸ்லிம்களை கருவருப்பார்கள். தீவிரவாதத்தை ஒழிப்போம் என்பார்கள் ஆனால் மாலேகான் போன்று குண்டுவைத்து அவர்களே தீவிரவாதிகளாகவும் காட்சிதருவார்கள். ராமராஜ்ஜியம் என்பார்கள் தேர்தல் முடிந்தவுடன் ராமரை, அடுத்த தேர்தல்வரை வனவாசம் அனுப்பிவிடுவார்கள். இந்துக்கள் எந்தப்பிரிவாக இருந்தாலும் அவர்களை பாதுகாப்போம் என்பார்கள் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் இந்துக்க்களாக இருந்தால்கூட அவர்களையும் தாக்குவார்கள். சுருங்கசொன்னால் இந்துத்துவா என்றாலே சுயநலம் என்பதே உண்மை.இதை நிரூபிக்கும் வகையில் அவ்வப்போது அவர்கள்செய்யும் நடவடிக்கைமூலம் உலகுக்கு உணர்த்திவிடுவார்கள்.

சில மாதங்களுக்குமுன் மும்பையில் ரயில்வேத்துறை வேலைவாய்ப்பிற்கான நேர்முகத்தேர்வுக்கு வந்த வட இந்தியர்களையும், மும்பையில் வசித்துவந்த வடஇந்தியர்களையும் மும்பையில் தனிராச்சியம் நடத்திக்கொண்டிருக்கும் ராஜ்தாக்கரேயின் ஆட்கள் அடித்து துவைத்து காயப்போட, விஷயம் பெரியஅளவில் எதிரொலித்தவுடன் ராஜ்தாக்கரே கைதுசெய்யப்பட்டார்.பின்பு, வட இந்தியர்களுக்கு எதிராகப்பேசக்கூடாது என்ற நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

கொஞ்சகாலம் அடக்கி வாசித்த ராஜ்தாக்கரே, இருதினங்களுக்குமுன் ஒரு பொதுக்கூட்டத்தில் வட இந்தியர்களை தாக்கிப்பேச, அதையே உத்தரவாக எடுத்துக்கொண்ட அவரின் நவநிர்மான் கட்சியினர், நேற்று நாசிக்கில் ஒரு பள்ளிக்கூடத்தில் குடியரசுதினம் கொண்டாடிக்கொண்டிருந்த வட இந்தியர்களை தாக்கியதில் ஏராளமானோர் படுகாயமடைந்ததாக செய்திகள் கூறுகின்றன. மேலும்,இது காவல்துறையின் கண்முன்னேநடந்த வன்முறை என்றும் கூறப்படுகிறது.

மேலும், கடந்த 23.அன்று மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒற்றை தனது ஆதரவாளர்களுடன் சென்று தாக்கிய வழக்கில் சிவசேனா எம்.பி.ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதையெல்லாம் பார்க்கும்போது, சட்டம் பால்தாக்கரே,ராஜ்தாக்கரே கும்பலுக்கு வளைகிறதோ என்ற எண்ணமும், மகாராஷ்டிர மாநிலம் இந்தியாவில் உள்ளதா? என்ற சந்தேகமும் நடுநிலையாளர்களுக்கு ஏற்படுவதில் வியப்பில்லை.

thanks to :நிழல்களும் நிஜங்களும்

No comments: