Wednesday, January 28, 2009

இஸ்லாமிய நாடுகளுக்கு அமெரிக்கா தவறிழைத்துள்ளது என்பதை ஏற்கிறேன் - ஒபாமா

வாஷிங்டன்: அமெரிக்காவை தங்களது விரோதியாக கருதவேண்டாம் என்று இஸ்லாமிய நாடுகளுக்கு நேசக்கரம் நீட்டியுள்ளார் பராக் ஒபாமா.

அமெரிக்கா என்றாலே இஸ்லாமிய நாடுகளில் வெறுப்பு நிலவுகிறது. இதை மாற்றும் முயற்சியில் இறங்கியுள்ளார் ஒபாமா.

மத்திய கிழக்கு நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு முதல்முதலாக பேட்டி அளித்த ஒபாமா முஸ்லிம் நாடுகளுடன் சமாதானமாக செயல்படுவதையே அமெரிக்கா விரும்புகிறது என்றார்.

'எனது குடும்பத்தில் முஸ்லிம் உறுப்பினர்களும் உள்ளனர். இஸ்லாமிய நாடுகளில் நான் வசித்தவன். இஸ்லாமிய நாடுகளுக்கு விரோதியாக அமெரிக்கா செயல்படுகிறது என்ற கருத்தை மாற்றிக் கொள்ளவேண்டும். அதை புரியவைப்பதே எனது பணி. பரஸ்பர நலன், மரியாதை அடிப்படையில் புதிய கூட்டாளி உறவை ஏற்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம். இதை அரேபிய, இஸ்லாமிய நாடுகள் ஏற்றால் நல்ல முன்னேற்றம் ஏற்படும்' என்று பேட்டியில் அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்னைக்குத் தீர்வு காணவேண்டும் என்பதில் அமெரிக்கா திடமாக உள்ளது. இப்படிச் செய் என்று கட்டளையிடுவதற்கு பதிலாக மற்றவர் சொல்வதை காது கொடுத்து கேட்பதே நல்லது என்று அமெரிக்கா கருதுகிறது.

பதவியில் அமர்ந்து 100 நாள் ஆனதும் இஸ்லாமிய நாடு ஒன்றின் தலைநகரிலிருந்து இஸ்லாமிய நாடுகளிடம் நேரடியாக நான் பேச விரும்புகிறேன்
எவற்றை அழித்தோம் என்பதை விட என்ன செய்தோம் என்பதை வைத்தே நாம் மதிப்பிடப்படுகிறோம். (முஸ்லிம்களை அழித்தோம் என்பதற்கான ஒப்புதல் வாக்கு மூலமோ...?)
பின்லேடன், ஜவாஹிரி போன்றவர்கள் செய்வது அழிவுவேலைதான். இதனால் மரணமும் அழிவும்தான் விளையும் என்பதை முஸ்லிம் நாடுகளுக்கு புரிந்துவிட்டது. (புஷ்ஷும் அவரது கூலிப்படைகளும் லட்சக்கணக்கான மக்களை அநியாயமாக் கொன்றது மட்டும் ஆக்க வேலையோ...?) முஸ்லிம் நாடுகள் முன்னேற்றம் அடைய தன்னாலான அனைத்தையும் அமெரிக்கா செய்யும். (......!!!!! ....?) அமெரிக்கா தவறிழைத்துள்ளது என்பதை ஏற்கிறேன். (உண்மையை ஒப்புக்கொண்டவரை சரி! பரிகாரம் என்ன..?) பல ஆண்டுகளுக்கு முன் இஸ்லாமிய நாடுகளுடன் அமெரிக்கா வைத்திருந்த நட்புறவு மீண்டும் உருவாக பாடுபடுவேன் என்றார் ஒபாமா.


No comments: