Sunday, January 18, 2009

தினமலரைத் தடை செய்

நபிகள் நாயகத்தைக் குறித்துக் கேலிச்சித்திரம் வரைந்து தன் பாஸிச வெறியைக் கக்கிய தினமலர் பத்திரிக்கைக்கு எதிராக முஸ்லிம்கள் கிளர்ந்தெழுந்தனர். முஸ்லிம்களின் எதிர்ப்பு, தினகரன் போன்ற பத்திரிக்கை மற்றும் செய்தி ஊடகங்களின் விமர்சனத்தால் நாறிப் போன தினமலர் வேறு வழியின்றி மன்னிப்புக் கேட்பதாக அறிவித்தது. சில வளைகுடா நாடுகளில் இணைய தளம் தடை செய்யப்பட்டதும் கதறி அழுது நாங்கள் ஆன்மீகம் பகுதியில் இஸ்லாம் குறித்து நல்ல செய்தி வெளியிடுகிறோம் என்று புலம்பியது. தினமலரின் புலம்பலால் மனம் இளகிய இஸ்லாமியப் பெரியவர்கள் கூட தினமலர் வெளியிடும் நல்ல செய்திகளைக் கருத்தில் கொண்டு இதனை மன்னித்து விடலாம் என்று கருத்திட்டனர். இது சாக்கடையில் தெளிந்த நீரைத் தேடும் முயற்சி என்றும் குப்பைத் தொட்டியில் உள்ள மலருக்கு எவரும் ஆசைப் படுவதில்லை, அது போல தினமலரின் ஆன்மீகச் செய்திகளை முஸ்லிம்கள் விரும்பவில்லை என்றும் நமது கருத்தைப் பதிவு செய்தோம். தினமலர் திருந்த வில்லை, இஸ்லாத்தைக் குறித்த தனது மோசமான மனநோயை அது அதிகப்படுத்திக் கொண்டுள்ளது என்பதை இன்றைய தினமலரில் அவர்கள் எடுத்துள்ள வாந்தியே போதுமான சான்றாக உள்ளது.

தினமலர் இன்று (18-01-2009) வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில்

10 வயதில் சிறுமிக்குத் திருமணம்

//சவுதி அரேபியாவின் மிக மூத்த, அதிக அதிகாரம் படைத்த மதகுரு ஒருவர் பெண்குழந்தைகளுக்கு 10 வயதிலேயே திருமணம் செய்து வைத்து விடவேண்டும் என்பதை வலியுறுத்தி உள்ளார். இஸ்லாமியர்களில் சிறுமிகளை அவர்கள் கொள்ளுத் தாத்தா வயதுடைய ஆண்களுக்குக் கூட திருமணம் செய்து வைப்பது சர்வசாதாரணமாக நடந்து வருகிறது.//

மேற்கண்டவாறு இஸ்லாமின் மீது தனது எதிர்ப்பைக் கொட்டியுள்ளது. தினமலர் இஸ்லாத்தைப் பற்றிய தனது காழ்ப்புணர்வுகளை கக்கும்போதெல்லாம் இவ்வாறு ஆதாரமற்ற செய்திகளை வெளியிடுவது வழக்கம். சவுதி பெரியவர் எங்கு எப்போது இவ்வாறு பேசினார்?அவர் பேசியது என்ன? அதன் முழு விவரத்தையும் வெளியடத் தயாரா?

அவர் பேசியதாகக் குறிப்பிட்ட செய்தியிலேயே முரண்பட்டு திரித்துக் கூறியதில் தினமலரின் மனநோய் வெளிப்பட்டுள்ளதைப் பாருங்கள்

//பெண்களுக்கு 11 வயதுக்கு முன்பே திருமணம் செய்து வைப்பதை ஷரியத் சட்டம் அனுமதிக்கிறது. ஆனால் இதை சிலர் சிறுமிகளுக்கு ஏற்படுத்தப்படும் அநீதி என்று விமர்சிக்கின்றனர். அது தவறு. பெண்களில் 15 வயதுக்குட்பட்டவர்களுக்கு திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்று கூறப்படுவது தவறானது. ஒரு பெண் 10 வயதைத் தாண்டும் போதும் 12 வயதை எட்டும்போதும் அவருக்கு திருமணம் செய்து வைக்கும் தகுதியை பெற்றுவிடுகிறார்.//

பெரியவர் பேசியதாக தினமலர் வெளியிட்ட செய்தி உண்மை என்று வைத்துக் கொண்டால் கூட சிறுமிகளைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என்று எங்கே இதில் வலியுறுத்தப்பட்டுள்ளது? சிறுமி என்று சொன்னாலும் 10 வயதைக் கடந்து விட்டால் பெண்கள் பருவமடைவதற்கு வாய்ப்புள்ளதே? பருவமடைந்த பெண்களை எவரும் சிறுமி என்று கூறுவதில்லை. தினமலரின் விஷம மூளைக்கு இவை விளங்காமல் போனது ஏன்? மேற்கண்ட தினமலர் செய்தியை படிப்பவர்களுக்கு என்ன புரியும்? 10 வயது கடந்து விட்டால் ஒரு பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க அனுமதி உள்ளது என்று பெரியவர் கூறியதாக குறிப்பிட்டு விட்டு அதை வலியுறுத்துகிறார் என்றும் இஸ்லாமியர்களில் சிறுமிகளை அவர்கள் கொள்ளுத் தாத்தா வயதுடைய ஆண்களுக்குக் கூட திருமணம் செய்து வைப்பது சர்வசாதாரணமாக நடந்து வருகிறது. என்றும் தினமலர் பொய்யைக் கக்கியதன் உள்நோக்கம் என்ன?

கொள்ளுத்தாத்தா வயதுடையவர்களுக்கு சிறுமிகளைத் திருமணம் செய்து வைப்பது சர்வசாதாரணமாக நடந்து வருகிறது என்று கூறிய தினமலர் அதற்கு ஆதாரத்தை வெளியிட வேண்டும். சவுதிப் பெரியவர் பேசியது என்ன? அதன் ஆதாரம் என்ன என்பதையும் தினமலர் வெளியிட வேண்டும்.

இல்லையேல் தொடர்ந்து இஸ்லாமியர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் தினமலரைத் தடை செய்யக் கோரி முஸ்லிம்கள் கிளர்ந்தெழுவதை அஞ்சிக் கொண்டு இது போன்று வாந்தி எடுக்காமல் மவுனமாக இருக்கட்டும் என்று எச்சரிக்கிறோம்.

தேங்க்ஸ் டு : அபூ அப்திர்ரஹ்மான்

No comments: