Thursday, January 15, 2009

தென்காசி முஸ்லிம்களின் அவலநிலை

தென்காசி முஸ்லிம்களின் அவலநிலை

2007ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தென்காசி காவல் நிலையத்தில் ஒரு வழக்கில் பிணைக்காக கையெழுத்திடச் சென்ற முஸ்லிம் இளைஞர்களை இந்து முன்னணியினர் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கினர்.

இத்தாக்குதலில் இஸ்லாமியர் தரப்பில் மூவரும், தாக்கவந்த இந்து முன்னணி தரப்பில் மூவரும் உயிரிழந்தனர். இந்நிகழ்வில் தொடர்புடைய இரு பிரிவினரும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் (NSA) வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது அவர்கள் அனைவரும் சிறைத்தண்டனையை முடித்து பிணையில் வெளிவந்துள்ளனர். வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

தென்காசியில் பெரும்பான்மை இந்துக்களும், சிறுபான்மை இஸ்லாமியரும் எவ் விதப் பதற்றமோ, சலனமோ இன்றி அமைதியாக வாழ்ந்துவரும் இச்சூழலில், நெல்லை சரக டி.ஐ.ஜி. திரு. கண்ணப்பன், தென்காசி நகர டி.எஸ்.பி. திரு. மயில்வாகனன் ஆகியோரின் வரம்பு மீறிய நடவடிக்கைகளால் கடந்த ஒரு மாத காலமாக தென்காசி முஸ்லிம்களாகிய நாங்கள் நிம்மதி இழந்துள்ளோம்.

2007ஆம் ஆண்டு நிகழ்வில் தொடர்புடைய, தற்போது பிணையில் இருக்கும் ஹனீபாவின் திருமண வைபவத்தில் பங்கேற்ற ஒரே காரணத்திற்காக தென்காசியைச் சேர்ந்த 1. ஜெயிலானி, 2. அப்துர் ரஹீம், 3. ஜஃபர் சாதிக், 4. முஸ்தபா, 5. சுலைமான் ஆகிய 19 வயது முஸ்லிம் சிறுவர்கள் ஐவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழும், மேலப் பாளையத்தைச் சேர்ந்த 1. முள்ளன் செய்யதலி, 2. ஷேக் பாஷா, 3. அபூதாஹிர், 4. சாதிக் அலீ, 5. கிச்சான் புகாரீ ஆகிய ஐவர்மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழும் குற்றஞ்சாட்டி தடுப்புக்காவலில் சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நபர்கள்மீது காவல்துறை வெடிமருந்து சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்கு புனைந்துள்ளது. இந்நபர்களுக்கு வெடிமருந்து விற்றதாகக் காவல்துறை கூறும் கோபால் என்ற காவல்துறை உளவாளிமீது எந்த நடவடிக்கையும் இல்லை. இவ் வழக்கில் நீதிமன்ற காவலுக்காக செங்கோட்டை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவர் களை ஆஜர்படுத்தும்போது நீதிபதி, கோபாலின் காவல்துறைக்கு உளவுபார்க்கும் எடுபிடி போக்கை கண்டித்துள்ளார்.
தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் தடுப்புப் பிரிவின்கீழ் கைது செய்யப் பட்டு சிறைபிடிக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் டி.ஐ.ஜி. திரு. கண்ணப்பன், டி.எஸ்.பி. மயில்வாகணன் ஆகியோர் பின்வருமாறு மிரட்டியுள்ளனர்.

"2007ஆம் ஆண்டு ஆறு பேர் கொலைவழக்கில் தொடர்புடைய இஸ்லாமியர்களுக்கு எவ்வித சமூக, சட்ட உதவிகள் செய்தாலோ, அவர்களுடன் தொடர்பு வைத்தாலோ அவர் யாராக இருந்தாலும் அனைவர்மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டம், குண்டர் சட்டம் போன்ற கடுமையான சட்டங்கள் பாயும்.''
இது மட்டுமன்றி தொப்பி, தாடி என இஸ்லாமிய மத அடையாளங்களுடன் பள்ளி வாசலுக்குத் தொழுகைக்காகச் செல்லும் இஸ்லாமிய இளைஞர்களையும், தெருவில் நின்று உரையாடும் இளைஞர்களையும் முதியவர்களையும் டி.எஸ்.பி. மயில்வாகணன் தலைமையிலான காவல்துறையினர் கடுமை யான சொற்களால் இழித்து பழிப்பதோடு நடு வீதியிலேயே முழங்காலிடச் செய்து மிரட்டி அனுப்புகின்றனர். ஜமாத்தினர் நியாயம் கேட்கச் சென்றால், அவர்கள்மீதும் பொய்வழக்கு பதிவு செய்வோம் என்று மிரட்டப்படுகின்றனர்.
இவ்வாறு தென்காசி நகர முஸ்லிம்களில் 250 பேர் பொய்வழக்குகளில் சிக்க வைக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவாக தென்காசி நகர இஸ்லாமியர்கள் பலர் பயந்து வெளியூர், வெளிநாடுகளுக்கு சென்றுவிட்டனர். இதற்கு வழியில்லாதோர் பொய்வழக்கு களில் சிக்கவைக்கப்பட்டு வாய்தாவிற்கு அலையவே நேரம் கழிந்துவிடுவதால், தொழில் செய்ய முடியாமல் மிகுந்த நெருக்கடிகளுக்கும், மன உளைச்சல்களுக்கும் ஆளாகின்றனர். ஒரு முற்றுகையிடப்பட்ட சமூகமாக மாற்றப்பட்டுள்ளனர்.
ஆனால், இந்து முன்னணி தரப்பினரோ எவ்வித நெருக்கடியும் இல்லாமல் சுதந்திரமாக சுற்றித் திரிவதோடு பொதுக்கூட்டங்கள் அரங்கக் கூட்டங்கள் வாயிலாக முஸ்லிம்களை மிரட்டுகின்றனர். கடந்த ஒன்றரை ஆண்டு காலமாக அமைதியாக திகழ்ந்துவரும் தென்காசியில் டி.ஐ.ஜி. கண்ணப்பன் மற்றும் டி.எஸ்.பி. மயில்வாகணன் ஆகியோரின் விரோதப்போக்கால் சொந்த ஊரில் முஸ்லிம்கள் சுதந்திரமாக வசிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, தொடர்ந்து முஸ்லிம் விரோதப் போக்கை கடைப்பிடித்து, பதற்றமான சூழ்நிலையை தென்காசியில் உருவாக்கிவரும் டி.ஐ.ஜி. கண்ணப்பன், டி.எஸ்.பி. மயில்வாகனன் மற்றும் காவலர்கள்மீது தக்க நடவடிக்கை எடுத்து தென்காசி நகர இஸ்லாமியர்கள் தங்களது குடும்பத் தாருடன் நிம்மதியாக உழைத்து வாழ்வதற்கான ஒரு சுமூகமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுக்கு மாறும், காவல்துறையினரின் பொய்வழக்குகளிலிருந்து இஸ்லாமிய இளைஞர்ககளின் விடுதலைக்காக துஆச் செய்யுமாறும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இப்படிக்கு

தென்காசி நகர
முஸ்லிம் ஜமாத்தார்
vellioli@gmail.com

No comments: