Saturday, January 24, 2009

உயிரைப்பறித்த இறை[மூட]நம்பிக்கை!

இறை நம்பிக்கை காரணமாக காயத்துக்கு மருந்து சாப்பிடாததால் துறைமுக ஊழியர் பரிதாபமாக செத்தார். இதே போல் அவருடைய குடும்பத்தில் 4 பேர் ஏற்கனவே உயிரிழந்து உள்ளனர்.துறைமுக ஊழியர்சென்னை துறைமுகத்தில் வேலைபார்த்து வந்தவர் சுதாகர் (வயது 50). இவர் கடந்த மாதம் 23&ந் தேதி தனது மகளை மோட்டார் சைக்கிளில் தியாகராய நகரில் உள்ள பள்ளிக்கு அழைத்துச் சென்றார். அவரை விட்டுவிட்டு திரும்பும்போது, பள்ளிக்கூடத்துக்கு அருகே சாலையில் இருந்த பள்ளத்தில் மோட்டார் சைக்கிள் இறங்கியதில் நிலைதடுமாறி சுதாகர் கீழே விழுந்தார். இதில் அவருடைய இடது கணுக்காலில் காயமும், லேசான சிராய்ப்பும் ஏற்பட்டது.

அவருக்கு சர்க்கரை நோய் உள்ளது. காயத்துக்கு அவர் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றிருந்தால் ஒரு வாரத்துக்குள்ளாகவே வழக்கம் போல் வேலைக்குச் சென்றிருக்கலாம். ஆனால், அவர் மருத்துவரை பார்ப்பதை தவிர்த்துவிட்டார். சுதாகர், பெந்தகோஸ்தே அமைப்பின் தீவிர உறுப்பினர்.

, ராயப்பேட்டையில் உள்ள பெந்தகோஸ்தேயின் சபைக்கு சென்று ஜெபம் செய்து, காயத்தை போக்கிக் கொள்ள நினைத்தார் (பெந்தகொஸ்தே சபையில் உள்ளவர்கள், பெரும்பாலும் இறைவனின் கருணையால் உடல் நலம் பெறுவதையே விரும்புவார்கள்). இதைத் தொடர்ந்து, அங்கு சென்று தனது நிலையை விளக்கி அங்கு சில நாட்கள் தங்கியிருந்தாராம். அப்போது, அங்குள்ள பாதிரியாரிடம் ஜெப எண்ணையை வாங்கி காயத்தில் தேய்த்துவிட்டு வழக்கம் போல் அவர் வேலைக்கும் மற்ற இடங்களுக்கும் சென்றுள்ளார். ஆனால் நினைத்தபடி காயம் ஆறவில்லை. சுதாகருக்கு சர்க்கரை நோய் இருந்த காரணத்தினால், மாறாக காயம் புரையோடிப் போனது (செப்டிக்). அதனால் அவர் உடல்நிலை மோசமடைந்து, பரிதாபமாக செத்தார். ஒரே குடும்பத்தில் 5 பேர்சுதாகரைப் போலவே, உடலுக்கு வைத்தியம் செய்து கொள்வதை விரும்பாமல் சுதாகருடைய குடும்பத்தில் ஏற்கனவே 4 பேர் மரணத்தை தழுவியிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதாகருடைய மாமனாரான ஜேக்கப், உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் ஆஸ்பத்திரிக்கு செல்லாமலே சில வருடங்களுக்கு முன்பு இறந்ததாக கூறப்படுகிறது. ஜேக்கப் மனைவியும், சுதாகரின் அத்தையுமான ஆனந்தியும் நோய்வாய்ப்பட்ட போது ஆஸ்பத்திரிக்கு செல்லாததால் இறந்துவிட்டாராம். ஜேக்கப்&ஆனந்தியின் ஒரே மகனான ஜோஷ்வா 11 வயதாக இருக்கும் போது மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை தரப்படாததால் இறந்தார். பட்டதாரியான மகள் பிரிசில்லாவும் இதே போல் மரணம் அடைந்தார். அவர்களது குடும்பத்தில் ஆஸ்பத்திரிக்கு செல்லாமல் மரணமடைந்த 5&வது நபர் சுதாகர் ஆவார்.

கட்டுப்பாடுஇது குறித்து பெந்தாகோஸ்தே அமைப்பை சேர்ந்த ஒருவர் கூறியதாவது:உடல்நிலை சரியில்லை என்றால், ஆஸ்பத்திரிக்கு செல்லவேண்டாமென்று பெந்தேகோஸ்தே அமைப்பில் எந்த கட்டுப்பாடுகளும் இல்லை. ஆனால் சபையில் இருக்கும் பெரும்பாலானோர் ஆஸ்பத்திரிக்கு செல்வதை தவிர்த்து விடுகின்றனர். ஆஸ்பத்திரிக்கு செல்பவர்களுக்கு இறைவனடியில் இடம் கிடைக்காது என்ற நம்பிக்கை உள்ளதாகவும், ஆஸ்பத்திரிக்கு செல்பவர்களை, அமைப்பைச் சேர்ந்த மற்றவர்கள், ஒரு மாதிரியாக பார்ப்பார்கள் என்பதாலும் டாக்டர்களிடம் பெரும்பாலான பெந்தகொஸ்தே அமைப்பினர் போவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

செய்தி நன்றி; தினத்தந்தி

இறை மார்க்கமாம் இஸ்லாம் கூறுகிறது;
நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள், அல்லாஹ்வின் அடியார்களே! மருத்துவம் செய்யுங்கள். அல்லாஹ் அதிலும் நிவாரணம் வைத்துள்ளான். நூல்;முஸ்லிம்.

இறைமார்க்கமாம் இஸ்லாம் மட்டுமே பகுத்தறிவுடன் கூடிய பக்திக்கு வழிகாட்டுகிறது என்பது உலகறிந்த உண்மை!

நன்றி : நிழல்களும் நிஜங்களும்

No comments: