Saturday, January 17, 2009

'சிறுவயதுத் திருமணங்கள் இந்தியாவில் அதிகம்


'சிறுவயதுத் திருமணங்கள் இந்தியாவில் அதிகம் - யூனிசெப்
உலக அளவில் சட்டரீதியான திருமண வயதை எட்டுவதற்கு முன்பே, பெண் சிறுமிகளுக்கு திருமணம் நடக்கும் போக்கு இந்தியாவில் மிக அதிகமாக இருப்பதாக ஐநா மன்றத்தின் சிறார்களுக்கான அமைப்பான யூனிசெப் அமைப்பு தெரிவித்திருக்கிறது.

நேற்று வெளியிடப்பட்ட உலக அளவிலான சிறார் நிலமைகள் குறித்த யூனிசெப் அமைப்பின் அறிக்கையில் இந்தியாவில் 45 சதவீத பெண்கள், சட்டப்பூர்வ திருமண வயதான 18 வயதை எட்டுவதற்கு முன்பே திருமணம் செய்விக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி திருமணம் செய்விக்கப்படும் பெண்கள் மகப்பேறு காலத்தில் இறக்கும் எண்ணிக்கையும் இந்தியாவில் அதிகம் என்றும், குழந்தைகளின் இறப்பு விகிதமும் இதனால் இந்தியாவில் அதிகமாக இருப்பதாகவும் இந்த அறிக்கை தெரிவித்திருக்கிறது.

No comments: